بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
நீதிபதிகள் நியமன ஆணையம் மத்திய அரசின் தலையீடா? எழுத்தாளர் ஜி.அத்தேஷ் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
29 அக்டோபர் 2014 மாலை 01:36

அரசமைப்பு சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பு தான் நீதித்துறை. எனினும் நீதிமன்றங்கள் சமீபக் காலமாக மத்திய, மாநில அரசுகளுடன் மோதல் போக்கை தொடர்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய அரசு உறுதியற்று இருப்பதும், பொருளாதார உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் காரணங்களாலும், தொழில் வளர்ச்சி என்ற பேரில் அரசே வளங்களை அழிக்க முனைவதும் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியும், ஊழலை ஒருபக்க தொழிலாக அரசியல்வாதிகள் செய்து வருவதும் நீதிமன்றங்களின் கண்டனத்திற்கு அரசுகள் நேரிட காரணமாகின்றன.

மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ.யை கூண்டு கிளி என்று உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்திருக்கிறது. அலைக்கற்றை ஊழல் வழக்கை நேரடி கண்காணிப்பில் நடத்துவதுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசு விற்பனை செய்த அலைக்கற்றைகள் ஒப்பந்தம் முழுவதையும் (122) உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1993 முதல் தொடங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுகள் 214 ஐயும் ரத்து செய்து உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு கும்பகர்ண உறக்கத்தில் இருப்பதாக வர்ணித்தது. மத்திய அமைச்சர் ஒருவர் இந்த விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டா என்பது புதிய சர்ச்சை. அரசின் நிதிஒதுக்கீட்டால் தான் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன என்றாலும் அவை அரசுகளின் கட்டுக்குள் அடங்குவதில்லை. அரசுகள் மாறலாம் ஆட்சியாளர்கள் மாறலாம். ஆனால்ää நீதித்துறையும், நீதிச் சட்டங்களும் மாறுவதில்லை.

தமிழக முதல்வராக இருந்த நிலையில் கூட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா நீதித்துறையின் பிரமாண்ட சக்தியை வெளிக்காட்டினார். விலைபோகாத சாய்வற்ற அவரது துணிச்சல் நீதிபதிகள் பலருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.

cats_copy_copy_copy_copy_copy_copy_copy_copy

இருப்பினும் நீதித்துறையிலும் பல கருப்பாடுகள் இருக்கவே செய்கின்றன. நீதித்துறையிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. எந்த சக்தியை பிடித்தால் எந்த நீதிபதியை விலைக்கு வாங்கலாம் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. ஓய்வுக்கு பிறகு வேறு பதவிகள் கொடுப்பதாக சொன்னால் அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளும் இருப்பதாக முன்பு சட்டத்துறை அமைச்சராக இருந்த போது அருண் ஜெட்சி குற்றம் சாட்டியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் சித்தப்பா நீதிபதிகள் என்ற ரகசிய முறை இருக்கிறது. அதாவது அப்பா நீதிபதி மகன் வழக்கறிஞர். ஒரு வழக்கறிஞர் மற்றொரு வழக்கறிஞரை பிடித்து பேரம்பேசி தனது வழக்கில் அவரது அப்பா மூலம் சாதகமாக தீர்ப்பு வாங்கும் முறை. உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு வக்பு சொத்து தவாவில் வக்பு சொத்தை வேறொருவருக்கு சொந்தம் என்று ஒரு நீதிபதி தீர்ப்பு சொன்ன போது இந்த ரகசிய தீர்ப்பு முறை வெளிப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற கே.ஜி.பாலகிருஷ்ணன் பின்னர் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக்கப்பட்டார். ஆனால் அவரது மகனிடத்தில் கணக்கில்லாத சொத்துகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாஜ்பாய் காலத்தில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சாந்திபூஷன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊழல் மலிந்தவர்கள் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் பிணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் செய்த முறையீட்டுக்கு ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி.எஸ்.நாரிமன் சென்றதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. நீதிபதிகளின் உறவினர் நீதிமன்றங்களில் வாதிட கூடாது என்ற மரபு மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதியின் உறவினர் ஒருவர் நீதிமன்றத்தில் வாதிட சட்டத்தில் தடையேதும் இல்லை என்றார் நாரிமன். அமெரிக்கா நீதித்துறையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. 1967ல் அமெரிக்க குடியரசு தலைவர் லிண்டன் பி. ஜான்சன், அப்போது அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த டாம்.சி.கிளார்க்கின் மகனை அரசு வழக்கறிஞராக நியமித்தார். உடனடியாக டாம்.சி.கிளார்க் நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

ஒரு அரசு வழக்கறிஞர் அடிக்கடி நீதிமன்றம் வரவேண்டியிருக்கும். அங்கே கிளார்க் நீதிபதியாக வீற்றிருப்பார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். மகன் அரசு சார்பில் வழக்கறிஞராக வரும் நீதிமன்றத்தில் தான் நீதிபதியாக இருப்பது நீதியாக இருக்காது என்று அன்று கிளார்க் கருதினார்.

நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்து நியமனம் செய்தாலும் அதிலும் கூட மத்திய மாநில அரசுகளின் தலையீடு இருக்கின்றது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மார்கண்டேய கட்ஜீ சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த ஒரு மாநில கட்சி தனக்கு வேண்டப்பட்ட ஒரு நீதிபதிக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பதவி கொடுக்க வேண்டும்ää இல்லையென்றால் அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என பிரதமரிடம் நேரில் மிட்டியதாக கட்ஜீ ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறியிருந்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ரத்னவேல் பாண்டியன்ää தி.மு.க.வில் திருநெல்வேலி மாவட்டச் செயலராக இருந்தவர். 1971ல் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அத்தேர்தலில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் னு.ளு.ஆதிமூலத்தின் மகன் .சிவப்பிரகாசம் நிறுத்தப்பட்டார். சிவப்பரகாசத்திடம் ரத்னவேல் பாண்டியன் தோற்றுப் போனார். தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்த செல்லப்பாண்டியனிடத்தில் இளம் வழக்கறிஞராக பணியாற்றியர்தான் ரத்னவேல் பாண்டியன். ரத்னவேல் பாண்டியனிடம் இளம் வழக்கறிஞராக வைகோ பணியாற்றினார்.

தேர்தலில் தோற்றுப்போன நிலையில் தான் ரத்னவேல் பாண்டியன் தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்கறிஞராக ஆக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆக்கப்பட்டார். பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார் என்ற கதை உண்டு. அரசியல் பின்புலம் இருந்தால் ஒருவர் நாட்டின் உச்சபட்சமான உயர் பதவிகளுக்கும் வந்துவிட முடியும் என்பதற்கு நம்மிடம் வரலாறுகள் உண்டு. இருப்பினும்ää நீதித்துறையிலும் அத்தகைய சாத்தியங்கள் எட்டப்படும் என்பதில் இருந்து நமது நீதிவழங்கல் முறை எத்தகைய நேர்மைக்குரியதாக இருக்கும் என்பதை நமக்கு நாமே விசாரித்துக் கொள்ளலாம்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும். பாபர் மசூதிää உரிமை மற்றும் இடித்த குற்றம் பற்றி விசாரித்;த நீதிபதி வர்மா கமிட்டி பலகோடி செலவிட்டு 18 வருடங்கள் கழித்து ஒரு அறிக்கையை தயாரித்து 2010ஆம் வருடம் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் கொடுத்தது. அத்வானிää முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரை குற்றவாளிகள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. ஆனால்ää ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அந்த அறிக்கையின் நாடாவை கூட அவிழ்க்காமல் கிடப்பில் போட்டு விட்டது. ஒருமுறை ராஜாஜிää ஒரு பிரச்சினையை ஓய்க்க வேண்டுமென்றால் ஒன்று கிடப்பில் போடு அல்லது கமிஷன் போடு என்றாராம். ஒரு வழக்கை சவ்வாக இழுத்து விசாரிக்கும் திறமையும் நமது நீதிபதிகளுக்கு இருப்பதை அரசே ஒப்புக்கொள்கிறது.

நாட்டின் உட்சபட்ச அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. அனைத்து துறைகளும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களை அமல்படுத்தும் உறுப்புகள்தான். அத்தகைய உறுப்புகளில் ஒன்று அரசியல்வாதிகளை விழிபிதுங்கச் செய்யும் வேலைகளில் ஈடுபட்டால் அதன் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையில் கட்சிகள் ஈடுபடும். 1991ல் மத்திய தலைமை தேர்தல் ஆணையராக வந்த டி.என்.சேஷன் தேர்தல் பணிகளில் சில அதிரடி மாற்றங்களையும் நெருக்கடிகளையும் கொண்டு வந்தார். நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றங்களுக்கோ அதிகாரம் இருக்காது. மொத்த அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிறது.

ஆணையத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை 1991 நாடாறுமன்ற தேர்தலின் போது டி.என்.சேஷன் செய்து காட்டினார். அதுவரை தேர்தல் ஆணையத்திற்கு ஒரேயொரு தலைமை தேர்தல் ஆணையர் தான். சேஷனின் கெடுபிடிகளுக்கு பிறகு மத்திய அரசாங்கம் தேர்தல் தலைமை ஆணையர்களாக சமபலமும்ää அதிகாரமும் கொண்ட மூன்றுபேரை நியமித்தது. அதுபோல இப்போது உச்சநீதிமன்றம் தரும் உத்தரவுகளை மத்தியஅரசு கொசுக்கடியாக கருதுகிறது. ஆதனால் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே முடிவு செய்யப்பட்டது. தொடக்கமாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்யும் தேர்வாணைய அமைப்பான கொலிஜியத்தை ரத்து செய்ய முடிவு செய்தது. அதற்காக தேசிய நீதிபதிகள் நியமன குழுவை அமைத்திருக்கிறது.

இதுவரைää கொலிஜியம் என்ற அமைப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் 6 நீதிபதிகள் இருப்பர். இவ்வமைப்பு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பெயர் பட்டியலை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அவர்கள் நீதிபதிகளாக பதவி வழங்கப்படுவார்கள். அந்த பரிந்துரை பட்டியலில் உள்ள பெயர்களை குறிப்பாகவோää முழுவதுமாகவோ நிராகரிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு. 'அவசர காலச் சட்டம்' அமலில் இருந்த சமயம் மத்திய அரசு இம்முறையை ஒரேயொருமுறை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக 1993ல் இரண்டாவது நீதிபதிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகள் கழித்து இம்முறையும் மாற்றப்பட இருக்கிறது. நீதிபதிகள் நியமன ஆணைய குழுவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த போதும்ää மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பையும்ää வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறது. இம்முடிவு நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீதான கௌரவம் மற்றும் நம்பகத்தன்மைக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. இருப்பினும் தேசிய நீதிபதியின் நியமன ஆணைய சட்டம்  கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் அவைகளில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த அதிகாரம் வழங்குவதற்காக அரசியலமைப்பு (99வது திருத்தம்) சட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுபோன்ற முக்கியமான சட்டங்கள் இரு அவைகளிலும் ஒரு சேர நிறைவேறுவது அபூர்வமாகவே நடக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வரும் போது நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்து கொள்ளும் முறை முடிவுக்கு வரும்.

நீதிபதிகள் நியமன குழு (துயுஊ) அமலுக்கு வர இன்னும் கொஞ்ச காலமாகும். இக்குழுவை இயக்கும் நிரந்தர செயலகம் அமைக்கப்பட வேண்டும். இதன் இயக்கத்திற்கான ஒழுங்குமுறைகள் வகுக்கப்படவேண்டும். குறிப்பாக நீதிபதிகளை நியமிக்க பொருத்தமான கோட்பாட்டை உருவாக்க வேண்டும்.

இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் 6 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்திய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிää ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர்ää சட்ட அமைச்சர் மற்றும் பிரதமர்ää எதிர்கட்சி தலைவர்ää தலைமை நீதிபதி அடங்கிய குழு பரிந்துரை செய்யும் நாட்டின் தகுதி வாய்ந்த இரண்டு நபர்கள் (நஅiநெவெ pநசளழளெ) இக்குழுவில் இடம் பெறுவர். அவ்விருவரும் அரசின் பிரதிநிதிகளாக இருப்பார்களா அல்லது அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருப்பார்களா என்பதெல்லாம் சட்டம் அலுக்கு வரும்போது தான் தெரியும்.

ஒரு நீதிபதியை தேர்வு செய்வதற்கு ஆணையத்தில் இடம் பெறும் மூன்று நீதிபதிகளுக்கு வலிமையான அதிகாரம் இல்லை என்பதால் இந்த ஆணையம் தவறானது என்று தொடக்கத்திலேயே விமர்சிக்கப்பட்டது. மூன்று நீதிபதிகள் சேர்ந்து பரிந்துரைக்கும் ஒருவரை நீதிபதியாக ஏற்கமுடியாது என்று ஆணையத்தில் இடம்பெறும் ஏதேனும் இரு நபர்கள் கூறினால் அந்நபரை ஆணையம் பரிந்துரைக்க முடியாது என்றுää நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விதியை சுட்டிக் காட்டுகிறார்கள் அதனை விமர்சிப்போர். ஒருவரை நீதிபதியாக பரிந்துரைப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்குவதுடன் நீதித்துறை சாராத இருவருக்கு நீதிபதிகளின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரத்தை ஆணையத்தின் விதி கொடுக்கிறது என்கின்றனர்.

மற்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் யாவரையும் நிராகரிக்கும் உரிமை ஆணையத்தில் இடம்பெறும் ஓய்வு நீதிபதிகளுக்கும் உண்டு. எனினும் நீதிபதிகளை நீதிபதிகளே பரிந்துரை செய்து கொள்ளும் உரிமையை தூக்கி எறிவதுதான் புதிய சட்டத்தின் அடிப்படை கொள்கையாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் மேல்நீதிமன்றங்களில் நீதித்துறை உள்ளிட்டு விரிவாக கலந்தாலோசனை செய்து நீதிபதிகளை நியமனம் செய்கின்றனர். நீதித்துறை சுதந்திரத்தை காப்பாற்ற நீதிபதிகள் நியமன அதிகாரத்தை முழுவதுமாக நீதித்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இந்திய நீதிபதிகள் வாதிட்டாலும் இம்முறை உலகில் வேறெங்கிலும் இல்லை. ஆனால் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களுக்கும் தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

பிரிட்டனின்ää நீதிபதிகள் நியமன ஆணையத்தில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். சட்ட பணித்துறையை சேர்ந்த இரண்டு நபர்கள். நீதிபதிகள் 5 பேர், தீர்ப்பாய உறுப்பினர் ஒருவர். மாவட்ட நீதிபதி ஒருவர். நீதித்துறை சாராதார் 6 பேர் இடம் பெறுவர். ஆணைய உறுப்பினர்களில் இந்திய வம்சாவழி இனத்தை சார்ந்தவர் ஒருவரும் இடம்பெறுகிறார். இன்றுவரை பரோனஸ் உஷா பிரஷ்ஷார்  பிரிட்டிஷ் நீதிபதியின் நியமன ஆணையத்தில் இடம்பெற்று வருகிறார். பிரிட்டிஷ் நீதிபதியின் நியமன ஆணையத்தில் நீதிபதிகளுக்கு நீதிபதிகளை முடிவு செய்யும் முழு அதிகாரம் இல்லை. அதே போன்ற ஒரு நிலையை இந்திய நீதித்துறையிலும் கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது.

நீதித்துறையின் முழு அதிகாரத்தில் இருந்து வந்த நபரை ஒழித்து விட்டு மறைமுகமாக அரசு ஆதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அரசை அரசியல் கட்சிகள்தான் அமைக்கின்றன. நமது அரசியல் கட்சிகளும் அரசியல் செய்வோரும் எவ்வளவு நேர்மையாகவும் ஜனநாயகமாகவும் நடந்து கொள்கிறார்கள் என்பதை நாடறியும். இன்றுää மதவாதமும் பெரும்பான்மை வகுப்புவாதமும் மேலெழுந்து வரும் நிலையில் நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு பங்கோ, அதிகாரமோ இருப்பது இறையாண்மைக்கு கேடு செய்யும். உதாரணமாகää சமீபத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 8 பேர் கொண்ட பட்டியலை மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் கொடுத்தது. மத்திய அரசு அப்பட்டியலில் இடம் பெற்ற கோபல் சுப்பிரமணியம் என்பவரது பெயரை நீக்கியது. கோபால் சுப்பிரமணியம் நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் அதற்கான காரணம் தெரிய வந்தது. 2004 ஆம் ஆண்டு குஜராத்தில் சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது நண்பர் பிரஜாபதி ஆகியோரை காவல்துறை சுட்டுக் கொன்ற வழக்கில், அது போலி என்கவுண்டராக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும்ää அதனை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என்றும்ää பரிந்துரை செய்தவர் கோபால் சுப்பிரமணியம். அது தொடர்ச்சியாகத்தான் தற்போது பா.ஜ.க தேசிய தலைவராக இருக்கும் அமித்ஷாவுக்கும் (அப்போது குஜராத் உள்துறை அமைச்சர்) போலி என்கவுண்டரில் தொடர்புள்ளது என்று சி.பி.ஐ குற்றம் சாட்டியது.

அதன் காரணமாகத்தான் புதிய பா.ஜ.க அரசு கோபால் சுப்பிரமணியம் நீதிபதியாவதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்த சர்ச்சையை தொடர்ந்து தான் நீதிபதியாக விரும்பவில்லை என்றும்ää தனது பெயரை அழுத்தமாக பரிந்துரைக்க தேவையில்லை என்றும்ää வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கூறினார். அதே நேரம் அதே வழக்கில் அமித்ஷா சார்பாக வாதாடிய உதை லலித் என்ற வழக்கறிஞரை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய அரசு சமீபத்தில் பரிந்துரைத்திருக்கிறது. வருங்காலத்தில் நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்பதற்கு ஒரு எளிய உதாரணம் இது. மத்திய அரசின் தலையீடு என்பது ஊழலும் வஞ்சனையும் நிரம்பி வழியும் அரசியல் கட்சிகளின் தலையீடு என்பது மறைவில் இருக்கும் உண்மை. பெரும்பாண்மை வாதமும் வகுப்பு வாதமும் வளர்த்து வரும் சூழ்நிலையில் நீதித்துறையில் கலப்பு அதிகாரம் ஏற்படுவதால் தேசத்தின் கடைசி நம்பிக்கை எனப்படும் நீதிமன்றத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்று போகும்.

ஜி.அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com