بسم الله الرحمن الرحيم
Monday 22nd January 2018 | 05 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

SPOKEN ENGLISH (PART 3)அச்சிடுகமின்-அஞ்சல்
28 ஜூன் 2011 மாலை 03:02

ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் ஒரே மாதிரியாக தோன்றினாலும் அவை வெவ்வேறு பொருளை கொடுப்பதால் நாம் அவற்றை பயன் படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இத்தகைய வார்த்தைகளை ஆங்கிலத்தில் Confusibles  என்று சொல்வார்கள்.


உதாரணமாக:-

1) Childish, Childlike.

  ‘Childish’' 'சின்னபுள்ள' தனமாக நடந்து கொள்வது என்று பொருள்.

 (Behaving like a child)


இதில் எதிர்மறையான கருத்து (negative overtone) அடங்கியுள்ளது.

பெரியவர்கள் சிறுபிள்ளை மாதிரி பிடிவாதமாகவோ அல்லது சிறுபிள்ளைகளுக்குரிய மற்ற குணங்களையோ கொண்டு வயதிற்கு பொருத்தமில்லாத செயல்களில் ஈடுபடும்போது அது முட்டாள் தனமாக தோற்றமளிக்கும்.  எனவே தான் Childish என்பதை Foolish/Immature என்ற அர்த்தத்திலும்  பயன் படுத்தலாம்.

உதாரணம்:-

Don’t be so childish!
சின்னபுள்ள தனமா நடந்துக்காதே!

 'Childish ' என்றால் குழந்தையை போல என்று பொருள்.


ஒருவர் ஒரு குழந்தைக்குரிய இனிமையான குணாதியசங்களை கொண்டிருந்தால் (pleasant qualities of a child) அவற்றைப் பற்றி குறிப்பிடும்போது  Childlike  என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.  உதாரணமாக சிலர் கள்ளங்கபடமில்லாதவர்களாக இருப்பர்.  அவர்களுடைய சிரிப்போ பேசும் விதமோ ஒரு குழந்தையை போல இருக்கும்.  இந்த குணம் அனைவராலும் விருப்பப்பட, ரசிக்கப்பட கூடியது.  இது ஒரு positive meaning கொண்ட வார்த்தை.

உதாரணம்:-

He followed me with childlike trust.
அவன் என்னை, குழந்தையைப்போல நம்பி பின்பற்றி வந்தான்.

2)  Continual, Continuous.

Continual- விட்டு விட்டு தொடர்ந்து (going on with only short breaks)

ஒரு செயல் கொஞ்சம்  இடைவேளை விட்டு மீண்டும்  தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அதற்கு  Continual என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

உதாரணமாக:

It rained continually yesterday.
நேற்று விட்டு விட்டு தொடர்ந்து மழைபெய்தது.

I am tired of this continual rain.
இப்படி மழை விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்வது எனக்கு சலிப்பை சோர்வை  ஏற்படுத்துகிறது.

ஒருவேளை நீங்கள் வெளியில் போக நினைத்திருந்த நேரத்தில் மழை ஓயாமல் விட்டு விட்டு தொடர்ந்து பெய்து கொண்டிருந்தால் நீங்கள் சலிப்புடன் இப்படி சொல்லலாம்.


• Continuous- இடைவேளை இல்லாமல் தொடர்ந்து நடக்கும் செயயலைக் குறிக்க இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.(going on without a break with an end in sight)

உதாரணம்:-

We had Continuous rains for two hours this morning.
இன்றைக்கு காலையில தொடர்ந்து 2மணி நேரமா மழை பெய்தது.  மழை 2மணி நேரமாக எந்த இடைவெளியும்  இல்லாமல் பெய்து ஓய்ந்தது என்பதைக் குறிக்க  ‘Continuous’ ' குறிக்கலாம்.

வேறு சில உதாரணங்கள்:


1)    Hire-  குறுகிய காலத்துக்கு வாடகைக்கு எடுத்தல்
We hire auotos and Taxis

   Rent- நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்தல்.

We rent houses/ rooms.

2)   Invaluable - விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்ந்தது.

IQRA educational trust services to the society are invaluable.


(இக்ராஃ கல்வி சங்கத்தின் சமூகத்தொண்டு விலை மதிக்க முடியாதவை)

Valueless- மதிப்பில்லாத அற்பமானது.


பயிற்சி:

கீழ்காணும் வார்த்தைகளுக்கு உரிய வேறுபட்ட அர்த்தங்களை கண்டுபிடி.


1)     Disinterested/ Uninterested

2)     Official/ Officious

3)     Legible/ Eligible


  
  

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com