بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
"தி இந்து "வாசகர் திருவிழா.. ஒரு வாசகனின் பார்வையில்....!அச்சிடுகமின்-அஞ்சல்
03 நவம்பர் 2014 மாலை 03:24

நூற்று முப்பது வருட பாரம்பரியம் கொண்ட "THI HINDU " ஆங்கில நாளிதழ் சென்ற வருடம் தனது தமிழ்ப் பதிப்பை "தி இந்து "எனும் பெயரில் துவக்கியது. அது ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் ..அதை ஒரு வாசகர் கொண்டாட்டமாக தமிழகத்தின் நகரங்கள் தோறும் வாசகர் விழாவாக நடத்தி வருகிறது.

hin2

ஏற்கனவே திருச்சி, தஞ்சை, சேலம், நெல்லை என்று தனது வாசகர் விழாவை நடத்திய இந்து சென்ற நவம்பர் 2 ம் தேதி தூத்துக்குடியிலும் வாசகர் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது. தூத்துக்குடி பெருமாள்புரம் சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை பத்து மணிக்கு விழா துவங்கியது.

hin1

சிறப்பு அழைப்பாளர்களாக ,சென்ற வருடம் தனது "கொற்கை "எனும் நாவலுக்காக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி குரூஸ், "கூகை " தூர்வை " "நசுக்கம் "என்னும் கதைகளை எழுதிப் புகழ் பெற்ற சோ.தர்மன், பிரபல இடதுசாரி எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், வ உ சி கல்லூரியின் முன்னாள் முதல்வர் சா.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்து நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி ஐ.அரவிந்தன் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியை இந்து குழுமத்தின் மூத்த பொது மேலாளர் வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

பேராசிரியர் செல்வராஜ் பேசும்போது.." பத்திரிகைக்கு தர்மம் வேண்டும். நடுநிலையே நல்ல பத்திரிகை தர்மம். நடுநிலை தவறும் நாளேடு விழுந்துவிடும்.இந்து ஒரு நடுநிலை நாளேடாக இருப்பதில் பெருமை அடைகிறேன். "என்றார்.

எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேசும்போது " இலக்கியங்களில் தூத்துக்குடிக்கு "திருமந்திர நகர் "என்னும் ஒரு பெயர் இருக்கிறது. பிறகு முத்துக்கள் விளைந்ததால் அது முத்து நகர் ஆயிற்று. அதன் பிறகு துறைமுகம் வந்ததால் துறைமுக நகர் ஆயிற்று...இப்போது தூத்துக்குடியைச் சுற்றிலும் மின் நிலையங்கள் உருவாகியிருப்பதால் இது "பவர் சிட்டி"என்று அழைக்கப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழலுக்கு மாசு எற்ப்பட்ட்டு இருப்பதை இந்து அக்கறையோடு பதிவு செய்திருக்கிறது. இந்த செய்தித்தாள் மண் சார்ந்து ,மக்கள் சார்ந்து, அவர்களின் பண்பாடு,கலை,இலக்கியம் சார்ந்து பயணிக்கிறது தி இந்துவில் வெளியாகும் செய்திகள் வெறும் ஏட்டு செய்திகளாக இல்லாமல் ஆய்வுக்குரிய செய்திகளாக விளங்குகிறது "என்றார்.

சோ.தர்மன் பேசும்போது, "இப்போது எல்லோரும் பார்க்கவும், கேட்கவுமே விரும்புகின்றனர் படிக்க விரும்புவதில்லை. பார்க்க விரும்புபவன் குருடன். கேட்க விரும்புபவன் முட்டாள். இவைகளோடு உணர்ந்து வாசிப்பவனே அறிவாளியாக விளங்க முடியும் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது வேறு, வாசகர்களின் தரத்தை உயர்த்துவது வேறு.இந்து இரண்டாவதை வெகு அக்கறையோடு செய்கிறது "என்றார்

இடதுசாரி எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது," பத்திரிகை எனபது வாசகர்களின் மனசாட்சியை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். சமூகம் என்ன பேச நினைக்கிறது என்பதை உணந்து அதைப் பேசவும், பேச வைக்கவும் வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இங்கு கற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 12 சதவீதம்தான். அதனால் அப்போது அரசு பத்திரிக்கைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது. இப்போது கற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு அரசு கருத்து சுதந்திரத்தில் கை வைக்கிறது "என்றார்.

indu3

அதன் பிறகு வாசகர்களின் சார்பாக சிலர் பேச அனுமதிக்கப்பட்டனர். அதில் கடைசியாக காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் எஸ் கே ஸாலிஹ் அவர்களும் தலையில் தொப்பி அணிந்த நிலையில் மேடையேறி எளிய தமிழில் அழகுற பேசினார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது.. அவரது வேண்டுகோளுக்கினங்க கட்டுரையாளர் கே எஸ் முகமது ஷூஐப் அவர்களையும் மேடையேற்றி இந்து நிர்வாகம் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தது. அவரும் இரண்டு நிமிடம் மேடையில் உரை நிகழ்த்தினார்.

வாசகர் திருவிழா என ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையிலும் அரங்கு பெரும்பாலும் காலியாகவே இருந்தது. அன்று முகூர்த்த தினம் என்பதால் பெரும்பாலோர் பங்களிக்க முடியவில்லை என்று அதற்க்கு காரணம் கூறப்பட்டாலும், வாசிப்பு ஆர்வம், இலக்கிய ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை எப்போதும் குறைவுதான் .ஒரு சினிமா நடிகரை பார்க்கபோகும் கூட்டம் ஒரு தின இதழின் வாசகர் விழாவுக்கு வருவது இனி எதிர்காலத்திலேனும் நடக்குமா ..?என்று தெரியவில்லை.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com