தஃவா களம் ( PART - 9) இந்து முன்னணி காரருக்கு இஸ்லாம் முன்னணியானது!அச்சிடுக
18 செப்டம்பர் 2011 மாலை 10:02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ

அன்பின் சகோதரர்களே சகோதரிகளே!

நோன்பு பெருநாளும் கொண்டாடிவிட்டு ஷவ்வால் 6 நோன்பும் பிடித்திருப்பீர்கள்.

சரி நீங்கள் சென்ற தொடரின் தொடரை சற்று மறந்திருப்பீர்கள். எனவே அதன் சிறிய பாகத்தை தங்களுக்கு அறிய தருகின்றேன்.

இப்படியான நேரத்தில் தான் நான் தஃவா செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பமே யாரிடம் தெரியுமா?

யூகத்தோடு இருங்கள் நான் இஸ்லாமிய தாகத்தோடு சந்திக்கின்றேன்.இன்ஷாஅல்லாஹ் என்று சொன்னேனே அது இதுதான்.

நாங்கள் காங்கயத்தில் தொழில் பண்ணிக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு காயல் சகோதரர் இனி நாம் திண்ணைகளில் உஷாராக பேச வேண்டும் ஏனெனில் நாம் பேசக்கூடிய திண்ணைக்கு எதிரில் உள்ள வீட்டிற்கு மேலே ஒருவர் வரப்போகின்றார். அவர் ஈரோடு மாவட்ட இந்து முண்ணனி நிர்வாகியாக இருப்பவர். ஆதலால் நாம் தேவையில்லாத பேச்சை பேசக்கூடாது என்று பொதுவாக அறிவுரை கூறினார்.

நாங்கள் (தஃவா டீம்) ஆலோசனை செய்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறித்திருக்கின்றார்களே!

சத்தியத்தை அநியாயக்கார அரசன் முன்னால் எடுத்துரைப்பதுதான் சிறந்த ஜிகாத் ஆகும் என்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் அத்தனை நபிமார்களும் அநியாயக்கார அரசனுக்கு தஃவா செய்தார்களே! குறிப்பாக நபி இப்றாகிம் (அலை) அவர்கள் நம்ரூதுக்கும் நபி மூஸா (அலை) அவாகள் ஃபிர்அவ்னுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபு ஜஹ்ல் மற்றும் அபுலஹப் போன்ற கொடியவர்களுக்கும் இயற்கை மார்க்கம் இஸ்லாத்தை எடுத்துரைத்துள்ளார்கள். எனவே அறியாமல் இந்து முண்ணனியில் இருக்கும் அந்த தொப்புள்கொடி சகோதரனுக்கு நாமும் சத்தியத்தை வாய்ப்பு வரும்போது எத்திவைப்போம் என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் இருக்கும் வீட்டுத்திண்ணiயில்தான் நம் காயல்மக்கள் அரசியல்,ஆன்மிகம் வியாபாரம் என்று பேசத்தொடங்கி புறத்தில் வந்து முடிப்பார்கள். ஆனாலும் ஒரு தடவை கூட அந்த திண்ணை தஃவாவிற்கு பயன்பட்டது கிடையாது. அல்லாஹ் அந்த வாய்ப்பை எங்களுக்குத்தந்தான். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு நாள் நான் காங்கய வீட்டினுள் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது டெலிபோன் பெல் அடித்தது. அது யாருக்கென்று பார்த்தால் அந்த எதிர் வீட்டு முண்ணனிகாரருக்குத்தான். அருமையான சந்தர்ப்பத்தை அல்லாஹ் அமைத்துத்தந்தான் அல்ஹம்துலில்லாஹ். நாம் கேட்டால் அல்லாஹ்தருவான். அல்லாஹ் பிரார்த்தனையைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

7:55 .(ஆகவே முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும்,அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

________________________________________

7:56 .(மேலும்) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.

இந்த பிரார்த்தனை பழித்தது. அவரை அழைத்து அவருக்கு ஃபோனைக் கொடுத்தோம். அவர் பேசி முடித்ததும் என்னிடம் மன்னிப்பு கேட்டார் நான் உங்களிடம் கேட்காமலேயே உங்கள் தொடர்பு எண்ணை கொடுத்தது தவறு என்றார். நாங்கள் உடனே அதை மறுத்து இந்தமனிதாபிமானம் கூட இல்லையென்றால் நாம் மனிதனே கிடையாது என்று கூறி தாங்கள் தாராளமாக நம் டெலிபோனை பயன்படுத்தலாம் என்று சொன்னதும் நன்றி சொன்னார்.

அடுத்து சிறிது நாட்கள் கழித்து அவருக்கு அடு;த்து ஃபோன் கால் வந்தது. உடனே சுதாரித்துக்;கொண்டு இன்னும் 15 நிமிடங்கள் கழித்து பண்ணுங்கள் நாங்கள் அவரை அழைக்கிறோம் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டோம். பின்னர் அந்த முண்ணனி காரரை உடனே அழைக்க ஏற்பாடு பண்ணிவிட்டு நாங்கள் போட்டுள்ள கட்டிலில் இஸ்லாமிய புத்தகங்களை பரப்பிவைத்தோம்.

இதற்கிடையில் அவரும் சில நிமிடங்கள் கழித்து வந்தார். சிறிது நேரம் நின்றுவிட்டு கட்டிலில் கிடந்த ஒருபுத்தகத்தை திறந்து படிக்கஆரம்பித்தார். 10 நிமிடத்தில் ஃபோன் வந்தது அவரும் பேசிவிட்டு இந்த புத்தகத்தை நான் கொண்டு செல்லலாமா என்று கேட்க தாராளமாக என்று சொல்லி அனுப்பினேன்.

அடிக்கடி ஃபோன் பேச வந்தவர் ஒரு நாள் பாய் எலிஜா முஹம்மது அப்படி செய்திருக்க கூடாது என்றார். உடனே நான் சுதாரித்துக்கொண்டு அவரைப்பார்த்து நாம் இஸ்லாத்தை அடையாளம் கூடாது இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்ன சொல்கின்றது என்பதை பார்க்கவேண்டும். அந்த புத்தகத்தில் உள்ள மால்கம் X எப்படி இருந்தவர் இந்த மார்க்கத்தால் எப்படி இருக்கிறார் என்பதை பாருங்கள் என்றேன்.

ஆமாம் பாய் கறுப்பின தீண்டாமையை இஸ்லாம் ஒழித்தது என்றதுடன் இன்னும் சில புத்தகங்களை எடுத்துச்சென்றார். சிறிது நாள் கழித்து பாய் நான் இப்போது சொந்த காசில் இஸ்லாமிய புத்தகங்கள் வாங்க ஆரம்பித்துவிட்டேன் அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தை ஆய்வு செய்து வருகின்றேன் என்றார். அல்ஹம்துலில்லாஹ். இந்து முண்ணனி காரருக்கு இஸ்லாம் முண்ணனியாயனது. அவருடைய ஹிதாயத்திற்காக துஆ செய்வோமாக!

படிக்கவேண்டிய பாடம்:

அவர் எடுத்துச்சென்ற மால்கம் X என்ற புத்தகத்தை நான் ஏற்கனவே படித்ததால் என்னால் பதில் சொல்ல முடிந்தது. நாம் அறிந்திருக்கவேண்டிய முக்கிய பண்பு.

Malcolm_X_NYWTS_4

மால்கம் X

நாம் கொடுக்கக்கூடிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தையோ புத்தகத்தையோ நாம் முழுவதாக படித்திருக்கவேண்டியது ஒரு அழைப்பானனின் கடமையாகும்.

அல்லாஹ்வும் கூறுகின்றான்:

61:2 .ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?

________________________________________

61:3 .நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது .

மால்கம் X என்று சொல்லும்போது அது யார் என்று கேட்கலாம் எனவே மால்கம் X பற்றிய சிறிய அறிமுகத்தோடு அடுத்தவாரம் சந்திப்போம்.

இறைப்பணியில்

அபூ ஜக்கியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh