بسم الله الرحمن الرحيم
Saturday 21st April 2018 | 05 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அந்த தியாகத்தை நினைவு கூறுவோம் !அச்சிடுகமின்-அஞ்சல்
06 நவம்பர் 2011 காலை 08:17

 பிஸ்மில்லாஹிர்ரஹம்மானிர்ரஹிம்

எங்கேயோ கேட்ட குரல்!

அன்பின் சகோதர சகோரதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ_

என் இதயங்கனிந்த ஹஜ்ஜூப்பெருநாள் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ஈத் முபாரக்.

பக்ரீத் வாழ்த்துக்கள் என்று கூறுவது தவறு பகரா ஈத் பக்ரீத் மாட்டுப்பெருநாள் என்று அர்த்தம் ஆகிவிடும். ஹஜ்ஜூப்பெருநாள் என்றாலே நம்மில் பலருக்கும் கொண்டாட்டம். ஏன் ஏழைகளுக்கும் கொண்டாட்டம்தான். ஆடு அறுப்பாங்க மாடு அறுப்பாங்க ஏன் இப்போ ஊரெல்லாம் சுத்த வச்சு ஆள்களெயெல்லாம் ஏற்றி வேடிக்கை பார்க்கும் ஒட்டகத்தைக்கூட அறுப்பாங்க ஒரே ஜாலிதான் என்று சொல்லும் மக்களும் இருக்காங்க. ஏங்க நம்மக்களுக்கு துபாயிலிருந்து அனுப்புவதை விட இங்கே திருநெல்வேலியில் புதிதாக சென்னை சில்க்ஸ் ஆரம்பித்திருக்காங்க அதனால் அங்குபோய் வாங்குகின்றேன் என்று ஜாலியாக ஒரு ரவுண்ட் அடிக்கும் பெண்கள் மறுபக்கம். தீபாவளியில் மிச்சமான வெடியை குறைத்து தருவாங்க ஆலிம்ஷா சொன்னதை இந்த காதில் வாங்கிவிட்டு அந்த காதில் விடு வெடியை வாங்கு நடையைப்போடு என்று சொல்லும் சிறார்கள் மறுபக்கம். இன்று நமக்கெல்லாம் ஃபுல் ஜாலிதான் அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம் ஹஜ்ஜூப்பெருநாளை பாட்டிலோடு என்று கூறும் முஸ்லிம் என்ற போர்வையில் வாழும் மூதேவிகள் மறுபக்கம். இடியாப்பத்துக்கு சொல்லிடு வட்லியாப்பத்திற்கு ரெடி பண்ணு தோசைக்கு மாவு ஆட்டு என்று வீட்டு பணியாளர்களுக்கு ஆர்டர் பண்ணும் குடும்பத்து கம்மாக்கள் இந்தப்பக்கம். பெருநாள் தோலிலே கூட்டுக்குர்பானி பண மிச்சத்திலே சமூக நலனுக்கு நாம் என்ன செய்யலாம் என யோசிக்கும் நல்ல உள்ளங்கள் அந்தப்பக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு செலவும் இருக்கின்றதே என்று கவலைப்ட்டாலும் சமாளித்து நம் இப்றாஹிம் அலை அவர்களின் தியாகத்தை நாமும் உணர்வோமே என்று நினைக்கும் குடும்பத்தலைவர்கள் எந்தப்பக்கமும். ஆக எல்லோருமாக ஹஜ்ஜூப்பெருநாளை கொண்டாடுகின்றார்கள். ஒன்றை மறந்துவிட்டு. அதுதான் மார்க்கத் தந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்களே அந்த இப்றாஹிம் (அலை) அவர்களின் உண்மை தியாகத்தை மேலே சொன்ன எல்லோரும் நாங்கள் இப்றாஹிம் (அலை) அவர்களுக்காகத்தானே இதைக்கொண்டாடவே செய்கின்றோம் என்று. ஆனால் நாம் உண்மையாகவே இப்றாஹிம் (அலை) அவர்களை நினைவு கூறுகின்றோம் என்றால் நாம் இந்த பெருநாளை இப்படி கொண்டாட மாட்டோம். எப்படி கொண்டாடுவோம்.

அல்லாஹ் திருமறை குர்ஆனில் கூறுகின்றான்....

[ 3:68 ] நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அவரைப் பின்பற்றியோரும் இந்த நபியும் (அல்லாஹ்வின் மீதும் இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார். மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

அவரைப் பின்பற்றுவோர் யார்?

அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் தர்ஹா வழிபாடை செய்யும் மக்கள் பின்பற்றுபவர்களா?

அல்லது மாட்டை ஒட்டகத்தை ஆட்டை அறுத்துபலியிட்டோம் என்று கூறுபவர்களா?

அல்லது மக்காவிற்கே சென்று தவாப் செய்து அதை மக்களுக்கு காட்ட வீடியோ அல்லது புகைப்படம் எடுத்துவருவார்களே அவர்களா?

அதெல்லாம் இல்லை நபி (ஸல்) அவர்கள் சொன்னதுப்போல் என்று சொல்லி ஹஜ்ஜை முடித்தோம் என்றும் ஹஜ்ஜூப்பெருநாளை கொண்டாடினோம் என்று கூறுகின்றார்களே அவர்களா?

உண்மையாக நபி (ஸல்) அவர்கள் அவர்கள் மூலமாக அல்லாஹ் இப்படித்தான் சொல்லியிருக்கின்றான். ஒவ்வொறு தொழுகையின் இருப்பிலும் இப்றாஹிம் (அலை) பெயர் சொல்லப்படாமல் நம் தொழுகையே கேள்விக்குரியதாக ஆகிவிடுமே அந்த இப்றாஹிம் (அலை) அவர்கள் அப்படி என்னத்தான் செய்தார்கள் பட்டியல் போடுவோமா....

1. தஃவா

சிலைவணங்கியான தன் தந்தையிடம் அது பெரும்பாவம் என்று சொல்லியதை அல்லாஹ் தன் திருமறையில்....

[ 6:74] இப்றாஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம் ''விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும் பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப்பாரும்.

அரசனிடம் தைரியமாக சொன்னதைப்பாருங்கள்....

[2:258] அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு) இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார், ''எவன் உயிர் கொடுக்கவும் மரணம் அடையும்படியும் செய்கிறானோ அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று. அதற்கவன் ''நானும் உயிர் கொடுக்கிறேன் மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான் (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார். ''திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான் நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

பின்பற்றுதல்: நாம் நம்முடைய தந்தை செய்யும் இணைவைப்பு அல்லது அதற்கடுத்தாற்போல் உள்ள பாவத்தை என்றாவது கண்டிக்கின்றோமா? தர்ஹாவுக்கு உங்கள் தந்தை செல்கின்றாரே என்றால் அது அவருடைய விருப்பம் என்று நம்மில் தட்டிக்கழிப்பவர் எத்தனைபேர். பாவங்களை கண்டிக்கும்போது நாம் சிலவற்றை இழக்கவேண்டியிருக்குமே! ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்கூட தங்கள் பெற்றோருக்கு இஸ்லாம் கிடைக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்களுடைய தஃவா உள்ளது. மறுமையில் நாம் சொர்க்த்திலும் பெற்று வளர்த்த பெற்றோர்கள் மறுபக்கத்திலுமா? யோசிப்போம்.

அடுத்து அரசனிடம் சொன்னார்களே!

ஆட்சியாளர்களை மற்றும் அரசியல் கட்சிகாரர்களை நாம் கஞ்சிகுடிக்க கூப்பிடுவோம் இலக்கிய மாநாட்டிற்கு கூப்பிடுவோம் நம் மாநாட்டிற்கெல்லாம் கூப்பிடுவோம் சீட்டு கேட்போம் சலுகை கேட்போம் ஆனாலும் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லமாட்டோம் ஆட்சியாளர்களுக்கு பயந்து அழைப்புபணி செய்வதைகூட எதற்கு இந்த வம்பெல்லாம் என்று பேசுவோம் ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம். சில நல்ல உள்ளங்கள் சொல்லத்தான் செய்கின்றனர் அல்லாஹ் அவர்களுக்கு அருள்செய்வானாக!

