இந்த வாரம் காயல் - ரியல் ஹீரோக்கள் - சாளை S.I.ஜியாவுதீன்அச்சிடுக
14 மே 2011 மாலை 10:27

இந்த வாரம் காயல் - 1 ரியல் ஹீரோக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற வாரம் காயல் நியூஸ் குழுமத்தினர் , ஜியாவுதீன் காக்கா,நம் காயல் நியூஸ் வலைதளத்தில் தங்களின் ஆக்கங்களை எழுதுங்களேன் என்றதும், ஒரே பதட்டம்..உடனே நான் சாச்சாச்சா..

நமக்கு இது எல்லாம் சரிப்படாது..ஏதோ கமெண்ட்ஸ் தட்டிக்கொண்டு, சின்ன கேப்பில் சைக்கில் ஓட்டும் என்னை, பைலட் ஆக ஆக்கப்பார்க்கிறீர்களே  என்று மறுத்து விட்டேன்.

பின்பு ஒரு விருந்தில் வாய் நிறைய சோறு இருக்கும் போது மீண்டும் அவர்கள் வினவியதும்,’வாண்டாம்ப்பா..’ என்று நான் கூறியது அவருக்கு எப்படி விளங்கியதோ தெரியவில்லை.. நெட்டிலும் அறிவிப்பு வந்து விட்டது...

இப்போ தான் என் கம்மா(அதாங்க தமிழில் மம்மிமா) சொன்னது  நினைவுக்கு வருது.. " வாப்பா வாயில் சோத்தை வைத்துக்கொண்டு பேசாதமா..நல்லது இல்லை". அப்போ சொன்னது இப்போ புரியுது...இப்படி மாட்டிவிட்டு விட்டாரே. சரி முயற்சி செய்வோம்..

சரிங்க..முதலில் என்ன எழுதலாம்..ஓகே. அதான் அரசியல் இருக்கே.

நம்ம தொகுதியில் அண்ணாச்சி அனிதா அவர்கள் தட்டு தடுமாறி மூச்சை பிடித்து உப்பு கோட்டை தொட்டுவிட்டார். நன்றாக கவனித்தீர்களா..சுற்றுவட்டார காயல் மக்கள் எல்லாம் இரட்டை இலைக்கு தான் குத்தி உள்ளார்கள்..ஒஹ்ஹ்ஹ..குத்தி இல்லை,பட்டனை அழுத்தி உள்ளார்கள்...

எப்படியோ ஐயா MLA ஆகிவிட்டார். தொகுதிக்கு எப்படி நன்மை செய்வார் என்று பொருத்திருந்து  தான் பார்க்கணும்.ஆளும் கட்சி MLA ஆகவும் இல்லை, எதிர்கட்சி MLA  ஆகவும் இல்லை.நலதிட்டங்கள் எல்லாம் எப்படி பெற்றுத்தருவார், தக்குப்பிடிப்பரா...கஷ்டம் தான்.  

அம்மாவிற்கு சும்மாவே அனிதாவை பிடிக்காது, துரோகி அப்படி இப்படி என்று குதிப்பார்கள்.இப்போ என்னன்னா மக்கள் எல்லாம் சேர்ந்து பொட்டு வைத்து, காலில் சலங்கையும் கட்டிவிட்டார்கள். ஆட சொல்லியா கொடுக்கணும் அம்மாவிற்கு.

இப்படி ஒட்டு மொத்தமாக எதிர்கட்சிகளே இல்லாமல் இருப்பதும் ஜனநாயகத்திற்கு நல்லதுக்கு அல்ல..

இந்த அபார வெற்றிக்கு உறுதுணை புரிந்தவர்கள் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்,அதிகாரி அமுதா, மற்றும் அதிகாரிகள் தான். இவர்கள் தான் ரியல் ஹீரோக்கள். இவர்களுக்கு தான் முதல் பாராட்டுக்கள்.

தேர்தல் ஆணையம் மட்டும் இப்படி கடுமை கட்டாமல் இருந்தால், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மக்கள் மேல் உள்ள பயம் போயிவிடும். பணம் கொடுத்து ஒட்டு வாங்கி விடலாம் என்று ஒரு அகங்காரம் வந்துவிடும்.

அப்படியே அதிகமாகி,

என்ன உனக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டதா,இந்தா பணம் என்று பாக்கட்டில் திணித்து, ஒட்டு போடு என்று கட்டளை இடுவார்கள்.

இல்லை முடியாதுங்க என்றால் செவிட்டில் இரண்டு அரை விட்டு..காசை வாங்குடா, போடுடா ஓட்டை..என்பார்கள்...நல்ல வேலை அதற்க்கு வழி இல்லாமல் ஆகியமைக்கும், அதிகாரிகளுக்கு நன்றிகள்.

அப்புறம் என்ன, இனி மின்வெட்டுக்களே இருக்காது, அனைத்து மாணவ/மாணவிகளும் மடிக்கணணி, பேஸ்புக், ட்விட்டர் கையுமாக இருக்கபோகிறார்கள், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடாது, கச்சதீவு இனி நமக்குதான், குடும்ப அரசியல் இருக்காது(தோழி அரசியல் வேறு), வறுமை கோட்டிற்கு கிழே உள்ளவர்கள் எல்லாம் இனி இருக்கமாட்டார்கள்,  இலவசமாக கிரைண்டர், மிக்சி வாங்கி வீட்டில் வைத்து விட்டு, கடையில் பாக்கெட் தோசை/இட்லி மாவு,அரைத்த இஞ்சிபூண்டு, அரைத்த  தேங்காய் வாங்கலாம்...என்ன நக்கலா என்று தங்கள் சொல்லுவது விளங்குகிறது...ஒரு ஆசைதானே..அம்மா சொன்னது தானே..

எல்லாம் நன்மையாக அமைய பிராத்தனை பண்ணுங்கள்.

ஆட்சி அதிகாரங்களை பற்றி சிந்திக்க ஓர் இறைவசனம்..

 “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

அல் குர்ஆன் -3:26

சிந்திப்போம் ..சந்திப்போம்...

அன்புடன்,

சாளை S.I.ஜியாவுதீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh