بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
யாரும் சொல்லாமலே! தஃவா களம் (பாகம் 11)அச்சிடுகமின்-அஞ்சல்
03 நவம்பர் 2011 காலை 11:46

   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அன்பின் சகோதர சகோதரிகளே!

சென்ற தொடருக்கு பலருடைய கருத்துக்கள் வந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுனுடைய முழு திருப்தியை எதிர்பார்த்துத்தான். அல்லாமல் யாரும் புகழவேண்டுமென்றோ அல்லது ஆதரவான கருத்துக்கள் சொல்லவேண்டுமென்றோ இல்லை.

அல்லாஹ் அஃலம். நிறைகள் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். குறைகள் யாவும் நம்மை சார்ந்ததே..

தாராபுரம் பக்கம் ஊதியூர் என்ற கிராமத்திற்குள் ஒரு சின்ன குக்கிராமம். ரோடு வசதிகள் இல்லை. இன்று கொஞ்சம் பரவாயில்லை. அந்த கிராமத்தில் அதிகமாக கவுண்டர்கள் குறைவாக தலித்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வசித்துவருகின்றனர். மேலும் அந்த ஊரில் கவுன்டர்கள்தான் எஜமானர்கள். நம் பகுதிகளில் ஓரளவு தலித்கள் அடிமைத்தனத்திலிருந்து விலகி நல்லிணக்கம் அடைந்துவருகின்றார்கள். ஆனால் அங்கு வாய்பேசமுடியாத ஊமைகளாய் இன்றும் இருந்துவருகின்றனர்.

ஊமையாய் வாழ்வில் வறுமையாய் வாழ்ந்திட்டோம்

வாழ்வை வாழாமல் இந்த எஜமானர்களிடம் தொலைத்திட்டோம்

பிராணிகளுக்கு உள்ள மரியாதை அவர்களிடத்தில் டன்கணக்கில்

எங்கள் சேய்களுக்கான அவமரியாதையோ டின்கணக்கில்

எங்கள் வீட்டு எழவானாலும் நாங்கள் அவர்கள் காலில்

அவர்கள் வீட்டு எழவானாலும் நாங்கள் அவர்கள் காலில்

நாங்களும் ஒருநாள் மேலே நின்றோம் அவர்கள் முன்..

அது நாங்கள் பல்லக்கில் தூக்கி நிறுத்தப்பட்டோம் இறந்துவிட்ட பின் யாரோ.

இதுதான் அவர்களின் நிலை. நான் முதன் முதலாக கலிமா சொல்லிக்கொடுத்த சகோதரரின் அழைப்பின்பேரில் அங்கு சென்ற போது பார்த்ததுதான் இவ்வளவும்.அந்த ஊரில் உள்ள பால் டிப்போக்கு கூட அவர்கள் உள்ளே நுழையமுடியாது. அiதியான அந்த குடியிருப்புகளில் ஒரு நூலகம் ஒன்று உள்ளது. அங்குள்ள மக்களுக்கு அது ஒன்றுதான் பொழுதுபோக்கு. அங்கு மட்டும்தான் எல்லோரும் ஒன்றாக அமர முடியும். அந்த நூலகத்தில் தலித் சமுதாயத்தைச்சார்ந்த ஒரு 19 வயதுமிக்க இளைஞன் தினம் வருவதுபோல் இன்றும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படித்தான்.

அது அவனுடைய வாழ்வின் பக்கங்களை புரட்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆம் இஸ்லாம் சம்பந்தமான ஒரே ஒரு புத்தகம் அவன் கண்களில் பட்டது. அதில் ஜாதிகள் இல்லை மூட நம்பிக்கைகள் இல்லை பல கடவுள்கள் இல்லை. என்ன இது இதைத்தானே நான் தேடினேன் தேடினேன். இதுதான் இஸ்லாம் என்றால் அந்த ஒளி என்மீது படாதா என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு தன் சமுதாயத்தில் ஒருவர் ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்ததனால் அவர் மூலம் என்னிடம் வந்தார்.

