மருத்துவ (மனை) மாட்சிஅச்சிடுக
24 ஜூன் 2011 காலை 09:01

மனை என்றால் இல்லம் அல்லது வீடு மாட்சி என்றால் சிறப்பு 'மனை மாட்சி' என்று வள்ளுவர் திருக்குளில் ஒரு அதிகாரமே வைத்துள்ளார். முனையை ஆள்வதால்தான் மனைவி என அழைக்கப்படுகிறார். துணைவி என்றும் சொல்லாம். ஆனால் அது சமீபகாலமாக வேறு ஒரு பொருளில் பயன்படுத்தப்படுவதால் அந்தச் சொல் வேண்டாம்.

ஆக இப்படி வீட்டுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த பாரம்பர்ய மிக்க சொல்லாகிய 'மனை' என்ற சொல் வீடு அல்லாத இன்னொன்றுக்கும் வெகு காலமாக பயன்பட்டு வருவதை நம்மில் யாரும் கருத்தூன்றி கவனிக்கவில்லை. மேலும்! அதுவே 'மருத்துவமனை' (Hospital) தாயின் கருவளைக்கு அடுத்தபடியாக, ஒரு மனிதனுக்கு வீடுதான் பாதுகாப்பானது பத்திரமானது நமது அந்தரங்கம் நமது வீட்டுசுவர்களுக்கு மட்டுமே தெரியும். அதே போன்ற பாதுகாப்பையும், அந்தரங்க பாதுகாவலையும் ஹாஸ்பிட்டல் மனிதனுக்கு கொடுக்குமா? பிறகு ஏன் அதை வீட்டோடு சம்பந்தப்படுத்தும் 'மனை' என்ற பின்னொட்டால் 'மருத்துவமனை' என்கிறார்கள்.

மருத்துவத் தொழில் ஒரு சேவைத் தொழில் நமது 102 மாணவர்கள் கூட தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 'உனது எதிர்காலத் திட்டம் என்ன? என்று அவனிடம் கேட்கப்பட்டால், மறு நிமிடமே சற்றும் தயக்கமின்றி, மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்பதே கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறார்கள் அல்லது பெற்றோர்களால் அவ்வாறு சொல்ல வைக்கப்படுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

ஒரு மருத்துவமனை மாணவன் கற்று வெளியே வர சற்றேறழத்தாழ 15 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை செலவாகும் என கணக்கிடப்படுகிறது. இவ்வளவு பணம் செலவழித்து வெளியே வரும் ஒரு டாக்டருக்கு 'சேவை' மட்டுமே குறிக்கோளாக இருக்கும் என நம்புவதற்கு கஸ்டமாக இருக்கிறது. இன்றைக்குள்ள டாக்டர்கள் எவரும் அர்த நம்பிக்கையை நமக்குள் விதைக்கவில்லை. கையில் குறைந்தபட்சம் ரூ500 இல்லாமல் ஒரு கீழ்த்தரமான அதாவது நண்பர்களே, ஒரு டுழற ஞரயடவைல, ஆஸ்பத்திரிக்குக் கூட உங்களால் செல்ல முடியாது. தொட்டுப் பார்ப்பதற்கு 100 ரூபாய் பீஸ் வாங்கும் டாக்கடர்கள்தான் நிறைய இருக்கிறார்கள். இதில் அப்பாயின்மென்ட் சிஸ்டம் வேறு.

