بسم الله الرحمن الرحيم
Saturday 23rd February 2019 | 17 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
ஆம்... இவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்! கட்டுரை! அச்சிடுகமின்-அஞ்சல்
04 பிப்ரவரி 2016 மாலை 03:13


"கெயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பவர்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தில் எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் பிற்போக்குவாதிகள், நாட்டை கற்காலத்தை நோக்கி இழுக்கிறார்கள்..." என அடுக்கடுக்கான குற்றசாட்டை ஒரு சாரார் முன்வைக்கிறார்கள்.

"நாம் சொகுசாக காரிலும், குளிரூட்டப்பட்ட பேருந்திலும், விமானத்திலும் செல்ல வேண்டுமானால், அதற்கு எரிபொருள் முக்கியம். அதற்காக அரசு சில திட்டங்களை அறிவிக்கும்போது, நாமும் கொஞ்சம் விட்டு தரத் தான் வேண்டும்" என்கிறார்கள்.

pipe_gail_one

"நாம் தியாகம் செய்யவில்லை என்றால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் இத்தனை பேருக்கு வேலை கிடைத்து இருக்குமா...?இதுபோல்தான், நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போதும் எதிர்த்தீர்கள். ஆனால், நான்கு வழி சாலை போடப்படவில்லை என்றால் நம் பயணம் இவ்வளவு சுலபமானதாக இருக்குமா...? பாருங்கள், சேலத்துலிருந்து சென்னைக்கு 5 மணி நேரத்தில் வந்துவிட முடிகிறது.

நவீன விஞ்ஞானம் சாத்தியப்படுத்திய அனைத்து விஷயங்களையும் நாம் அனுபவிக்கிறோம், அதற்காக சிறு தியாகம் செய்தால் நாம் என்ன குறைந்தா போய்விடுவோம்...?" என்கிறார்கள்.

யாரந்த நாம்...?

மேலுள்ள பத்தியை மீண்டுமொரு முறை படித்து பாருங்கள். அந்த 'நாம்' என்ற சொல்லில்தான் மொத்த அரசியலும் ஒளிந்திருக்கிறது என்பது புரியும். மூச்சுக்கு முன்னூறு முறை, 'நாம்' சிறு தியாகங்கள் செய்து தான் ஆக வேண்டும், இறுக்கமாக இல்லாமல் முன்னேற்றத்திற்காக 'நாம்' சில விஷயங்களை விட்டுத்தான் தர வேண்டும் என்று சொல்லும் யாரும், தன் வீட்டு வாசலில், அவர்கள் வீதியின் பொது குப்பை தொட்டியை வைக்க அனுமதிப்பதில்லை. ஆனால், இவர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்காக விட்டு தர வேண்டும் என்கிறார்கள்.

சரி. பிறகு அந்த 'நாம்' யார்....? நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நிலத்தை பறிக்கொடுத்துவிட்டு ஆண்டு கணக்காக போராடி கொண்டிருப்பவர்களை, நான்கு வழி சாலைகளுக்காக நிலத்தை கொடுத்துவிட்டு தம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலத்திற்காக தினமும் பல கி.மீக்கள் நடப்பவர்களை. இவர்கள்தான் அந்த, 'நாம்'.

இவர்கள் யாரும் நவீன வளர்ச்சியால் பலனடைந்தவர்கள் இல்லை. ஒரு சாராரின் முன்னேற்றத்திற்காக தங்கள் நிலத்தை பறிகொடுத்தவர்கள் இவர்கள். வளர்ச்சியின் குறியீடாக நாம் குறிப்பிடும் நான்கு வழி சாலைகள், கூலி வேலைக்காக மாநகரங்களுக்கு புலம் பெயர மட்டுமே இவர்களுக்கு பயன்படுகிறது. அதைத் தாண்டி இந்த நான்கு வழிச் சாலைகள், இவர்களின் வாழ்வில் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

நான்கு வழிச் சாலைகள்

இந்த நான்கு வழிசாலைகள் குறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எம். ஆர். சிவசாமி ஒரு முறை, "இந்த நான்கு வழி சாலைகள்தான் வளர்ச்சியென்றால். அந்த நான்கு வழிசாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விளைந்த காய்கறியும், நெல்லும் வளர்ச்சியின் குறியீடுகள் இல்லையா...? இது நமக்கான சாலைகள் இல்லை, பெருநிறுவனங்களுக்கானது" என்று கூறினார்.

ஆம். நீங்களே யோசித்து பாருங்கள். இந்த நான்கு வழிச்சாலைகள் நமக்கு தேவையா...? பயண நேரம் அதிகமாக இருந்தாலும், நமக்கு அந்த இரண்டு வழி சாலைகளே போதுமானதாக இருந்தது. எந்தச் சுங்கச் சாவடியிலும் பணம் செலுத்தாமல், நாம் சுதந்திரமாகச் சென்றோம். ஆனால் இப்போது....? நம் வாகனங்களை விட, பெரு நிறுவனங்களின் வாகனங்களே அதிகம் செல்கிறது.

இதையே பேசிக் கொண்டு இருக்காதீர்கள். பெரு நிறுவனங்கள்தான் நம் நாட்டில் பல பேருக்கு வேலை தருகிறது. அவர்கள் இல்லையென்றால், நம் தேசத்தில் பல படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் நடுத் தெருவில்தான் நிற்க வேண்டும் என்கிறீர்களா....?

ஒரு கோடியில் நான்கு பேருக்கு வேலை

இந்த வாதத்தையும் மறுக்கிறார், சூழலியலாளர் பியூஷ். அவர் கூறுவது, "அண்மையில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ 10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தது. இந்த முதலீடு உருவாக்கிய வேலை வாய்ப்பு அதிகபட்சம் 40,000. அதாவது சராசரியாக ஒரு கோடியில் 4 பேருக்குதான் வேலை கிடைக்கிறது. இந்த பெரிய நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்படுத்த போகும் சேதமும் மிக அதிகம்."

அதே வேளை, ரூபாய் பத்து லட்சத்தில் தொடங்கப்படும் சிறு நிறுவனங்களால் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்கிறது. என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டுமானால், இரண்டு லட்சம் முதலீட்டில் நான் தொடங்கிய மூங்கில் மர சாமான்கள் (Bamboo Furniture) தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கு வருகிறேன்" என்கிறார்.

என் பயிர், என் உரிமை

இதுவெல்லாம் சரி, கெயில் உங்கள் இடத்தை கையகப்படுத்தவில்லையே. உங்கள் நிலம் வழியாக குழாய் தானே பதிக்கப்படுகிறது. இதனை இவர்கள் எதிர்க்க காரணம் என்ன...? தேசத்தின் வளர்ச்சி மீதான அக்கறையின்மை இல்லாமல் வேறென்ன என்கிறீர்களா...?

கெயில் குழாய் பதிக்கப்பட்ட இடத்தின் இரு பக்கங்களிலும் 10 மீட்டர் தூரத்திற்கு விவசாயம் செய்யக்கூடாது. அதாவது வேர் படர்ந்து செல்லும் மரம் வகைகளை நட முடியாது. அப்படி நட்டு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதற்கு விவசாயியே பொறுப்பு. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று இன்னொருவரின் உணவு விஷயத்தில் தலையிட நமக்கு உரிமை இல்லாதபோது, இதைத் தான் பயிர் செய்ய வேண்டும் என விவசாயிடம் எப்படி திணிக்க முடியும்? இது அரசியலைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது இல்லையா...?

மேலும் கெயில் குழாய் எந்த விதத்திலும் பாதுகாப்பானது இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மூன்று விபத்து நடந்துள்ளது. அதிலும் ஒன்று நம் தேசத்தின் தலைநகரான டெல்லியில். குறிப்பாக, ஆந்திராவில் நடந்த விபத்தில் 16 பேர் இறந்துள்ளனர். துருப்பிடித்த குழாயிலிருந்து இரவு முழுவதும் எரிவாயு வெளியேறி, காற்றில் கலந்தது கூட நம் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. அன்று காலை நாகேஸ்வர ராவ் என்ற தேநீர் கடைக்காரர் அடுப்பு பற்ற வைக்க தீ மூட்டிய போது, காற்றில் கலந்த எரிவாயு வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

gail_pipe_line_one

நீங்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக அப்பாவி பொது மக்கள் இறக்க வேண்டுமென விரும்புவீர்களானால், இவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்தான்.

சரி வேறு என்ன செய்யலாம்...? நமக்கு அடுப்பெரிக்க கூட எரிவாயு தேவைப்படுகிறதே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆம். அதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது. வீட்டில் சமையல் எரிவாயுவிற்காக 'பயோகேஸ்' கட்டமைப்பை ஏற்படுத்த சில ஆயிரங்கள் மட்டுமே ஆகும். இதன் மூலம், வீட்டின் கழிவுகளை கொண்டே எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். கெயில் திட்டத்திற்கான மொத்த திட்ட மதிப்பீடு ஏறத்தாழ மூவாயிரம் கோடிக்கு மேல். இந்த பெரும் தொகையை கொண்டு நம் தமிழகத்தின் பெரும்பாலானோர் வீட்டில் 'பயோ கேஸ்' கட்டமைப்பை ஏற்படுத்திவிட முடியும். இதனால் குப்பைகளை கையாள்வதும் எளிதாகும்.

இந்தத் திட்டம் எளிதானது. எளிமையாக இருப்பதனால்தான் என்னவோ நாம் இது குறித்து யோசிக்க மறுக்கிறோம்.

மு. நியாஸ் அகமது

   விகடன்

   03/02/2016


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com