بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சுமையை இறக்க வழி! இன்றைய இந்து நாளிதழில் எழுத்தாளர் சாளை பஷீர் எழுதிய ஆன்மீக கதை!! அச்சிடுகமின்-அஞ்சல்
06 நவம்பர் 2014 மாலை 03:13

ஒரு நகரத்தில் பெரும் தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்தார். அவர் பெயரில் நிலபுலன்கள், வாடகை வரக்கூடிய கட்டிடங்கள், வங்கிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், பங்கு சந்தையில் முதலீடு எனச் செல்வ வளம் இருந்தது. அவருக்கு எவ்விதக் குறையுமில்லை. அத்துடன் திடகாத்திரமான உடலையும் கொண்டவர் அவர்.

kadhai_2189042f

சிறிது நாட்களாகவே அவரின் முகம் வாடி இருந்தது. மனதில் அமைதி இல்லை. அதன் விளைவாக அவரின் உடல் நலிவடைந்து விட்டது. கண்கள் குழி விழுந்து முகம் ஒட்டி உடல் குச்சி போல ஆகிவிட்டது. எல்லாவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் செய்து பார்த்தார்கள். அவருக்கு எந்த நோயுமில்லை எனக் கூறிவிட்டனர். போகாத புனிதத் தலங்களில்லை. நேர்ச்சைகளுக்கும் குறைவில்லை . ஆனாலும் உடல் தேறியபாடில்லை.

ஒரு நாள் அந்த வணிகரை நலம் விசாரிக்க அவரின் நீண்ட கால நண்பர் வந்தார். விஷயங்களை அறிந்துகொண்ட அந்த நண்பர் தொலைவில் உள்ள மலையடிவார கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெரியவரைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னார். அவரைப் போய் ஒரு நடை பார்த்து வருமாறும் பரிந்துரைத்தார்.

மகானும் வணிகரும்

அடுத்த நாளே கையில் ஒரு பொதியுடன் அந்த மலையடிவாரக் கிராமப் பெரியவரின் முன்னிலையில் நின்றார் வணிகர். அந்தப் பெரியவரின் கைகளை இறுகப் பற்றியவாறே தன்னுடைய உடல் நலிவைப் பற்றி கண்ணீர் நிறைந்த கண்களுடன் எடுத்துரைத்தார்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். முறைப்பாடு முடிந்தவுடன் வணிகர் தன் கையோடு கொண்டு வந்திருந்த சிறுபொதியை அந்தப் பெரியவரின் முன் காணிக்கையாக வைத்தார். அந்தப் பொதிக்குள் பணக்கட்டுகளும், தங்க நாணயங்களும் , வெள்ளிக்கட்டியும் இருந்தன.

குதித்தோடிய மகான்

வணிகர் அந்த காணிக்கைப் பொதியைக் கீழே வைத்ததுதான் தாமதம் அந்தப் பெரியவர் அதைத் தூக்கிக் கொண்டு தனது குடிலை விட்டு வெளியில் பாய்ந்து ஓடினார். பெரியவரின் இந்தச் செயலைப் பார்த்துத் திகைத்துப்போன வணிகர் திடுக்கிட்டுப் போய், "அய்யோ என் பை, அய்யோ என் பை" எனக் கூச்சலிட்டவாறே பெரியவரைத் துரத்திக்கொண்டு சென்றார்.

மான் போல் துள்ளி ஓடிய பெரியவரை வணிகரால் பிடிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் பெரியவர் அந்தப் பொதியை ஒரு புதரில் வீசி விட்டு ஓடத் தொடங்கினார். பாய்ந்து போய் அந்தப் பொதியைக் கைப்பற்றிக் கொண்ட வணிகர் "அப்பாடா" எனப் பெருமூச்சு விட்டார். பொதி கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

இப்போது அவர் முன் தோன்றிய பெரியவர், " வணிகரே, சிக்கல் வேறு எங்கும் இல்லை. அது உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது. பணப் பொதியை மனதிற்கு மேலே வைக்காமல் அதனை மனதிற்கு கீழே வையுங்கள். சுமைகள் இறங்கி விடும்." என அறிவுரை கூறி வழியனுப்பினார் .

ஆக்கம் : சாளை பஷீர்

தி இந்து

November 6, 2014


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com