மக்களுக்கு தஃவா

[21:63] அதற்கு அவர் ''அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே இது தான் செய்திருக்கும். எனவே இவை பேசக்கூடியவையாக இருப்பின் இவற்றையே நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார்.

[21:64] (இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி (ஒருவருக்கொருவர்) ''நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள் " என்று பேசிக் கொண்டார்கள்.

[21:65] பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தளைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள் ''இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே! " (என்று கூறினர்).

[21:66] ''(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுகு;கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள் " என்று கேட்டார்.

[21:67] ''சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான். நீங்கள் இதனை அநிற்து கொள்ளவில்லையா? " (என்று இப்ராஹீம் கூறினார்).

நாம் நம் நண்பர்களுக்கு மற்றும், பிற மத மக்களுக்கு என்றாவது அழைப்புப்பணி செய்துள்ளோமா! ஆனாலும் ரத்தம் தானம் பண்ணுகின்றோம் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறோம் நம் விசேஷங்களுக்கு அழைக்கிறோம். ஆனாலும் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லமாட்டோம். ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம்.

2. ஆராய்ந்து ஈமான் கொள்ளுதல்

இப்றாஹிம் அல்லாஹ்வை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

[6:76] ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார் ''இதுதான் என் இறைவன்! " என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர் ''நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன் " என்று சொன்னார்.

[6:77] பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு அவர் ''இதுவே என் இறைவன் " என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர் ''என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால் நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.

[6:78] பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது ''இதுவே என் இறைவன். இது எல்லாவற்றிலும் பெரியது " என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே அவர் ''என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன் " என்று கூறினார்.

[6:79] ''வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன் " (என்று கூறினார்).

நமது தாய் தந்தையர் முஸ்லிம்கள் அதனால் நாமும் முஸ்லிம். எங்கே ஆய்வு செய்ய ஊட்டி செல்வோம் குற்றாலம் செல்வோம் ஜாலியாக இருக்க. ஆய்வு செய்வோம் உலக படிப்பிற்காக பலதையும் ஆய்வு செய்வோம். ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம். ஆராய்ந்து ஈமான் கொண்டதால்தான் அவர்கள் அல்லாஹ்வின் அன்பு செலுத்தினார்கள். அதனால் இறையச்சம் கொண்டார்கள்.

3. எதையும் தாங்கும் இதயம்

நமக்கெல்லாம் சிறிய நோய் கஷ்டம் மற்றும் இழப்பு வந்தால் கூட புலம்ப ஆரம்பித்துவிடுவோம். பெரிய துன்பங்கள் வந்தாலோ கேட்கவே வேண்டாம். ஆனால் தனக்கு அல்லாஹ் தந்த சோதனைகளை வெற்றிகொண்டார்கள்.

[21:68] (இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள் (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் " என்று கூறினார்கள்.

[21:69] (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) ''நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும் சகமளிக்கக் கூடியதாகவும் ஆகவிடு! " என்று நாம் கூறினோம்.

தாடி வைத்தால் வேலை போய்விடும் என்ற போது அருமை நபி (ஸல்) அவர்கள் வலியுருத்திய சுன்னத்தை விட நாம் ரெடி. ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம்.

4. இறைத்தொண்டு

தங்கமான நபிகள் இப்றாஹிம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்கள் கஃபாவை கட்டுவதில் முழுமையாகவும் மற்றும் மஸ்துந்நபவிக்கு தன் கரத்தால் வேலை செய்த தங்க நபி ஸல் அவர்களும் சத்திய ஸஹாபாக்களின் கரங்களும் செய்த பள்ளிகளை நாம் சுற்றித்தான் பார்க்கிறோம். நம் பள்ளிவாசல்களை யாரோ கட்டுவதால் அதன்மீது ஜீவன் குறைவாக இருக்கின்றது. அவர்களுக்கு பள்ளிவாசல்கள் மீது ஜீவன் இருக்கின்றது.

