بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
01 ஜூலை 2016 மாலை 08:08

உங்கள் கைபேசி ஒட்டுக்கேட்கும் கருவியாகச் செயல்படுகிறது, அணைத்த பின்பும்கூட!

திறன்பேசிகளைக் கொண்டு ஃபேஸ்புக் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பியல் பேராசிரியர் கெல்லி பர்ன்ஸ் சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து உலகையே அதிரச் செய்தார். செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence), கற்றுக்கொள்ளும் ‘ஆப்’கள், அவற்றின் பின்னுள்ள செயலிவிதிகள் (algorithms) என்ன செய்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இன்று.

ஆல்ஃபாகோ (AlphaGo) என்ற செயற்கை அறிவுத்திறன் நிரலியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ‘கோ’(Go) என்னும் ஒருவகை விளையாட்டை ஆடுவதற்கான நிரலி (programme) அது. இந்த விளையாட்டில் உலக சாம்பியனாக இருக்கும் லீ செடால் என்பவரை மனிதர் - கணினிக்கு இடையிலான ஒரு போட்டியில் அந்த நிரலி சமீபத்தில் தோற்கடித்திருக்கிறது.

செயற்கை அறிவுத்திறன், கருவியின் கற்றல்திறன் ஆகியவற்றில் கூகுளுக்குள்ள வலிமையை நிரூபிப்பது தான் ஆல்ஃபாகோ. அப்படி என்னதான் சாதனம் அது, அது அப்படி எதைத்தான் கற்றுக்கொள்கிறது என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ‘ஆப்’களின் உள்ளே உறைந்திருக்கும் செயலிவிதிகள்தான் இதற்கெல்லாம் பின்னின்று இயங்கும் சக்திகள். இவை தொடர்ந்து கற்றுக்கொள்ளக்கூடியவை. இவை எல்லாமே கணினி நிரலிகள்தான். குறிப்பிட்ட சூழல்கள் மாறும்போது அவற்றுக்கு ஏற்ப மாறக் கூடியவை. இணையத்தில் தேடல் இயந்திரத்தின் கட்டத்தில் நீங்கள் சொற்களைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தவுடனே அந்தச் சொற்றொடரை நிறைவுசெய்யும் சொற்களைத் தேடல் இயந்திரமே கீழே வரிசையாகக் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் உள்ளிடுவது போன்ற கோடிக்கணக்கான கேள்விகளை, தேடல்களை அந்தச் செயலிவிதிகள் பார்த்திருக்கின்றன என்பதால், அந்தத் தேடல்களை அடிப்படையாகக் கொண்டு தர்க்கரீதியான ஊகங்களை அவை மேற்கொள்கின்றன.

