بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஜூன் 2016 மாலை 08:29

மது, மாது, பொன், புலால் இதில் எது நல்ல மனிதரையும் படுகுழியில் தள்ளுகிறது என்பதை ஒரு நல்ல மனிதனை வைத்து சோதனை செய்தனராம்.

உழைத்து சம்பாதிக்காத பணம் வேண்டாம் என்று பொன்னை மறுத்து, மற்ற உயிர்களை அழித்து நமக்கு எதற்கு உணவு என்று புலால் மறுத்து, வன்புணர்ச்சி மகா பாவம் என்று பெண் சபலத்திற்கும் இடம் கொடாத அந்த நல்ல மனிதன் மதுவைப்பார்த்து இதனால் மற்றவர்க்கு தீங்கில்லை உட்கொண்டால் நல்லது கெட்டதெல்லாம் தனக்குத்தான் என்று மதுவில் மயங்கினான். போதை பசியை தூண்ட, புலால் உணவு ருசித்து, மயக்கம் தலைக்கேற வன்புணர்ச்சியில் திளைத்து, இவையனைத்தையும் என்றும் பெற பணத்தை அபகரித்தான். போதைப் பொருள் அத்தகைய அழிக்கவல்ல சக்தி. 

÷உள்நாட்டுக் கிளர்ச்சி, பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்ட நாடுகள்தான் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்துவோருக்கு தளம். "உலகெங்கிலும் மனித உரிமைகளை நிலைநாட்ட முயற்சி எடுத்து வரும் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் முக்கிய பணி, இத்தகைய நாடுகளை அழிவிலிருந்தும், கடத்தல்காரர்களின் பிடியிலிருந்தும் காப்பாற்றி அமைதியை நிலை நாட்டுவது' என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் பான் கீ மூன் அறிக்கை விடுத்துள்ளார்.

போதைப் பொருள்களுக்கு எதிராக பல நாடுகள் பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் எடுத்து வருகின்றன. 1842ஆம் வருடம் சீனா, இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் போதைப் பொருளான ஓபியம் எனப்படும் அபினை சீனாவில் புழக்கத்தில் விடுவதில் ஏற்பட்ட பிரச்னை போரிடும் அளவிற்கு சென்றது. "ஓபியம் யுத்தம்' என்று இந்நிகழ்வு வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது. 

நமது நாட்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல், பண்டிகை கொண்டாட்டங்களில் கஞ்சா புகைப்பது, சோம பானம், பங்க் போன்ற போதைப் பொருள் கலந்த மதுரஸங்களை குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அபின் உள்நாட்டு மருந்து தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணியாக அபின் கலந்த மருந்துகள் நாட்டு வைத்தியத்தில் காலங்காலமாக உயயோகத்தில் உள்ளது. நூறு வருடங்களுக்கு முன்பு மருத்துவரின் சான்றோடு அபின் மருந்தகங்களில் வாங்கும் முறை இருந்தது.

பெத்திடின் போன்ற ஆங்கில மருந்து, வலியை குறைப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது.  மருந்தை மருந்தாக உட்கொள்ளாமல் விருந்தாக அதிலேயே திளைத்தால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு அது ஒருவரை அழித்துவிடும்.

1908இல் இருந்து முனைப்பாக சீனா, ஆப்பிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1909இல் இருந்து சர்வதேச அளவில் போதைத் தடுப்பு குற்றங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது போல் 1987இல் ஐக்கிய நாடுகள் சபை பிரத்யேக போதை தடுப்பு கூட்டத்தொடர் நடத்தியது.

அதில் போதைப் பொருள்கள் தயாரித்தல் கடத்தல் மற்றும் விற்பனை பன்மடங்காக பெருகி வருவதையும் அதன் விளைவாக கிளைத்தெழும் குற்றங்களை தடுக்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் விவாதித்தது.

சீன மாகாணங்களான ஹியூமென், ஹுவாடோங் பகுதி ஆட்சியரான லின் செக்சு என்பவர், அபின் புழக்கத்தை முடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். அவர் சுமார் 200 அபின் வியாபாரிகளை கைது செய்து 12 லட்சம் கிலோ அபினை கைப்பற்றினார்.

1839ஆம் வருடம் ஜூன் மூன்றாம் தேதி துவங்கி, 23 நாள்கள் 500 பணியாளர்கள், கைப்பற்றிய அபினை, உப்பு, சுண்ணாம்பு கலந்து அழித்து கடலில் கரைத்தனர். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை போற்றும் வகையில் ஜூன் 26ஆம் நாள் போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

1988ஆம் வருடத்தில் இருந்து இது அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் 2007ஆம் ஆண்டின் அறிக்கைப்படி சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள் வணிகத்தின் மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 320 மில்லியன் டாலர்.

பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரள்வதால் கடத்தல்காரர்களின் பலமும் அதிகம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.  சர்வதேச காவல் அமைப்பிற்கு போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய சவால்.

சமூக நிலைப்பாடுகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்கூடாக தெரிகிறது.  மேலை நாட்டு கலாசாரத்தில் கடுமையாக உழைப்பது மற்றவர் உரிமைகளை மதிப்பது போன்றவைகள் போற்றப்பட வேண்டியவை.

சுதந்திரம் என்ற பெயரில் மது, போதைப் பொருள்களை உட்கொள்ளும் மேல் நாட்டு கலாசாரம் மிகப் பெரிய அழிவிற்கு வழி வகுக்கிறது. போதைப் பொருள் கலாசாரம் நாட்டில் பரவி வருவதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது. 

