بسم الله الرحمن الرحيم
Wednesday 15th August 2018 | 03 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ரயில் பயணங்களில்...தஃவா களம்!அச்சிடுகமின்-அஞ்சல்
26 பிப்ரவரி 2012 மாலை 03:39

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அன்பின் சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அப்பாட ஒரு வழியாய் வந்ததப்பா தஃவா களம். பகலில் கூட கரண்ட் வந்துவிடலாம் ஆனால் தஃவா களம் வராது என்று நினைத்தவர்களுக்கு தஃவா களம் வந்துவிட்டது பார்க்க கரண்ட்தான் வரனும். சரி நாம் களத்தில் இறங்குவோம்.

அன்று ஒருநாள் நானும் இஸ்லாத்தை அறிந்து ஏற்றுக்கொண்ட சகோதரர் ஒருவரும் திருநெல்வேலியிலுள்ள கிராமத்திற்கு தஃவாவிற்காக நாங்கள் காயல்பட்டண ரயில்வே ஸ்டேசனலிருந்து நாங்கள் திருநெல்வேலி டிக்கட் எடுத்து ரயிலில் ஏறினோம். ஏறும்முன்பே நாங்கள் ரயிலில் தஃவா பண்ணவேண்டும் என்று முடிவோடு செல்ல ஆரம்பித்தோம்.

indiantrain_copy

நான் நமது சகோதரர் மற்றும் 4 பேர் நாங்கள் இருந்த பகுதியில் இருந்தார்கள். அப்போது

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்: ஜி நீங்கள் ஒரு இறைவனை நம்பவேண்டும் என்கிறீர்களே! அப்படியானால் கண்ணை மூடிவிட்டு அல்லாஹ்வை நம்பவேண்டுமா? என்றார்

நான்: அப்படி சொல்லவில்லையே.இஸ்லாமும் அப்படி சொல்லவில்லையே. அல்குர்ஆன் கூட இப்படித்தான் சொல்கின்றது.

47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

இ த: அப்படியானால் படைத்ததற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு என்றார்.

நான்: அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரே ஆதாரம் அல்குர்ஆன் மட்டுமே.

இ;; த: எப்படி அல்குர்ஆனை வைத்து நாங்கள் இறைவனை நம்புவது?

நான்: அல்குர்ஆன் வெறும் கற்பனை கதைகளை கொண்ட புத்தகமோ அல்லது உபதேசங்களை மட்டும் கொண்ட புத்தகமோ இல்லை இது வாழ்வியல் வழிகாட்டி அறிவியல் சமூகம்,வரலாறு மற்றும் அழகிய உபதேசம் அடங்கிய வாழ்வியல் வழிகாட்டி நூலே அல்குர்ஆன்

இ த: அப்படி என்ன அதிசயம் உள்ளது குர்ஆனிலே? என்றார்

என் மனது: யாரும் நம் இந்த தந்திரமான தஃவாவிலே வரவில்லையே என்ற கவலையுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணம் மேலும் தொடங்கினோம்

நான்: டிபை டியபெ வாநழசல பற்றி குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை படித்துக்காட்டினேன்.

21:30 .நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்; ''நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெளுப்பிருப்பினும் வாருங்கள்'' என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் ''நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்'' என்று கூறினான்.

நான்: இந்த குர்ஆன் இவ்வளவு உண்மைகளை கூறிவிட்டுத்தான் அல்லாஹ் தான் கடவுள் மனிதன் அல்லாஹ்வைமட்டும்தான் வணங்கவேண்டும் என்று கூறுகின்றான்.

இப்போது அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் வாய்திறக்க ஆரம்பித்தார். அப்பாட அல்ஹம்துலில்லாஹ் என்று மனதில் கூறிகொண்டோம்.

சகோ: பாய் நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அது என்ன குர்ஆன் மட்டும்தான் அறிவியலைப்பற்றி கூறுகின்றதா? பைபிளும் கூறுகின்றது என்று கூற

நான்: எதில் கூறுகின்றது?

அவர்: பைபிளில் ஆதியாகாமம் 1ஆம் அதிகாரத்தில் என்றார்

நான்: அதே பைபிளில் இருப்பதை கேளுங்கள் நான் சொல்கின்றேன் அண்ணே ஆதியாகாமத்தில் முதலாம் அதிகாரத்தில்

1.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்

2.பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ..............

3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் வெளிச்சம் உண்டாயிற்று

5.தேவன் வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிட்டார். இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்.......இப்படியாக முதல் நாளாயிற்று

11.பூமியானது புல்லையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையi பிறப்பிக்கும்...........மூன்றாம் நாளாயிற்று

13. பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க

16. தேவன் பகலை ஆள பெரிய சுடரும் இரவை ஆள சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

19. ........ நாலாம் நாள் ஆயிற்று

அதிகாரம் 2

3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணிய தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு ஏழாம் நாளிலே ஓய்வெடுத்தார்

நான்: இப்படியாக கர்த்தர் முதல்நாளிலே பகலை படைத்தபின்பு நான்காம் நாளில்தான் சூரியனை படைத்ததாக கூறியவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? சூரியன் இல்லாமல் எப்படி பகல் வந்தது என்றேன்

அவர்: நீங்கள் சொல்வதும்சரிதான்

நான்: ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார் என்றால் அவருக்கு பலகீனம் இருக்கின்றதா? ஆனால் அல்லாஹ் 6 நாளில் உலகை படைத்து விட்டு நிர்வாகம் செய்ய சிம்மாசனத்தின் மீது அமர்ந்தான் என்று குர்ஆன் கூறுகின்றது.இன்னும் வீட்டிற்கு குஷ்டரோகம் பாத்திரத்திற்று குஷ்ட ரோகம் என பல விசயங்கள் பைபிளில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் யேசு தன்னை வணங்க சொன்னார்கள் என பைபிளில் ஒரு வசனமாவது இருக்கின்றதா?

அவர்: பாய் நீங்கள் சொன்னதற்கு நான் பைபிளில் இருக்கின்றது என்று சொன்னேனே ஒழிய நான் ஒரு இறைவன்தான் என்ற கொள்கையில் உள்ளவன்தான் நான் கிறிஸ்தவன் ஆனால் அதன்மீது நம்பிக்கையில்லாமல் ஆகிவிட்டேன் அங்குள்ள மதகுருமார்கள் என்றழைக்கப்படுவர்கள் இறைவனிடம் பரலோகராஜ்யத்தில் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும் எனக்கு இஸ்லாம்தான் பிடித்தமார்க்கம் என்றார்.

நாங்கள்: அப்படியானால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியததுதானே?

அவர் கூறிய பதிலால் நான் அவமானமடைந்தேன்.

அது என்ன?

அடுத்த பகுதி வரை காத்திருங்களேன்..அடுத்த வாரம் இன்ஷாஅல்லாஹ்.

வேனுக்குள் தஃவா இலங்கையில்..

இவண்

இறைப்பணியில்

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com