நாம் பள்ளிவாசலில் வியர்க்கிறது என்றால் ஃபேன் போட சொல்வோம். ஏ.சி கூட வைக்கச்சொல்வோம். அதிகபட்சமாக பணம் குறைந்த அளவு பணம் கொடுப்போம் அதுவும் இழுத்தடித்தபின் பட்டியலில் பெயர் வருமாறு.

பலர் எங்களால் முடியாது என்று கூறுவர் அல்லாஹ்வின் வீட்டிற்கு. தன் வீடு மட்டும் பல லட்சத்தில். ஆனால் சில நல்ல உள்ளங்கள் தன் வீட்டைவிட அல்லாஹ்வின் வீட்டை அழகுபார்ப்பதில் சந்தோஷமடைகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாலிப்பானாக! ஆனாலும் நம் யாருடைய கையாவது(நான் உட்பட) செங்கலை தூக்கியிருக்கிறதா மண் அள்ளியிருக்கின்றதா? ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம்.

5. நல்லதொரு தியாகக் குடும்பம்

நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் தன் மனைவி மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை பாலைவனத்தில் விட்டுச்செல்லும்போது அந்த அருமைதாயார் ஹாஜரா (அலை) அவர்கள் பொருந்திகொண்டாரே அதைச்சொல்லவா அல்லது தன்னை அருத்து பலியிடப்போகின்றேன் என்று மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் சொன்னபோது

[37:102] பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; ''என்னரமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! " (மகன்) கூறினான்; ''என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள். "

[37:103] ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;

[37:104 ] நாம் அவரை ''யா இப்றாஹீம்! " என்றழைத்தோம்.

[37:105] ''திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

[37:106 ] ''நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். "

[37:107] ஆயினும் நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.

[37:108] இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

இதைச்சொல்லவா எதைச்சொல்ல எல்லாம் தியாகம்தான்.

நாம் சொல்வோம்.........இவர்களுக்கு

தகப்பனுக்கு!

நம்முடைய குழந்தைகளை அறுக்கவேண்டாம். மார்க்கமும் அறுக்க அனுமதிக்காது. மார்க்கத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம். குர்ஆனை மனனம்செய்யும் ஹாஃபிழ்களாக ஆக்க முயற்சிக்கலாம்.இன்னும் உலக கல்விகற்றுக்கொண்டே அழைப்பாளராகக் கூட ஆக்கலாம்.

தாய்க்கு!

தன் கணவன் அல்லாஹ்வுடைய பணிகள் செய்யும்போது நமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை சோதனைகளை எதிர்கொள்ளவேண்டும்.

மகனுக்கு!

தகப்பன் அல்லாஹ்விற்காக சொல்லப்படும் ஏவல்கள் அனைத்தையும் நாம் இன்முகத்துடன் நிறைவேற்றவேண்டும்.

6. விருந்தோம்பல்

நபி இப்றாஹிம் அலை.... அவர்கள் தன் வீட்டிற்கு யார் வந்துள்ளார்கள் எதற்காக வந்துள்ளார்கள் என்று தெரியாமலே விருந்தளித்ததை வல்ல அல்லாஹ்....

[11:69] நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்" (சொன்னார்கள்; இப்றாஹீமும் ''ஸலாம் " (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

நாம் விருந்தாளி யார் அவர் பணக்காரரா அல்லது ஏழையா அவரால் நமக்கு பின்னால் ஆதாயம் உள்ளதா அவர் முஸ்லிமா அல்லது பிற மதத்தவரா அவர் உறவினரா அல்லது மற்றவர்களா இறைச்சியா அல்லது காய்கறியா என்று நிறம் பணம் பார்த்து நம் விருந்து இருக்கும் சில நல்ல உள்ளங்களைத்தவிர அல்லாஹ் அவர்கள் மீது அருள்பாலிப்பானாக! பலரும் விருந்து விசயத்தில் இப்படித்தான். ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம்.

