உண்மைகள் கசக்கும் (பாகம் 1)அச்சிடுக
30 ஆகஸ்ட் 2014 மாலை 11:51

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சொந்தங்களே.

சில நேரங்களில் சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். அந்த சில உண்மைகளை காணலாமா.!

இன்றைய விழிப்புணர்வு அதிகம் உள்ள காலத்தில், முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றில் வரும் செய்திகளை பார்த்து அதிர்ந்து தான் போகிறோம். அதை சாப்பிடாதீர்கள், இந்த உணவை அதிகம் எடுக்காதீர்கள், இதை சாப்பிட்டால் கான்சர் வரும் போன்று பலவித செய்திகள் வருகின்றன.

மேலும் அந்த வைத்தியம், இந்த வைத்தியம் என்றும் விழிப்புணர்வு செய்திகளும் வருகின்றன. பல செய்திகள் உபயோகமாகவும், சில செய்திகள் உச்.. என்றும் இருக்கும்.

சரி, நாம் தினமும் உபயோகிக்கும் உணவுகளைப் பற்றி கொஞ்சம் அலசலாமா.!!

முதலில் பாலைப்பற்றி பார்ப்போம்.

அல்குர்ஆன் 16:66 இல் வல்ல அல்லாஹ்

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.

அல்குர் ஆன் 23:21 இல்

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.

milk2

நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருப்பமான உணவில் முக்கியத்துவம் பெற்றது பால் தான்.

உலகமே பாலை சுற்றிதான் இயங்குகிறது என்று சொன்னாலும் தவறு இல்லை.

உணவுகளிலேயே தூய்மையான உணவு என்றால் அது பால் தான். நல்ல மனிதரை "பால் போல" மனது என்று கூறுவது உண்டு.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட பாலை அருந்தினால் கான்சர் வரும் என்று கூறினால் நம்ப முடியுமா.! ஆனால் உண்மை அது தான். இதற்கு காரணம் மனிதன் தான். பாலில் கலப்படம் செய்கிறான், அந்த பவுடரை கலக்குகிறான் போன்ற விசயங்கள் வேறு. அதைப்பற்றி பல கட்டுரையே எழுதலாம்.

நாம் அலசப்போகும் சமாசாரம் இது அல்ல.. அது இயற்கைக்கு மாறு செய்தது.

நாம் நான்கு அறிந்தது என்னவென்றால், பசு கன்றை ஈன்ற உடன் அதற்க்கு பால் சுரக்க ஆரம்பித்து விடும். அதன் கன்று குடித்து வயிறு நிறைந்ததும், மீதம் உள்ள பால் தான் மனிதனுக்கு.

கன்று வளர வளர பால் சுரப்பது குறைந்து, கன்றுக்கு பால் தேவை படவில்லை என்றதும், பால் சுரப்பது நின்று விடும்.

இனி இந்த பசு என்று கரு உண்டாகி மறு குட்டி ஈன்று கிறதோ, அப்போது மீண்டும் பால் உற்பத்தி ஆரம்பித்து விடுகிறது. சுருக்கமாக சொன்னால் கன்று சுவைக்க சுவைக்க பால் உற்பத்தி இருக்கும். ஆக இது பாசத்தின் இயற்கை வெளிப்பாடு.

சில சமயம் குட்டி மரணித்து விட்டால், சில நாட்களிலேயே அதன் பால் வத்தி விடும். அதனால் மனிதன், அதன் இறந்த குட்டியை பாடம் செய்து ஒரு பொம்மை மாதிரி ஆக்கி விடுவார்கள். அந்த கன்று குட்டி பொம்மையை தாயின் பார்வை படும்படி சிறிது நேரம் வைத்தவுடன், பாசத்தால் தன் குட்டிக்கு உணவு வேண்டுமே என்று பால் சுரக்க ஆரம்பிக்கும். உடனே மனிதன் அந்த பாலை ஆட்டையை போட்டு விடுவான்.

சரி, இன்றைய நவீன பண்ணைகளில் நடக்கும் கூத்தை பார்ப்போம். அங்கு அனைத்தும் செயற்கை தான். மருந்து மருந்து மருந்து தான். கர்ப்பம் தரிக்க மருந்து, பால் குறைந்தால் மருந்து, பால் கட்டியாக இல்லை என்றால் மருந்து, சாப்பாடு மருந்து....!!!!

இந்த பசுக்களின் மடிக்காம்புகளை கன்றுகள் சுவைத்தே இருக்காது. கன்று ஈன்றதும் உடனே பிரித்து விடுவார்கள். ஏசி் கொட்டகை, கான்கிரீட் தரை, பின்புறம் தட்டி, முன் கம்பி திறந்தவுடன் தானாகவே பால் கறக்கும் மிஷின் உள்ள கொட்டகைக்கு சென்று விடுகிறது, மடுவில் பால் உறிஞ்சும் மெஷின் அனைத்தையும் உறிஞ்சிய பின்பு, மீண்டும் பின்பக்கம் ஒரு கம்பி தட்டுகிறது, உடனே அதன் இடத்திற்கு சென்று விடுகிறது.

milk3

ஆக மொத்தம் இந்த மாடுகள் மந்திரித்து விட்ட மாதிரியே வாழ்கை பூராவும் எந்த சுக துக்கமும் இல்லாமல் ஒரே மாதிரி நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு மாடும் தினமும் 40 லிட்டர் 60 லிட்டர் என்று பால் கறக்கின்றன. துபாயில் ஒரு பண்ணையில் ஒரு மாடு 100 லிட்டர் பால் கறக்கின்றதாம்...!!

இங்கு உள்ள பசுக்கள் வருடத்தில் 300 நாட்கள் பால் கொடுத்துக்கொண்டே இருக்கும். அதிக நாட்கள் கர்ப்பமாகவே இருக்கும். கர்ப்பத்தின் கடைசி காலத்தில் இந்த பசுக்கள் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் (ESTROGEN) என்ற ஹார்மோனை சுரக்கின்றது.., இதே மாதிரிஈஸ்ட்ரோஜன் பூச்சிக்கொல்லி மருந்திலும் இருக்கின்றது. பசு சுரக்கும் இயற்கை ஈஸ்ட்ரோஜன் 100,000 மடங்கு பூச்சிக்கொல்லியில் இருப்பதை விட கெடுதல் உள்ளதாம்.

இந்த ஈஸ்ட்ரோஜன் கலந்த பாலையோ மற்ற பால் பொருட்களான சீஸ் வகை உணவுகளையோ உட்கொண்டால் பெண்களுக்கு மார்பக புற்று நோயும், 20 இல் இருந்து 39 வயதுக்குள்ள ஆண்களுக்கு விதைப்பை புற்று நோயும் வருகின்றதாம்.

ஆக, இனி குழந்தைகள் பால் குடிக்க மாட்டேன் என்று அடம்பிடிதால் வற்புறுத்துவீங்களா..!வற்புறுத்துவீங்களா..!

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில் எந்த உணவில் உள்ள உண்மை கசக்கிறது என்று பார்க்கலாம்.

ஆக்கம் :கட்டுரையாளர்

சாளை S.I.ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh