بسم الله الرحمن الرحيم
Wednesday 20th June 2018 | 06 ஷவ்வால் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பிரார்த்தனை ஓர் மூளை! கட்டுரை! அச்சிடுகமின்-அஞ்சல்
30 ஆகஸ்ட் 2015 காலை 10:49


பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் எவராவது இருக்கின்றார்களா..? தேவைகள் அற்ற மானிடர் எவராது உண்டா..? இறை உதவி தேவையில்லை என்று கூறும் மக்கள் எவராவது உள்ளனரா..?

எவரும் கிடையாது என்பதே உண்மை.

பிரச்சினைகள், தேவைகள் அனைத்தும் தீர ஒரே வழி.. இறைவனிடம் இரு கரம் ஏந்துவது தான்.

தேவைகள் அனைத்தையும் தன்னைப் படைத்த இறைவனிடம் கேட்டுப்பெறுவது தான் மனிதனுக்கு அழகு. அதற்கான வழிகாட்டும் வாசலை அவன் திறந்து தருவான்.

மனிதன் பலவீனமானவன். நம்மைப்போன்ற இன்னொரு பலவீனமானவனிடம் நமது தேவைகளை கேட்டுப் பெறுவது என்பது எப்படி அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்..? மனிதன் எப்போதும் தேவையுடையவன். நம்மைப் போன்ற மற்றொரு தேவையுடையவனிடம் நமது தேவைகளுக்காக கையேந்தி நிற்பது அறிவுடமையாகுமா..?

இறைவனிடம் கையேந்துங்கள். அவன் அதனை விரும்புகின்றான். அத்துடன்.. நமது தேவைகளை குறித்து படைத்தவனிடம் விண்ணப்பித்துவிட்டோம் என்று நாமும் நிம்மதி பெறலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் இறைவனிடம் எதுவும் கேட்பதில்லையோ, அவர்கள் மீது இறைவன் கோபம் கொள்கின்றான்' (திர்மிதி)

இறைவனின் ஈடு இணையற்ற வல்லமையைப் புரிந்துகொண்டால் அவனிடம் மட்டுமே நமது தேவைகள் குறித்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அவன் தன்னைக்குறித்து இவ்வாறு கூறுகின்றான்:

''(நபியே!) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்''. (3:26)

ஆள்பவன்–ஆளப்படுபவன், பணக்காரன்–ஏழை, அதிகாரத்தில் இருப்பவன்–அதிகாரம் இல்லாதவன், எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தேவையுடையவர்களே. அந்தத் தேவைகள் நிமித்தம் சில நேரம் நிம்மதி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். எனவே அவற்றைத் தன்னிடம் கேட்டுப்பெறுங்கள் என்கிறான் இறைவன்.

'மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்!' (35:15)

''உங்கள் இறைவன் கூறுகின்றான்: 'என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன்''. (40:60)

ஆகவேதான், 'பிரார்த்தனை என்றாலே வணக்கம் தான்' (அபூதாவூத், திர்மிதி) என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனிதனிடம் எதையாவது கூறும்போதோ, அல்லது

உதவிகள் எதையாவது கேட்கும்போதோ, திரும்பத் திரும்பக் கூறுவதை விரும்புவதில்லை. ஆனால் அல்லாஹ் அதனையே விரும்புகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிரார்த்தனையின் போது வற்புறுத்திக் கேட்பதை இறைவன் விரும்புகின்றான்'.

எவருக்காவது உதவிகள் செய்ய வேண்டுமென்றால், அவன் நல்லவனா கெட்டவனா என்று பார்த்துதான் மனிதன் உதவுவான். ஆனால் ஆண்டவன் அவ்வாறு அல்ல. நல்லவன், கெட்டவன் யாராக இருந்தாலும் கரங்களை ஏந்திவிட்டால் அதனை வெறுமனே திருப்பி அனுப்புவதில்லை.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் அதிகம் வெட்க உணர்வு கொண்டவன். சங்கையாளன். ஆகவே அவனிடம் எவராவது இரு கரங்களை நீட்டிவிட்டால் வெறுங்கையுடன் திருப்பி அனுப்புவதற்கு அவன் வெட்கப்படுகின்றான்'. (அபூதாவூத், திர்மிதி)

கும்பலாக வந்து தேவைகளைக் கேட்டால் மனிதன் அஞ்சுகின்றான். எங்கே இவர்கள் தர்ணாவிலோ, வேலை நிறுத்தத்திலோ ஈடுபட்டுவிடுவார்களோ என்று அஞ்சுவான். தொழிலதிபர்களாக இருக்கட்டும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் கூட்டத்துடன் வந்து விண்ணப்பிக்கும் மக்களைக் கண்டு அஞ்சவே செய்வார்கள்.

ஆனால் இறைவன் அவ்வாறு அல்ல. கும்பலோ, தனிமனிதரோ, யாராக இருந்தாலும் அவன் அஞ்சுவதில்லை.

படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான். அனைத்தையும் அவன் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அவனிடமே முறையிடுவோம் என்ற எண்ணமே ஒருவகை நிம்மதியைத் தந்துவிடாதா..!

இருகரம் ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளத்து வேட்கைகளை அவனிடம் கொட்டி முடிக்கும்போது, உடலும் உள்ளமும் லேசாகி.. நம்மையறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வெளிவரும்.

ஆக்கம் : நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com