காயலும் கல்வியும் ( பாகம் 1)அச்சிடுக
13 ஜூன் 2011 காலை 12:34

மீண்டும் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நம் மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டீர்களா?. நான் தெரிவித்து விட்டேன்.

நம் ஊர் முதல் மானாக்களின் மதிப்பெண்களை பார்த்தால் நம்மால் மாநில முதல் ரேங்க் எடுப்பது சிரமம் இல்லை என்று தெரிந்து விட்டது.

ஒரு சிறிய முயற்சி செய்தால் முடியும் தானே. இன்ஷாஹ் அல்லாஹ்.. நடக்கும்.

இந்த முடிவுகளை பார்த்தால் வழமை போல மாணவிகளின் ஆதிக்கம் அதிகம். "பெண்கள் கல்வி முன்னேற்றம் வேண்டும்" என்று கூவிக்கொண்டு இருக்கும் நாம், இனி "ஆண்கள் கல்வி முன்னேற்றம் வேண்டும்" என்று கூவும் நாள் அதிகம் இல்லை.

நம் ஆண் பிள்ளைகள் படிப்பில் சிறிது சுனக்கம் எதனால் என்பது புரியவில்லை. எனக்கு தெரிந்த வரை அவர்களுக்கு வெளி உலக தொடர்புகள் அதிகம். பெண்களுக்கு அப்படி இல்லை. பள்ளிக்கூடம், வீடு, பள்ளிக்கூடம் அவ்வளவு தான் அவர்களின் வட்டம். வீட்டில் எவ்வளவு நேரம் சும்மா இருப்பது. எடு புத்தகத்தை, படி படி படிப்பு தான்.

நம்ம பசங்களுக்கு அப்படி இல்லை. அதிக நேரம் வெளியில் தான் அவர்களின் வாசம். இதை தடுத்தாலே கொஞ்சம் பலன் தரும். எப்போது பள்ளிக்கூடம் முடிகின்றது, எப்போது டியூஷன் முடிகிறது என்று அறிந்து, இத்தனை மணிக்கு வீட்டில் இருக்கணும், இத்தனை மணி வரை படிக்கணும் என்று கண்காணித்து, கூடவே மொபைல் போனை பிடுங்கி வைத்தாலே பலன் கிட்டும்.

இன்னும் நல்ல பலன் கிட்டனும் என்றால் கேபிள் டிவிக்கு குட்பை சொல்லிவிட்டு, உங்களின் தியாகத்தை நிலை நிறுத்தனும். அதற்கும் மேலாக தவறாமால் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுது, இறைவனிடம் மன்றாடி துஆ கேட்கனும். சரிங்களா..

ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! அல்குர்ஆன் 20:114.

அதுவும் இல்லாமல் பெற்றோர்கள் பெண் குழந்தைக்கு கொடுக்கும் அக்கறை பசங்களுக்கு கொடுப்பது இல்லை. வீட்டில் ஒரு வேலை கூட பெண் பிள்ளையை செய்ய விடுவது இல்லை. நாம் குடிக்க தண்ணீர் எடுத்துக் கேட்டால் கூட, இரு இரு அவள் படித்துக் கொண்டு இருக்கிறாள், நான் எடுத்து தருகிறேன் என்று படிப்புக்கு எந்த பாதிப்பும் வர விட மாட்டார்கள், பெற்றோர்கள்.

நம்ம பையன் அப்போது தான் டியூஷன் படித்து விட்டு வருவான், உடனே..

"அடேய்...கடைலே போயி சாமான் வாங்கிட்டு வாடா.."

"இல்லமா..நான் படிக்கணும்.."

"அமாமா..இவரு படிச்சு கிழிச்சாரு...சீக்கிரம் போடா..."  இது தானே வழமை பல வீடுகளில்.

பெண் பிள்ளை பள்ளிக்கூடம் போகும் போது, அவள் அங்கும் இங்கும் அலைந்து தலை வாரிக்கொண்டு இருக்க, தாய் அவளுக்கு பின்னாடியே தட்டை தூக்கிக் கொண்டு சாப்பாடு ஊட்டும் காட்சி, அவள் போதும், போதும் என்று சொல்ல, தாய் நல்ல சாப்பிடு, நல்ல படிக்கணும் என்று திணிக்க..அருமையான காட்சி தான்.

இது மாதிரி மகனுக்கு என்றாவது சாப்பாடு ஊட்டி விட்டது உண்டா. இல்லை சாப்பாடு தட்டில் போட்டாவது கொடுத்தது உண்டா. "அடேய்..சோத்தை போட்டு உன்னுடா." ஏன் இந்த வெறுப்பு ஆண்பிள்ளைகள் மீது..(அனைவர்களையும் சொல்லவில்லை..)

