بسم الله الرحمن الرحيم
Tuesday 17th October 2017 | 26 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாசிப்பு சமூக மேம்பாட்டின் ஆணி வேர்!!அச்சிடுகமின்-அஞ்சல்
28 நவம்பர் 2014 மாலை 10:58

உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும். வாசிப்பு குறையும் போது அறிவு குறைகிறது. அறிவு குறையும் போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம்.

புராதன காலத்திலும் கூட வாசிப்பு அறிவு தேடலின் அடிப்படை வழியாகவே இருந்து வந்துள்ளது. எகிப்திய பார்வோன்கள் தங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் உருவாக்கிய முதல் நூல் நிலையத்தில் "இங்கே ஆத்மாக்களுக்கரிய உணவும் சிந்தனைக்கு விருந்தும் உண்டு" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

வாசிப்பு மங்கி மறைந்து அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும்போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத்தரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது. "அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்" என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) இதிலிருந்து இந்த உலகமும் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்கமுடிகின்றது. வாழ்வும் சாவும் தங்கியிருப்பதே வாசிப்பில் தான் என்பதுதான் மேற் குறித்த ஹதீஸ் சுட்டிக்காட்டும் அர்த்மாகும்.

இந்த மண்ணில் மிகக் குறுகிய காலப்பிரிவில் வெற்றிகரமான சமூக மாற்றத்தை தோற்றுவித்த இஸ்லாம் தனது தூதை வரிசப்பீராக என்றே துவங்கியது. காரணம் சமூக மேம்பாட்டடின் ஆணிவேர் வாசிப்பாகும். அந்தவகையில்தான் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுதும் கற்றல் எனும் தேடலை மனித வாழ்வின் இலக்காக குறிப்பிட்டார்கள். கற்றலுக்கு அடிப்படை வாசிப்பு. வாசிப்பு இம்மை-மறுமமை இரண்டிலும் வெற்றிக்கு வழிகோலும்.

வாசிப்பு அறிவின் வேராக இருந்தாலும் சமூக யதார்த்தத்தை பார்க்கும் போது கவலைதரும் வெளிப்பாடுகளையே காண முடிகிறது. வாசிப்பின் அடிப்படையில் எமது சமூத்தைப் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.

• வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிக்காதவர்கள்: வாசிப்பு முக்கியம் என்ற உணர்வு இருந்தும் சோம்பல் அல்லது நேரமின்மை காரணமாக வாசிக்காதவர்கள். உண்மையில் இவர்கள் பெரும் நஷ்டித்தில் இருப்பவர்கள்.

• வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்கள்: எமது சமூகத்தின் கணிசமான பகுதி இப்பிரிவைச் சார்ந்தவர்களே. வாசிப்பின் முக்கியத்துவம் உணராமலேயே பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு பலதரப்பட்ட தொழில்களிலும் அமர்ந்துவிடுபவர்கள். தூங்கும் இப்பிரிவினரை தட்டியெழுப்வுவது தார்மீகக் கடமையாகும்.

• வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிப்பின் முக்கியத்துவமும் அறிந்தவர்கள்: மிகக் குறைந்தளவு தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் இவர்களே. இவர்கள் உண்மையில் அருள் பாக்கியம் பெற்றவர்கள்.

• வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் வாசிப்பதற்கான வளங்களோ வசதிகளோ அற்றவர்கள்: நூலகங்கள் கூட இவர்களின் அறிவுப்பசிக்குத் தீனி போடும் அமைப்பில் இல்லை என்பது கசப்பான உண்மை. எனவே வளமான நூலகங்களை அமைத்து கொடுப்பதில் சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

• வாசிக்கத் தெரியாதவர்கள் ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள்: ஊர்களில் ஒருவர் வாசிக்க சுற்றியிருந்து கேட்கும் மக்கள் கூட்டம் எமக்கு உணர்த்துவது இதைத் தான். இயலாது என்று ஒன்றும் இல்லi. துணிந்தால் இவர்களும் நல்ல வாசகர்களாக மாறலாம்.

• வாசிக்கத் தெரியாதவர்கள் அதேசமயம் வாசிப்பின் முக்கியத்துவமும் அறியாதவர்கள்: இதற்கு ஏழ்மை, எழுத்தறிவின்மை, அறியாமை, யுத்தம், அகதிவாழ்வு போன்ற பலதரப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இவர்களுக்கு வாசிப்பு அதிசயமான ஒன்றாக தென்படும். சமூக மாற்றம் தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதி இதுவே.

இந்நிலை மாறவேண்மாயின் வாசிப்பு ஏன்? எதற்கு? என்பது தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் ஆக்கமும் அழிவும் எழுச்சியும் வீழ்ச்சியும் தங்கியிருப்பது வாசிப்பி அளவிற்கு எற்பவே. அந்த வகையில் வாசிப்பு ஏன்? வசிப்பின் முக்கயத்துவம், பயன்பாடுகள் வாசிப்பைத் தூண்டும் காரணிகள் யாவை என்பவற்றை சுருக்கமாக நோக்குவோம்.

வாசிப்பின் பயன்பாடுகள்

வாசிப்பு மனிதவாழ்வின் ஆயுட்காலத்தை பன்மடங்காக அதிகரிக்கிறது என்பது அறிஞர் அப்பாஸ் அல்-அக்காதின் கூற்றாகும். எமது ஆயுட்காலத்துடன் நாம் வாசிக்கும் அறிஞர்களின், சிந்தனையாளர்களின் ஆயுட்காலமும் சேர்ந்தே எமது ஆயுட்காலம் என்பதையே அறிஞர் அக்காத் இங்கு குறிப்பபிடுகிறார். வாசிப்பின் சில பயன்பாடுகள் பின்வருமாறு:

1) பொதுவாக வாசிப்பு அறிவின் திறவகோல். அறிவும் அறிவியலும் இன்றி நாகரிங்கள் தோன்றவே முடியாது.

2) மனிதனது ஆன்மீக, தார்மீக மேம்பாட்டுக்கும்ää சரியான வழிபாட்டுக்கும் இறை கட்டுப்பாட்டிற்கும் உதவுவது பரந்த வாசிப்பே.

3) உலக வாழ்வில் மனித சுபீட்சத்திற்கும், சமூக எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் துணையையாக இருப்பது வாசிப்பாகும்.

4) உலக அறிஞர்களின் கண்டு பிடிப்பிப்புகளுக்கு பின்னால் வாசிப்பு பெரும் துணை நின்றுள்ளது. உதாரணமாக அறிஞர் "பீலே பிரான்ஸ் வேர்த்" டி.வி யை கண்டுபிடித்தவர். அவருடைய தேடலுக்கு மூலகாரணியாக அமைந்தது அவருடைய வாசிப்பு பழக்கமாகும்.

5) அறிவைப் பெறுவது ஜிஹாதை விடச் சிறந்தது என்ற கருத்தைக் கீழ்வரும் வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. 'எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஷஹீதுகள் மறுமையில் அறிஞர்களின் அந்தஸ்தைக் கண்டு, தாங்களும் அறிஞர்களாக எழுப்பப்பட்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்." (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்) 'அறிஞனின் மையையும் ஷஹீதுகளின் இரத்தத்தையும் எடையிட்டால் அறிஞர்களின் மையே கனமாக இருக்கும்." (அல் ஹஸனுல் பஸரி) (அறிவைப் பெறுவதற்கு வாசிப்பு அடிப்படை என்பதை கவனத்திற் கொள்க)

வாசிப்பு ஏன்?

• வாசிப்பு என்பது அறிவுக்கும் ஆன்மாவிற்கும் விருந்தாகவும் உள்ளத்திற்கு இன்பம் தரும் பொழுதுபோக்காவும் அமைகின்றது.

• ஆழான வாசிப்பு காலங்கள் மற்றும் இடங்களின் வேறுபாடுகளை நீக்கிவிடுகிறது. ஒரு நல்ல வாசகன் எங்கிருந்தாலும்ää எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இரண்டரக் கலந்து உயிரோட்டத்துடன் பழுகுவான்.

• வாசிப்பு மனிதனை குறுகிய உலக வாழ்வில் இருந்து விரிந்த சிந்தனை கொண்ட பரந்த உலகிற்கு கொண்டு செல்லும்.

• இறைத் தூதை புரிந்து கொள்வதற்கும் நபிகாளாரின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கும் துணை நிற்பது வாசப்பே.

• தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்றää தனித்துவமானää தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே.

வாசிப்பைத் தூண்டும்; காரணிகள்

தூய்மையான எண்ணம் கொண்டு ஆரம்பித்தல்:

'படைத்த இறைவனது நாமத்தைக்கொண்டு வாசிப்பீராக" என்று அல்குர்ஆன் கூறுவதன் மூலம்ää அறிவும் ஆராய்ச்சியும் ஈமானின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது. எனவே இறைவனுக்காக என்ற தூய எண்ணம் வாசிப்பின் முதற்படி.

வாசிப்பு சூழல்

வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி. ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய தகவல் தொழினுட்ப யுகம் மேற்குறிப்பிட்ட சூழலை அடியோடு மாற்றியமைத்து விட்டது. நல்ல வாசிப்பு பழக்கமுள்ள குடும்ப சூழல்ää நண்பர்கள் வட்டம் இங்கு கவனிக்கத்தக்கது.

வாசித்தல் இலக்கு

ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிப்பதற்கு ஒதுக்குவது என்பது மட்டுமன்றி குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு நூல்களை வாசிப்பது என்பது தொடர்பான இலக்கு ஒன்றையும் அமைத்துக் கொள்ளுவது வாசிப்பைத் தூண்டக்கூடியது. இந்த இலக்கானது ஒரு நாளில் ஒரு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குதல் என்பதாகவோää மாதத்துக்கு ஒரு நூல் என்பதாகவோ அல்லது வாரம் ஒரு நூல் என்பதாகNவுh இருக்கலாம்;. வாசிப்பை மேம்படுத்துவதற்கான முதலாவது படிநிலை இதுவே.

வாசிக்கும் இடம்

வாசிக்கும் இடத்தைத் திட்டமிடுதலும் வாசிப்பைத் தூண்டும் முக்கிய காரணியாகும். சிலருக்குப் படுக்கையில்... பலருக்குக் காலைப் பொழுதில் காப்பி அருந்தும் நேரத்தில், இன்னும் சிலருக்கு மதியம் சாப்பிடுகையில்.--- மற்றும் சிலருக்கு பேரூந்து மற்றும் ரயில்கள் போன்றவையே வாசிக்கும் இடங்கள்.

வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது. வாசிக்கும் நேரம். ஒவ்வொரு நாளும் ஒரு ஒழுங்கில் குறித்த நேரத்தை அமைதியாக வாசிப்பதற்கு ஒதுக்குவது அவசியமாகும். வாசிக்கும் காலமானது தினமும் 10-15 நிமிடங்களாக இருக்கலாம். அல்லது கூடிய நேரமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களாக அமையலாம்.

வளமான வாசிப்பு

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணி எதை வாசிப்பது என்பது தான். இதில் துறை சார்ந்தோரின் வழிகாட்டல் இளைய தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

தப்ஸீர், ஹதீஸ், நம்பிக்கை கோட்பாடு சட்டம் வரலாறு போன்ற கலைகளில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், கலை இலக்கிய புத்தகங்கள் மற்றும் சமூக மாற்றத்தை தோற்றுவித்த அறிஞர்கள், வழிகாட்டிகளின் வாழ்க்கைச் சரிதங்கள் பொது அறிவு நூல்கள் போன்றவை முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் இளைஞர்களுக்கு மிகப்பொருத்தமானவை. அவ்hறே இஸ்லாமியக குடும்பம் என்ற தலைப்பில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகவும்; பயன்தரத் தக்கதாக அமையும்.

வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பது பழமொழி. ஆனால் வாசிப்பு அதைவிட உயர்ந்த பணியை ஆற்றுகிறது. ஒரு சமூகத்தின் இருப்புக்கும், மேம்பாட்டிற்கும் ஆணிவேராக இருப்பதே வாசிப்பாகும். வாழ்வு உண்டு இல்லை என்பதை தீர்மானிப்பதே வாசிப்புத்தான். காரணம் அறிவின் அடிடப்படை வாசிப்பாகும். எனவே வாசிப்போம் வளம் பெறுவோம்.

ஆக்கம்: முஹம்மத் பகீஹுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது! கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு!!
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பாக தமிழக அமைச்சரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு!
அக்டோபர் 30 க்குள் காயல்பட்டினம் வழியாக செல்லும் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலை புனரமைக்கப்படும்: நடப்பது என்ன? குழுமத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பதில்!
அரசு கேபிள் டிவியின் இலவச SET TOP BOX குறித்த விழிப்புணர்வு முகாம் - காயல்பட்டினத்தில் நடத்தப்படும்: நடப்பது என்ன? குழுமத்திடம் மாவட்ட ஆட்சியர் உறுதி!
மதுரை, கும்பக்கோணம், திருநெல்வேலி - அரசு போக்குவரத்து கழகங்கள் சார்ந்த 16 பேருந்துகளின் ஓட்டுனர்கள். நடத்துனர்களுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளது: திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர், நடப்பது என்ன? குழுமத்திற்கு தகவல்!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com