சி.பி.ஐ விசாரணையில் ஆளுனர்கள்!அச்சிடுக
30 ஜூன் 2014 மாலை 02:33

நாட்டின் மிக மிக முக்கிய நபர்கள் (V.V.I.P) பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு பிரிட்டன் – இத்தாலி கூட்டிய கூட்டு நிறுவனமான அகஸ்டின் வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 3600 கோடி ரூபாய். 2005 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாள், ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்த விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் அன்றைய தலைவராக இருந்த வி.பி வாஞ்சு ஆகியோர் கலந்து கொண்டார். எம்.கே.நாராயணன் இப்போது மேற்கு வங்க ஆளுநராகவும்,வி.பி வாஞ்சு கோவா மாநில ஆளூநராகவும் இருக்கின்றனர். இருவரையும் பதவி விலகும் படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2005,மார்ச் 1 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்து பாரபட்சமாக ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இதன் பேரில் முன்னாள் விமான படை தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு சம்பந்தமாக எம்.கே.நாராயணனையும், வி.பி வாஞ்சு வையும் விசாரிக்க வேண்டும் என்று 2013 ல் சி.பி.ஐ கோரிக்கை வைத்தது. ஆனால் அரசியல் சாசன சட்டப்படி, ஆளுநர் பதவியில் இருப்பவர்களை குற்றவழக்கில் விசாரிக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டி கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி சி.பி.ஐ. க்கு அனுமதி மறுத்து வந்தார். அதனால் இருவரையும் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. குடியரசு தலைவரை அனுகியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த (SOLICITOR – GENERAL) மோகன் பராசரன் ஆளுநர்களாக இருக்கும் இருவரையும் விசாரிக்க விடாமல் தடுத்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பராசுரன் விலகி கொள்ள மத்திய அரசுக்கான தலைமை அரசு வழக்கறிஞராக ரொகாட்கி (Rohatgi) பொறுப்பேற்றார். ஆளுநர்களை விசாரனை செய்வதை சட்டம் தடுக்க வில்லை யென்று புதிய விளக்கத்தைச் சொல்லி இரு ஆளுநர்களையும் விசாரணை செய்ய ரொகாட்கி அனுமதி கொடுத்தார்

இந்தச் சுழ்நிலையில், விசரனையில் விசாராணைக்கு நேரம் ஒதுக்கும் படி ஜூன் 24 ஆம் நாள் சி.பி.ஐ எம்.கே.நாராயணனிடம் கேட்டுக் கொண்டது. நாராயணன் ஒத்துக் கொண்டபடி ஜூன் 27 ஆம் நாள் விசாரணை நடத்தி அவரது பதில்களை சி.பி.ஐ அதிகாரிகள் பதிவு செயதனர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அகஸ்ட்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துக்கு ஹெலிகாப்டர் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட காரணங்களை விளக்கிச் சொன்னதுடன், தனக்கு முன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஸ் மிஸ்ரா எடுத்த முடிவின் படியே, ஹெலிகாப்டர் பறக்க வேண்டிய மட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டில் குறைக்கப்பட்டதாகவும் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே, மத்திய அமைச்சரவைக் குழுவின் முன்னாள் செயலர் பி.கே.சதுர்வேதி, பாதுகாப்புதுறை செயலராக இருந்தவரும் தற்போது மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை அதிகாரியாக இருப்பவருமான சசிகாந்த் சர்மா உட்பட உயரதிகாரிகள் பலரையும் சி.பி.ஐ. விசாரித்து இருக்கிறது. கோவாவின் ஆளுநராக இருக்கும் வி.பி. வாஞ்சு வையும் சி.பி.ஐ. விசாரிக்க இருக்கிறது.

ஒரு குற்ற வழக்கு தொடர்பாக மாநிலத்தின் ஆளுநர்களாக இருப்பவர்கள் சி.பி.ஐ. அமைப்பால் விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அப்படியான விசாரணைக்கு உட்பட்ட முதல் ஆளுநராக எம்.கே.நாராயணன் இருக்கிறார். இந்தியாவுக்கு குடியரசு தலைவர் என்பதை போல மாநிலத்துக்கு ஆளுநர் என்பவர். மரண தண்டனை கைதிக்கு தண்டனையை குறைக்கவும், விடுவிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். முன்னர் நாட்டின், சமூகத்தின் மிக உயர்ந்த கண்ணியம் கொண்டவர்கள் குடியரசு தலைவராக, ஆளுநர்களாக பதவி வகித்தனர். அதனால் தான் குற்ற வழக்குகளில் அவர்களை விசாரிக்க முடியாத சட்ட விதிகள் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் இப்போது அரசியல்வாதிகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், ஆளுநர் பதவிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், குற்ற வழக்குகளில் இருந்து தப்பவும் ஆளுநர் பதவிகள் கொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் உண்டாகிறது.

ஆந்திரமாநில முதல்வராக இருந்த ரோசையாவுக்கு ஆந்திர காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை எழுந்த போது மத்திய காங்கிரஸ் கட்சி ரோசையாவை தமிழக ஆளுநராக நியமித்தது. தில்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் ஷீலா தீட்சித் கேரள மாநில ஆளுநராக்கப்பட்டார். ஷீலாதீட்சித் தொடர்ந்து 3 முறை 15 வருடங்களாக தில்லியில் முதல் அமைச்சராக இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் மேற்கு வங்க ஆளுநராக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ஒன்றில் அவர் பங்கேற்றிருந்த காரணத்தாலும் அரசியல் காரணங்களுக்காக அவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதாலும்,ஆளுநர்களை குற்ற வழக்குகளில் விசாரிக்க விலக்கு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிகள் விவாதகளத்திற்கு வந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 361 ன் படி ஆளுநர்கள் குற்ற வழக்குகளில் இருந்து விலக்கு பெறுகிறார்கள் என்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ஆளுநர்களை சாட்சிகளாக விசாரிப்பதில் இருந்து 361 விலக்கு அளிக்கவில்லை என்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு.

2010, பிப்ரவரி 8 அன்று அகஸ்டா வுடன் ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.

2012 பிப்ரவரி – லஞ்ச புகார்கள் வெளிவர தொடங்கின. பாதுகாப்பு அமைச்சகம் நிதி அளிப்பது அனைத்தையும் ரத்து செய்தது.

2014,ஜனவரி – ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நாராயணணையும் வாஞ்சு வையும் விசாரிக்க சி.பி.ஐ. க்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்தது. சி.பி.ஐ. குடியரசு தலைவருக்கு மனுசெய்தது.

2014 ஜூன் 27 – மேற்க்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணிடம் சி.பி.ஐ விசாரித்து வாக்கு மூலத்தை பதிவு செய்தது.

ஆக்கம் : ஜி.அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh