بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
சகிப்பின்மையின் சமகால வரலாறு.. எழுத்தாளர் கே.எஸ். முஹம்மத் ஷுஐப் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
04 டிசம்பர் 2015 மாலை 05:21

சகிப்பின்மை குறித்து இப்போது நாடெங்கும் பரவலாகப் பேசப்படுகிறது. ஊடகங்களின் கவனக் குவி மைய்யம் இப்போது இதை நோக்கியே உள்ளது தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களுக்கே உரிய இயல்பில் கருத்தாளர்களைக் கூட்டி வைத்து பரபரப்பாக விவாதிக்கின்றனர்

சகிப்பின்மை என்ற ஒரு தனிநபர் சார்ந்த குணநலன் தற்போது சமூகம் சார்ந்த ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது .எங்கு பார்த்தாலும் சகிப்பின்மை குறித்தே பேச்சு.இது தொடர்பாக நேற்றும் இன்றும் பாராளுமன்றமும் கூடி இது குறித்து விவாதித்திருக்கிறது வாதப் பிரதிவாதங்கள் அங்கு சூடாக அனல் பறந்திருக்கிறது

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்நாட்டில் காலாகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பர்ய சமூக மரபுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.ஒற்றைக் கலாச்சாரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

561e1a1daa8ca

எப்போதும் சாதாரண ஆர் எஸ் எஸ் ,விஸ்வ ஹிந்து பரிசத் ஆசாமிகள் பேசும் வெறித்தனமான வாரத்தைகளை அரசியல் சட்டத்தின் பேரால் உறுதிமொழி எடுத்துக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் ,மந்திரிகள் உச்சரிக்க ஆரம்பித்தனர்

சிறுபான்மை முஸ்லிம் மக்களை குறிவைத்தே இவைகள் பேசப்பட்டன எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர் மந்திரிகளே இவ்வாறு பேசினர் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இந்நாட்டின் மண்ணில் உருண்டு புரண்டு தண்ணீரையும் குடித்து வளர்ந்த ஒரு மதம் சாரந்தவர்களை கட்டாயமாக அந்நியப்படுத்தும் முயற்சிகள் வலுவில் மேற்கொள்ளப்பட்டன.

முஸ்லிம்களுக்கு இந்நாடில்லை அவரகள் ஹிந்து மதக் கலாச்சாரங்கள் பண்பாடுகளை மேற்கொணாடு ஒழுகினால் மட்டுமே அவர்கள் இந்நாட்டின் குடிகளாக மதிக்கப்படுவர் என்று பகிரங்கமாகவே கூச்சலிட்டனர்.

இதைத் தொடரந்து மாட்டிறைசசி அரசியல் முன்னெடுக்கப்பட்டது பசு (மாடல்ல)வை வெட்டிக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாக செயல்படுததப்பட்டது மகராஷ்ட்ரா,காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்கத் தடை செய்யப்பட்டது அதுவும் காஷ்மீரில்.வாய்ப்புக் கேடாக அங்குள்ள உயர்நீதிமன்றமே அநதத் தடையை விதித்தது

மாட்டிறைச்சி விருந்து வைத்ததற்க்காக காஷ்மீர் சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரை சபைக்குள்ளேயே பிஜே பி யினர் தாக்கினர்

இதன் தொடர்பாகத்தான் உ பியில் உள்ள தாத்ரி என்ற கிராமத்தில் அந்த சோக நிகழ்வு நடைபெற்றது.

தாத்ரி கிராமத்தில் வசிக்கும் அஹ்லாக் என்பவர் தனது வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக அறிந்த இந்துதவ வெறிப்படை ஒன்று அவரது வீட்டைச் சூழ்ந்தது

அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வளவோ கெஞ்சியும் அஹ்லாக் என்ற அந்த முதியவரை அந்த.வெறிக்கும்பல் அடித்தே கொன்றது

இறுதியில் குளிர்பதனப் பெட்டியில் இருந்தது மாட்டிறைச்சியல்ல...ஆட்டிறைச்சிதான் என்ற விபரமும் வெளியானது.

மாட்டிறைச்சியானால் என்ன...ஆட்டிறைச்சியானால் என்ன ..ஒரு மனிதாபிமானமற்ற வெறிக்கும்பலால் ஒரு உயிர் பலி கொள்ளப்பட்டது

மாட்டுக்காக மனித உயிரைக் கூட துச்சமென மதிக்கும் ஒரு காட்டுமிராண்டிக் கும்பலை ஆட்சியாளர்கள் இங்கு ஊக்குவித்தனர்

ஃபாசிஸ்ட்களுக்கு களுக்கு மோடியின் வருகை ஒரு நல்வாய்ப்பு .இந்தக் காட்டுமிராண்டிகளால் இனியொரு தடவை.அதிகார ருசியை சுவைப்பது எளிதான காரியமல்ல.அதை உணர்ந்து கொண்டதால்தானோ...என்னவோ..இருக்கும் வரை ஆடித்தீரத்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

எதையும் கணடுகொள்ளாமல் பாரத பிரதமர் மோடி நாளொரு பொழுதும் தினமொரு வேலையுமாக வெளிநாடுகளில் பயணித்து வருகிறார்.

