بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
திட்ட கமிஷன் - ஒரு வரலாற்று சுருக்கம்!அச்சிடுகமின்-அஞ்சல்
08 செப்டம்பர் 2014 மாலை 07:50

Planning-Commission

ஆகஸ்ட் 15 (2014) அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி திட்ட கமிஷன் எனும் துறை ரத்து செய்யப்படும் என கூறினார். நேரு காலத்திலும் காங்கிரஸ் ஆட்சி காலங்களிலும் கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள், திட்டங்களை மூடிவிடுவது என்பது பா.ஜ.க வின் திட்டங்களில் ஒன்று. காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவது தான் மோதியின் நோக்கம். ஆர்.எஸ்.எஸ் ன் விருப்பம் அதுதான். நேரு அடித்தளமிட்ட இந்தியாவை வண்ணம் மாற்றி பட்டேல் கனவு கண்ட இந்தியாவை காண்பது அவர்களின் செயல் திட்டங்களில் உள்ளது. அதன் ஒரு பகுதி தான் திட்ட கமிஷனை ரத்து செய்வது. படிப்படியாக காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாமே ரத்து செய்யப்படலாம், மாற்றி அமைக்கப்படலாம், பெயர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

 திட்டமிடல் "Planing" என்பது ஒரு விசாலமான பார்வை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகும் பல அம்சங்களில் ஒரு பகுதி. அறிவையும் - ஆற்றலையும் இணைத்து மக்களுக்கு சேவை செய்வதற்காக பட்டை தீட்டப்பட்ட கனவு.

திட்டமிடல் என்ற கொள்கையை உருவாக்கியவர்களில் மூன்று பேர் குறிப்பிடத்தக்கவர்கள். முதலாவது, இயற்பியலார் மெக்னாட் சாகா (ஆநபாயென ளுயாய). இரண்டாவது, பொறியாளர் எம்.விஸ்வேஷ்வரய்யா. மூன்றாவது ஸ்காட்லாந்து நாட்டவரான பல்துறை வல்லுனர் பேட்ரிக் கெட்டெஸ் (Patrick Geddes).

ரஷ்யாவின் மாதிரி:-

மெக்னாட் சாகா (அயனிமண்டல இயற்பியல்) துறையில் வல்லுனர். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். சாகா எப்போதும் அறிவியல் அடிப்படையிலான ஒரு சமூகம் குறித்தே கனவு கண்டார். அறிவியலரான சாகாவுக்கு காந்தியின் வழி வெறுப்பூட்டுவதாக இருந்தது. அரை நிர்வானமும் (டுழin உடழவா), கட்டை மாட்டு வண்டியும் கொண்ட சமூகம் என காந்தியவாத சமூகத்தை விமர்சித்தார். காங்கிரஸ்காரர்கள் தொழில் வளர்ச்சி குறித்து எந்த கொள்கையும் இல்லாதவர்கள் என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.

போல்ஸ்விக் புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவை இந்தியாவுக்கான மாதிரியாக சாகா முன் வைத்தார். ரஷ்யாவில் லெனினும் அவரது அறிவியல் அறிஞர்களும் ரஷ்ய விஞ்ஞான கழகத்தின் மூலம் (சுரளளயைn யுஉயனநஅல ழக ளுஉநைnஉநள) அறிவியலுக்கும் ஆற்றலுக்கும் இடையே ஒரு புதிய உறவை உருவாக்கியிருந்தனர். பு.ஆ.முசணாiணாயழெஎளமல எனற அறிவியல் அறிஞரை பின்பற்ற தக்கவராக சாகா கருதினார். ஆற்றலின் அளவீட்டு முறையில் தான் நாகரீகம் அமைகிறது என்ற பொது கருத்தை முசணாiணாயழெஎளமல கொண்டிருந்தார்.

'சோவியத்தின் ஆற்றலாக கம்யூனிசம் இருக்கிறது. நாடு முழுமைக்கும் கம்யூனிசம் தான் சக்தி கொடுக்கிறது' என்று லெனின் புதிய முழக்கத்தை முன் வைத்ததற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆற்றல், அறிவியல், அன்பு மூன்றையும் பற்றிய பெரிய கனவாக அது இருந்தது. ரஷ்ய புரட்சி, இன்று மறைந்துவிட்டதாகவும் நம்பிக்கையற்றதாகவும் ((discredited) இருந்தாலும் 1930 களில் ரஷ்யா மிகப்பெரியதொரு கற்பனை உலகமாக தெரிந்தது. ஸ்டாலின் கொள்கைகளால் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட அழிவு அது நாள் வரை முழுமையாக ஏற்பட்டிருக்கவில்லை.