நான் இஸ்லாத்திற்கு வருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் மறுமையில் கிடைக்கும் பேரின்பத்தையும் அவரிடம் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ் எனது வாயால் அவருக்கு புனித கலிமாவை சொல்லிக்கொடுத்தேன். பிலால் என்று பெயரும் வைத்தேன். பிலால் இஸ்லாத்தை யாரும் சொல்லாமலே தழுவியது இப்படித்தான். அல்லாஹ்வும் இப்படித்தான் கூறுகின்றான்.

28:56 .(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால்ää அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

சகோதரர் பிலால் அடிப்படைக்கல்வியை கற்றுக்கொள்வதற்காக அவரை தேனியிலுள்ள அறிவகத்தில் சேர்த்தோம். அவர் படித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய வீட்டில் பிரச்சனை ஆரம்பமானது.அதனால் அவர் கொஞ்சம் கலங்கினார். ஏனென்றால் அவர் பெற்றோர் மீது மிகுந்த பாசம் உடையவராக இருந்தார். எல்லோருக்கும் வருவதுபோல் அவருக்குள்ளும் ஷைத்தான் வந்து குழப்பினான். அவருக்கு நாம் குர்ஆன் வசனங்களைக்கொண்டு நாம் தெம்பூட்டினோம்.

2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,பசியாலும் பொருள்கள், உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

________________________________________

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

________________________________________

2:157 .இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்,நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

அவரிடம் விசாரித்ததில் அவருடைய பெற்றோர்களிடம் யாரோ ஒருவர் உங்கள் மகன் தீவிரவாதியாகிவிட்டார். இனி மக்களை தொந்தரவுக்கள்ளாக்குவார். என்றெல்லாம் அவர்களிடம் யாரோ சொல்லியதால்தான் அவர்கள் ஆடிப்போய்விட்டதாக பிலால் சொன்னார். இதை இப்படியே விட்டால் இஸ்லாம் அந்த ஊரில் வளர வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல இஸ்லாத்தை பற்றி அவர்களது எண்ணம் தவறாகிவிடுமே என்ற எண்ணத்தில் நாங்கள் இருவர் அவருடைய பெற்றோரை சந்திப்பதற்காக அவர் ஊருக்கு சென்றோம்.

அவருடைய ஊருக்குள் அவர் வீட்டிற்கு சென்றதும் அவர் பெற்றோரை சந்தித்தோம். அவர்களும் சுமாராக நம்மிடம் பேசினார்கள். அவர்களிடம் உள்ள அந்த பயத்தைப்போக்க அம்மா எங்களோடு வாருங்கள் இப்பவே நாம் தேனி செல்வோம் உங்கள் மகனைப்பார்த்து இரண்டு நாட்கள் தங்குங்கள். அதன்பிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள் அவர் ஒழுக்கத்தைப்படிக்க வந்துள்ளாரா அல்லது தீவிரவாதியாக பயிற்சி பெற வந்துள்ளாரா என்று. இல்லீங்க பாய் எங்களுக்கு பிலாலுடைய நண்பன் ராமசாமிதான் சொன்னான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமசாமி அந்தப்பக்கமாக சென்றான். உடனே நாங்கள் அவரைத்தேடினோம் அவரும் எங்கள் வருகையை கேள்விப்பட்டு எங்கெல்லாமோ மறைந்தார். நாங்களும் ஊரில் கிரியாச்சி விளையாடி பழக்கமாதலால் அவரை ஒரு வழியாக சந்தித்து ஊரின் பின்புறமுள்ள ஒரு ஆலமரத்தின் நிழலில் உள்ள படியில் அவருடன் நலம் விசாரித்தபின் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம்.

நாங்கள்: உங்கள் நண்பன் நன்றாக இருக்கின்றார். அவரைப்பார்க்க வாருங்களேன். நாங்கள் இரண்டு நாளில் நாங்கள் செல்ல இருக்கின்றோம்.

ராமசாமி: இல்லபாய் எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது.

நாங்கள்: ஆமாம் உங்கள் நணபன் தீவிரவாதியாகிவிட்டாரென்று உங்களுக்கு யார் சொன்னது?