கற்றுக்கொள்ளும் செயலிவிதிகள்

உங்கள் தேடல் தொடர்பாகப் பொருத்தமான எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவந்து உங்கள் முன் கொட்டலாம் என்பதை மட்டும் செயலிவிதிகள் கற்றுக்கொள்வதில்லை; மிக முக்கியமாக, உங்களுக்கு எந்த மாதிரியான விளம்பரங்களைக் காட்டலாம் என்பதற்காக உங்களின் பொதுவான தேடல் பாணி களையும் அவை தெரிந்துகொள்கின்றன. இதுபோலத் தான் ஃபேஸ்புக்கும் உங்கள் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, எந்தெந்த விஷயத்தை உங்களுக்குக் காட்டலாம் என்பதை முடிவுசெய்கிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன எழுதுகிறீர்கள், குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இணையத்தில் எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள், எவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்கிறீர்கள், எவற்றுக்கெல்லாம் ‘லைக்’ போடுகிறீர்கள் என்றெல்லாம் அது தெரிந்துகொண்டு, பொருத்தமான விளம்பரங்களை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் உங்களுக்குக் காட்டுகிறது. ஜிமெயிலிலும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. அது மட்டுமல்ல, மின்னஞ்சலுடன் நீங்கள் அனுப்பும் இணைப்புகளையும் (attachment) ஜிமெயில் படித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சுவையான சம்பவம். ஒரு அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தனது ஸ்பூன்கள் அடிக்கடி தொலைந்துபோவதைப் பற்றித் தன் சகாக்களிடம் மதிய உணவின்போது பேசியிருக்கிறார். இதை வைத்து அவரை வம்பிழுக்க அந்த சகாக்கள் முடிவுசெய்திருக்கிறார்கள். ஸ்பூனைத் தொலைத்த நபருக்கு ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும்போதெல்லாம் ஒரு காரியம் செய்திருக்கிறார்கள். மின்னஞ்சலின் முடிவில் ‘ஸ்பூன்’ என்ற சொல்லை வெள்ளை நிற எழுத்துருவில் சேர்த்திருக்கிறார்கள். பார்த்தால் தெரியாதேயொழிய அங்கே ‘ஸ்பூன்’ என்ற சொல் இருக்கும். அதைக் கணினியும் ஜிமெயிலும் படிக்கும். அந்த நபருக்கு மின்னஞ்சல் அனுப்பும்போதெல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு நபருக்கான மின்னஞ்சல்களில் இப்படித் தொடர்ந்து ‘ஸ்பூன்’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறதே என்று ஜிமெயிலின் செயலிவிதிகள் விழித்துக்கொண்டன. உடனே, அந்த நபர் சென்று பார்க்கும் இணையதளங்களிலெல்லாம் ஸ்பூன்கள் தொடர்பான விளம்பரங்கள் தெரிய ஆரம்பித்தன. அந்த நபருக்கு ஒரே குழப்பம். தன் மனதைக் கணினி படிக்கிறதோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

ஜிமெயிலில்தானே இந்த ஸ்பூன்லிங் வம்பு நடத்தப்பட்டது. மற்ற ‘ஆப்’ களும் தளங்களும் எப்படி இதை ஸ்பூன் விற்பதற்கான வாய்ப்பாகக் கண்டுபிடித்தன? பல வழிகளில் கண்டுபிடிக்கலாம். சர்வசாதாரணமான விஷயம் என்னவென்றால், கூகுள் நிறுவனத்தின் மற்ற ‘ஆப்’கள்கூட உங்களைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, கூகுளின் ‘க்ரோம்’ தேடுபொறி. நீங்கள் என்னென்ன தேடுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு உடனே அது தொடர்பான விளம்பரங்களைக் காட்டக்கூடிய செயலிவிதிகளைத் தொடர்புகொள்கின்றன.

விளம்பரங்களால் சாத்தியம்

இன்னொரு எடுத்துக்காட்டு: ‘வாட்ஸ்அப்’பும் ‘இன்ஸ்டா கிரா’மும் இப்போது ஃபேஸ்புக்குக்குச் சொந்தம். மேற்கண்ட ஊடகங்களை நீங்கள் பயன்படுத்துவதால் லாம், உங்கள் தொடர்பான தரவுகள் அதாவது தகவல் களின் தடத்தை நீங்கள் விட்டுச்செல்கிறீர்கள். அந்தத் தரவுகளை எப்படித் தங்களுக்குப் பயனுள்ளவையாக மாற்றிக்கொள்வது என்பது அவர்களுக்குத் தெரிந் திருக்கிறது. கூகுளும் ஃபேஸ்புக்கும் நமக்கு இலவசமாக சேவை தருகின்றனவே, அது எப்படி என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இந்த விளம்பரங்களால்தான் இலவசச் சேவை அவற்றுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

உங்கள் கைபேசியில் அனைத்து விஷயங்களுக் குள்ளும் - நீங்கள் தற்போது இருக்கும் இடம், உங்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியல், புகைப்படங்கள், கேமரா, மைக் என்று எல்லா விஷயங்களுக்குள்ளும் ‘ஆப்’ ஊடுருவக் கூடியது. ‘ஆப்’பை உங்கள் கைபேசியில் நிறுவும்போது சில விதிமுறைகளை முன்வைத்து ‘ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று அது கேட்குமே, அவற்றையெல்லாம் படித்துப் பார்க்கிறீர்களா?

