بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
ஜாதிகள் இல்லையடி பாப்பா! தஃவா களம் (பாகம் - 12)அச்சிடுகமின்-அஞ்சல்
24 நவம்பர் 2011 மாலை 09:16

அன்பின் சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

தஃவாவின் முக்கிய அம்சம் நாம் யாருக்கு பண்ணுகின்றோம். அவர்களுடைய வழிபாடுகள் அவர்களுடைய பிரிவுகள் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் தொழில் ஆகியவற்றை அறியாமல் அழைப்பு பணி செய்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது பாருங்கள்.

நான் காங்கயத்திலிருந்து எனது நண்பர்களோடு வத்தலக்குண்டு என்ற ஊருக்குள் தஃவா செய்வதற்காக பஸ்ஸில் பயணம் செய்தோம். பயணம் செய்யும்போது சில நேரங்களில் பிரிந்து உட்காருவோம். பிறருடன் பேசும் வாய்ப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில்.

அந்த நிலையில் என்னோடு வந்தவர்கள் பஸ் சாப்பாட்டிற்காக ஒரு இடத்தில் நின்றதும் நாங்கள் ஏற்கனவே பொட்டலம் போட்டு வந்த சாப்பாட்டை அவிழ்த்து சாப்பிடுவதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் அண்ணே லெமன் சாதம் நீங்கள் எங்கு வாங்கினீர்கள் என்று கேட்க நாங்கள் இது வீட்டிலிருந்து கொண்டுவந்தது என்று சொன்னோம்; அவர் ஏமாற்றத்தோடு சென்றார். நாங்கள் அவருக்கு நம்முடைய பொட்டலத்தில் ஒன்றை கொடுத்து அவருடைய பசியையும் போக்கி நம்முடைய தஃவா பசியையும் போக்கலாமே என்று முடிவெடுத்து பின்னர் அவர் சாப்பிட்ட பின்னர் நான் அவருடன் பேச ஆரம்பித்து அல்லாஹ்வைப்பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் மறுமைபற்றியும் எடுத்துச்சொல்லினோம். அவர் எப்படியாவது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாரா என்ற ஆசைதான். ஆனால் நாங்கள் பேசும் வரை அமைதியாக இருந்தவர் இப்படி சொன்னாரே பாருங்கள்.. அண்ணே நானும் ஒரு முஸ்லிம் தான் என்று.. இதை யாரிடம் சொல்லி சிரிக்க.

இதற்கும் அல்லாஹ் நமக்கும் தர்பிய்யத் பண்ணுவதைப் பாருங்களேன்.

27:20. அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து; ''நான் (இங்கே) ஹுது ஹுது (ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?"" என்று கூறினார்.

________________________________________

27:21 .''நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்"" என்றும் கூறினார்.

________________________________________

27:22 .(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று; ''தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா"விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.""

________________________________________

27:23 .''நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும் அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.

________________________________________

27:24 .''அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸ{ஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து அவர்களை நேரான வழயிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.

________________________________________

27:25 .''வானங்களிலும்,பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும்ää நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸ{ஜூது செய்து வணங்க வேண்டாமா?

________________________________________

27:26 .''அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷ{க்கு உரிய இறைவன்"" (என்று ஹுது ஹுது கூறிற்று).

ஒரு பறவை ஒரு நாட்டைப்பற்றி அந்த மக்களைப்பற்றி அவர்களின் ஆட்சிமுறை மற்றும் அவர்களுடைய வணக்கவழிபாடுகள் பற்றி நாம் தெரிந்து கொண்டு வந்து நபி சுலைமான் அலை..... அவர்களிடம் சொல்ல அவர்களும் அதனடிப்படையில் தஃவாவை அமைத்துக்கொண்டார்கள் என அடுத்தடுத்த வசனங்கள் நமக்கு போதிக்கின்றது.

இந்த அடிப்படையில் உஷாரான நாம் பழையவத்தலக்குண்டு அருகே வத்திராயிருப்பு அருகே உள்ள கிராமத்தைப்பற்றி நன்கு விசாரித்தோம். அந்த ஊரில் பல ஜாதியினர் இருந்தாலும் பள்ளர் சமுதாயமும் பறையர் சமுதாயமும் அதிகம் வாழ்கின்றனர். இந்த இரு சமுதாயத்தையும் பிரிக்க நினைத்த சிலர் அவர்களிடையே பகைமையையுண்டாக்கி வருடாவருடம் இருதரப்பிலும் குறைந்தது இரண்டு உயிராவது பலியாகும் அவலம் இன்றும் நடந்துவருவதை பார்க்கலாம். இன்னும் அவர்களைப்பற்றி தெரிந்துகொண்டு அந்த கிராமத்திற்கு சென்றோம்.

