بسم الله الرحمن الرحيم
Thursday 22nd August 2019 | 20 துல்ஹஜ் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மிதியடி புராணம்..அச்சிடுகமின்-அஞ்சல்
14 ஏப்ரல் 2012 மாலை 09:48

எமது கட்டுரையாளர் கே.எஸ் முஹம்மத் ஷுஐப் கடந்த பல வாரங்களாக  உடல் சுக குறைவால் மிகவும் சிரமப்பட்டு இருந்தமையால் அவருடைய ஆக்கங்கள் நமது இனைய தளத்தில் வெளிவரவில்லை. தற்போது இறைவனுடைய கிருபையால் குணமடைந்து வருகிறார்.

அவர் பூரண குணமடைந்து  நீடூழி  வாழ இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

ADMIN

====  ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ====

கதை – வரலாறு – புராணம் இவை மூன்றும் ஒரே பொருளைத் தருபவை என்ற தவறான நம்பிக்கை நம்மில் பலரிடம் உண்டு. ஆனால் இவை மூன்றுமே வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. கற்பனையின் சொற்குவியல் கதை. கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது வரலாறு. புராணம் என்பது ஒரு சமூகத்தில் வழி வழியாக இறங்கிவரும் தொன்மை சார்ந்த நம்பிக்கைகளின் தொகுப்பு.

Funny_Pictures_of_I_Fixed_It_Part_12_42

இதை ஆங்கிலத்தில் 'மைத்' (MYTH) என்பார்கள். ராமாயாணம், மகாபாரதம் - புராணம், விக்ரமாதித்யன் கதை, பஞ்சதந்திரக் கதை, முகலாயர் வரலாறு, ஆங்கிலேயர் வரலாறு என இவைகளை வகை பிரிக்கலாம். ஆனால் இதில் வரலாறு தவிர கதையும், புராணமும் சில நேரங்களில் கேலிப் பொருளாக மாறுவதுண்டு. நம்பத்தகாத விஷயங்களைப் பற்றி பேசுபவரை, 'கதை விடுகிறான்..' என்றும், தன்னைப் பற்றியே அதிகம் பேசுபவர்களை 'சுயபுராணம் பாடுகிறான்' என்றும், கேலியாகச் சொல்வதுண்டு. 'வரலாறு'-க்கு இந்த துன்பம் இல்லை. ஏனெனில் 'வரலாறு' என்பது நடைபெற்ற நிஜங்களின் தொகுப்பு என்பதே.

சரி இங்கு நமது நோக்கம் இலக்கிய விஷயமல்ல. கீழே வரும் 'மிதியடி (செருப்பு) புராணத்திற்கு ஒரு சிறிய முன்னுரை மட்டுமே இது..

அன்றாடம் நாம் உபயோகிக்கும் அத்யாவசியமான பொருட்களில் சிலவற்றை நாம் அறுவருப்புடனும், அசூடையுடனும் நோக்குகிறோம். அவற்றுள் ஒன்று செருப்பு. சாக்ஸ், உள்ளாடைகள் போன்றவையும் அடங்கும். இதில் சிலபேர் செருப்பை கையால் கூட தொடமாட்டார்கள். அவ்வளவு அறுவெறுப்பு. பள்ளிவாசல்களில் செருப்புக்கு என தனி இடம் ஒதுக்கியிருந்தும், அதை கையால் தொட்டு எடுத்துப் போக வேண்டுமே......என்பதற்காக படியிலே கழற்றி செல்பவர்கள் உண்டு.

கால்கள் நமது உடலின் ஒரு அங்கம். அதில் அணியும் செருப்பு மட்டும் எப்படி அசிங்கமாகும் என்று தெரியவில்லை. தகராறுகளின் போது ஒருவனை, 'செருப்பால் அடிப்பேன்' என்பதும், செருப்பைத் தூக்கி காட்டுவதும் அல்லது எதிரியை நோக்கி செருப்பை எடுத்து வீசுவதும் சகிக்க முடியாத அவமானமாகக் கருதப்படுகிறது. அதை அவன் தன் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டான்.

