بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தஃவா களம் (பாகம் -13) கொத்து கொத்தாய்!அச்சிடுகமின்-அஞ்சல்
01 ஜனவரி 2012 மாலை 09:21

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பின் சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

அன்பின் காயல் நியூஸ் வாசகர்களே! சிறிய இடைவெளிக்குப்பின் உங்களை சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி..இந்த தொடர்கள் நமக்கு தஃவா பணி செய்யும் ஆர்வத்தை உண்டாக்கட்டும் என்ற பிரார்த்தனையோடு படிப்போமாக!

அன்றைய நாட்களில் நாங்கள் விரும்பி படிக்கும் வார இதழில் உணர்வும் ஒன்று. ஒரு வாரத்தில் விடுதலை பெறத்துடிக்கும் வீரவநல்லூர் மக்கள் என்றோ அல்லது அது சார்ந்துவரும் தலைப்பிலோ ஒரு செய்தி வந்தது. அது பெருநாள் இதழ்.

பெருநாளைக்கு எங்காவது சுற்றுலா சென்ற கால்கள் இந்த தடவை தஃவா சுற்றுலா ஏன் செல்லக்கூடாது என முடிவெடுத்து ஆள் சேர்க்க ஆரம்பித்தோம். எங்கே வர சாப்பாடும் கூப்பாடும் என்றால் வரும் கூட்டங்கள் இதற்கு எப்படி வரும்.ஆனாலும் காயல்பட்டணத்தைச்சார்ந்த முஜாஹித் அலி,தைமிய்யா மற்றும் சேக் அப்துல் காதர் என நினைக்கிறேன் ஆகியோருடன் நானும் சென்றேன்..

12_copy

ஏனென்றால் நமக்கு அல்லாஹ் அருளிய இந்த ஹிதாயத்திற்காக நாம் நன்றி செலுத்த வேண்டுமல்லாவா!

2:152 .ஆகவே  நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும் நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

திருநெல்வேலிக்கு மேற்கே 25 கிலேமீட்டர் தூரத்தில் உள்ள பெரிய கிராமம்தான் வீரவநல்லூர். அதற்கு அப்பால் உள்ள சிறிய தலித் பகுதிதான் நைனார் காலனி மற்றும் தம்புரான் காலனி. இந்த மக்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை என்று உணர்வில் படித்ததும் அதில் வரும் சிலருடைய பெயரை மட்டும் மனனம் செய்துவிட்டு அந்த ஊருக்கு வீரவநல்லூரிலிருந்து 2 கிமீ தூரம் நடந்து வந்தோம்.

11_copy_copy

ஊர் எல்லைவந்ததும் இளைஞர்கள் உட்கார்ந்திருந்து எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் மெல்ல தாகம் தீருவதற்கு தண்ணீர் கேட்டோம். அவர்கள் தண்ணீர் தந்ததும் அதை பருகிவிட்டு அவர்களிடம் பெருமாள் மற்றும் உணர்வில் குறிப்பிட்டுள்ள சில பெயர்களை கூறிகேட்டோம். அவர்கள் எல்லோரும் வெளியே சென்றுவிட்டனர் என்ன செய்தி? என நம்மிடம் திருப்பிகேட்டனர். இப்போது உணர்வு பத்திரிக்கையை அடையாளம்காட்டி தங்கள் பிரச்சனை என்னவென்று கேட்டோம். அவர்கள் எங்களை ஊருக்கு நடுவில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகிலுள்ள பெரிய திண்டில் அனைவரும் கூடி சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளர் சமுதாயத்தினர். அவர்கள் ஊருக்குள் செல்லும் பாதையிலெல்லாம் பிற சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.

இவர்களுக்கிடையில் பிரச்சனை வரும்போது அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று சேர்ந்து இவர்களை ஒதுக்குவதும் (முஸ்லிம்களில் சிலரும்)இவர்கள் கடைகளில் சாமான்கள் வாங்க முடியாதவாரு தடுத்தைதை அவர்கள் நினைவு கூறினர். அவர்கள் இதற்கு தீர்வாகத்தான் நாங்கள் இஸ்லாத்தை ஏற்கலாம் என முடிவெடுத்திருக்கின்றோம் என்று கூறினார்கள்.