நம்மிடமிருந்து தரவுகள் இப்படியெல்லாம் கறக்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பது இப்போது புலனாகிறதல்லவா? உதாரணத்துக்கு ‘உடற்தகுதிமானி’யை (fitness tracker) எடுத்துக்கொள்வோம். கடிகாரத்தைப் போல அணிந்துகொள்ளக்கூடிய சாதனம் இது. நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம், எவ்வளவு அடிகள் எடுத்துவைக்கிறோம், நம் இதயத் துடிப்பு, நாடித்துடிப்பின் எண்ணிக்கை என்ன என்பது போன்ற விஷயங்களையெல்லாம் கவனித்துப் பதிவுசெய்யும் சாதனம் இது. கூடவே, நமது பெயர், பாலினம், வயது போன்றவற்றையும் இந்தச் சாதனம் அறிந்துகொள்கிறது. இந்தத் தகவல்களெல்லாம் இந்தக் கருவியை வாங்கி, அதை இயக்கும்போது நீங்கள் பதிவுசெய்பவை. இந்தத் தரவுகளெல்லாம் ப்ளூடூத் மூலம் உங்கள் கைபேசிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இணையத்துக்கு அனுப்பப்படுகின்றன. இங்குதான் ஒரு பிரச்சினை. இந்த சாதனங்களின் ப்ளூடூத் தொடர்பை நீங்கள் அணைத்த பின்பும் தரவுகளை அது கசியவிடுகிறது என்பதை டொரன்டோ பல்கலைக்கழகம் சமீபத்தில் செய்த ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது.

கைபேசி ஒட்டுக்கேட்கும் கருவி

உங்கள் கைபேசியும் ஒட்டுக்கேட்கும் கருவியே. கைபேசியை அணைத்த பின்பும் கேட்கவும், பதிவுசெய்யவும், பார்க்கவும், தகவல்களைப் பரப்பவும் அதனால் முடியும். ஏன், தொலைவில் இருந்துகொண்டு அதை மற்றவர் இயக்கவும் முடியும். பிரிட்டனின் உளவு அமைப்பான ஜி.சி.எச்.க்யூ-வால் இப்படிச் செய்ய முடியும் என்பதைக் கடந்த ஆண்டு அமெரிக்க விசிலூதி எட்வர்டு ஸ்னோடன் அம்பலப்படுத்தினார்.

ஆகவேதான், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது ஸ்னோடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற் றுவார். எல்லாக் கைபேசிகளையும் அணைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவற்றின் மின்கலங்களையும் (battery) தனியே எடுத்துவிட வேண்டும் என்று வலியுறுத் துவார். கூடவே, மின்கலங்களெல்லாம் குளிர்சாதனப் பெட்டியிலும், மின்கலங்கள் நீக்கப்பட்ட கைபேசிக ளெல்லாம் கட்டிடத்தின் வெளியே உள்ள காரின் பின்பக்கத் திலும் வைத்து இறுக்கமாக மூடப்படுவதும் உண்டு.

இவற்றைக் குறித்தெல்லாம் நாம் கையைப் பிசைந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதிமுக்கிய மான, தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் காத்துக் கொள்ளும் பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கைகளிலும்தான் இருக்கிறது. ‘உடம்பு சரியில்லை, அதனால் வர முடிய வில்லை’ என்று அலுவலகத்தில் சொல்லும் ஒருவர், நண்பர்களுடன் அன்று மதியம் ஹோட்டலில் சாப்பிட்ட போது எடுத்த சுயபடத்தை (selfie) ‘இன்ஸ்டாகிரா’மில் பகிர்ந்துகொள்வது எவ்வளவு அபத்தம்! ஆகவே, நம் அந்தரங்கம் இனி நம் கையில்தான்!

- சிலம்பினியன், நுகர்வோர் மனப்போக்கு, உத்தி ஆகியவை குறித்த ஆலோசகர், தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

தமிழில்: ஆசை

தி இந்து

ஜூலை முதல் தேதி 2016

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SM ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது!
பப்பரப்பள்ளி பகுதியில் துர்வாடை! மழைக்காலத்திற்கு முன் பராமரிப்புப் பணிகள் செய்வதால் ஏற்பட்டதாக “நடப்பது என்ன?” குழுமத்திடம் நகராட்சி தகவல்!
SDPI கட்சி மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணை!ப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க தூத்துக்குடியில் போராட்டம்
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com