விஞ்ஞானமும் - எதிர்காலமும்:-

1938 ல் மெக்னெட் சாகா இந்தியாவில் ஒரு லெனினை தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான், அவரது சகோதரரின் நண்பரான சுபாஷ் சந்திர போஷ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் காந்தியவாத பரவலை முடிவுக்கு கொண்டுவர இதுதான் சரியான நேரம் என சாகா உணர்ந்தார். சுபாஷ் போஷை சந்தித்து, 'உங்கள் நோக்கம் என்ன?' என்று சாகா கேட்ட போது உங்களுக்கு என்ன வேண்டும் என்று சுபாஷ் சந்திர போஸ் திருப்பி கேட்டார். தேசிய திட்டக்குழு உருவாக்கும் யோசனையை சுபாஷிடம் சாகா முன்வைத்தார்.

1938ல் தில்லியில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. சாகா ஒரு நாள் தாமதமாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்கிடையில், பொறியாளரான விஷ்வேஸ்வரய்யா திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மெக்னாட் சாகா, விஷ்வேஸ்வரய்யாவை சந்தித்து தேசிய திட்டக் குழுவின் தலைவர் பதவியை கைவிடுமாறு கேட்டார். அரசியலுக்கும் - அறிவியலுக்கும் இடையில் கொண்டு கொடுக்கும் (National Planing Committee) ஜவஹர்லால் நேரு தேசிய திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேரு, தனது புகழ்மிக்கதொரு உரையில், எதிர்காலம் அறிவியலை சார்ந்ததாக இருக்கும். அணைக்கட்டுகளும் ஆய்வகங்களும் தான் புதிய இந்தியாவின் கோயில்களாக இருக்கும் என்று கூறினார்.

திட்டம் தொடர்பான சாகாவின் கனவும் விஷ்வேஸ்வரய்யாவின் நோக்கமும் வேறு வேறானது. விஷ்வேஸ்வரய்யா பொறியியல் துறையில் ஒரு மாவீரன். கர்நாடகா வில் அவரைப்பற்றிய கதைபாடல்கள் உண்டு. தெளிவான ஆடைக்கும் (Immaculate dress sense) நேர்மைக்கும் பெயர் பெற்றவர். தனது குணத்தை கட்டியதிலும், அணை கட்டியதிலும், தேசத்தை கட்டியதிலும் சம அளவிலான செயல்பாடு அவரிடத்தில் காணப்பட்டது.

திட்டமிடுதலுக்கும், கட்டுபாட்டுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே அளவு முக்கியத்தை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கொடுத்தார். பொது வாழ்க்கையையும் தனிவாழ்க்கையையும் வேறுபடுத்திக் காட்டுவதில் மாசற்றவராக விஷ்வேஸ்வரய்யா இருந்தார். அவர் எப்போதும், அலுவல் வேலைகளுக்காக ஒன்று, சொந்த வேலைகளுக்காக ஒன்று என இரண்டு பவுண்டென் பேனாக்கள் வைத்திருப்பார். அவரது நினைவு குறிப்புகளை வாசிக்கும் ஒருவர் ஒரு கொள்கை ஆவணத்தை வாசிப்பது போன்று உணர முடியும். இயற்கை மீறிய தன்மையும் புதினமும் அவரது வாழ்க்கையில் அறிவுப்பூர்வமாக ஒத்துப்போவதை காணலாம். வாகன தயாரிப்பு விஸ்வேஷ்வரய்யாவின் முதல் யோசனையாக இருந்தது. வர்த்தகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டவர். பாம்பே திட்டத்தில் அவரது யோசனை மிகப்பெரிய வெற்றி அடைந்தது. வர்த்தகத்தை மாதிரியாக கொண்ட திட்டம் அது.

பிராந்தியங்களின் பங்கு:

திட்டத்தின் மூன்றாவது அம்சம் நேசத்தின் மையத்தில் இல்லாமல் பிராந்தியங்களின் முக்கியமான பங்களிப்புகளில் இருந்தே உருவானது. திட்டத்தின் துல்லியமான அலகாக பிராந்தியம் இருப்பதை வலியுறுத்த  சூழலியலையும் - இடத்தையும் இணைக்கிறார். புவி நுட்ப கோட்பாடு (பநழ – வநஉhniஉள) பின்னர் வுநnநௌளநந ஏயடடநல யுரவாழசவைல (வுஏயு) என்ற திட்டத்துடன் கச்சிதமாக பொருந்தியது. வுஏயு என்பது பிராந்திய திட்டம் ஒன்றின் பிரமாண்ட கனவு. மந்தமாக இருந்த அமெரிக்காவுக்கு இத்திட்டம் புத்துயிர் அளித்தது. இந்தியாவின் கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சியையும் திட்டமிட்டார். ஊரக திட்டம் பற்றி எழுதினார். ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதன் கல்வி சாலையை உருவாக்கும் திட்டத்திலும் பங்கேற்றார்.

 தாகூரும் எழுதி கொண்ட பதில் கடிதங்கள் ஒன்றில் திட்டமிடுதல் பற்றி புநனனநள குறிப்பிட்டுள்ளார். திட்டம் பற்றி கருத்தை ஒத்துக் கொண்ட தாகூர், தான் எழுதிய ஒரு நாவலின் படி பள்ளிக்கூடம் ஒன்றை கட்டப்போவதாகவும் பதில் எழுதியுள்ளார்.

நேரு காலத்து திட்டங்களில் 'ஆற்றல்' ஒளிமிக்கதாகவும் 'அறிவு' அதிர்வுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. தொழில் மயத்துக்கு முக்கியம் தந்ததால் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் புகழத்தக்கதாய் இருந்தது. ஆனால் அதன் பிறகு முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின. திட்டமிடுதல் - என்ற நோக்கத்திற்கு நேரு துரோகம் செய்ததாக மெக்னெட் சாகா கருதினார். நேருவை எதிர்கொள்ள மெக்னெட் சாகா தானே நாடாளுமன்றத்துக்கு சென்றார். நாடாளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே விஞ்ஞானி இதுவரையிலும் மெக்னெட் சாகா மட்டும் தான். 1956-ல் சாகா மாரடைப்பால் மரணமடைந்தார்.

திட்டமிடுதலின் பிந்தைய வரலாற்றில் பல புகழ் பெற்ற அமைப்புகள் உருவாகின. அதில் ஒன்று திட்டகுழு நிகோலஸ் ஜார்ஜஸ்யூ ரோஜன் மற்றும் போலந்து நாட்டின் பொருளாதார வல்லுனர் கலக்கி போன்றவர்களின் ஆலோசனை கிடைத்தது. அதில் குறிப்பிடத்தக்கவர் ஜே.சி.குமரப்பா. இவர் காந்தியவாதி. குமரப்பா ஒரு திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்க குதிரை பூட்டிய டங்கா  வண்டியில் சென்றார். திட்டக்குழு உறுப்பினர்கள் டங்கா வண்டியில் வரமாட்டார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் நேரு தொலைபேசியில் பேசி, குமரப்பா உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியும் உண்டு.

மோதியின் வெற்றி உறுதியானபோதே திட்ட கமிஷனின் தலையெழுத்தும் முடிவுக்கு வருவது உறுதியானது. புதிய கூட்டாட்சியின் தேவைக்கு திட்டக்குழு ஒவ்வாதவையாக கருதப்படுகிறது. மோதி தனது சுதந்திர தின உரையின்போது, ஒரு பாராட்டு குறிப்பு கூட இல்லாமல் திட்ட கமிஷனை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால், வரலாற்றை ஒழித்துக்கட்ட அரசியலால் முடியாது. திட்டமிடுதல் ஒரு காலத்தில் மிகப்பெரிய நோக்கமாக இருந்தது. கனவுகள் பற்றிய அழகிய நீதி கதைகள் உண்டு. அறிவின் கர்வமும் உண்டு. அதன் வரலாறு மேதமையானது. அதன் புதினங்கள் சொல்லப்பட வேண்டும், முழுவதும் சொல்லப்பட வேண்டும். திட்ட குழுவை விமர்சிப்பவர்களும் இவ்வமைப்புக்கு நன்றி கடன் பட்டவர்களே.

ஆக்கம் : ஜி.அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com