بسم الله الرحمن الرحيم
Sunday 21st July 2019 | 18 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
05 மார்ச் 2016 காலை 01:07

 

வீதியில் வாகனங்களை எப்படி நிறுத்துவது?

                உலகலாவிய நாடுகளில் வாழும் காயல் நகர சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட இடை வெளிக்குபின் கட்டுரை தருகிறேன் படியுங்கள்! இன்று காயல்பட்டணம் பேரூர் ஆட்சி மாறி நகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளதால் வீட்டுவரி, இதர அரசு துறை வரிகள் உயர்ந்து விட்டது.

பெருமை ஏற்பட்டு மக்கள் வாழ்வில் தொழில் நெருக்கடி ஏற்பட்டதால் இங்கு வாழும் வியாபாரிகள் அதை சரிகட்ட விற்கும் பொருள்களில் விலை கூட்டி லாபம் அதிகம் பெற நாடுவது தெரிய வருகிறது. (இதில் தப்பு இல்லை ஒன்றில் நஷ்டம் மற்றொன்றில் லாபம் தரும்  பாதை இது தான்) 200 வருடங்களாக காயல் நகர மக்கள் கடல் கடந்த நாடு சென்று குறிப்பாக இலங்கை மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஹாங்காங் பாங்காக் (தாய்லாண்ட் நாடு) சென்று தொழில் செய்து உழைத்து கை நிறைய பணத்தை பேங்க் மூலம் அள்ளி வந்து மனைவி மக்களுடன் சந்தோமாக செல்வத்துடன் வாழ்ந்து வரும் போது அவர்களுக்கு நான்கு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனமாக ஸ்கூட்டர்,பைக்,போன்ற வாகனமும் வாங்கி கொண்டு, ஆறுமுகநேரி திருச்செந்தூர் வரை மனைவி மக்களை பின்னால் வைத்து ஓட்டி செல்வது ஏனெனில் பேரூந்தில் மனைவி,மகளை,மருமக்களை, பேத்தியை, சிரமத்துடன் கொண்டு செல்லாமல் பாதுகாக்க டூவீலர்களில் போக பழகியும் இக்காலத்தில் தந்துள்ளனர்.

bk1_copy

ஆண்களின் பெரும்பாலோருக்கு காவல் துறை மூலம் லைசன்ஸ் வாங்கி இருக்கலாம். டூவீலர் ஓட்டும் எந்த பெண்ணாவது அல்லது மாணவர்களில் பலர் லைசன்ஸ் முறைபடி வாங்கி இருக்கிறார்களா? எண்ணிப்பாருங்கள். இதனால் தான் மாணவர்களில் பலர் அல்லது படித்தவர்களில் சிலர் படிப்பை விட்ட பலர் வீதியில் வாகனம்  நிறுத்தும் முறை தெரியவில்லை.

சிகினலும் புரியவில்லை. ஹாரன் அடிக்காமல் திரும்புகிறான். ஆபத்தில் மாட்டுகின்றான். காயல் நகர வீதி எங்கும் டூவிலரில் வருகிறார்கள். கடை முன் நிறுத்தி விட்டு கடை வாசலையே மறைத்து மக்கள் போக இடமின்றி இடங்களை மறைத்து இடத்துக்கு இடையூறு செய்து விட்டு போகிறார்கள். தம்பி கொஞ்சம் தள்ளி விடுங்களேன்

போகும் பாதை இடையூராக இருப்பதாக கூறினால் ஐந்து நிமிடத்தில் வருவதாக காம்ளக்ஸ் பஜார் உட்பகுதியாக பஜார் போய் மணிக் கணக்கில் எங்கேயோ ஒரு கடையில் அரட்டை மண்டபத்தில் அரை மணி நேரம் நேரத்தை வீணடித்து விட்டு மீண்டும் வாகனம் விட்ட பகுதிக்கு வருவதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாக உள்ளது. சொன்னது ஐந்து நிமிடம் அரை மணிக்கு மேல் அரட்டை விபரத்தில் ஆழ்ந்து விட்டு வருவது நியாயம்தானா? எண்ணிப்பார் உன்நிலையை!

வணக்கஸ்தலம் முன்பு வாகனத்தை நிறுத்துவது? சரியா?

                பள்ளிவாசல், கோவில், சர்ச், தர்ஹா முன்பும் ஆடவர் மகளிர் கல்லூரி முன்பும் வாகனத்தை நிறுத்தி எப்படி செல்வது என்று அந்த முறையை யார் கடை பிடிக்கிறார்ள்? நினைத்து பாருங்கள் மளிகைக் கடை, நகைக் கடை, ஜெராக்ஸ் கடை, வெளிநாட்டு பொருள்கள் வாங்கும் கடை ஆர்கானிக் பொருட்கள் அங்காடி இன்னும் பழம் காய்கறி மார்க்கெட் முன்பும் தாறுமாராக குண்டக்க மண்டக்கா மாதிரி கண்டமாதிரி போகும் திசை வந்த திசை வாகனம் ஒன்றாய் நேராக நிற்பதை காயல்பட்டணத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் போகும் திசையில் வந்தவர் திரும்பும் திசையில் திருப்பி வாகனத்தை ஏன் வாசலை மறைத்து நிறுத்துகிறார்.

bk2_copy

தூரத்தில் எல்லா வீதியிலும் வாகனம் நிறுத்த இடம் இருக்கத்தான் செய்கிறது. பள்ளி வாசல்கள் தர்ஹா, கோவில், சர்ச் போன்ற வணக்க ஸ்தலங்களுக்கு நீண்ட கோட்டைச்சுவர் வீணாககாலியாக   உள்ளது. அதை அவர்கள் நிர்வாகத்தில் சொல்லி வீதிக்கு வரும் பொது மக்கள் வாகனம் நிறுத்தும் கொடுமை நீங்கி விட வழி பிறக்கும் அல்லவா?