7. இஸ்திகாமத் உறுதியான நிலைப்பாடு

[14:35] நினைவு கூறுங்கள்! ''என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும் என் மக்களையும் சலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக! " என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

[14:37] ''எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும் சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில் எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காhகக் குடியேற்றியிருக்pன்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச்ந்தர்ர் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக! "

அல்லாஹ்விடம் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு ஆளை அனுப்பு என்று சொல்லவில்லை வரும் நபர்களுக்கு பாதுகாப்பும் அனைத்து மக்களுக்குமான கனிவர்க்கங்களும் கேட்டார்கள்.

இன்று நாம் சீட்டு குழுக்கி அதில் பெயர் வந்தால்தான் போக முடியும் என்ற நிலை. அதுமட்டுமல்லாமல் கேட்கும் கனிவர்க்கங்கள் அனைத்தும் புத்தம்புதிதாக கிடைக்கும் நிலை. உலகப்போர் இரண்டு நடந்தும் கூட அல்லாஹ் யாரும் கஃபாவை அபகரிக்காமல் இருந்தது இப்றாஹிம் (அலை) அவர்களின் இஸ்திகாமத். ஆனால் நாமோ அல்லாஹிவிடம் கேட்ட பின்பும் நமக்கு சந்தேகம் தீராமல் உள்ளம் அலைபாயுதே. ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம்.

8. துஆ

நபி இப்றாஹிம் (அலை) அவர்களும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் அல்லாஹ்விற்காக ஆலயத்தை கட்டினாலும் இறைவா அதை ஏற்றுக்கொள் என்றும் சொல்லும் துஆ வசனமாக

[2:127] இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய் " (என்று கூறினர்).

நாம் எந்த அமலைச்செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நம்புகிறோம். அதை வல்லோனிடம் ஏற்கசொல்ல மன்றாடியதில்லை. ஆனாலும் நாம் இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் பெருநாளை கொண்டாடுகின்றோம்.

அன்பின் சகோதரர்களே சகோதரிகளே! இந்த பெருநாளை கொண்டாடும்போது திடலுக்குச்செல்லும்போது குர்பானி கொடுக்கும்போது எல்லாம் இப்றாஹிம் (அலை) அவர்களின் இந்த படிப்பினைகள் நம் கண்முன்னே வரவேண்டும்.

நினைவுகூற:

ஆட்சியாளர்ளை பெற்றோரை மற்றும் மக்களை பார்க்கும்போது அழைப்புப்பணி செய்யவேண்டும்.

மனைவி மார்க்கப்பற்றுள்ள கணவனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக வேண்டும்

மகன் பொறுமையாளனாக மார்க்கப்பற்றுள்ளவனாக இருக்கவேண்டும்.

தந்தை அல்லாஹ்விற்காக மார்க்கத்திற்காக தனது மனைவியையும் மகனையும் தயார் செய்யவேண்டும்

பள்ளிவாசல்களில் நம் கரம் வேலை செய்யவேண்டும்.

விருந்தளிப்பை நம் வாழ்வில் பரவலாக்கவேண்டும்.

ஜம் ஜம் தண்ணீரை பார்த்தால் தியாகம் தெரியவேண்டும்

குர்பானி இறைச்சியை சாப்பிடும்போது இரு நபிகளுடைய தியாகம் நம் கண் முன்னால் வந்து கண்களில் கண்ணீரும் வாயில் துஆவும் வரவேண்டும்.

மொத்தத்தில் வெடியில்லாத மதுவில்லாத சினிமா இல்லாத கூத்து இல்லாத தியாகத்தோடு நம் பெருநாள் இருக்கட்டுமாக!

அப்படியானால்தான் நாம் நபி இப்றாஹிம் (அலை) அவர்களை பின்பற்றுகின்றோம் என்று அர்த்தம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அமல்கள் யாவையும் ஏற்றுக்கொள்வானாக!

இறைப்பணியில்

அபூ ஜக்கியா....

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com