ஆண்- பெண் குழந்தைகள் விகிதம்!அச்சிடுக
24 ஜூன் 2014 மாலை 08:04

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண் பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு CAMPAIGN AGAINST SEX SELECTIVE ABORTION(CASSA) தெரிவிக்கிறது.

தமிழ் நாட்டில் மாநில விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரை, தர்மபுரி,சேலம்,விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர்,கிரிஷ்ணகிரி மற்றும் கூடலூர் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிவிக்கிறது.கூடலூர் மற்றும் விழுப்புரத்தில் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கருவில் குழந்தையை கண்டறியும் சோதனைக்கு 1994 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடையை கண்டிப்புடன் அமல்படுத்தவேண்டும் என்று CASSA அமைப்பு வலியுறுத்துகிறது மேலும் கருவில் குழந்தையை கண்டறிவதை தடை செய்வதை அமல்படுத்தும் சட்டம் 2002 (Prolition of sex selection amendment act-2002) வையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றுள்ளது.

கடந்த 20 வருடங்களில் 72 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டிருப்பதாக அவ்வமைப்பின் தமிழ் நாட்டுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜீவா குற்றம் சாட்டுகிறார். இந்தியா முழுவதிலும் 46,589 ஸ்கேன் மையங்கள் இருக்கின்றன.

அவற்றில் 4,978 மையங்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன தவறாக செயல்படும் இந்த ஸ்கேன் மையங்களையும், கருதரிப்பு மையங்க்ளையும், தடைசெய்ய சொல்லி கடந்த 7 வருடங்களாக CASSA அமைப்பு 500 க்கும் அதிகமான மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறது. ஆனால் அவற்றால் எந்த பயனும் இல்லை என்கிறார் எம்.ஜீவா அனைத்து மாவட்டங்களிலும் இந்த கருஅறிதல் மையங்கள் பெருகும் போது குழந்தைகள் விகித வேறுபாடு இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்.

சோதனைக்கும், மருத்துவத்துக்கும் உட்படுபவர்களிடம் இருந்து நிரப்ப்ப்பட்ட Form –F படிவம் கேட்டு பெறவேண்டும் ஆனால் இந்த கருஅறிதல் மற்றும் கருதரிப்பு மையங்கள் இந்த படிவங்களை பெறுவதில் முறையாக நடந்து கொள்ளவில்லை. என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வழியாக தெரிய வந்தன என்கிறார் CASSA அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜீவா.

ஜி. அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh