بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
"விலகும் மனமே! விளங்கிக்கொள் !" கட்டுரை எழுதும் சமூக சேவகரிடம் ஒரு நேர்காணல்அச்சிடுகமின்-அஞ்சல்
24 ஜூன் 2011 காலை 08:29

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை, பிரச்சனைகளின் அழுத்தங்களால் மன அழுத்தங்களுடன் பெரும்பாலானவர்கள் மன நோயாளிகள் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.   இவர்களின் வாழ்க்கையில் மறுபடியும் வசந்தத்தை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் சென்னையில் மன நல ஆலோசனைகள் வழங்கிவரும் சமூக சேவகர், குர்ஷித் பேகம் அவர்களோடு ஒரு சந்திப்பு.

khursid-begum

எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள்?

எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு சமூக சேவை நிறுவனம் இருந்தது. குடி மற்றும் போதை ஒழிப்பு நிறுவனமாக அது இயங்கியது அந்த சமூக சேவை நிறுவனத்திற்கு நானாகவே போய் அங்கே என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பேன். அப்போ அங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இதைப் பார்த்தப் பிறகுதான் நான் பி.ஏ.சைக்கலாஜி படித்தேன்.

அதன் பிறகு எம்.ஏ.சைக்கலாஜி படித்தேன். இதை பகுதி நேரமாகத்தான் படிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னுடன் இருந்த மனநல ஆலோசகர்கள் அனைவரும் நீங்கள் ரெகுலர் கல்லூhயிpல் சேர்ந்து படியுங்கள் என்று சொன்னார்கள். அப்போது ஸ்டெல்ல மேரிஸ் கல்லூhயிpல் போய் சீட் கேட்டேன் நான் படித்து எல்லாம் தமிழ் வழியில். அது ஆங்கில வழியாக இருந்தது. உங்களால் எப்படி முடியும் என்று கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன் நான் மனநல ஆலோசனை வழங்கப்போவது தமிழ் நாட்டில் தான் இலண்டனில் அல்ல நீங்கள் ஆங்கிலத்தில் எடுத்தாலும் என்னுடைய தகுதியை உயர்த்திக் கொள்வேன் என்றேன்.

என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து எனக்கு சீட் கொடுத்தார்கள். முதல் இரண்டுத் தேர்வுகள் ஆங்கிலத்தில் எழுதினேன். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியவில்லை. அப்போது தான் முதல் முதலாக பல்கலை கழகத்தில் அனுமதி வாங்கி நான் தமிழில் எழுதலாம் என்று அனுமதித்தார்கள். பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கலாம். தேர்வு மட்டும் தமிழில் எழுதலாம் என்ற அனுமதியால் நான் முதல் தரமாக தேர்வில் வெற்றி பெற்றேன்.

பெரும்பாலும் நம்முடைய சமூகத்திலிருந்து பெண்கள் யாரும் இந்தத் துறைக்கு வருவதில்லையே நீங்கள் எப்படி வந்தீர்கள்...?

நான் எப்படி வந்தேன் என்றால் என்னுடய தகப்பனார் மலேசியாவில் டத்தோவாக இருந்தார். அரசியலிலும் இருந்தார். சுpரம்பானில் அரச வணிகராக இருந்த டத்தோ ஏ.எஸ்.தாவூத்' என்பவர் தான் என் தந்தையார். 1936ல் மலாயாவில் காலூன்றியவர்களில் இருவரும் ஒருவர். சிறு வயதில் மலாய் நாட்டுக்கு வந்த இவர் ஜப்பானியர் ஆட்சி காலத்திற்குபின் பெரிய வணிகராகவும், செல்வந்தராகவும் இருந்தார். மு.இ.க.வின் நெகிரி மாநிலத் தலைவராக பல காலம் இருந்திருக்கிறார். 'கிம்மா' என்ற இந்திய முஸ்லிம் அரசியல் கட்சியின் தேசியத் தலவராகவும் இருந்தார். எங்கள் குடும்பப் பெயரான 'பாசாலா' என்ற பெயரில் பெரிய அளவில் ரப்பர் தோட்டம் ஒன்று வைத்திருந்தோம்.

அதே போல் எனது தாயாரும் பொதுச்சேலையில் ஈடுபட்டு வந்தார். நிறையபேருக்கு உதவிகளும் செய்வார். ஏழைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பது படிப்புக்காக உதவுவது இப்படி இந்தக் குணங்கள் எனது குடும்பத்தில் இருந்ததால், எனக்கும் அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. தொடர்ந்து சமூக சேவையைச் செய்து வருகிறேன். குறிப்பாக மனநல ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.

நீங்கள் ஆலோசனை வழங்கிய முதல் அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

முதல் அனுபவம் என்றால் எங்கள் சொந்தகார பையன் ஒருவன் சவூதியில் வேலை செய்தான். அங்கே அவருக்கு ஒரு விபத்து நடந்து இடுப்புக்குகீழே இயங்காமல் போய் விட்டது. அவர் குடும்பத்தில் அவருக்கு எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்தாலும் அவருக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது. இது பற்றி அவர் என்னிடம் அதிக நேரம் பேசினார். அப்போது அவர் மனதில் மனஅழுத்தம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அப்போது நான் சொன்னேன் நீங்கள் இனி இங்கே இருக்காமல் உங்களைப் போல பாதிக்கப்பட்டவர்களோடு போய் இணைந்திருங்கள் என்று சொன்னேன். அந்த மாதிரியான இடத்தில் நீங்கள் இருக்கும் போது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். உங்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும் என்று அவரிடம் கூறினேன். அவரும் அதே போல செய்கிறேன் என்று ஒத்துக் கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் குடும்பத்துக்குள் ஏதோ பிரச்சனை வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இது எனக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது. எனவே இதுபோல் விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து இயங்கி வருகிறேன்.

இதுபோல எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள்?

இந்தத் துறையில் கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடமாக நான் பணியாற்றி வருகிறேன். ஏராளமான பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். இதில் எழுபது விழுக்காடு நல்ல முறையில் தீர்த்து வைத்திருக்கிறேன்.

உங்களிடம் எந்த மாதிரியான பிரச்சனைகள் அதிகமாக வருகின்றன?

கணவன் மனiவி பிரச்சனைகள் தான் அதிகமாக வருகின்றன. அதற்கடுத்து காதல் பிரச்சனைகள் நிறைய வருகின்றன. அதற்கடுத்ததாக மாமியார் மருமகள், நாத்தனார் ஈகோ பிரச்சனைகள் நிறையவரும். இதற்கும் தகந்த ஆலோசனை சொல்லி அனுப்புகிறேன். அடுத்து கணவன் மனைவி தாம்பத்திய உறவு சம்மந்தமான பிரச்சனைகள் இதற்கும் தகுந்த முறையில் தீர்வு வழங்குவேன்.

அண்மைகாலமாக கணவன் மனைவி பிரச்சனைகள் நிறைய மேலோங்கி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இதற்கு என்ன காரணம் என்றால் அந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்தே இருந்தார்கள். அப்படியிருந்த போது அவர்களுக்கு இயற்கை இல்லை. அதனால் எதுவாக இருந்தாலும் அனுசரித்து போனார்கள். இப்போது பெண்களுக்கு கல்வி முக்கியம்தான். அதனால் கல்வியைக் கொடுக்கிறோம் அடுத்தது வேலை இதனால் அவர்கள் காலிலேயே அவர்கள் நிற்பதால் அவர்கள் நம்முடைய கலாச்சாரத்தை மறந்து விடுகிறார்கள். என்ன தான் படித்தாலும் நாம் குடும்பம் என்ற வட்டத்திற்குள் இருக்கிறோம் என்ற உணர்வு பெண்களுக்கு இருக்க வேண்டும். இது ஆண்களுக்கும் இருக்க வேண்டும். இது ஆண்களுக்கும் இருக்க வேண்டும். இது இல்லாத போது கருத்து முரண்பாடுகளால் ஒருவரை ஒருவர் சுலபமாக தூக்கி எரிந்து விடுகிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் குடும்பம் சார்ந்ததும், சமூகம் சார்ந்ததும் வாழ்ந்தால் கொஞ்சம் பயம் இருக்கும் பெரியவர்கள் திட்டுவார்கள், நமக்கென்று குடும்ப கௌரவவும் இருக்கிறது என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் அவரவர் தனித்தனியாக ஆன பிறகு யார் என்ன சொன்னால் என்ன? என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள்.

இதனால் அவர்களின் குழந்தைகள் பாதிக்கிறார்கள். அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் பாதிக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிந்து கொள்வதிலை. இதனால் தற்சமயம் கணவன் மனைவி பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

பெண் சுதந்திரம் என்று கொடுத்தாலும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியவில்லையே ஏன்?

பெண் சுதந்திரம் என்பது ஆரம்ப காலத்திலிருந்தே இருந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் ஆண்கள் அடக்கி ஆண்டிருக்கிறார்கள் அதன்பிறகு பெண்களே பெண்களுக்கு எதிரியாகியிருக்கிறார்கள். ஆக பெண் முயற்சி எடுத்து வெளியே போனால் கூட அங்கே பெண்ணேதான் அவளுக்கு எதிரியாக இருக்கிறாள். எனவே பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் நாம் செய்வது சரியா, என்ற தெளிவான சிந்தனையை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அப்போது தான் இந்த சமூகம் நன்றாக இருக்கும். சமூகம் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்ற சிந்தனையை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் வேலைக்குப் போவதால் கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என்கிறார்கள். ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இது அவசியமானதாக இருக்கிறதே?

பெண்கள் வேலைக்குப் போவதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள பொருளாதார நெருக்கடியில் பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியம் என்றாலும் அவர்களின், குடும்பம், கணவன், குழந்தைகள் அதற்குள் இருக்கும் வாழ்க்கை என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது. குறிப்பாக விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கலாச்சார சீரழிவு என்று நாம் பேசி வருகிறோம். ஆனால் எல்லாமே மாறிவரும் காலச் சூழலில் கலாச்சாரமும் மாறத்தானே செய்யும்?

என்னதான் மாறினாலும், நமக்கான எல்லை எது வென்று பார்க்க வேண்டும். பொதுவாக எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் இப்போது வருகிறார்கள். அதே நேரத்தில் எங்கள் அடையாளத்தை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. எனவே நமக்கென்று உள்ள எல்லையைத் தாண்டாமல் இருக்கிறோமா என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் ஒரு மனநல ஆலோசகர் என்ற நிலையில் உள்ள கருத்தாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மனநலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு கண்டிப்பா வேண்டும். வருங்காலத்தில் என்ன வியாதி அதிகமாக இருக்கமென்றால், மன அழுத்தம் தான் அதிகமா இருக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆகையால் மனநலத்தில் விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனநலம் பாதித்தால் கூட அந்தக் குடும்பமே வருத்தப்பட வேண்டியிருக்கும். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் இந்த நோய் வரவாய்ப்பிருக்கிறது. எனவே மக்கள் இதில் மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மனநல ஆலோசனைகளை தாண்டி வேறு என்ன செய்கிறீர்கள்?

சென்னையில் பல்லாவரத்தில் என்னுடைய தோழிகளுடன் இணைந்து அன்னை பாத்திமா என்ற ஒரு காப்பகத்தை நடத்தி வருகிறேன். இதில் எங்கள் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் இவர்களை வைத்து பராமரித்து வருகிறோம். குழந்தைகளுக்கு படிப்பும் கொடுத்து வருகிறோம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com