நவீன தாரளமைய, உலகமய வாழ்க்கையில் தரமான சிகிச்சை என்பது ஒரு சாதாரன மனிதனுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஹாஸ்பிட்டல்கள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களாகி வெகு நாட்களாகின்றன. சென்னையில் உள்ள 'அப்பலோ ஹாஸ்பிட்டல்' மலர் மருத்துவமனை மியாட் ஹாஸ்டல் சங்கரா நேத்ரலயா, இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத ஹாஸ்பிட்டல்களைப் பார்க்கும் போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மீது லேசான ஒரு பொறாமையும், நாம் ஏன் இன்னும் நோயாளியாகவில்லை என்ற ஒரு ஏக்க உணர்வுமே நமக்கு ஏற்படுகிறது எனில் மருத்துவ உலகின் மாட்சிதான் என்ன! அதுதான் (மருத்துவ) மனை மாட்சியோ! 5ரூபாய் டாக்டர், 3 ரூபாய் டாக்டர் எல்லாம் இருந்து ஒரு காலத்தில் அவர்கள் மருத்துவத்தை ஒரு சேவையாக, புனிதமான தொழிலாகக் கருதினார்கள். அதன் மூலம் அவர்கள் பெற்ற சமூக அந்தஸ்தும், கொணரவரும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட மேலானது. நீடித்து நிற்பது.

ஆனால் இன்று நிலை என்ன? காய்ச்சல் என்று சென்றால், ஸ்டெதஸ் கோப்பை வைத்து பார்க்காமலே மளமளவென பிரிவில் கிரிபடின் எழுதும் மருத்து சிகாமணிகளையே நாம் காண்கிறோம்.

இரத்த டெஸ்ட், மஞ்சள்காமாலை டெஸ்ட், ஹீமோகுளோபின் டெஸ்ட் இன்றும் அது இது என வரிசையாக டிக் பண்ணி நம் பர்ஸ் காலியாகி விடுவது தான் நாம் கண்ட பலன். காய்ச்சல் போய் விடும். சேர்ந்து பணமும் பாலாகி விடும். நீ என்ன டாக்டரா? உனக்கு இது பற்றி என்ன தெரியும்? ஏன எவரும் கேட்கலாம். அது அவர்கள் உரிமை ஆனால் தேவையற்ற டெஸ்ட்களை இன்றைய மருத்துவர்கள் செய்யச் சொல்வதில்லை என எவரும் தன் மனசாட்சியைத் தொட்டு சொல்லாமல் இருக்கமாட்டார்கள். இது ஒவ்வொருவரும் தனது அனுபவத்தில் கண்ட உண்மை. முன்னேறிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ சிகிச்கை என்பது இன்றும் கொடுமையானது.

அங்கு ஒவ்வொரு நபரும் இன்ஸியூரன்ஸ் செய்திருக்க வேண்டும். அதாவது மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் அந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி சொல்லும் டாக்டரிடம் மட்டுமே மருத்துவம் செய்து கொள்ள முடியும். மருத்துவக் கம்பெனிகளின் கொள்ளையோ சொல்லி முடியாது. அங்கு டாக்டர் இன்ஸியூரன்ஸ் கம்பெனி மருந்தகம் கம்பெனி என முக்கூட்டும்க் கொள்ளை கொடிகட்டி பறக்கிறது. இதை ஒழிப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்த ஒபாமா இன்னும் எதுவும் செய்த்தகாதத் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் சென்றமுறை ஆட்சியில் இருந்த தி.மு.க.அரசு மருத்துவமனைகளை அம்போவென விட்டுவிட்டு தனியார் மருத்துவ மனைகளுக்கு கொட்டி கொடுத்து 'கலை'ர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்து அதிலும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். அப்படியே சிகிச்சை பெறச் சென்றாலும், நோயாளிகளிடமும் தனியே காசு கநற்து விடுகின்றனர். பிறகு என்ன 'இலவச' காப்பீடு திட்டம்? இந்தத் தனியார்களுக்கு கொட்டி கொடுத்த பணத்தில் அரசு மருத்துவமனைகளை சீர்திருத்தம் செய்தாலே போதுமானது ஒவ்வொரு குடிமகனும் தரமான சிகிச்சை பெறலாம்.