பின்னர் எங்களது குழுவில் வந்த முஜாஹித் அலியும்,தைமிய்யாவும் இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லையென்றும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குவதால் தங்களிடம் ஏற்படும் மாற்றம்பற்றியும் அழகாக எடுத்துரைத்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

49:13 .மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர் உங்களைக் கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

அவர்கள் எங்களிடம் இன்னும் பலர் நீங்கள் சொல்வதைகேட்கவேண்டும் அப்படிகேட்டால் ஊரே இஸ்லாத்தை தழுவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினர். அவர்கள் ஒரு திகதியை குறிப்பிட்டு அதில் நீங்கள் வாருங்கள் என்று சொன்னதற்கேற்ப நாங்களும் அங்கு சென்றோம்.

அடுத்தகட்டமாக நாங்கள் 4 பேர் அல்லது 5 பேர் குறிப்பிட்;ட திகதியில் அங்கு சென்றோம். 200 சகோதார சகோதரிகள் அங்கு கலந்து கொண்டு சரமாரியாக கேள்விகேட்டனர். அல்லாஹ் எங்களுக்கு வழங்கிய கல்வியை வைத்து இரவு 10 மணிவரை நாங்கள் விளக்கமளித்தோம். அல்ஹம்துலில்லாஹ்..

16468548

என்ன அதிசயம் ஒருவர் நாங்கள் இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க கலிமா வாசகத்தை சொல்pலி இதை நீங்கள் மனமாற சொன்னால் முஸ்லிமாகிவிடலாம் என்று கூற எனக்கு அந்த வாசகத்தை சொல்லித்தாருங்கள் என்று கூறினார் ஒருவர். அவருக்கு முதல் கலிமாவை சொல்லிக்கொடுக்க கூட்டம் கூட்டமாக முஸ்லிமாக மாறினர் அல்ஹம்துலில்லாஹ் மொத்தம் 70 சகோதரர்கள் இரவு 11 மணிவரை கலிமா சொல்லி சத்திய மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அடுத்த நாளும் சுமார் 10 சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

கொத்து கொத்தாய் பூத்தது மனிதமலர்கள் பூமியிலே

சொத்து சொத்தாய் நன்மை சோந்தது எங்களுக்கு மறுமையிலே

பித்துபித்தாய் மாறியது எங்கள் மனம் தஃவாவிலே

மொத்த மொத்தமாய் நன்றி சொன்னோம் அல்லாஹ்விற்கு ஸஜ்தாவிலே

அடுத்த நாளே தாங்கள் முஸ்லிமாகிவிட்டோம் என்று பறைசாற்ற ஊரெல்லாம் ஒரே பேச்சாகி போச்சு.

நாங்கள் அவர்களோடு தொடர்பு எண்களை எடுத்துக்கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். அடுத்த முறையும் வந்து அவர்களோடு தொழுகை முறைகளை கற்றுக்கொடுத்தோம். ஆனாலும் என்ன செய்ய? அனுபவம் இல்லாமல் இருந்ததால் சில மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டோம். அவர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணினார்கள். அதில் நம்மக்களுக்கு பயான் பண்ணுவதுபோல் ஹம்து ஸலவாத்து எல்லாம் அரபியில் சொல்லி ஆரம்பித்து வசனங்களையும் அரபியில் சொல்;ல கூட்டம் நெளிந்தது. பின்னர் அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறவும் கூட்டமெல்லாம் பிரியாணி விநியோகம் பண்ணும் இடத்திற்கு சென்று விட்டதால் கூட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது.

பின்னர் ஹஜ்ஜீப்பெருநாளைக்கு அடுத்த நாள் அந்த ஊருக்கு சென்று குர்பானி கொடுத்தோம். ஆனால் நடந்தது வேறு. சினை மாட்டை குர்பானி கொடுக்க அது அந்த ஊரில் பெரிய பிரச்சனையாகிவிட்டது. நம் மக்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாததாலும் எங்களின் அனுபவமின்மையாலும் அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தைவிட்டு வெளியேறினர்.

வழி தெரியவில்லை அவர்களை தக்கவைக்க

முழி பிதுங்கியது அவர்களை சமாளிக்க

கொத்து கொத்தாய் வந்தது முன்னர்

கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சென்றது பின்னர்

இறைவா எங்களை மன்னித்துவிடு

இனி வியூகம் அமைக்க அறிவைத் தந்துவிடு

இப்பவும் அல்லாஹ்வுடைய கிருபையினால் 5 சகோதரர்கள் இஸ்லாத்தில் உறுதியாகவும் திருமணமாகி குழந்தைகளுடன் நல்ல அமல்களோடு இருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

இன்னும் பிற மக்களுக்கும் நேர்வழி கிடைக்க துஆ செய்ய வேண்டுகின்றேன்.

இனி இன்ஷாஅல்லாஹ் ரயில் பயணங்களில்.......

இறைப்பணியில்.....

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com