பள்ளி கல்லூரி மாணவர்களே!

                மாணவ கண்மணிகளே! நீங்கள் பள்ளி விடுமுறை காலங்ளில் அல்லது தினமும் இரவு வேளைகளில் வீதியில் பைக்,ஸ்கூட்டர் வாகனத்தை வீதியை ஒட்டி நான்கு ஐந்து மாணவர்களாக நிற்பதை காணுகின்றோம்.

இது போகும் பேரூந்துக்கும் நடை பாதை வாசிகளுக்கும் இடையூராக தெரியவில்லையா? பேரூந்து ஓட்டுனர் நமதூரை புறக்கணித்து இரவு பேரூந்துகளை திருச்செந்தூரில் புறப்பட்டு அடைக்கலாபுரம் வந்து ஆறுமுகநேரி சென்று நெல்லை தூத்துக்குடி செல்ல காரணம் நீங்கள்தான். இரவில் வீதியில் சம்பந்தமில்லாமல் பேரூந்து போக முடியாமல் பைக் ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோவை நிறுத்தி இடையூறு செய்வதால் காயல்பட்டணம் வந்தாலே என்ற குற்றச்சாட்டுகளை வெகுதூரம் போகும் பேரூந்து ஓட்டுநர் ஒருவர் ஒருசமயம் என்னிடம் கூறினார் வேதனையாக! உண்மைதானே?

நம்ம ஊருக்குல் எல்லா ஊர் பேரூந்துகள் வந்து போக நாம் ரூட்வாங்கிவைத்திருந்தும் ஏன் அந்த இரவு பேரூந்துவராமல் போகிறது என்பதை எண்ணிபாருங்கள்.

பேரூந்து திரும்பும் பாதைகள் இடையூராக டூவிலர்வாகனம் இருப்பதாக குற்றச்சாட்டை தரும் பேரூந்து ஓட்டுநர் கோரிக்கையை காயல் வாசிகள் கவனித்து எல்.கே.லெப்பைதம்பி சாலை மிகக் குருகிய சாலை ஒன்வே (ஒருவழிபாதையில்) இரண்டு பக்கமும் வாகனத்தையும் ஆட்டோவையும் நிறுத்திவைத்தால் பேரூந்தும் இதர வாகனமும் குறித்த நேரத்தில் இந்த வீதியை விட்டு கடந்து செல்ல ஆமை வேகமாக போய் சுமார் ஒருமணி நேரமாவது இந்த சாலை கடந்து செல்ல முக்கிமுனங்கி பாம்பு போல ஆடி அசைந்து நெளிந்து கடந்து போவது பேரூந்து ஓட்டுனருக்கு சிரமம் என்பதை இனியாது எண்ணிப்பார்த்து வெளியூர் வாகனம் நமதூர் வழியாக போக இடம் தருவீர்களா? ஊருக்கு நல்லதை செய்ய முன்  வாருங்களேன்.

pr1_copy_copy

வீதியின் நிலை எப்படி உள்ளது

                நமதூர் நகராட்சி இருந்து செயல்பட முடியவில்லை. குண்டும் குழியுமான வீதியை ஊர் பொதுநலசபை அமைப்பாளர்கள் வெளிநாட்டு மக்களிடம் நிதி பெற்று போக்குவரத்து அதிகாரி மூலம் கே.டி.எம் தெரு, தாயிம்பள்ளி பின்புறம் உள்ள வீதி பெரிய நெசவுதெரு எல்.கே. லெப்பைதம்பி சாலை (கூலக்கடைபஜார்) மெயின்பஜார் பகுதி வீதிகளை நல்லதாக அமைத்து இருபக்கமும் மக்கள் நடந்து செல்ல மஞ்சல் நிறகோடு போடலாம். வாகனம் நிறுத்த ஆறுமுகநேரி காவல் நிலையம் இடத்தை ஒதுக்கி ஆவன செய்தால் நம்மூர் வழியாக வெளியூர் வாகனம் மன திருப்தியாக வந்து செல்லும் வெளியூர் உல்லாச பிரயாணிகள் கடல் கடற்கரை செல்லும் பாதையில் ஒருமுறை போனால் வாகனத்தின் பிரேக் அறுந்து போகும் நிலை ஓட்டுனர் இடுப்பும் உடைந்து போகும். குண்டும் குழியும் உள்ள சாலையை செப்பனிட்டு சிறப்பாக போட்டு மன திருப்தியாக வாகனங்கள் காயல் கடற்கரை போக வழிகாட்டுங்கள். இது நகராட்சியின் கடமையும் ஆகும். செய்வீர்களா?

ஆக்கம்: A.L.S. இப்னு அப்பாஸ் (என்ற) A.L.S மாமா

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்ற அமைப்பாளர்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com