بسم الله الرحمن الرحيم
Friday 26th April 2019 | 20 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இடைத்தேர்தல்கள் ஒரு மாறுதல்!அச்சிடுகமின்-அஞ்சல்
02 செப்டம்பர் 2014 மாலை 10:13

2014 பொது தேர்தலில் 282 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தவுடன், இந்திய அரசியலில் இனி பா.ஜ.க வை தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை என்பது போன்று பா.ஜ.க வும் ஊடகங்களும் விமர்சகர்களும் பாராட்டிக் கொண்ருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல்களின் முடிவுகள் பா.ஜ.க விற்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. இவ்வாண்டு இறுதியில் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் இடை தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு கவலையளிக்கும் முடிவுகள் தான்.

பீகாரில் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க வை வீழ்த்த வியூகம் அமைத்து ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமார்) ராஷ்டீரிய ஜனதா தளம் (லல்லுபிரசாத்யாதவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இக்கூட்டணி, பா.ஜ.க இனி வரலாற்றில் வீழ்த்த முடியாத சக்தி என்ற கருத்தை மாற்றிவிட்டது. இம்மூவர் கூட்டணி இடைத்தேர்தல்கள் நடைபெற்ற 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 31 இடங்களை வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் அமைத்த சாதுர்யமான அரசியல் கூட்டணி பா.ஜ.க விற்கு பெரிய தோல்வியைக் கொடுத்துள்;ளது. இக்கூட்டணிக்கு யாதவர்கள், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என கூட்டு வாக்குகள் கிடைத்திருக்கிறது. பிரிவினை சக்திகளுக்கு எதிரான மதசார்பற்ற பெரிய கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதற்கு பீகாரில் பா.ஜ.க தலைமை பொறுப்பேற்றுக் கொண்டது. எனினும், மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியின் பிரதிபலிப்பு என்பதை ஏற்க மறுத்துவிட்டது.

எனினும் கூட்டணி கணக்கை மீறி நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை மறுக்கமுடியாது. இந்த வெற்றி 2015 ல் பீகாரில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு எத்தகைய வியூகம் வரைய வேண்டும் என்பதை எதிர்கட்சிகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

இதனை சந்தர்ப்பவாத கூட்டணி என பா.ஜ.க விமர்சிக்கிறது. இட ஒதுக்கீடு எனும் சமூக நீதியை மறுக்கும் பா.ஜ.க வும், ஆதரிக்கும் லோக் ஜன சக்தி (ராம்விலாஸ் பாஸ்வாள்) யும் கூட்டணி வைத்திருப்பது தான் சந்தர்ப்பவாதம். காங்கிரஸ் ஓரளவு மதச் சார்பற்ற கொள்கையை பேசும் கட்சி. ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் சமூக ஜனநாயக கொள்கையை மையமாகக் கொண்ட கட்சிகள். அரசியல் சுய ஆதாயங்களுக்காக அவைகள் பிரிந்து கிடக்கின்றன. எனவே, இம்மூன்று கட்சிகளும் கூட்டாக இணைந்திருப்பது தான் நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும், மதசார்பின்மைக்கும் நன்மை தருவதாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானையும் இழுத்து போட்டு ஒரு மெகா கூட்டணியை இவர்கள் உருவாக்கியிருந்தால் பீகாரில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி கண்டிருக்கும் என்பதே நிஜம்.

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இடை தேர்தல்களிலும் பா.ஜ.க வுக்கு தோல்வி கிட்டியது. அங்குள்ள பெல்லாரி புறநகர் சட்டமன்ற தொகுதியை 33000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பா.ஜ.கா விடம் இருந்து கைப்பற்றியது. சிக்கோடி சதல்கா தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது. சிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் டீ.ளு.எடியூரப்பா மகன் டீ.லு.ராகவேந்திரா 6,430 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.

மத்தியபிரதேசத்தில் 3ல் 2 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அகர் தொகுதியை தக்க வைத்த பா.ஜ.க, விஜய்ராகவ்கர் தொகுதியை காங்கிரசிடம் இருந்து கைப்பற்றியது. அதேநேரம், பா.ஜ.க விடம் இருந்து பகோரிபந்த் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது.

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம் கட்சி தல்வாண்டி சபோ தொகுதியை காங்கிரசிடம் இருந்து பெரியவாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் பட்டாலியா புறநகர் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க வுக்கு ஒரு அமிலப் பரிசோதனைதான். காங்கிரசுக்கும் இதர மாநில கட்சிகளுக்கும் இது உற்சாகமளித்திருக்கிறது. எனினும் பிரதமர் மோடி இம்முடிவுகள் பற்றி கருத்து ஏதும் கூறவில்லை. இடைத்தேர்தல்களின் முடிவுகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ஜ.க விமர்சித்திருக்கிறது.

ஆனால், 'மக்கள் எல்லாம் மோடி பக்கம் திரும்பியிருக்கிறார்கள். மோடிக்காகவே வாக்களிக்கிறார்கள். தலித்துகள், சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே மோடி பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்ற மாயவாதத்தை' இடைத்தேர்தல்களின் முடிவுகள் முறியடித்திருக்கின்றன. உ.பி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் மட்டும் அதிக இடங்களைப் பிடிக்க பா.ஜ.க வுக்கு வெற்றி எளிதாக கிடைக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 282 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மொத்த வாக்காளர்களில் 31 சதவீதம் பேரே பா.ஜ.க வை ஆதரித்து வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாய கணக்குதான் இடைத்தேர்தலில் உடைந்திருக்கிறது.

இந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் காங்கிரசுடனும் மார்க்சிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி வைக்க விரும்புவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்திருக்கிறது. உத்திர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க மாயாவதி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், முலாயம் சிங் யாதவ் அதனை மறுத்துள்ளார். இத்தியாவில் அதன் உண்மையான இறையாண்மையாக இருக்கும் மதச்சார்பற்ற கொள்கையை விழுங்க வகுப்புவாத சக்திகளின் கைகள் ஓங்குமானால் எதிரெதிர் அணிகள் ஒன்று சேர்வது தவிர்க்கமுடியாமல் போகும். தமிழ்நாட்டில் கூட அப்படியொரு சூழ்நிலையில் தி.மு.க வும் அ.தி.மு.க வும் கூட்டணி வைக்க நிர்பந்தம் ஏற்பட்டாலும் அதில் ஆச்சரியம் இல்லை.

ஆக்கம் : ஜி.அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சமீபத்திய வாசகர் கருத்துக்கள்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com