بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தஃவா களம் ( PART - 8 ) என் வாய் மொழிந்த முதல் கலிமா ?அச்சிடுகமின்-அஞ்சல்
02 செப்டம்பர் 2011 காலை 01:24

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் ஈத் முபாரக்..

நோன்பின் பெற்ற பயனை மற்ற காலங்களிலும் இடைவிடாமல் செய்து ரய்யான் வாசலின் வாயிலாக நாம் அனைவரும் சொர்க்கம் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

அன்புடைய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ_

நான் அந்த சகோதரனுக்கு ஏன் கலிமா உடனே சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் எனக்கே கலிமா எப்படி சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று தெரியாதே!

அதனால் தான் நான் அவரை அடுத்தநாள் கழித்து வரச்சொன்னேன். ஆனாலும் அன்று இரவே புத்தகங்களைப்படித்து கலிமா சொல்லிக்கொடுக்கவேண்டிய வாசகங்களை மனப்பாடம் செய்தேன். அல்ஹம்துலில்லாஹ் அந்த வாயால்தான் பல பேருக்கும் கலிமா சென்றடைந்துள்ளது.

இந்த நேரத்தில் ஒரு கலிமா கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது.

ஒரு பாகிஸ்தான் முஸ்லிமிற்கு சீக்கியா ஒருவர் கடன் கொடுக்கவேண்டியது இருந்தது. சீக்கியார் பல நாளாக அவருக்கு கடன் கொடுக்காமல் டிமிக்கி விட்டுக்கொண்டிருந்தார். ஒருநாள் அந்த சீக்கியர் பாகிஸ்தான் முஸ்லிமிடம் வசமாக மாட்டிக்கொண்டார். உடனே அந்த முஸ்லிம சீக்கியரிடம் சண்டைபோட்டு அவரை கீழே மலத்திப்போட்டு அவர்வைத்த கத்தியை எடுத்து குத்தப்போக உடனே அந்த சீக்கியர் பாய் என்னை குத்தாதீர்கள் நான் வேண்டுமானால் உங்கள் மதத்திற்கு மாறுகின்றேன் என்றாராம்.

கத்தியை எடுத்துவிட்ட அந்த பாகிஸ்தானியர் உடனே கலிமா சொல் என்றாராம் உடனே அந்த சீக்கியர் அந்த கலிமா எனக்கு தாங்கள் சொல்லிக்கொடுங்கள் என்று கூற அந்த பாகிஸ்தானி அட மூதேவி எனக்கு அது தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கின்றேன் என்று கூறி மீண்டும் அவரைகுத்த கத்தியை ஓங்கினாராம்.

இப்படித்தான் கலிமாசொல்லிக்கொடுக்கக்கூட தெரியாத நான் என்னை நானே நொந்துகொண்டேன். இன்றும் எத்தனையோ சகோதரர்களுக்கு கலிமா சொல்லிக்கொடுக்கத்தெரியாததால் நம்மிடம் வந்து பலரும் கலிமா சொல்லிக்கொடுக்கச்சொல்லுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி இதோ:

உங்கள் மூலமாக ஒருவருக்கு நேர்வழி கிடைக்குமாயின் அவர் சிவப்பு ஓட்டைகைகள் கிடைத்ததை விட அதிக சன்மானத்தை பெறுகின்றார்.

இவ்வளவு நன்மைகளை பெற்றுத்தரும் இந்த தஃவா பணிகளை நீங்களும் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

அட இன்ஷாஅல்லாஹ் என்று உடனே சொல்லுங்கள்.

சொல்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தஃவா செய்ய ஆரம்பியுங்கள். தஃவா செய்ய எங்களுக்கு தெரியாதே என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

நபி (ஸல்) அவர்களி தம் அருமைத்தோழர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அல்லாஹ் அர்ரஹ்மான் என்ற அத்தியாயத்தை வஹியாக இறக்கினான். அந்த அத்தியாயத்தின் ஒரு வசனம் இதோ!

55:16 .ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்.


இந்த அத்தியாயம் இறங்கியதும் உடனே நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் யார் இந்த வசனத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றார். உடனே குள்ளமாக இருக்கும் அருமை ஸஹாபி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் உடனே எழுந்து நான் கொண்டு செல்கின்றேன் யாரசூ{லுல்லாஹ் என்று கூற தோழர்கள் எல்லோரும் அவரை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஏன் என்றால் இது மக்காவில் இருக்கும்போது இறங்கிய வசனம் என்பதால். கண்டிப்பாக அடி விழும் என்று தெரிந்தும் மக்காவின் ஆரம்பகாலத்தில் இந்த வசனத்தை எந்த வித பயிற்சியும் எடுக்காமல் அந்த அருமையான தோழர் கஃபாவின் முன்பாக நின்றுகொண்டு சொல்ல குறைஷிகாஃபிர்கள் அடித்து துவைத்துவிடுகின்றார்கள்.

இப்படிவளர்ந்ததுதான் நம்மார்க்கம்.

ஆக அடிவாங்கும் நிலையில் நம் தமிழ்நாட்டின் நிலையில்லை. எனவே தாங்கள் தஃவா செய்ய தயாராவீர்கள் என நினைக்கின்றேன்.

61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

________________________________________

61:11 .(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அற்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

________________________________________

61:12 .அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும் நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.

________________________________________

61:13 .அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும் நெருங்கி வரும் வெற்றியுமாகும் எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!.


இப்படியான நேரத்தில் தான் நான் தஃவா செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பமே யாரிடம் தெரியுமா?

யூகத்தோடு இருங்கள் நான் இஸ்லாமிய தாகத்தோடு சந்திக்கின்றேன்.இன்ஷாஅல்லாஹ்.


இறைப்பணியில்

அபூ ஜக்கியா


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com