அந்த குக்கிராமத்திற்கு (1997 என்று நினைக்கிறேன்) ஒரு வழியாக பஸ் பிடித்து அவ்வூருக்குள் சென்றதும் அதிர்ச்சி. உள்ளே நுழைய முடியவில்லை காவல் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. ஆனாலும் நாம் அசராமல் அல்லாஹ்வே நமக்கு போதுமானவன் என்று கூறும் வசனத்திற்கேற்ப..

41:30 .நிச்சயமாக எவர்கள்; ''எங்கள் இறைவன் அல்லாஹ்தான்"" என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து ''நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்"" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

நாமும் களத்தில் இறங்க முடிவெடுத்தோம். அதன்படி நாங்கள் தனித்தனி நபராக மாறி மற்ற மக்களுடன் கலந்து அவர்களோடு அந்த ஊருக்குள் நாம் நுழைந்து அவர்கள் மொத்தமாக கூடும் இடத்திற்கு சென்றோம். அவர்கள் எம்மை பயம் கலந்த நிலையில் வரவேற்றார்கள். பின்னர் நம்மிடம் பங்காளி பகை கதையை சொன்னார்கள்.இதை யாராலும் தீர்க்க முடியவில்லை என்று சொன்னார்கள் 2011 ல் கூட அதுதான் நிலை.

இனி நாங்கள் பேச ஆரம்பித்தோம் இந்த ஜாதிய வெறி உலகம் அழியும் வரை இருந்துகொண்டுதான் இருக்கும். ஆதலால் இந்த ஜாதிய பிரிவில் இருக்கும்வரை இந்த மோதல் இருக்கத்தான் செய்யும் என்று சொல்லிவிட்டு கூறினோம்.எங்கேயுமே உங்கள் ஜாதிபெயரைச்சொல்லகூட முடியாத நீங்கள் இந்த குலப்பெருமையை விட்டொழியுங்கள்.

மற்ற ஜாதிகாரர்கள் தங்கள் பெயரில் மளிகை,ஜவுளி,மெடிக்கல் மற்றும் உணவகங்கள்  நடத்தும்போது தங்கள் பெயரில் நீங்கள் நடத்துமுடியுமா? அதுமட்டுமல்ல பள்ளிக்கூடம் சென்றால் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் சத்தம் கேட்கும் நிலையிலே பள்ளியின் தலைமை ஆசிரியர் உங்கள் பிள்ளைகளை புதிதாக சேர்க்கும்போது தங்கள் பிள்ளை என்ன ஜாதி என்று கேட்கும்போது தாங்கள் மற்ற ஜாதிகாரரைப்போல் சத்தமாக சொல்லாமல் ஏன் மெல்ல யாருக்கும் கேட்காமல் சொல்லுகிறீர்கள்? என்று நாம் சரமாரியாக கேட்க அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

நாம் அதற்கு தீர்வை சொன்னோம். இஸ்லாம் அதற்கான தீர்வை கூறுகின்றது.

4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள் அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்துää அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள், மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

இப்படியாக பல வசனங்களை காட்டி அடிமைத்தனம் மூடநம்பிக்கை ஒழுக்ககேடுகள் இவை அனைத்திற்கும் தீர்வு இஸ்லாமே என்று கூறிவிட்டு அவர்களிடம் என்ன தங்கள் முடிவு என்று கேட்டோம். அவர்கள் பின்னர் யோசித்து சொல்கின்றோம் என்று கூறியதும் நாம் அவர்களுக்காக துஆ செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ் சுமார் 14 வருடங்கள் கழித்து இந்த அக்டோபர் 2011 ல் ஒரு போன் வந்தது. பாய் தாங்கள் 14 வருடங்களுக்கு முன்னர் வந்தீர்களே.. எங்கள் ஊரிலிருந்து நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். மீதமுள்ளவர்களுக்கு எடுத்துச்சொல்ல எப்போது வருகின்றீர்கள் என்று அவர் என்னைப்பார்த்து கேட்க நான் உங்களைப்பார்த்து கேட்கின்றேன்.

அந்த ஊருக்கு தஃவாவிற்கு போகலாம் வாரீங்கலா?

அடுத்த வாரம் இன்ஷாஅல்லாஹ்.....

இறைப்பணியில்

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com