بسم الله الرحمن الرحيم
Saturday 21st April 2018 | 05 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தஃவா களம் (பாகம் 10) ஒரு கைதியின் டைரி!அச்சிடுகமின்-அஞ்சல்
25 அக்டோபர் 2011 காலை 08:35

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..

அன்பின் காயல்நியூஸ் வாசகர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அயராத உழைப்பு அதிகமான பொருளாதார செலவுகள் குடும்பத்திற்குள் ஜமாஅத்துக்குள் தெருவுக்குள் சண்டைகள் அப்பாடா ஒருவழியாய் தேர்தல் ஓய்ந்து.. இந்த நிலையில் நான் தஃவா களம் 10ஆம் பகுதியை வெளியிட்டால் கதவிற்கிடையில் மாட்டிக்கொண்ட எலி போல் ஆகியிருக்கும்.

இத்தனை நேரத்தையும் பணத்தையும் மாநபி(ஸல்...) அவர்கள் வழியில் தஃவா செய்தாலாவது அல்லாஹ் நாடினால் ஒரு ஊரே இஸ்லாத்தை தழுவியிருக்கும். அப்படித் தழுவினாலும் நாங்கள் எங்கள் தேர்தல் வேலையை அங்கும் தொடங்கிவிடுவோம் என்று சொல்கிறீர்களா! ஆளை விடுங்க.

சென்ற பகுதியின் இறுதியில் நாம் மால்கம் எக்ஸ் பற்றி பார்ப்போம் என்று சொன்னோம்.

மால்கம் எக்ஸ் அவர்கள் 1925 ம் வருடம் அமெரிக்காவில் பிறந்தார். வளர்ந்து வந்த மால்கம் போதைப்பொருளை விற்பவராகவும் இன்னும் கெட்ட பழக்கங்கள் கொண்டவராகவும் வாழ்ந்த அவர் ஒரு சந்தர்ப்பத்தில் சிறைக்கு செல்ல நேரிட்டது. அந்த நேரத்தில் NATION OF ISLAM என்ற ஒரு அமைப்பை நடத்திவந்த எலிஜா முஹம்மது தான் சொல்வதுதான் இஸ்லாம் என்று சொல்லி வந்தார். இந்த நிலையில் சிறைக்குள் பிரச்சாரம் செய்து வந்த எலிஜாவின் கூட்டத்தால் மால்கம் எக்ஸ் கவரப்பட்டு NATION OF ISLAM அமைப்பில் சேர்ந்தார்.

அதன் பின்னர் எலிஜாவின் நடவடிக்கைகளால் வெறுப்பேற்பட்டு மால்கம் அவரைவிட்டு விலக தொடங்கினார்.இந்நிiலையில் ஹஜ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது மால்கம் எக்ஸ்க்கு ஹஜ் கடமையின்போதுதான் அவருக்கு உண்மையான இஸ்லாம் கிடைத்தது. அதன்பின்னர் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துக்சொன்ன நிலையில் தான் எலிஜாவின் கூட்டம், மால்கம் எக்ஸ் என்ற மாலிக் அல் ஷாபாஸை சுட்டுக்கொன்றது. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

MALCOM X என்ற மாலிக் அல் ஷாபாஸ் அவர்கள் வரலாற்றை படிக்க சகோ. மு.குலாம் முஹம்மது அவர்கள் எழுதியுள்ள மால்கம் எக்ஸ் என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

இதன் பின்னர் எனக்கும் கைதிகளுக்கு தஃவா செய்;யவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.ஒரு நாள் நான் மதுரையிலிருந்து காயல்பட்டணம் செல்ல மதுரை பலங்காநத்தம் பஸ்ஸடான்டிலிருந்த திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி இடம்பிடிக்கச்சென்றேன்.இடம்பிடித்துவிட்டு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லிவிட்டு பார்த்தேன் பக்கத்தில் கைவிலங்கு மாட்டப்பட்ட ஒரு சிறைக்கைதியும் அவருக்குப்பக்கத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவரும் இருந்தனர். நிம்மதியாக இருக்கலாமென்றால் இவர்கள் வேறு என்று சொல்லிஅமர்ந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து பேருந்து புறப்பட்டதும் கைதி என்னிடம் தீப்பெட்டி இருக்கா என்று கேட்க நான் இல்லை என்று சொல்லிவிட்டேன்.

பின்னர் நான் மெதுவாக தூங்க ஆரம்பித்தேன். ஆனாலும் ஒரு கைதிக்குக்கூட நாம் தஃவா செய்யவில்லையே என்ற கவலை எனக்கு இருந்தது. சிறிது நேரத்தில் அவர் என்னிடம் நான் பீடி பற்றலாமா என்று கேட்க நான் கூடாது என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் அந்த எண்ணத்தை கைவிட்டார். எனக்குள் ஒரு ஆசை அவருக்கு நாம் எப்படியாவது தஃவா பண்ணவேண்டும் என்று. அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை என்னிடம் படிக்க தந்தார்.

