வேண்டாம் கல் மனம்! ஆன்மீக துளி!!அச்சிடுக
09 ஜனவரி 2016 காலை 10:35

நண்பனைப் பார்க்க வீட்டுக்குச் செல்கின்றார் அவர். தேநீர் கொடுத்து உபசரித்த பின் வீட்டுக்குள் சென்று அப்போதுதான் பிறந்த தனது குழந்தையை கைகளில் ஏந்தியவாறு வந்து, மகனைப் பாருங்கள் என்று மகிழ்ச்சியுடன் காட்டுகிறார். இவரோ.. ஒரு கையில் தேநீர் கோப்பையுடன், மாஷா அல்லாஹ்! நல்லா இருக்கான்.. என்றவாறு பார்வையை வேறுபக்கம் திருப்பி தேநீரை அருந்தத் துவங்குகிறார்.

அந்தக் குழந்தையை கைகளில் எடுக்கவோ, முத்தமிடவோ, கொஞ்சவோ அதன் நறுமணத்தை நுகரவோ, அதன் அழகு குறித்து வர்ணிக்கவோ செய்யாமல் தேநீர் குடிக்கும் இவரை என்ன சொல்வது? கல் மனம்..!

baby

பிறருக்கு ஏற்படும் கவலை, துக்கம், திடுக்கம் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கா விட்டால்கூட பரவாயில்லை.. குறைந்தபட்சம் நமது உணர்ச்சிக்ளையாவது முகத்தில் வெளிப்படுத்தலாம்.

இந்த இங்கிதம் கூட தெரியாதவர்களை இஸ்லாமிய மொழிமரபில் கூறுவது என்றால்.. மைய்யித் அல்லது ஜனாஸா என்றுதான் கூறவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பொதுவாக கவிதைகளை விரும்புவதில்லை. ஆயினும் வெறுத்ததும் கிடையாது. தோழர்களுடைய மகிழ்வில் அவர்களும் பங்கு கொள்வார்கள்.

அகழ் போருக்காக குழி தோண்டும் பணி நடைபெறுகிறது. பணியின்போது தோழர்கள், இறைவா! நாங்கள் உயிரோடிருக்கும் காலம்வரை அறப்போர் புரிவோம் என்று நபிகளாருக்கு உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்..

என்று கவிதை பாடியவாறு பணியில் ஈடுபட்டனர். இதனை செவியுற்ற நபிகளாரும், இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பருள்வாயாக! என்று பாடினார்கள்.

எனக்குக் கவிதையே பிடிக்காது.. இவர்கள் ஏன் இவ்வாறு கவிதை பாடுகின்றார்கள் என்று வெறுத்து ஒதுங்கவில்லை. தோழர்கள் மகிழ்வில் தாமும் பங்கு கொண்டார்கள் நபிகளார். இதுதான் இங்கிதம்! இதுதான் பண்பாடு! இதுதான் நாகரீகம்!

ரத்தமும் சதையுமாக இருக்கும் உடலுக்குள் சிலருக்கு இருப்பதோ கல்மனம்.

நமக்குத் தெரிந்தவர்கள் நம்மிடம் தங்களது கவலை, துக்கம், சந்தோஷம் என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கண்டுகொள்ளாமல் கற்சிலைபோல் இருப்பது நாகரீகமல்ல!

ஆக்கம்: நூஹ் மஹ்ழரி

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh