بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தெருவில் விழுந்த நன்மை! கட்டுரை!! இலையில் தங்கிய துளிகள் (பாகம் -2)அச்சிடுகமின்-அஞ்சல்
28 டிசம்பர் 2014 மாலை 11:33

சின்ன வயதில் பாடசாலை நாளொன்றின் அதிகாலையில் மழை விட்டு ஓய்ந்திருந்தது. இரவின் காற்றிலும் மழையிலும் தொலைபேசிக் கம்பிகள் அறுந்து பிரதான வீதியில் விழுந்திருந்தது. நானும் நண்பனும் அதனை அப்புறப்படுத்தி சீர் செய்துவிட்டுப் பாடசாலை சென்றோம்.

இச்செயலை அவதானித்துக் கொண்டு பாடசாலைக்குச் செல்ல பஸ் வண்டிக்காகக் காத்திருந்த இஸ்லாம் பாட ஆசிரியர் அன்றைய நாள் ஜும்ஆப் பிரசங்கத்தில் இச்செயலைப் பாராட்டிப் பேசினார்.

Maram1

குப்பைகள் நிறைந்து அழுக்கடைந்த வீதிகள், ஓரங்களில் மரங்கள் நட்டிய அழகிய வீதிகள், கொஞ்சம் குழிகள் உள்ள வீதிகள் குழிகளில் கொஞ்சம் வீதிகள், அதிவேக நெடுஞ்சாலைகள், மணல் வீதிகள் என ஒரு நாளில் எத்தனையோ வீதிகளில் நாம் ஒவ்வொருவரும் பயணம் செய்கிறோம்.

வீடுகளை விடவும் வீதிகளை வைத்தே ஒரு ஊரின் நேர்த்தியை நாம் மதிப்பிட்டுக் கொள்ளலாம். ஈமான் 70 அளவிலான படித்தரங்களைக் கொண்டது. அதன் உயர்ந்த படித்தரம் லாஇலாஹ இல்லல்லாஹ். குறைந்த படித்தரம் பாதையில் தீங்கு தரும் பொருட்களை அகற்றுதல் என இறை தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.அப்படியாயின் ஈமானின் தரத்துடன் பாதையை துப்பரவு செய்வது இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

ஈமானின் உயர்ந்த படித்தரத்தை முழுமைப்படுத்தும் பணி இங்கு ஆரம்பமாகிறது. சில இடங்களில் பாதையில் அழுக்கு இருக்கின்றது. இன்னும் சில இடங்களில் பாதையே அழுக்காக இருக்கின்றது. பாதை என்பது ஒரு ஊரின்,கிராமத்தின்,நாட்டின் ஆன்மாவின் குறியீடு.எனவேதான் அதனை பெரிதாக்குகிறார்கள், அழகுபடுத்துகிறார்கள்.

maram3

பாதையில் உள்ள தீங்கு தரும் பொருட்களை அகற்றுவது நன்மை தரும் ஒரு செயலாக சொல்லப்பட்டிருக்கிறது.தீங்கு எனும் போது பாதையில் இருக்கின்ற வாழைப் பழத் தோலை அகற்றுவது மட்டுமல்ல பாதைக்குரிய ஒழுங்குகளைப் பேணுவது,

பாதைக்கு இடைஞ்சலாக மதில்களைக் கட்டாமல் இருப்பது, இடைஞ்சல் தரும் வகையில் வாகணங்களை நிறுத்தாமல் இருப்பது, அழுக்கு நீரை பாதைக்குத் திருப்பாமல் இருப்பது என எத்தனையோ விடயங்கள் அதில் அடங்குகின்றன.

தெருவில் உள்ள தீங்குகளிலும் நன்மை இருக்கிறது என்பதை மனிதன் மறந்தே வாழ்கிறான். தான் கடக்கும் தெருக்களில் அந்த நன்மைகளையும் அவன் கடந்தே செல்கிறான்.

தனக்குப் பாதிப்பில்லை என்ற ஒரே காரணத்திற்காக மனிதன் அதனை பொருட்படுத்துவதில்லை. மானுடத்திற்கான பொது நன்மை என்பதுதான் அந்தத் தீங்கை அகற்றுவதன் விரிவான எல்லை என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம். பிரதான வீதியில் சகதியாக இருந்து எமது வீட்டிற்கு வருகின்ற வழி அழகாக இருப்பதில் பயனில்லை.

maram2

இங்கு நாம் அகற்றுகின்ற ஒரு தீங்கு ஆயிரம் மனிதர்களைப் பாதுகாக்கின்றது. ஒரு சிறிய விஷயம் எண்ணிலடங்காத நன்மைகளுக்குக் காரணமாகி விடுகிறது. வீதிகளில் கொஞ்சம் குனிந்து பாருங்கள் எத்தனையோ நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆக்கம்: இன்ஸாஃப் சலாஹுத்தீன் 

தொடரும்..இறை நாட்டத்துடன் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com