بسم الله الرحمن الرحيم
Thursday 24th May 2018 | 09 ரமலான் 1439AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
எறும்பின் குற்றம்..! கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
01 பிப்ரவரி 2017 மாலை 11:45

எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். பொய் ஒரு குற்றமே அல்ல எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.

இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்...

ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன ஒரு வெட்டுக்கிளியின் இறக்கை கிடந்தது.

அதைத் தூக்கிச் செல்வதற்காக பல முறை அந்த எறும்பு முயன்றது .கனமாக இருந்ததால் முடியவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாக திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது). உடனே நான் அந்த இறக்கையை போட்டேன். அந்த எறும்பு மீண்டும் தூக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் தன் படைகளை கூட்டி வர சென்றது.

ants

முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வந்தது. அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடக்காதபோது திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம முறையும் அது தனது படையை அழைக்கச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவாக எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறைக்கையை உயர்த்தினேன்.

அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களை முறித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டன.(லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்)
அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கைசேதப்பட்டன.ஆயினும் காலம் கடந்துவிட்டது.

உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். அவர் சொன்னார்: ”அல்லாஹ் உனது பாவங்களை மன்னிக்கட்டும்! மீண்டும் இவ்வாறு செய்யாதே! பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் அதற்கு என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன்..! பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்புகளின் உணர்வுகளுடன் கலந்துள்ளது”.

ஆயினும் மனிதர்கள்...? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை...! மறுமையில் காத்திருக்கும் தண்டனைகள்தான் எவையோ..? யார் அறிவார்..?

முகநூலூடாக..

நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

நோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும்! “நடப்பது என்ன?” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்!!
அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது!
ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி! மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு!
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன! துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்!!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com