بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
விபரீதமாகும் வியாபாரக் கல்வி! எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஐப் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
27 ஜனவரி 2016 மாலை 04:21

கல்வி என்பது மனிதர்களைப் பண்படுத்தி ..அவர்களை தன்னைத்தானே உணரச் செய்யும் ஒரு கருவியாகும்

"அறிவு அற்றம் காக்கும் கருவி"என்பார்கள் .ஆனால் இன்று அது உயிரை வாங்கும் கருவியாக மாறிப் போனது துரதிருஷ்டவசமானதாகும் .தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிப் போய் ஒரு மாமங்கமாகிறது வியாபாரம் என்றாலே அதில் போட்டி பொறாமை மோசடி என்று எல்லாமும் உண்டு இதற்கு கல்வி வியாபாரம் மற்றும் எப்படி விதிவிலக்காக முடியும்...?

students-university-graduation-280912

நமது அரசியல் சட்ட விதிகளின்படி எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் .அதையும் அரசு முன்னின்று நடத்தித்தர வேண்டும் .ஆனால் இங்கு குடிமக்களே சமமாக நடத்தப்படவில்லை எனும் போது கல்வி மட்டும் எங்ஙனம் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும்...?

சுயநிதிக் கல்லூரிகள் மூலமாக இங்கு அரசியல் மற்றும் சாராய தாதாக்கள் கல்வி வள்ளல்களாக மாறிப் போனார்கள் .மூன்றாம் வகுப்பு படிக்காதவர் கூட ஒரு கல்லூரியின் நிறுவனர் என்றால்...இங்கு ஜனநாயகம் என்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்

எந்த அரசு விதிகளுக்கும் கட்டுப்படாமல் சிறிதளவு நிலமும் கொஞ்சம் பணமும் கைவசம் இருந்தாலே போதும் யாரும் இங்கு கல்வி வள்ளலாக மாறிவிடலாம்

கல்விகூடம் நடத்துபவர்களை சமூகத்தில் மரியாதையாகவும் கண்ணியமாகவும் பார்த்த காலம் போய் ...சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரானாகப் பார்க்க வேண்டிய அவலம் நேர்ந்து விட்டது சூழ்நிலையின் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்

இதுபோன்ற கல்லூரிகள் ,பள்ளிகள் தமிழகமெங்கும் புற்றீசல் போல பெருகியுள்ளன.

விழுப்புரம் அருகேயுள்ள கள்ளக்குறிச்சி பங்காரம் என்ற இடத்தில் இயங்கி வரும் எஸ் வி எஸ் யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி அவற்றில் ஒன்று.

இக்கல்லூரியின் முன்புறமுள்ள கிணற்றில் இக்கல்லூரியில் பயிலும் 19-வயது கொண்ட மூன்று மாணவிகளின் சடலங்கள கடந்த 23-ம் தேதி கண்டெடுக்கப்பட்டன

மோனிஷா,சரண்யா ,பிரியங்கா என்பது அவர்களின் பெயராகும் மூன்று பேருமே கல்லூரியின் இரண்டாம் வருட மாணவிகள் இம் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கல்லூரி நிர்வாகமும் ,காவல்துறையும் சொல்கிறது/

klk1

ஆனால் தங்களது மகள்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது மாணவிகளின் பெற்றோர்களின் கூற்று. மூன்று மாணவிகளின் தலையின் பின்பக்கங்களில் காயம் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்

இந்த பரிதாபத்திற்குரிய மாணவிகளின் இந்த கோர முடிவுக்கு காரணமென்ன...?

குறிபபிட்ட இந்த எஸ்/வி/எஸ் கல்லூரி கடந்த 2008-ம் ஆண்டு முறையான அனுமதி இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரியில்.எந்த உள் கட்டமைப்பு வசதியுமில்லை. ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு இது போன்ற கல்லூரிகள் துரிதகதியில் ஆங்காங்கே ஆரம்பிக்கப்படுகின்றன.

மாணவிகளை அடிமைகள் போல நடத்தியுள்ளனர் இதன் தாளாளர் வாசுகி என்ற ஒரு பெண்மணி.அடிககடி மாணவிகளை தனக்கு கால் அமுக்கும்படி சொல்வாராம் எதிர்த்துப் பேசும் மாணவிகளை "நீ ஒரு கிரிமினல்.நடத்தை சரியில்லாதவள் உனக்கு சான்றிதழ்களைத் தர மாட்டேன் .."-என்றெல்லாம் அடிக்கடி மிரட்டுவாராம்

கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாதததைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள் செப்டம்பர் 9-ம் தேதி ஆர்ப்பாட்டமும் ,அதே செப்படம்பர் 15-ம் தேதி தீ்க்குளிப்பு போராட்டமும் நடத்தியுள்ளனர் எதற்க்குமே அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்கவில்லை

கல்லூரி நிர்வாகம் கட்டணம் வசூல் செய்வதில்தான் காரியமாக இருந்திருக்கின்றனர் மாணவிகளிடம் கட்டணத்தை விரைவாக செலுத்தவிட வேண்டும் இல்லாவீடில் நிர்வாகத்தின் கடும் நடவடிக்கைககு ஆளாக நேரிடும் என்று மிரட்டலும் விடப்பட்டதாகத் தெரிகிறது

இந்த மனஉளைச்சல் காரணமாகவும் தற்கொலை நிகழ்ந்திருககலாம் என்றும் சொல்லப்படுகிறது

இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்கவில்லை என்றும் தெரியவருகிறது

அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சிமியும் பதிவாளர் ஆறுமுகமும் சொல்லும் போது....