நான் ரியாத் நகரிலுள்ள 'பாண்டா' கம்பெனியில் பணீபுரிந்தபோது அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடைகளை இலவசமாக சலவை செய்து கொடுக்க, தனி லாண்டரி உண்டு. நமது அழுக்கடைந்த உடைகளை ஒரு பக்கெட்டில் போட்டு லாண்டரியில் கொண்டு போய் கொடுத்தால் அந்த உடைகளை சுத்தம் செய்து அதே பக்கெட்டில் போட்டு வைத்து விடுவார்கள். நாம் போய் எடுத்து கொடிகளில் உலரப் போட வேண்டியதுதான். ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் உள்ளாடைகள், சாக்ஸ் போன்றவைகளை அதில் போடக்கூடாது. ஆவைகைள நாமே துவைத்துக் கொள்ள வேண்டியது தான். நமது உள்ளாடைகளை நாமே அறுவறுப்புடன் நோக்கும் போது, இன்னொருவன் அதை எப்படி தொடுவான்..?

எனது நினைவுக்கு எட்ட, நான் ஒரு ஆறு, ஏழு வயதிலிருந்து செருப்பு அணிந்து வருகிறேன். அப்போதெல்லாம் ரப்பர் செருப்புதான். அது அறுந்து போனாலோ அல்லது தொலைந்து போனாலோ இன்னொரு புதிய ஜோடி கிடைக்க ஒரு இரண்டு மாதமாகும்.

இதற்கிடையே என் வாப்பா ஆந்திரா ராஜமுந்திரியில் இருந்து அங்கு கம்பெனியில் தைத்து வாங்கப்பட்ட தோல் செருப்புகளை அனுப்பி வைப்பார்கள். அது ஒரு மாதிரி அட்டை போன்று முரட்டுத்தனமாக இருக்கும். நவீன மாடலிலும் இருக்காது. காலுக்குள் நுழையவே மிகுந்த சிரமப்படும். இதை போட்டுக் கொண்டு போனால், நண்பர்கள் கேலி செய்வார்களே... என்ற வெட்க உணர்வில் இதை நான் போடமாட்டேன் என்று அடம்பிடிப்பேன். ஆனால் உம்மா, 'வாப்பா இதை உனக்கு ஆர்டர் செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

kolhapuri-chappal-17

இதைத்தான் நீ போட வேண்டும். வேறு வாங்கித் தர மாட்டேன். ஏன்று நெத்தியடியாய் சொல்லி விடுவான். தலைவிதியே என்று போட்டுக் கொண்டு போவேன். கூட்டாளிகள் 'ஹேய்... சக்கிலியன் செருப்புடா இது' என்று கேலி செய்வார்கள். மானம் போகும். உம்மாவிடம் போய் அழுவேன். உம்மா கொஞ்சம் மனம் இறங்கி, வேறு ரப்பர் செருப்பு வாங்கித் தருவான். நண்பர்களே! இந்தக் 'கொடுமை' அவ்வப்போது விட்டுவிட்டு என் திருமணம் வரை தொடர்ந்தது.

எனது திருமணத்திற்கு (1981) முன்பு வாப்பாவுடன் ராஜமுந்திரியில்தான் இருந்தேன். திருமணம் நடைபெற 1 மாதகால இடைவெளி இருந்தது. எனக்கு புதுசெருப்பு வேண்டும்' என்றேன். கடையில் எல்லாம் போய் வாங்க வேண்டாம் நல்லதாக இருக்காது. நீ என்னுடன் ஒரு இடத்திற்கு வா. அங்கு உனக்கு செருப்பு ஆர்டர் கொடுத்து செய்வோம்'. எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் இப்போது நான் சிறுபிள்ளையல்ல. வயது வந்த வாலிபன் 21 வயது அப்போது எனக்கு. முன்பு போல அழவோ, அடம்பிடிக்கவோ முடியாது என்றாலும் எனக்கு மனதில் புறுபுறுவென்று ஒரு கோபம்தான். அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் அவர்களோடு சென்றேன்.

வாப்பா ராஜமுந்திரி நகரின் பல சந்துகளின் வழியே என்னைக் கூட்டிச் சென்றார்கள். அங்கு ஒரு வீட்டில் பல தொழிலாளிகள் செருப்புகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் ஒருவரிடம் சென்று என் கால் அளவை கொடுக்கச் சொன்னார்கள். கொடுத்தேன் '1 வாரத்தில் செருப்பு தயராகிவிடும். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார் அவர். செருப்பும் வந்தது. மோசமில்லை. ஓரளவு நவீன மோஸ்தரிலே அது இருந்தது. இந்த அளவிலாவது வாப்பா நமது உணர்வை கொஞ்சம் மதித்திருக்கிறார்களே.. என்ற ஒரு அற்ப திருப்தியும் கூட. வாப்பா மீதுள்ள அந்த சின்ன கோபமும் கூட விடைபெற்றுக் கொண்டது.

திருமணம் நடைபெற்று சரியாக 1 வாரம் இரு;கும். புது மாப்பிள்ளை அல்லவா..? சதுக்கைத் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. ' ஓய்.... மாப்பிள்ளை... 'திரும்பிப் பார்த்தேன் 'என்ன...?' ஒருவர் கேலிச் சிரிப்புடன் சொன்னார். 'உமது செருப்பு ஏன் இப்படி வாய் பிளக்கிறது'. அப்போதுதான் பார்த்தேன். செருப்பின் மேல் பாகமும், அடிக்கட்டையும், பசைவிட்டு வேறு வேறாக நின்றது. அது தெரியாமல்தான் நடந்து சென்றிருக்கிறேன். எனக்கு பெரிய வெட்கமாக போய் விட்டது.

ஒரு மாதிரி சமாளித்து உம்மா வீடு சென்று விட்டேன். வாப்பா இருந்தார்கள். எனக்கு கோபமெல்லாம் இல்லை. 'நீங்கள் வாங்கித் தந்த கம்பெனி செருப்பின் லட்சணத்தை பாருங்கள் என்றேன்.

அவர்களிடமிருந்து ஒரே வார்த்தைதான் பதிலாக வந்நதது. 'திருட்டுப்பயல்' ஏமாற்றி விட்டான்....' ஆமாம் ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.

செருப்பை களவு கொடுப்பது நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு அதீத கேவலமான அனுபவமாகவே இருக்கும். இந்தக் கேவலத்திலிருந்து தப்பியவர்கள் ஒரு சிலரே இருக்கக் கூடும். கடந்த 1 வருடத்தில் நான்கு ஜோடி செருப்புகளை நான் களவு கொடுத்திருக்கிறேன் என்று சொன்னால் உங்களில் எவரும் நம்பமாட்டார்கள் என்றாலும் அதுதான் உண்மை.

திருச்செந்தூருக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஒரு பிரவுசிங் சென்டருக்கு போய் கொஞ்ச நேரம் பொழுதுபோக்குவது எனது வழக்கம். A/C வைத்திருப்பின் கொஞ்சநேரம் 'ஜில்' லென்று இருக்கலாமே.... என்பதும் ஒரு காரணம். செருப்பை வெளியே விட்டுதான் உள்ளே செல்ல வேண்டும். அன்று வெளியே வந்து பார்த்தேன். என் செருப்பு மட்டும் இல்லை. வேறு வேறு செருப்புகள் கிடக்கின்றன. அந்த சென்டரின் உரிமையாளரிடம் விவரத்தை சொன்னேன். அவருக்கு முகம் ஒரு மாதிரியாகி விட்டது. ஏனெனில் நான்து அவரது தொடர்ந்த வாடிக்கையாளன். 'மன்னித்துக் கொள்ளுங்கள் பாய்' இனி நீங்கள் செருப்போடு உள்ளே வரலாம்' என்றார். வேறு என்ன செய்ய.....?

சலுகை தான் மிச்சம். செருப்பு போனது போனது தான். ஒரு 15 ரூபாய்க்கு மட்டரக ரப்பர் செருப்பு வாங்கிப்போட்டு கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

புதிய செருப்பு ஒரு நான்கு மாத காலம் ஒடியது. ஜூம்மா அன்று வழக்கமாக வைக்கும் இடத்தில்தான் செருப்பை வைத்தேன். தொழுது முடிந்த பிறகு கூட பார்த்தேன். அதே இடத்தில்தான் அது இருந்தது. இடைவெட்டாக ஒரு நண்பரிடம் இரண்டு நிமிட நேரமே பேசிக்கொண்டிருந்தேன். செருப்பு இருந்த இடம் காலியாக இருந்தது. அந்த மின்வெட்டும் நேரத்தில் எவனோ தன் கைவரிசையை காட்டிவிட்டான்.

அன்று மாலையே 200 ரூபாய்க்கு இன்னொரு புது செருப்பு வாங்கியாச்சு. இதன் தலைவிதி ஒரு 15 நாட்களுக்குக் கூட நீடிக்கவில்லை. நமதூர் பிரவுசிங் சென்டரில் அதை எவனோ லவட்டிக் கொண்டு போய் விட்டான். ஆனால் போன புண்ணியவான் தனது செருப்பை எனக்கு தானமாக விட்டுச் சென்றிருந்தான். அதுவும் FUZION இன்னொரு மாடல் செருப்புதான்.