இரண்டுங்கெட்டான் பருவத்தில் உடல் ரீதியாகவும், உணர்வுகளிலும் பல மாற்றங்கள் ஏற்படும். புதிய சுதந்திரம் கிடைத்துவிட்டதாக உணரும் பருவத்தில் சரியாக கவனிக்கப்படவில்லை என்றாலும், சீரிய வழிகாட்டுதல் இல்லாத நிலையிலும் இளைஞர்கள் கெட்ட பழக்கங்களின் பிடியில் சிக்க வாய்ப்புண்டு.

எல்லாமே சேர்க்கை தோஷத்தால் ஏற்படுகிறது. சகவாசம் நன்றாக அமைவதும் ஒரு கொடுப்பினை. நல்லியல்புகள் பொருந்திய குடும்பத்து இளைஞர்களும் கெடுவது தீயவர்களின் சகவாசத்தால் என்பது உண்மை.

பள்ளிப்பருவத்திலேயே புகைப்பழக்கம் ஆரம்பித்து விடுகிறது. புகை வலையில் சிக்க வைப்பதில் சிலருக்கு ஆனந்தம். அதுவே சுதந்திரம், வீரம், ஆண்மையின் அடையாளமாக விவரிக்கப்படுகிறது. புகையிலையில் உள்ள நிகோடின் மூளை நரம்புகளை ஆட்கொண்டு பழக்கத்தை பற்றிக் கொள்ள வைக்கிறது.

அதோடு தொற்றிக் கொண்ட பழக்கம் மது வகைகள். அந்த போதையும் போதாது என்று ஹெராயின், கஞ்சா கோக்கெய்ன் நச்சுப் பொருள்களை நாடும் நிலை ஏற்படுகிறது. போதை வலையில் சிக்கினால் மீள்வது கடினம்.

பெற்றோருக்கும் கல்வி நிர்வாகத்திற்கும் போதை பழக்கத்தை கண்காணிப்பதில் பொறுப்பு இருக்கிறது. நல்லது நடப்பது கடினம், கெடுதல் கச்சிதமாக பரவும் என்பதை பல நிகழ்வுகளில் பார்க்கலாம். கெடுதலை தடுத்தலே முதல் கட்ட நிவாரணம்.

போதைப் பொருள் ஆண் - பெண் பேதமின்றி இருபாலரையும் ஆட்கொள்ளும். அவர்களது நடவடிக்கை வித்தியாசமாக இருக்கும், பசியிருக்காது, சோம்பிருப்பார்கள், குற்றவுணர்வு முகத்தில் தெரியும். போதைப் பொருளை பெறுவதற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

வீட்டிலேயே திருடுவார்கள். தெரிந்தவர்களிடம் கடன் கேட்பார்கள். திடீரென்று கோபப்படுவார்கள். சரியான வேளையில் போதைப் பொருள் கிடைக்கவில்லையென்றால் எதையோ இழந்து விட்டதைப் போல உருகுலைந்து தத்தளிப்பார்கள். தற்கொலைக்கும் துணிந்துவிடுவார்கள். போதைப் பொருளுக்கு அடிமையான பெண்கள் பாலியல் கொடுமைக்கு தள்ளப்படும் அவல நிலையுமுண்டு.

பள்ளி, கல்லூரி, வீடுகளில் கண்காணிப்பு சீராக இருந்தால் போதைப் பொருள் கொடுமையிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற முடியும். போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985ஆம் ஆண்டு கடுமையாக்கப்பட்டு மத்திய சட்டமாக அமலில் உள்ளது. குறைந்தபட்ச தண்டனை விதிக்கவும் செஷன்ஸ் கோர்ட் விசாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

2012ஆம் வருடம் தமிழகத்தில் 1,402 வழக்குகள் இச்சட்டத்தில் பதியப்பட்டன, சென்னையில் மட்டும் 110 வழக்குகள், நாடு முழுவதும் 10,272 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிக போதை தரக்கூடிய ஹெராயின் 1,027 கிலோ, கோக்கெய்ன் 43 கிலோ மற்ற போதை பொருள்கள் ஆகியவை முந்ததைய வருடங்களை விட அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளன.

13,459 குற்றவாளிகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தில் 2012ஆம் வருடம் கைதாகினர். அதில் 216 வெளிநாட்டவர் அடங்குவர். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் அதிகம். போதை மருந்து பரவலாக புழக்கத்தில் இருப்பது தெரிகிறது. 

போதைப் பொருள் அதிகமாக தயாரிக்கும் இடம் தங்க வளையம் எனப்படும் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான். அதுபோல கம்போடியா, வியட்னாம், பர்மா, தாய்லாந்து தங்க முக்கோணம் என்று வர்ணிக்கப்படும் போதை பொருள்கள் புழங்கும் நாடுகள்.

போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு இடைப்பட்ட நிலம் இந்திய துணை கண்டம். ஆனால் இப்போது முக்கிய உட்கொள்ளும் தளமாக மாறி வருகிறது.

போதைப் பொருள் தடுப்பு ஒரு தொடர் நடவடிக்கை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதை தடுப்பு சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருளுக்கு மறுப்பு தெரிவிப்பது தனி மனித உரிமை என்பதை இளைய சமுதாயம் உணர வேண்டும்.

தினமணி 

  01 July 2014

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SM ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது!
பப்பரப்பள்ளி பகுதியில் துர்வாடை! மழைக்காலத்திற்கு முன் பராமரிப்புப் பணிகள் செய்வதால் ஏற்பட்டதாக “நடப்பது என்ன?” குழுமத்திடம் நகராட்சி தகவல்!
SDPI கட்சி மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணை!ப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க தூத்துக்குடியில் போராட்டம்
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com