"எஸ் வி எஸ் கல்லூரியல் அடிப்படைவசதிகள் சரியாக இல்லாதது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அடிககடி புகார்கள் வந்த வண்ணம இருந்தன.எனவே கல்லூரியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கல்லூரி நிர்வாகத்திற்க்கு அறிவுறுத்தியும் அவர்கள் எதையும் சரி செய்யவில்லை.அதனால் 2015-16 வருடத்திற்க்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தோம் ஆனால் அவர்கள் நீதிம்னறம் சென்று அனுமதி வாங்கிவிட்டனர்"-என்கிறார்கள்

அதே சமயம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் சொல்வது வேறுவிதமாக இருக்கிறது

"எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியதால்தான் எஸ வி எஸ் தனியார் இயற்கை மருத்துவ கல்லூரி உட்பட நான்கு தனியார் இயற்க்கை மருத்துவ கல்லூரிகளுக்கு கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்பினோம் 65 சதவீதம் கலந்தாய்வு மூலமும் மீதி 35சதவீதம் நிர்வாகக் கோட்டாவிலும் இடங்கள் நிரப்ப்பட்டன "என்கிறார்

இதில் யார் சொல்வது உண்மை ..? எனத் தெரியவில்லை.

ஆனால் இது போன்ற முறைப்படி அங்கீகாரம் இல்லாமல் அரசு தங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக பொய்யாக விளம்பரம் செய்து இக் கல்லூரிகள் மாணவ மாணவியர்களை ஏமாற்றுகின்றன.

மாணவர்கள் மட்டுமல்ல..இக்கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கூட கொத்தடிமைகள் போன்றே நடத்தப்படுகின்றனர் .அவர்களுக்கு மூன்று மாதத்திற்க்கு ஒரு முறைதான் சம்பளமே வழங்கப்படுகிறது .விடுப்பு எடுக்க அனுமதியில்லை.

தற்போது மேற்படி எஸ் வி எஸ கல்லூரியை அரசு மூடி சீல் வைத்து விட்டது

அதன் தாளாளர் வாசுகி ,முதல்வர் கலாநிதி,தாளாளரின் மகன் ஸ்வாகத் வர்மா ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற அவலங்கள் ஏதோ ஓரிரு கல்லூரியில் மட்டுமே நடைபெறுவதில்லை .பரவலாக தனியார் கல்லூரி ,பள்ளிகளில் நீக்கமற நிகழ்கின்றன .நிறைய இடங்களில் மாணவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு பிரச்சினையை வெளிவரவிடாமல் தங்களுக்குள்ளே போட்டு புதைத்து விடுகின்றனர்

ப்ளஸ் டூ கல்விதான் மேல்நிலைக் கல்விக்கு ஆதாரமானது என்பதால் ...பல தனியார் மேல்நிலைப்பள்ளிகள் அதை ஒரு துருப்பாகப் பயன் படுத்திக் கொண்டு மாணவ மாணவியர்களை வதைக்கின்றன. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உட்பட எலலாவகையான கொடுமைகளும நடக்கின்றன

ஆனால்...ஒன்று சொல்வோம் .எதற்க்குமே இது போன்ற தற்கொலைகள ஒரு தீர்வாகாது.எதிர்த்துப் போராடுவதே இந்தத் தீமைகளை அகற்ற ஒரே வழி.இரண்டு உயிர்களை...அல்லது நான்கு உயிர்களை இழந்துதான் எதையுமே பெறமுடியும் என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். இது மனிதர்களை காலப்போக்கில் நம்புபவர்களாக்கிவிடும்

அதே சமயம் மாணவர்கள் மற்றும் ...பெற்றோர்களுக்கு இன்னொரு அத்தியாவசியக் கடமையும் உண்டு .

தங்களது பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பும் கல்வி நிறுவனங்கள் உண்மையாகவே அரசின் அனுமதி பெற்று முறைப்படி இயங்கும் அமைப்புதானா...?

அஙகுள்ள உள் கட்டமைப்பு வசதிகள்...ஆசிரியர்களின் திறமை...நிர்வாகம் நம்பகத்தன்மை மிக்கதுதானா...?என்பவை உள்ளிட்ட சில விஷயங்களை தீர விசாரித்த பின்பே அக கலவி நிறுவனங்களில் தங்களது குழந்தைகளை சேர்க்கவேண்டும்

அடிப்படை கோளாறு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது .அக் கல்லூரியில்.பயின்று கொண்டிருக்கும் நடப்பு மாணவர்களைக் கேட்டாலே நிறைய உண்மைகள் தெரிந்து விடும்

ஏனோ தெரியவில்லை.பல பெற்றோர்களும் அதை சரியாகச் செய்வதில்லை மாணவர்களும் தாஙகள் எபபடியாவது பட்டம் பெற்று வெளியேறினால் போதும்...என்ற அவசரகதியில் இது போன்ற டுபாக்கூர் கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர்

இவைகள் மட்டும்தான் இக்கல்லூரிகளின் ஒரே பலம் .இனியாவது இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் இருக்க அரசும ,பெற்றோர்களும். மாணவர்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் .

ஆக்கம்: கே.எஸ். முஹம்மது ஷுஐப்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com