முன்பு ஒரு முறை டெல்லி AIIMS  மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற வந்த ஒரு நோயாளி, அங்கு பணிபுரியும் ஒரு குறிப்பிட்ட டாக்டர் தனக்கு எக்காரணம் கொண்டும் அறுவைசிகிச்சை செய்யக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதினார் என்ன காரணம்? ஏனெனில் அவர் கர்நாடகாவில் உள்ள தனியார் மணிப்பால் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றவராம். அங்கு டாக்டர் பட்டம் பெற அக்காலத்தில் ஒரு 15000ரூபாய் போதும் இப்போதோ எத்தனையோ மணிபால் கல்லூரிகள்! மணிப்பால் டாக்டர்கள்! நமது கல்வி வள்ளல்கள் நடத்தும் மருத்துவகல்லூரிகளில் பட்டம் பெறும் ஒருவர் தரமான மருத்துவராக இருக்க, நாம் அவர் மீது மட்டுமல்ல இறைவன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லை எனில் இதயம் இடம் மாறிவிடும் எல்லா டாக்டர்களையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல. சிலர் அப்படி இருக்கிறார்கள். சமூகக் குறைகளை சுட்டிக் காட்டுவது ஒவ்வொரு மனிதனும் தார்மீகக் கடமை.

எல்லாம் சரி 'மருத்துவமனை' என்ற சொல்லின் காரணத்தை இனி சொல்லி விடுகிறேன். தயவு செய்து தாய்மார்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம் எனது குடும்பத்திலே கூட இப்படியான குணம் கொண்ட பேர்வழிகள் இருக்கிறார்கள்.

அதாவது நமது தாய்மார்களில் சிலருக்கு வீட்டில் இருப்பதை விட மருத்துவமனைகளில் காலம் கழிப்பதில் ஒரு அலாதி சுகம். அதற்காக மருத்துவமனைக்கு போகும் சந்தர்ப்பத்தை இவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் இவர்களை நோக்கி வரும் போது அதை உறுதியாக கெட்டிப்பிடித்துக் கொள்வார்கள். பாய், அடுப்பு, தலையணை, திருவல்குத்தி, வெத்தலை பாக்கு, இடிஉலக்கை சகிதம் திறுமதிகள் கிளம்பி விடுவார்கள்.

டாக்டர் ஒருவாரம் இருக்கச் சொன்னால் சந்தோஷம் பத்து நாட்கள் இருக்கச் சொன்னால் அதைவிட இரண்டு மடங்கு சந்தோஷம் டாக்டர் செக்அப் பண்ண வரும் போது சோர்ந்தது போல இருப்பார்கள் டாக்டர்கள் நர்ஸ் பின் தொடர சென்றதும், மறுபடியும் அறையில் பேச்சு, சிரிப்பொலி, கெ;கலி கொட்டும்!.

மாலை நேரங்களில் உறவினர்கள் ஒவ்வொருவராக இவர்களை சுகம் விசாரிக்கச் செல்லும் போது பரம சுகத்தில் ஆழ்ந்து விடுவார்கள். அவள் ஏன் இன்றும் வரவில்லை? இவள் ஏன் வந்து பார்க்கவில்லை? என்ற கேள்வியும் கிளம்பும்.

திருமதி கட்டிலில் நடுநாயகமாக அமர்ந்திருக்க குடும்ப பிரச்சினைகள் எல்லாம் விலாவாசியாக அலசப்படும் சிலசமயம் தீர்வு காணப்படுவதும் உண்டு 'டிஸ்சார்ஜ்' ஆகும் சமயம் சிலர் அழுது கூட விடுவார்கள். நமக்கே பாவம் போல ஆகிவிடும்.

இப்படி 'மனை' (வீடு) களில் காணாத சுகத்தை மருத்துவமனைகள் இவர்களுக்கு கொடுப்பதால் தான் அதையும் ஒரு 'மனை' என்றார்களோ இறைவனுக்கே வெளிச்சம்!.

K. S. முகம்மத் ஷுஜப்

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh