بسم الله الرحمن الرحيم
Tuesday 16th July 2019 | 13 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மாட்டு வண்டியும், கோசுப்பெட்டியும்..! கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
28 செப்டம்பர் 2014 மாலை 10:55

இன்றைக்கு மின்னல் வேக வாகனங்களும், அதி நவீன போக்குவரத்து சாதனங்களும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்து விட்டன. எங்கும்,எதிலும் வேகம் ..வேகம்தான். அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது அந்த பேருந்து ஓட்டுனர் கொஞ்சம் மிதமான வேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றால் கூட பயணிகளுக்குத் தாங்கவில்லை. "என்னைய்யா ..கட்டை வண்டி மாதிரி உருட்டுகிறான் " என்று அலுத்துக்கொள்கிறார்கள் .இறங்கிச் செல்லும்போது அந்த ஓட்டுனரை ஒரு எதிரியைப் பார்ப்பதுபோல பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.

maattu_vandi

ஆனால் மாட்டுவண்டிகளும், கட்டை வண்டிகளும் மட்டுமே வாகனமாக இருந்த அந்த இனிமை ததும்பும் கணங்கள் ....வில்லு வண்டி என்றும், மாட்டுவண்டி என்றும் சொல்லப்படும் அந்த இரட்டைக் காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டி எங்கள் வீட்டிலும் அப்போது இருந்தது. பிரம்பை வில் போல வளைத்து அதற்க்கு கூண்டு செய்வதால் அதற்க்கு வில்லு வண்டி என்றும் பெயர். கழுத்தில் மணிகள் கோர்க்கப்பட்ட அந்த கம்பீரமான காளைகளால் இழுத்து வரப்படும் அந்த வண்டி வீட்டுக்கு வந்துவிட்டாலே சிறுவர்களான எங்களுக்கு கொண்டாட்டம்தான். பக்கத்திலுள்ள திருசெந்தூருக்கும், ஆத்தூருக்கும், ஆறுமுகநேரிக்கும் போக அதுதான் அன்றைக்கு வாகனம். வண்டியின் முன்புறமாக பெட்டி போன்ற ஓன்று இருக்கும். அதற்க்கு கோசுப்பெட்டி என்று பெயர். அதில்தான் வண்டி ஒட்டி தனக்கான சாதனங்களை வைத்திருப்பார். முக்கியமாக மாடுகளை விரட்டப் பயன்படும் சாட்டைக் குச்சி அதில்தான் இருக்கும். அதில் உட்க்காரத்தான் நாங்கள் போட்டி போடுவோம். வெளியே பராக்குப் பார்த்துக்கொண்டே செல்லலாம்.

வண்டி ஒட்டி மாடுகளை விரட்டுவதையும், மாடு சாணி,மூத்திரம் கழிவதையும் பார்ப்பதில் அப்படி ஒரு ஈடுபாடு. வண்டிக்கு உள்ளே வைக்கோல் பரப்பி அதன் மீது ஒரு போர்வையை விரித்து பெரியவர்கள் உட்க்கார்ந்து கொள்வார்கள். பைதா எனப்படும் அந்த பெரிய சக்கரம் மண்ணை அரைத்துக்கொண்டும். தார்ச் சாலைகளில் கடகட வென்றும் ஓடும். வண்டி அங்கும் இங்கும் குலுங்கும் போதும் உள்ளே இருக்கும் பெரியவர்கள் அலுத்துக்கொள்வார்கள்.எங்களுக்கு என்னவோ அதுதான் மகிழ்ச்சி. ஒரே சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும்.

அதற்க்கான மாடுகளை வாங்குவதற்காக அப்போது வருடாவருடம் நடக்கும் மாட்டுச் சந்தைகளுக்கு எனது தந்தையும், பெரியப்பாவும் போவார்கள். நானும் கூடப் போயிருக்கிறேன். திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு அப்பாலும், ஆழ்வார் திருநகரி தெப்பக்குளத்திற்கு அப்பாலும் இந்த சந்தைகள் நடைபெறும். ஆயிரக்கணக்கான மாடுகள் அங்கு அணிதிரளும். திருசெந்தூரில் வைகாசி விசாகத்தை ஒட்டி மாட்டுச் சந்தை நடைபெறும். கடந்த எண்பதுகளின் ஆரம்பம் வரை வரை இந்த மாட்டுவண்டிகள் எங்கள் வீட்டில் இருந்தது.

வண்டிகளும், மாடுகளும் வைக்கோல் பொதியும் கடலைப்பிண்ணாக்குக் கரைசலும், ஏன் ..மாட்டின் அந்த மூக்கணாங் கயிறும் கூட இன்னும் நினைவுகளில் வாசம் அடித்துக் கொண்டிருக்கின்றன.

கே எஸ் முஹம்மத் ஷூஐப் .

தொடர்புக்கு : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com