அந்த புத்தகத்தின் பெயர் பாபரி மஸ்ஜித் இடிப்பு ஒரு துரோக வரலாறு என்ற ம .க .இ .க போன்ற ஒரு அமைப்பின் வெளியீடு ஆகும். அதைப்பார்த்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி இவர் எப்படி இதைப்படிக்கின்றார்? நான் படிக்கும் போது அவர் முன் உள்ள கம்பியில் தலைவைத்து படுத்துக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று பாய் உங்கள் மதத்தில் பாவமன்னிப்பிற்கு வழியுண்டா என கேட்டார். கிறிஸ்தவ மதத்தின் பாவமன்னிப்பு கோட்பாடுகள் எனக்கு உடன்படவில்லை. இந்து மதம் அதைப்பற்றி சரியாக சொல்லாததால் தான் நான் இப்படி பாவியானேன் என்று சொன்னவுடன் தஃவாவுக்கு வழிவகுத்த அல்லாஹ்விற்கு நன்றிசொல்லிவிட்டு அவரிடம் பேச்சை ஆரம்பித்தேன்.எங்கள் பேச்சை உரையாடலாக தருகின்றேன்.

நான்: நீங்கள் ஏதேனும் அடிதடி பிரச்னையால் கைது செய்யப்பட்டீர்களா?

கைதி: இல்லை இரண்டு கொலைகள் செய்துள்ளேன்.

நான்: அப்படியா (என்று ஆச்சர்யமாக கேட்டுவிட்டு என்னுள் எழுந்த பயத்தை வெளிகாட்டாமல்) ஏன் செய்தீர்கள் என்று கேட்க

கைதி: அவருடைய வளர்ப்பும் அவருடைய பொறுமையை சோதித்த கதையையும் அவர் சொன்னார். பின்னர் அவர் கண்களில் கண்ணீர்

நான்: ஏன் இரண்டாவது கொலையை செய்தீர்கள் நிறுத்தியிருக்கலாமே

கைதி: அதுதான் நான் சொன்னேனே எனக்கு என் மதமும் மக்களும் வழிகாட்டவில்லையே

நான்: இப்போது எங்கே போகின்றீர்கள் என கேட்க

கைதி: தூத்துக்குடி கோர்ட்டுக்கு விசாரனைக்காக. அது இருக்கட்டும் நான் கேட்டேனே பாவமன்னிப்பு உங்கள் மதத்தில் கிடைக்குமா?

நான்: அது என்னையும் உங்களையும் படைத்த இறைவன் என்ற அல்லாஹ் நம்மின் மீதுள்ள அன்பினால் அளித்துள்ள வரப்பிரசாதம்.

கைதி: அது என்ன வரப்பிரசாதமா எப்படி?

நான்: அல்லாஹ் மனிதனை பாவம் செய்பவனாகவே படைத்துள்ளான். ஆனால் எவன் பாவமன்னிப்பு கேட்கின்றானோ அவனே இறைவன் விரும்பும் மனிதனாவான் என்று கூறிவிட்டு கீழே உள்ள வசனம் அல்லது அதுபோன்று ஒரு வசனத்தை கூறினேன்.

66:8 .ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும் அவர்கள் ''எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்"" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

39:53 .''என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்"" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக!

கைதி: (அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது) அவர் இவ்வளவு அழகான வழி எனக்கு தெரியாமல் போய்விட்டதே. மேலும் எனக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை சொல்லுங்கள்

நான்: ஏகத்துவம் நபித்துவம் மற்றும் மறுமையை பற்றி கூறினேன்.

கைதி: இனி நான் என்ன செய்ய வேண்டும்?

நான்:; நீங்கள் செய்ததை எண்ணி வருந்துங்கள் இனி நான் பாவம் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுங்கள்.மேலும் இறைவனிடம் அழுது அல்லாஹ்வே என்று மனமுறுகி பாவமன்னிப்பு தேடுங்கள்.

இதற்குள் பஸ் தூத்துக்குடி வரவும் போலீஸ்காரர் அவரை இழுக்க அவர் என்னிடம் பாய் எனக்கு தமிழ் மொழியாக்க குர்ஆன் கொடுங்கள் என்று சொல்ல நான் அவர் முகவரி கேட்க அவர் சிறைச்சாலையின் பிரிவு மற்றும் அவர் எண் உட்பட அனைத்தையும் எழுதிதர நான் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் நினைப்பதற்கில்லை என்றும் என்னை மறவாதீர்கள் எனக்கு குர்ஆன் தமிழாக்கம் அனுப்ப மறந்தும்விடாதீர்கள் என்று அழுதுகொண்டே என்னை பிரியாமல் பிரிந்தார்.எனக்கும் தெரிந்த ஒருவரை பிரிந்த கவலை ஏற்பட்டது. திருச்சி சிறைச்சாலை என்பதால் திருச்சியிலுள்ள அழைப்பாளர் ஒருவருக்கு அந்த சகோதரரின் முகவரியை கொடுத்து தமிழ் மொழியாக்க குர்ஆன் கொடுக்கச்சொன்னேன்.

அவருக்காக நாம் யாவரும் துஆ செய்வோமாக!

அடுத்தவாரம் யாரும் சொல்லாமலே! இன்ஷாஅல்லாஹ்

இறைப்பணியில்

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com