بسم الله الرحمن الرحيم
Saturday 16th February 2019 | 10 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right
இஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்! (பாகம் -2)அச்சிடுகமின்-அஞ்சல்
30 மே 2012 காலை 08:33

ஹெம்பர் கூறுகிறார்..

நமது பிரிட்டானிய பேரரசு மிகப்பெரியது. நமது கடற்பரப்புகளின் மேல் உதிக்கும் ஆதவன் நமது கடற்பரப்புகளின் கீழ்தான் அடைகிறான். எனினும் நமது பிரிட்டிஷ் பேரரசானது தனது காலனிய நாடுகளான இந்தியா, சீனா, மத்திய கிழக்கு பகுதிகளில் பலவீனமாகவே உள்ளது. இந்த நாடுகள் நமது ஆளுகையின் கீழ் முழுமையாக இல்லை. எனினும் இவ்விடங்களில் நாம் மிக ஊக்கமான, வெற்றிகரமான கொள்கைகளையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். விரைவில் இவையனைத்தும் நம் வசம் முழுமையாக வந்துவிடும்.

இரண்டு விஷயங்கள் முக்கியமானவை

1. நாம் ஏற்கெனவே கைப்பற்றிய இடங்களை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பது.

2. நம் வசம் வராத பகுதிகளை கைப்பற்ற முயற்சிப்பது. சுதந்திர நாடுகளின் திருச்சபையானது மேற்கண்ட இரு நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு காலனிய நாடுகளிலிருந்து ஓர் ஆணையத்தை (COMMISSION) ஏற்படுத்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

திருச்சபையில் நான் இணைந்தவுடன் திருச்சபையின் தலைமை பாதிரி என்னை முழுக்க நம்பியதோடு கிழக்கு இந்தியாவில் உள்ள நமது வாணிபக் குழுமத்தின் நிர்வாகியாக என்னை நியமித்தார்.

வெளிரங்கத்தில் அது ஒரு வாணிபக் குழுமம் தான். ஆனால் அதன் உண்மையான நோக்கம் என்னவெனில் இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதேயாகும்.

எமது அரசானது இந்தியாவைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியா எனும் நிலப்பரப்பு பல்வேறு தேசிய இனங்களும், பல்வேறு மொழியினரும் முரண்பட்ட விருப்பங்களும் கொண்ட மக்களடங்கிய ஒரு நாடாகும்.

அதேபோல் சீனாவும் ஒரு பொருட்டல்ல. சீனாவின் மதங்கள் பௌத்தமும், கன்பூஷியஸூம் ஆகும். இவ்விரண்டும் ஒரு பெரிய அச்சுறுத்தலே அல்ல. இவ்விரண்டும் இறந்து போன மதங்கள் என்பதோடு வாழ்க்கையைப் பற்றி எக்கவலையும் அவற்றிற்கில்லை. அத்துடன் வெறும் சொற்பொழிவுகளோடு அவை நின்று விடுகின்றன.

இக்காரணங்களினாலேயே இவ்விரு நாடுகளிலும் வாழும் மக்கள் நாட்டுப்பற்று குறித்து மிக அரிதாகவே கவலை கொள்பவர்களாக இருக்கின்றனர். நமது பிரிட்டானிய அரசிற்கு இவ்விரண்டுமே ஒரு பொருட்டல்ல. எனினும் பின்னர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் பொருட்படுத்தாது இருக்கப் போவதில்லை.

எனவே இந்நாடுகளில் வேற்றுமை, அறியாமை, வறுமை, நோய்களைப் பரப்பிடும் நீண்ட கால திட்டங்களை நாம் வகுத்திடுகின்றோட். இவ்விரு நாடுகளின் பாரம்பரியங்களையும், பழக்க வழக்கங்களையும் நாம் கடைபிடிப்பது போன்று நடிப்பதன் மூலம் நமது நோக்கங்களை நாம் எளிதாக மறைக்க இயலும்.

இஸ்லாமிய நாடுகள் தான் எங்களது சிந்தையை ஆட்டிப்படைத்தன. நோயாளியான உதுமானியப் பேரரசுடன் சில ஒப்பந்தங்களை நாம் ஏற்கெனவே போட்டுள்ளோம். அவையனைத்தும் நமது நன்மைக்கே.

Saladdin_Empire

சுதந்திர நாடுகளின் திருச்சபையைச் சார்ந்த அனுபவம் வாய்க்கப்பெற்ற உறுப்பினர்கள் சிலர். இந்த நோயாளி (உதுமானியப் பேரரசு) இன்னும் ஒரு நூற்றாண்டிற்குள்ளேயே காலாவதியாகிவிடும் என முன்னறிவிப்பு (எதிர்வு கூறல்) செய்தனர்.

அத்துடன் ஈரானிய அரசுடனும் நாம் சில கமுக்கமான ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். ஈரானிலும், துருக்கியிலும்  Freemason (சுதந்திர சிற்பிகள் என்ற யூத நிழல் அமைப்பின்) உறுப்பினர்களை அரசியல் விற்பன்னர்களாக, அரசுப்பதவிகளில் வீற்றிருப்பவர்களாக ஆக்கியுள்ளோம்.

கையூட்டு, திறமையற்ற நிர்வாகம், போதிய மார்க்க அறிவின்மை, கடமைகளில் அலட்சியம், பெண்ணாசை போன்ற தீய பழக்க வழக்கங்களின் மூலம் இவ்விரு நாடுகளின் முதுகெலும்புகளும் முறிந்தே போய்விட்டன.

இத்தனையையும் தாண்டி நாங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளை எங்களின் நடவடிக்கைகள் எங்களுக்கு தந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1. முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது அபார பற்று கொண்டுள்ளனர். கிறிஸ்தவத்தின் மீது ஒரு பாதிரி அல்லது துறவி எவ்வளவு பிடிப்புடன் இருப்பாரோ, அந்தளவிற்கு ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்துடன் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளான்.

ஷீஆக்களுடன் சந்திப்பு:

கிறிஸ்தவ மதத்தைத் துறப்பதைக் காட்டிலும் உயிரை விடுவதே மேல் என கருதும் துறவிகளும் பாதிரிகளும் கிறிஸ்தவத்தில் உண்டு ஈரானின் ஷீஆக்களும் அந்த அளவிற்கு மிகவும் ஆபத்தானவர்களே. ஷீஆக்களைப் பொருத்தவரைக்கும் அவர்கள் கிறிஸ்தவர்களை வெறுப்பூட்டும் அழுக்காகவே காண்கின்றனர். அழுக்கிலிருந்து விடுபடவே தன்னாலியன்ற அனைத்தையும் ஒருவர் செய்வதென்பது இயல்பானதொன்றாகும்.

ஒரு ஷீஆவிடம் ஒரு தடவை நான் கேட்டேன். 'கிறிஸ்தவர்கள் நீங்கள் ஏன் அம்மாதிரி பார்க்கின்றீர்கள்?'

அதற்கவர் அளித்த விடை என்னவெனில், 'இஸ்லாத்தின் தூதர் அவர்கள் மிகச் சிறந்த அறிவாளியாவார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களை ஒரு ஆன்மீக அழுத்தத்தின் கீழ் வைத்திருந்தார்கள். அதன் நோக்கம் என்னவெனில் சீரிய வழியான அல்லாஹ்வின் நெறி இஸ்லாத்தை அவர்கள் கண்டுணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காகத்தான்.

ஆபத்தானவராக கருதப்படும் ஒரு நபரை அவர் கட்டுப்படுவதாக உறுதிமொழி அளிக்கும் வரைக்கும் ஆன்மீக அழுத்தத்தின் கீழ் வைப்பதென்பது உண்மையிலேயே ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகும்.

நான் கூறும் இந்த 'அழுக்கு' என்பது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றல்ல. மாறாக அது ஓர் ஆன்மீக ஒடுக்கு முறையாகும். ஷீஆக்களின் நம்பிக்கைப்படி கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, அனைத்து நிராகரிப்பவர்களும், ஏன் ஈரானிய மூதாதையர்களான மஜூஸிகள் (magins)  கூட தூய்மையற்றவர்களே.

நான் அந்த ஷீஆவிடம் கேட்டேன். 'கிறிஸ்தவர்கள் இறைவன். தூதர்கள் நியாயத்தீர்ப்பு நாள் என அனைத்தையும் நம்பும் போது அவர்களை ஏன் தூய்மையற்றவர்கள் என நீங்கள் கருத வேண்டும்? அதற்கவர், 'கீழ்க்கண்ட இரு காரணங்களுக்காக அவர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

 ஹள்ரத் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பொய்யான பழிகளை சுமத்துகின்றனர்.

'யாரேனும் உன்னைத் துன்புறுத்தினால் பதிலுக்கு நீ அவனை துன்புறுத்து' என்ற அடிப்படையில் மேற்கண்ட அக்கிரமமான அவதூறுக்கு விடையளிக்கும் முகமாகத்தான் 'நீங்கள் தூய்மையற்றவர்கள்' என திரும்பக் கூறுகிறோம்.

 இறைவனின் தூதர்கள் மீது கிறிஸ்தவர்கள் மோசமான அபாண்டங்களை சுமத்துகின்றனர் எடுத்துக்காட்டாக.

ஈஸா (இயேசு) அலைஹிவஸல்லம் அவர்களை மதுவருந்தினார். சபிக்கப்பட்டார். சிலுவையிலறையப்பட்டார் எனக் கூறுகின்றனர்.

இதைக் கேட்டு பெரும் திகைப்படைந்த நான் கிறிஸ்தவர்கள் அப்படிக் கூறுவதில்லை என் மறுதலித்தேன்.

எனினும் அவர் விடவில்லை. 'ஆம்! அவர்கள் செய்கின்றனர்.! உனக்குத் தெரியாது. புனித விவிலியத்தில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது' என்றார்.

நான் மௌனமாகி விட்டேன். ஏனெனில் இந்த விவாதத்தை நான் தொடர விரும்பவில்லை.

இல்லையெனில் இஸ்லாமிய பாணி உடையணிந்திருந்த என்னை அவர்கள் ஐயப்பட தொடங்கியிருப்பார்கள். எனவே அவ்வகையான விவாதங்களை தவிர்த்துவிட்டேன்.

அல்லாஹ் அத்தகைய செயல்களிலிருந்து நம்மை காப்பானாக!

இன்ஷா அல்லாஹ் வளரும்...

ஆக்கம் : எஸ்.எம்.ஏ.  முஹம்மத் பஷீர் ஆரிஃப்.

செல்பேசி +91 99628 41761            

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com