بسم الله الرحمن الرحيم
Wednesday 24th April 2019 | 18 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தஃவா களம் (PART-7) யார் சொல்லால் அழகிய முஸ்லிம்?அச்சிடுகமின்-அஞ்சல்
23 ஆகஸ்ட் 2011 காலை 02:02

அன்புடைய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் ..

சென்ற பகுதியில் நான் கேட்ட கேள்வி பிற மதத்தினரும் இஸ்லாத்தை தழுவலாமா?

இதற்கு அவர் அளித்த பதில்தான் நான் இன்று ஒரு சுமாரான அழைப்பானாக இருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

அவர் கூறினார். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாவரும் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம்கள் கிடையாது. எல்லாருமே இந்துக்களாக இருந்து தானாகவோ அல்லது யாராவது எத்திவைத்தோதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் என் காதில் கூறியது.ஏன் நம் ஊரில் கூட ஆரம்பித்தில் எல்லோரும் சானாராகவும் பள்ளர் பறையராகவும் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் அரபு வணிகர்களின் தூய்மையான வழிமுறைகளை கண்டு அவர்கள் இஸ்லாமை எடுத்துச்சொன்னதின் வாயிலாக நமதூர் இன்று அல்லாஹ்வுடைய கிருபையால் இஸ்லாமிய ஊராக இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் நமக்கு கிடைத்த இந்த மார்க்கத்தை நாமும் சரிவர தெரியாமல் சகோதர சமுதாயத்தினருக்கு  நாம் சொல்லாததால் நாம் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியான சமுதாயமாக இருக்கின்றோம்.ஆனால் அல்லாஹ்வோ நம்மைபார்த்து சிறந்த சமுதாயம் என்று சிலாகித்து கூறுகின்றான்.

அல்லாஹ் நம்மைப்பார்த்து தஃவா செய்யவேண்டும் என பல வசனங்களில் கூறுவதைப்பார்க்கின்றோம்

3:110 .மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின் (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

ஒவ்வாரு நபியும் அல்லாஹ்வின் செய்தியை அம்மக்களுக்கு எடுத்துச்சொல்வார்கள். ஆனால் அந்த நபி இறந்ததும் அடுத்த நபி இந்த இறைப்பணியைச்செய்வார்.ஆனால் நமக்கு அனுப்பப்பட்ட நபியான முஹம்மது நபி (ஸல்....) அவர்களுக்கு பின்னர் நபிமார்கள் வருகை கிடையாது என அல்லாஹ் கூறிவிட்டபடியால் இந்த தீனுல் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் புனிதமான இந்த இறைத்தூதர்களுடைய இப்பணியை இந்த சமுதாயத்திற்கு எடுத்துச்சொல்லப்பணித்ததனால்தான் நம்மைப்பார்த்து சிறந்த சமுதாயம் எனக்கூறுகின்றான்.

நாம் அதற்கு ஏற்றார்போல் இந்த தஃவா பணியை செய்வதில்லை.

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்.

41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து; ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோää அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?"" (இருக்கின்றார்?).

நாம் தஃவா செய்யவில்லையென்றால் நாம் நம்மை முஸ்லிம் என்று அழைப்பதற்கு கூட தகுதியில்லாதவர்களாகின்றோம்.

அல்லாஹ் இன்னும் நம்மை இந்த தஃவா செய்யவில்லையென்றால் நஷ்டவாளிகள் எனக்கூறுகின்றான்.

103:1 .காலத்தின் மீது சத்தியமாக.

________________________________________

103:2 .நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

________________________________________

103:3. ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

இப்படியான வசனங்கள் எல்லாம் என்னை தஃவா செய்யவேண்டும் என்று தூண்டியது. அதனால் நான் நிறைய இஸ்லாமிய குறிப்பாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி எழுதிய புத்தகங்களை அதிகமாக படித்தேன்.

இதற்காக நான் காங்கயத்தில் சீர்திருத்த கொள்கையுடைய சகோதரர்களுடன் ஒன்று சேர்ந்து தங்க ஆரம்பித்தேன்.

அவர்களோடு சேர்ந்து நான் தஃவா செய்யும் முறைகளை கற்றுக்கொண்டேன்.

இந்த நேரத்தில் ஒருவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவர் பெயர் சுப்பிரமணியம் காங்கயத்திற்கு அடுத்துள்ள ஊதியூர் கிராமத்தைச்சார்ந்தவர். அவர் கூறினார். நான் கடந்த 5 வருடங்களாக இஸ்லாத்தை தழுவ வேண்டுமென கேட்டுவருகின்றேன். அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்று கூறுகின்றார்களே தவிர என்னை ஒருத்தரும் கலிமாச்சொல்லிதரவில்லை என்று அழாத குறையாக கூறினார். நான் அவர் ஏன் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறார் என தெரிந்து கொண்டேன். பின்னர் அவர் என்னிடம் கலிமா சொல்லித்தர சொன்னார். நான் சிறிது நேரம் தயங்கி யோசித்து விட்டு நாளை குளித்துவிட்டு அதிகாலை வாருங்கள் நான் சொல்லித்தருகின்றேன் இன்ஷாஅல்லாஹ் என கூறி அவரை அனுப்பிவிட்டேன்.

ஏன் அவரை கலிமா சொல்லிக்கொடுக்காமல் அனுப்பினேன் என்று கேட்கின்றீர்களா?

நோன்பின் பொறுமையை அடுத்தவாரம் வரை பார்ப்போமே!

இறைப்பணியில்

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com