بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
எங்கும் எதிலும் டென்ஷன்! மனசே..ரிலாக்ஸ்! ஆன்மீக கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
12 அக்டோபர் 2015 காலை 12:01

எங்கும் எதிலும் டென்ஷன் காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை ... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரை... குடும்பப் பெண்களில் இருந்து வேலைபார்க்கும் பெண்கள் வரை ... சாதாரண கூலித்தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை... எல்லோரிடமும் அனைத்து காரியங்களிலும் அவசர மயம் கலந்து காணப்படுகிறது.

அவசரம் என்பது மனித இயல்பு. அந்த இயற்கையான குணத்தில் தான் மனித இனம் படைக்கப்பட்டிருப்பதாக பின்வரும் திருக்குர் ஆனின் வசனம் கூறுகிறது:

'நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான் '(70:19)

'டென்சன் 'எனப்படும் இந்த பதற்றம் என்பது இறைவனும் இறைத்தூதரும் விரும்பாத, சாத்தானின் மிக முக்கிய குணநலன்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

'நிதானம் என்பது இறைகுணத்தைச் சேர்ந்தது. அவசரம் சைத்தானின் குணநலனில் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நூல்: திர்மிதி: 1935)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீளமாக இல்லாமல் சுருக்கமாக ஒரு உபதேசம் கூறுங்கள்'எனக்கேட்டுக்கொண்டார்.

'நீர் கோபம் அடையாதீர்'என நபி (ஸல்) கூறினார்கள்'(அறிவிப்பாளர்: அபூஹ§ரைரா (ரலி), புகாரி)

'மன அழுத்தம் என்றால் என்ன?'

ஒருவர் தம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும் போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள அவருக்கு மேலும் உந்து சக்தியையும், மனவலிமையையும் கொடுக்கும். எனினும் இக்கட்டான இந்தச் சூழ்நிலை அடிக்கடி தொடருமானால் அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது.

உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற இஸ்லாம் சில அம்சங்களை கடைப்பிடிக்கும்படி ஆலோசனை வழங்குகிறது.

'(இறையச்சம் உள்ளவர்கள் எத்தகையோர் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக்கொள்ளக்கூடியவர்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிக்கக் கூடியவர்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.'(திருக்குர்ஆன் 3:134)

'நிச்சயமாக கோபம் என்பது ஷைத்தானின் தன்மையாக உள்ளது; நிச்சயமாக சைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பை நீரைக் கொண்டுதான் அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் அவர் அங்க சுத்தம் (முகம், கை, கால்களை கழுவுவது) செய்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அதிய்யா பின் உர்வா ஸஃதி (ரலி) அபூதாவூத்).

மன அழுத்தம் நீங்கிட வேண்டுமானால் எதைப்பற்றியும் கவலைப்படக் கூடாது. பிரச்சினைகளைப்பற்றி கவலை அடைவதே மன அழுத்தம் அதிகமாக காரணமாக அமைந்துவிடுகிறது.

'நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால் 'கவலைப்பட வேண்டாம் இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப் படுத்திவிடும்'என்று கூறுவார்கள்' (அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் ரலி, புகாரி : 3616)

நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர் களும் எதிரிகளிடம் இருந்து தப்பித்து 'தஃவர்'எனும் குகையில் தங்கியிருந்த போது, எதிரிகள் அவர்கள் குகைவாசலை வந்தடைந்தார்கள். உடனே அபூபக்கர், 'இறைத்தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால், நம்மை பார்த்துவிடுவார்களோ'என்று கூறினார்கள். மன நெருக்கடியான இந்த நிலையில் மாநபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மனப்பக்குவமாக நடந்து கொண்டார்கள் என்பதை பின்வரும் திருக்குர் ஆனின் வசனம் விவரிக்கிறது.

'குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது (நம் தூதர்) தம் தோழரிடம் 'கவலைப்படாதீர்கள்; நிச்சயம் இறைவன் நம்முடன் இருக்கிறான்' என்று கூறினார். அப்போது அவர் மீது இறைவன் தன் அமைதியை இறக்கி வைத்தான்'. (9:40)

மனம் நிம்மதி பெற ஓய்வும், அளவான தூக்கமும் அவசியம் என்பதை திருக்குர்ஆன் வலியுறுத்தி இருக்கிறது.

'உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்'(78:9).

'நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்கு அவனே உண்டாக்கினான்'(10:67)

'மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1.ஆரோக்கியம், 2. ஓய்வு என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்' (அறிவிப்பாளர்கள்: இப்னு அப்பாஸ் )ரலி) புகாரி: 6412)

பணிவு என்பது ஒரு உயர்வான குணம். பணிவு உயர்வு தரும். மாறாக தாழ்வு மனப்பான்மை என்பது கோழைத்தனம். அது மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகிறது. எனவே தான் மாநபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு மனிதனும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது என்றார்கள்.

'நீங்கள் உங்களை விட தாழ்ந்தவர்களைப் பாருங்கள்; உங்களை விட உயர்ந்தவர்களைப்பார்க்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி) முஸ்லிம்)

எங்கே நிம்மதி கிடைக்கும்? எங்கே அமைதி கிடைக்கும்? என்று மன உளைச்சலில் சிக்கிக் கொண்டவர்களுக்கு ஒரு நற்செய்தி... தொலைந்து போன அமைதி வெகு தொலைவில் அல்ல... மிகஅருகில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

'இறைவனை நினைவு கூர்வதைக் கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!' (13:28)

நறுமணம் தரும் பொருட்கள் யாவும் மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், மன அழுத்தத்தில் இருந்து மனிதனை பாதுகாக்கவும் செய்கிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் தமக்கு பிடித்தமான மூன்று அம்சங்களில் ஒன்றாக நறுமணத்தையும் தேர்வு செய்தார்கள்.

ஆக்கம்: முஹம்மத் நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com