அவரது மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பற்ற பேச்சுக்களைப் பேசிக் கொண்டு அதைப் பிறர் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் எண்ணுகின்றனர்

மகராஷ்ட்ராவில் கோவிந்த் பன்சாரே..கர்நாடகாவில் தார்வார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கல்புர்க்கி போன்றோர் சகிப்பின்மைக்கு பலியாகினர்

எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு ஓடு என்னும் வன்முறைச் சொல்லாக்கம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியநாடு என்பதாலேயே இது பயன்படுத்தப்பட்டது என்றால் ..மறுபுறம் உலகின் ஒரே இந்துநாடு என்று இதுவரை அறியப்பட்ட நேப்பாளத்தோடும் இவர்களின் சகி்ப்பின்மை தெளிவாகத் தெரிந்தது

நேபாளம் தனது புதிய அரசியல் சட்டப்படி இனி "மதச்சார்பற்ற நாடு "என அறியப்படும் என அந்நாட்டின் ஆடசியாளர்கள் தெரிவித்ததை இந்துத்துவ ஃபாசிஸ்டுகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்து போகும் சரக்கு லாரிகளை நிறுத்தினர் ஆனால் நேப்பாளம் இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை.அவர்கள் சீனாவோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர் .இவர்களின் சகிப்பின்மையால் இந்தியாவின் தலைப்பகுதி இனி எப்போதும் எதிரிகளின் கண்காணிப்புக்கு ஆளாகும் அபகீர்த்தி ஏற்ப்பட்டது.

மத சகிப்பின்மை காரணமாக இந்த நாட்டின் அறிஞர்களும் கலைஞர்களும் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர் அவர்களால் செய்ய முடிந்தது அவர்களுக்கு அரசால் தரப்பட்ட.விருதுகளையும் பட்டயங்களையும் துறப்பதுதான்.

_86090296_86090295

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஜாலியன் வாலாபாக் கொடுமையை எதிர்த்து ஆங்கில அரசால் தனக்குத் தரப்ட்ட நைட் விருதை தாகூர் உதறிய சம்பவம் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாய் அமைந்தது

நேருவின் உறவினரான நயனதாரா சாகல் இதற்கு முன்கை எடுத்தார் தனக்கு அரசால் முன்பு வழங்கப்பட்ட.சாகித்ய அகடாமி விருதை அவர் அரசுக்கே திருப்பியளித்தார் அவரை நிறையப் பேர் தொடர்ந்தனர் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேலான எழுத்தாளர்களும் ,அறிஞர்களும் ,திரைப்படக் கலைஞர்களும் தங்களுக்கு அரசால் முன்பு வழங்கப்ட்ட விருதுகளை உதறினர்

டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி முன்பே பிரபல திரைப்படநடிகர் அமிர்கான்" தனது மனைவி தனக்கு இந்நாட்டில் வாழப் பயமாக இருக்கிறது .எனவே நாம் வெளிநாட்டுக்குப் போய்விடலாமா...?"என்று தன்னிடம் கேட்டதாகச் சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நாடெங்கும் இது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

ஃபாசிச வெறியர்களால் அமிர்கான் கடுமையாகத் தூற்றப்பட்டார். உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்

ஆனால் அமிர்கானை அவ்வாறு பேசவைத்த சூழல் எது..?என்பதை எவரும் யோசித்தார்களில்லை.

இவ்வாறாக சூழலில் மதவெறி.எனும் நச்சு கலக்கப்பட்டது இந்துக்களின் மதரீதியான கொள்கைகளை அங்கீகரித்தபடியே அவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து கொள்ளலாம் எனும் சலுகை அளிக்கப்பட்டது.

ராமனை தேசிய வீரனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லையேல் பாகிஸ்தானுக்கு ஓடவேண்டும் என்று ஆளாளுக்குப் பேசினர்

ஆங்காங்கே மதவெறியை பகிரங்கமாக ஊட்டினர் இந்தியாவில் இனி மியான்களுக்கு (முஸ்லிம்கள் )இடமில்லை என பகிரங்கமாகவே.முழங்கினர்

ஆட்சியாளர்களால் இவ்வாறு பகிரங்கமாக மிரட்டப்பட்ட.வரலாறு இதற்கு முன்பு முஸ்லிம்களுக்கு இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்களும் ஆடசியாளர்களும் இந்நாட்டிற்க்கு வழங்கிய கொடைகள் மறக்கப்பட்டு அவர்களை வெறும் ஆக்ரமிப்பாளர்களாக சித்தரித்தனர் இதன் காரணமாக மைசூர் மன்னன் திப்புவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

110527_india_intolerance

சகல இந்துத்வ அமைப்புக்களும் எப்போதும் கைகளில் குண்டாந்தடியோடு அலையும் துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டது .

முஸ்லிம்களின் பாதுகாபபும் அவரகளுக்கான குடியுரிமையும் அவர்களின் வாழ்வாதாரங்களும் இனி அரசை நம்பி இருப்பதில் எந்த பாதுகாப்புமில்லை என்றே சொல்ல வேண்டும்

பல நூற்றாண்டுகளாக அண்ணன் தம்பி உறவு முறையில் வாழ்ந்த முஸ்லிம்களும் இந்துக்களும் இன்று ஒருவரையொருவர் நம்பாமல் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியவர்கள் யாராயினும் அவர்களை வரலாறு மன்னிக்காது.

ஆக்கம்: கே. எஸ் .முஹம்மத் ஷூஐப்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com