அதுவும் என் காலுக்கு சரியாக இருந்தால் ஒரு இரண்டு மாதம் அதைப் போட்டுக்கொண்டு ஒப்பேற்றினேன். ஒரு நாள் அதே குறிப்பிட்ட பிரவுசிங் சென்டரில் அந்த செருப்பும் 'ஸ்வாகா' ஆனது. இதை எவனோ ஒருவன் திட்டம் போட்டு, முதலில் எனது புது செருப்பையும் பிறகு பதிலுக்கு அவன் விட்டுக் சென்ற செருப்பையும் களவாடிச் சென்ற விபரம் தெரிந்தது. ஜூம்மாவுக்கு எல்லோரும் வருவார்கள். பிரவுசிங் சென்டர் போன்ற இடங்களுக்கு ஓரளவு படித்த நல்ல குடும்பத்து பையன்கள் தான் வருகிறார்கள். அவர்களிலே கூட இவ்வளவு மோசமான புத்தி படைத்த நபர்களும் இருக்கக் கூடுமோ?

செருபபு களவு போவதென்பது மிகபெரும் சோகம். ஆதன் பணமதிப்பு எப்படியோ போகட்டும். எவனோ ஒருவன் நம்மை முட்டாளாகவும், தெம்மாடியாகவும் கேலிக்குரிய நபராகவும் நொடிப்பொழுதில் மாற்றிவிடும் கொடுமையை என்னவென்பது? இது மிகபெரும் அவலம் அல்லவா? இதற்கு தீhவுதான் என்ன? இன்றுமொரு புது செருப்பு உடனே வாங்கியாற்று. அதன் கதி என்ன? இறுதியில் சொல்கிறேன்.

அழகுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்கள். காலுக்கு அணி சேர்ப்பதால் செருப்பை 'காலணி' என்று நவீன தமிழ் சொல்கிறது. இந்தியாவின் மகி முக்கியமாகன ஏற்றுமதி பொருட்களில் ஒன்று தொல். முற்றுமு; தோல் சார்ந்த பொருட்கள்;. அந்நியச் செலவாணியை அள்ளித் தருகிறது. மேலை நாட்டுப் பொருட்களை விரும்புகிளவாகள் கூட 'காலணி' என்று வரும்போது இந்திய தயாரிப்புகளையே விரும்புகின்றனர்.

இப்போது VKC, FUZION போன்ற நவீன காலணி ரகங்கள் எல்லோரலும் விரும்பப்படுகின்றன. புதுசெருப்பு கடிக்கும்' என்பது இன்று பழைய மொழி மட்டுமே. இப்போதைய நவீன தயாரிப்புகள் புது மாப்பிள்ளை. புது பொண்டாட்டியை அணைப்பது போன்று கால்கள் சுகமாக 'சிக்' கென கவ்வி பிடிக்கிறது. எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.

கடைசியாக வாங்கிய செருப்பு களவு போகவில்லை நண்பர்களே!

நானே அதை விட்டுச் செல்லும் பரிதாப நிலை. எனக்கு ஏற்பட்டது. சென்ற மாதம் 1-ம் தேதி என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ICU-வில் நான் 'அட்மிட்' ஆகும் நிலை ஏற்பட்டது. அன்றைய தினமே ஆம்புலன்ஸ் ஊர்தியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன்.

அந்த பதற்றத்தில் நான் கடைசியாக வாங்கிய செருப்பு எங்கே போனதென்றே தெரியவில்லை. இப்போது இறைவன் உதவி கொண்டு பூரண குணமடைந்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்..

ஒரு வாரத்திற்கு முன்புதான் இன்னொரு புது ஜோடி செருப்பு வாங்கியுள்ளேன். இன்னும் வெளியே எங்கும் செல்லவில்லை.. பூரண ஒய்வு எடுத்து வருகிறேன். வாங்கிய புது செருப்பு என் கண்முன்னே இதோ புதுமை மாறாமல் கிடக்கிறது..

இதுவும் களவு போவது போல ஒரு கனவும் வந்துவிட்டது.

'கிட்டே இருப்பாயோ... அல்லது விட்டுச் செல்வாயோ....? புது செருப்பை பார்த்து என்று யோசித்த வண்ணம் இருக்கிறேன்.


ஆக்கம்: நமது கட்டுரையாளர்,

கே.எஸ் முஹம்மத் ஷுஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com