ராமசாமி: வேறு என்ன பாய் கோவையில் நடந்த அசம்பாவிதத்திற்க்கு பின்னால் எல்லா சாதி மக்களிடமும் கோவை மற்றும் ஈரோடு மாவட்ட கிராமங்களில் முஸ்லிம் என்று பேச்செடுத்தாலே தீவிரவாதி என்றாகிவிட்டதால் நானும் என் நண்பனை அப்படித்தான் நினைத்தேன்.

நாங்கள்: இப்படி யார் பரப்பியது.

ராமசாமி: பாய் இங்கெல்லாம் பிஜேபி காரங்கள் சொல்லும்முன்பே இங்குள்ள தினப் பத்திரிக்கையும் டிவி யும் மாறி மாறி உங்களை தீவிரவாதிகள் என்றே காட்டுகின்றது. ஏன் பாய் உங்கள் ஆட்கள் இப்படி பொதுமக்களையெல்லாம் பாதிக்கும் வகையில் நடக்கிறார்கள் ?

நாங்கள்: அப்படி யாரும் செய்ய மாட்டார்கள் . யார் தவறு செய்தாலும் அதை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கின்றது.

இறைவனாகிய அல்லாஹ்வால் நம் அனைவருக்குமாக இறக்கியருளப்பட்ட கடைசி வேதமான திருக்குர்ஆன் இப்படி சொல்கின்றது.

5:32. இதன் காரணமாகவே ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும் எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும் நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இப்படி இருக்கும்போது எப்படி பிறருக்கு துன்பம் கொடுப்பதை இஸ்லாம் ஆதரிக்கும்?

ராமசாமி: பாய் அருமையான செய்தி இந்த பத்திரிக்கையையும் டிவியையும் நம்பி நாங்களும் நம்பி ஏமாறுகின்றோம். பாய் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்று இதை சொன்னாலாவது முஸ்லிம்கள்மீது நல்லெண்ணம் பிறக்க வழிவகுக்கும்.

நாங்கள்: ராமசாமி அண்ணே இப்ப நாங்கள் அதற்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் இந்த இஸ்லாத்தை எடுத்துச்சொல்லத்தான் வந்தோம். நீங்கள் இந்த விசயத்திற்காக ஒன்று சேர்ந்தாலும் அந்த உயர் சாதியினர் உங்களை மதிக்கப்போவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் உமது நண்பனை இன்று சாதியில்லாத ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்தது. உங்களை மதிக்க உங்கள் மதத்தில் வழியுன்டா சொல்லுங்கள் ராமசாமி அண்ணே?

அல்லாஹ் என்ற ஒரே இறைவன் இதைப்பற்றி குர்ஆனில் கூறுகின்றான்;.

49:13 .மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

இதன் பின்னர் ராமசாமி பாய் நான் இந்த மார்க்கத்தின் அருமை தெரியாமல் தவறாக பேசிவிட்டேன். நானும் இந்த மார்க்கத்தை தெரிந்துகொள்கின்றேன்.எனக்கும் புத்தகங்கள் தாருங்கள்.அதுமட்டுமல்லாமல் இனி யாராவது இஸ்லாத்தை பற்றி தவறாக கூறினால் நானே அதற்கு பதிலளிப்பேன் என்று கூறினார். அவர் மனதை புரியவைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று கூறி அவருடைய ஹிதாயத்திற்காக துஆ செய்துவிட்டு நகன்றோம்.

பாடம்: யாராவது நமது மார்க்கத்தை தவறாக பேசினாலும் பொறுமையுடன் இருந்து அவர்களுக்கு நிதானமாக எடுத்துரைத்தால் ஒன்று அவர் இஸ்லாத்தின்பால் கவரப்படலாம் அல்லது நமக்கெதிராக மாறாமலாவது இருப்பார்.

16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.


அடுத்து ஜாதிகள் இல்லையடி பாப்பா! இன்ஷாஅல்லாஹ்..


இறைப்பணியில்

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com