மாஷா அல்லாஹ்..தற்போது பெண்கள் நன்கு கல்வி கற்று வருகிறார்கள். சந்தோசமான செய்தி. குறிப்பாக நம் ஊரிலே மகளிர் கல்லூரி வந்ததும், பெண் பட்டத்தாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

என் தாயார் காலத்தில் அப்போது தான் ESLC (எட்டாம் வகுப்பு) முதலாவதாக அறிமுகப்படுத்தினார்களாம். பல போராட்டத்திற்கு பின்பு தான் என் தாயாரை படிக்க விட்டார்களாம்.(ஊரில் முதல் ESLC - என் தாயார், அடியேன் முதல் MCA ). என் மூத்த சகோதரியை பிளஸ் டூ படிக்க வைக்க மறுத்து விட்டார்கள். அப்போது தீவுத்தெரு பள்ளிக்கூடம் தான் செல்லனும், குத்துக்கல் தெருவில் இருந்து தீவுத்தெரு 43 கிலோ மீட்டர் இருந்ததால் அவ்வளவு தொலைவுக்கு பெண் பிள்ளைகளை அனுப்ப அனுமதி இல்லையாம். காலங்கள் கடந்து என் தங்கையை டிகிரி படிக்க வைத்தார்கள்,திருசெந்தூரில்.

இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் தோளில் ஒரு பையை தூக்கி போட்டு விட்டு படிக்க சென்று விடுகிறார்கள். எங்கு செல்கிறாள் என்று கேட்டால் சென்னைக்கு என்று பதில் வருகிறது. அவ்வளவு வளர்ச்சி படிப்பில்.

இந்த பெண் பிள்ளைகள் படித்து என்ன பண்ண போகிறார்கள். ஆயிரம் மார்க் எடுத்த பெண் பிள்ளைகள் BA, B.Sc படித்து முடித்து (சிலர் BE),திருமண அட்டையில் பதிவு பண்ணுவதோடு முடிகிறது. அதற்கும் மேலே முடிவது இல்லை.

திருமண பேச்சு நன்றாக நடக்கும், பெண் வெளி ஊரில் படித்தால் உடனே திருமணப்பேச்சு அத்தோடு கட் ஆகிவிடும். அதற்கும் அதிகமாக அவள் இருபாலார் படிக்கும் கல்லூரியில் படித்தாலோ, இல்லை படித்த பின்பு வேலைக்கு செல்லுவாள் என்றாலோ மணமகன் வீட்டார் ஒரே ஓட்டம் . இது தான் தற்போது உள்ள நடைமுறை.

(பெண்கள் இருபாலார் படிக்கும் கல்லூரியில் படிக்கலாமா, படித்த பின்பு வேலைக்கு செல்லலாமா என்ற விவாதத்திற்கு நான் வர வில்லை..).

தற்போது உள்ள பசங்களுக்கு உள்ள ஒரே குறிக்கோள் படிக்கணும், டிகிரி வாங்கணும், கல்ப் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கணும், அவ்வளவு தான். முன்பு மாதிரி கல்ப் நாடுகள் இல்லை. இருப்பவனுக்கே வேலை இல்லை. இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்று பய உணர்வு தான் அதிகம்.

நன்றாக படிங்க, நம் நாட்டிலே கல்ப் நாடுகளுக்கு அதிகமாக சம்பளம் தருகிறார்கள், அங்கேயே வேலை பாருங்க, சொந்தமாக தொழில் தொடங்கி பலருக்கு வேலை கொடுங்க...இதற்க்கு எல்லாம் உங்களிடம் தேவை நல்ல படிப்பு, கடின உழைப்பு.

சரி, அடுத்தது..நம் பள்ளிகளின் தரம்.

இன்ஷாஹ் அல்லாஹ் அடுத்த வாரம் பார்ப்போமே...

நம் ஊர் முதல் மானாக்களின் மதிப்பெண்களை பார்த்தால் நம்மால் மாநில முதல் ரேங்க் எடுப்பது சிரமம் இல்லை என்று தெரிந்து விட்டது.

ஒரு சிறிய முயற்சி செய்தால் முடியும் தானே. இன்ஷாஹ் அல்லாஹ்.. நடக்கும்.

அன்புடன்,

சாளை S.I.ஜியாவுதீன்,

அல்கோபார்.  

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh