بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மதுவிலக்கு என்பது வெற்றுக் கூச்சலா? கட்டுரை!அச்சிடுகமின்-அஞ்சல்
09 ஆகஸ்ட் 2015 மாலை 03:43

இளம் வயதில் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகி பலவீனப்பட்டுப் போகிறார்கள்; மனைவியைச் சுகப்படுத்தக்கூட திராணியற்றுப் போகிறார்கள்; இளம் வயதிலேயே செத்துப்போய் மனைவியரைக் கையறு நிலையில் விட்டுச் செல்கிறார்கள்;

குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய ஏழை, எளிய ஆண்மகன்கள் இப்படிப் பொறுப்பில்லாமல் போனது ஏன்? அரசாங்கம் இலவசங்களை வழங்குவதற்கான வருவாயைப் பெறுவதற்காக மதுவைத் தாராளமாகப் புழங்கவிட்டதுதான். சமூகத்தில் எதனையும் தாராளமயமாக்கும்போது அது சார்ந்த அறிவையும் கல்வியையும் ஜனநாயகப்படுத்த வேண்டும்.

இங்கு மது ஆலைகளின் சமூகப் பொறுப்புடமை பற்றி எந்த உரையாடலும் நடக்கவில்லை; பாதி ஆலைகளை தி.மு.கவினரும் மீதி ஆலைகளை அ.தி.மு.கவினரும் நடத்துகிறார்கள்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 2014-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் 16,122 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்; 34,564 பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தார்கள். இந்த உயிரிழப்புகளுக்கும் மதுப்பழக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று ஒரு வாதத்திற்குச் சொல்லலாம்;

ஆனால் உலக சுகாதார நிறுவனம், மதுப்பழக்கத்தால் மனநலமும் உடல் நலமும் ஒருசேரப் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. இளம் விதவைகள் தமிழகக் கிராமங்களின் நிதர்சனமாக இருக்கிறார்கள்.

குடித்துவிட்டு வன்முறையில் ஈடுபடும் ஆடவரைக் கண்டு பிஞ்சுக் குழந்தைகள் மனம் பேதலித்து நிற்கிறார்கள். குடியின் சமூகத் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களின் அடுப்பங்கரை வரைக்கும் உணரப்படுகிறது.

என்ன செய்யலாம்? "கிடைக்கிறது என்றால் குடித்து விடுவாயா? எங்கே போயிற்று உன் புத்தி?" என்று கேட்கலாம். சுயக் கட்டுப்பாட்டிலிருந்து, மதுக்கடைகளைப் புறக்கணிப்பதிலிருந்து இந்தப் போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்;

அது ஓர் இயக்கமாக மாறியிருக்கும். ஆனால் இன்றைக்கு மது ஒழிப்புப் போராட்டம் அரசியலுக்கான கருவியாக, பகடையாக மாறியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி, இது தனக்குச் சொந்தமான போராட்டம் என்று நம்புகிறது;

தி.மு.க இந்தப் போராட்டத்தைத் தன்னிடமிருந்து தட்டிப் பறித்துவிட்டதாகக் கவலை கொள்கிறது. புகையிலை வியாபாரத் தொடர்புள்ளதாகச் சொல்லப்படும் வைகோ வழக்கம்போல இதன் மூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கிறார்; திருமாவளவனும் ஜவாஹிருல்லாவும் "கடையடைப்பு போதும்; பஸ்கள் ஓடட்டும்" என்று மக்களின் "நாடி" பிடித்துப் பார்க்கிறார்கள்.

காலந்தோறும் கொண்டாட்டத்துக்கான பொருளாகப் பார்க்கப்பட்ட மதுவை ஏன் மக்கள் சோகத்துக்கான கடவுச் சீட்டாக மாற்றினார்கள்? கல்வி இல்லாமைதான் காரணம் என்கின்றனதரவுகள். டாஸ்மாக் மதுவினால் வருகிற லாபத்தைவிட சமூகம் அடைகிற நஷ்டம் அதிகம் என்பது ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் தெரியும்.

இருந்தாலும் கிடைக்கிற வருவாயை ஆந்திராவுக்கும் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் புதுச்சேரிக்கும் விட்டுத் தருவதற்கு மனம் இல்லை. மணல், கல், தாது மணல் ஆகியவற்றை முறைப்படுத்தி தமிழக அரசு வருவாய் ஈட்டினால் டாஸ்மாக் மது மூலம் வரும் இந்த முப்பதாயிரம் கோடியைத் தேற்றிவிடலாம் என்பது ஜெயரஞ்சன் போன்ற பொருளாதார அறிஞர்களின் கருத்து. இதைச் செய்வதற்கு தி.மு.கவும் அ.தி.மு.கவும் தயாராக வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளா செய்ததுபோல படிப்படியாக 6,800 டாஸ்மாக் மதுக்கடைகளை ஒழித்துக் கட்டுவேன் என்று ஜெயலலிதா பகிரங்க அறிவிப்பு செய்யவேண்டும். மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கக்கூடும்.

பத்திரிக்கையாளர்

பீர் முஹம்மத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com