நகருக்குள் ராக்கெட் வேகத்தில் பள்ளி வாகனங்கள் : பொதுமக்கள் பதற்றம்!! கட்டுரை!!அச்சிடுக
16 ஜூன் 2015 மாலை 09:34

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்தநிலையில், பள்ளிகள் கடந்த (ஜூன் 1 ம் தேதி) முதல் திறக்கப்பட்டது.

முன்னொரு காலம் இருந்தது. பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் நடந்து செல்வதே வழக்கம், மிஞ்சி போனால் மிதி வண்டியில் செல்வார்கள். தற்போது நடை தூரம் பள்ளிகள் இருந்தாலும் வாகனத்தில் செல்லும் கலாசாரம் மிகுந்து காணப்படுகிறது.

காயல்பட்டினத்தில் காலை ஏழு மணி முதல் 9.30 மணி வரை பள்ளி கூட வாகனங்களின் போக்குவரத்து பெரும் போர்களமாக மாறி வருகிறது.

பெரும்பாலும் நகரில் அனைத்து தெருக்களிலும் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் மணல் கற்கள் தெருவெங்கும் குவிந்து கிடப்பதால் பள்ளி வாகனங்கள் சில தெருக்களில் நின்று மாணவ மாணவியரை ஏற்றி செல்வதே சவாலாக உள்ளது.

குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்கள் நகரில் ராக்கட் வேகத்தில் பறந்து செல்லுவதால் நகரின் பெரும்பாலானோர் முகம் சுளிக்கும் நிலைகள் ஏற்பட்டுள்ளது.

school-van-J

இளம் வயது ஓட்டுனர்கள் மாணவ, மாணவியர்களின் உயிர் உடைமைகளை கவனத்தில் கொள்ளாமல் அதிவேகத்தில் பள்ளி வாகனத்தை ஒட்டி செல்வதை சமந்தப்ட்ட தனியார் பள்ளிகள் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தும் பல்வேறு நிபந்தனைகளை தனியார் பள்ளிகள் பேனுகிறதா எனற சந்தேகம் வலுத்து வருகிறது.

மாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், பள்ளிக்கூடங்களில் இருந்து வீடுகளுக்கும் ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் பஸ்-வேன் போன்ற வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பான முறையில் மாணவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையோடு செயல்படும் தமிழக அரசு, இந்த விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, பள்ளிக்கூட வாகனங்களில் உள்ள மாணவர்கள் உட்காரும் இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட வேண்டும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் வடிவமைப்பு உறுதியானதாக இருக்க வேண்டும், அவசர கால நேரங்களில் வாகனங்களில் இருந்து எளிதாக வெளியேறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும், அனுபவமிக்க டிரைவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட 22 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அனைத்து பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களும் இந்த 22 விதிமுறைகளை பின்பற்றி, உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையிடம் இருந்து உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அந்த பரிசோதனையின் போது, ஏதாவது குறைபாடு இருந்தால் வாகனங்களின் உரிமம் (பெர்மிட்) ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமும் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது பரிசோதனை நடத்துவார்கள்.

அதில் சிறு விதிமீறல் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதற்கு முந்தைய ஒரு வருட காலத்தில் சிக்னல் மீறல், வரையறுக்கப்பட்ட வழியில் செல்லாமை உள்ளிட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களில் கூட 2 முறைக்கு மேல் அபராதம் கட்டியிருக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மிக வேகம் (ஓவர் ஸ்பீடு), குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்தியிருத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை கூட தண்டிக்கப்படாதவராக இருக்க வேண்டும். மேலும், டிரைவர்கள் காக்கி சீருடை தான் அணியவேண்டும் என்றும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட வாகனங்களில் இருக்கும் உதவியாளர்களை பொறுத்தமட்டில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் 21 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுத்தத்திலும் வாகனங்கள் நிற்கும் போது முதலில் இறங்கி, வாகனங்களில் இருந்து மாணவர்களை ஏற்றி, இறக்கும் வகையில், எல்லா உதவிகளும் செய்யும் வகையிலும் மருத்துவ ரீதியாக தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.

மாணவிகள் செல்லும் வாகனங்கள் எனில் கண்டிப்பாக பெண் உதவியாளர் இருக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு சட்ட விதிகள் இருந்தும் மின்னல் வேகத்தில் ஓட்டும் ஓட்டுனர்களை தனியார் பள்ளிகள் அறிவுறுத்தி கட்டுப்படவில்லை என்றால் அவர்களை பணி நீக்கம் செய்வதே மாணவ மாணவியர்களின் உயிர் உடைமைகளுக்கு உத்தரவாதம் என்கின்றனர் பெற்றோர்களின் அநேகர்.

கண்கானிக்குமா தனியார் பள்ளி நிர்வாகங்கள்..பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம் :  அபூ ஹுஃபைழ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh