بسم الله الرحمن الرحيم
Sunday 21st July 2019 | 18 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
இஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்! (பாகம் -3)அச்சிடுகமின்-அஞ்சல்
05 ஜூலை 2012 மாலை 03:15

ஹெம்பர் கூறுகிறார் :-

ஒரு காலத்தில் இஸ்லாம் என்பது ஆட்சி. அதிகாரம் கொண்ட நெறியாக இருந்தது. முஸ்லிம்களும் மதிக்கப்பட்டனர். இத்தனை கண்ணியம் வாய்ந்த மக்களிடம் 'தற்சமயம் நீங்கள் அடிமைகளே' என சொல்வது மிகக் கடினமானதொன்று.

அத்துடன் ஒரு காலத்தில் நீங்கள் பெற்ற கண்ணியமும், அந்தஸ்தும் சில சாதகமான அம்சங்களின் விளைவேயன்றி வேறில்லை. இப்பொழுது அந்நாட்களெல்லாம் கடந்து போய்விட்டன. அவை என்றுமே திரும்ப வரப்போவதில்லை என அவர்களின் வரலாற்றை பொய்ப்பித்து உரைப்பது என்பதும் அசாத்தியமானதொன்றாகும்.

 உதுமானியர்களும் ஈரானியர்களும் அரசு ரீதியாக பெருமளவில் பலவீனப்பட்டிருந்தாலும் எங்களது சதித்திட்டங்களை கண்டுபிடித்து முறியடித்து விடுவார்களோ என மிகவும் பதைபதைத்துக் கொண்டிருந்தோம்.

ஏனெனில் அவர்களிடம் சொத்து, ஆயுதம், அதிகாரம் கொண்ட ஒரு மைய அரசு இருந்ததினால் நாங்கள் அவர்கள் பலவீனமடைந்து விட்டார்கள் என்பதை அறுதியாக கருதவில்லை.

 இஸ்லாமிய அறிஞர்களைப் பற்றி நாங்கள் மிகவும் சஞ்சலத்துடனேயே இருந்தோம். ஏனெனில் இஸ்தான்புல், அல் அஜ்ஹர், இராக், டமாஸ்கஸில் உள்ள அறிஞர்கள் எங்களது இலக்கை அடைவதில் தாண்டவியலாத தடைக்கற்களாக இருந்தனர்;.

அவர்கள் இவ்வுலகின் நிரந்தரமற்ற இன்பங்களுக்கும், அலங்காரஙக்ளுக்கும் எதிராக இருந்ததோடு குர்ஆன் அல்கரீம் வாக்களித்த சுவனபதியின் மீதே தங்களது பார்வையை பதித்திருந்தனர்.

இதன் விளைவாகத்தான் அவர்கள் தங்களது கொள்கையில் இம்மியளவும் கூட விட்டுக் கொடுக்க ஆயத்தமாக இல்லை.

மக்கள் அவர்களைப் பின்பற்றினார்கள். ஆட்சியாளர்களும் அவர்களுக்கு அஞ்சினர்.

கிறிஸ்தவர்களின் தளரா முயற்சி

எனவே நாங்கள் தொடர்ச்சியாக மாநாடுகளை ஏற்பாடு செய்தோம். நாங்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ஏமாற்றத்திலேயே முடிவடைந்தது. எங்களுக்கான பாதையும் மூடியே இருந்தது.

எங்களின் உளவாளிகளிடமிருந்து எங்களுக்கு வந்த அறிக்கைகள் அனைத்தும் விரக்தியூட்டுபவையாகவே இருந்தன. எங்களின் மாநாடுகளிலும் பலனில்லை. எனினும்; நாங்கள் நம்பிக்கையிழந்து விடவில்லை. எவ்வாறெனில் நாங்கள் ஆழ்மூச்செடுத்து பொறுமை காக்கும் பழக்கத்;தை வளர்த்துக் கொண்டவர்களாவோம்.

எங்களது மாநாடுகளில் ஒரு மாநாட்டில் அமைச்சரும், உயர்மட்ட பாதிரிகளும், சில நிபுணர்களும் கலந்து கொண்டனர். அப்போது அதில் இருபது பேர் இருந்தோம். எங்களது மாநாடு மூன்று மணி நேரம் நீடித்தது. எனினும் உருப்படியான தீர்வொன்றும் எட்டப்படாமலேயே அது முடிந்தது.

அந்நிலைமையிலும் ஒரு பாதிரி சொன்னார். 'கவலைப்படாதீர்! முன்னூறு வருடங்கள் வரை நீடித்த துயரங்களுக்குப் பிறகே மஸீஹூம் (இயேசு) அவருடைய தோழர்களும் அதிகாரத்தைப் பெற்றனர்.

முன்னூறு வருடங்கள் கழிந்தாலும் சரி, நிராகரிப்பாளர்களான முஸ்லிம்களை அவர்களின் மைய நிலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான நல்லாசியை பரலோகத்திலிருந்து நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் மஸீஹ்நமக்குத் தருவார்.

திடமான நம்பிக்கையுடனும், நீண்ட நெடிய பொறுமையுடனும் நம்மை நாம் ஆயத்தமாக்கிக் கொள்வோம்.

அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு நாம் எல்லா வகையான ஊடகங்களையும் கைவசமாக்க வேண்டும். எல்லா வழிமுறைகளையும் கையாள வேண்டும்.

முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தை பரப்ப முயற்சிக்க வேண்டும். நூற்றாண்டுகள் பல கடந்தாலும் சரி நாம் நமது லட்சியத்தை அடைந்தால் போதும். ஏனெனில் தங்களது குழந்தைகளுக்காக தந்தையர் உழைக்கத்தானே வேண்டும்.

ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல தூதுவர்களும், மத அறிஞர்களும் கலந்து கொண்ட மாநாடொன்று நடைபெற்றது. எனது நல்வாய்ப்பு அதில் நானும் கலந்து கொண்டேன். அது எவ்வாறெனில் எனக்கும் அமைச்சருக்குமிடையே நல்ல உறவு இருந்தது.

அம்மாநாட்டில் ஸ்பெயினில் நடந்ததைப் போலவே முஸ்லிம்களை பல குழுக்களாக சிதறடித்தது. அவர்களது நம்பிக்கையை இழக்க வைத்து அதன் பிறகு கிறிஸ்தவர்களாக்கி விடுவது என்பன போன்ற பல திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.

எனினும் எதிர்பார்த்த மாதிரி முடிவுகள் எட்டப்படவில்லை. இந்த மாநாட்டில் இடம்பெற்ற அனைத்து உரையாடல்களையும் எனது வேறொரு நூலில் பதிந்துள்ளேன்.

பூமியெங்கும் தனது வேர்களை ஆழப்பரப்பி பதித்திருக்கும் ஒரு மரத்தை உடனே கிள்ளியெறிவது என்பது கடினமே.

எனினும் நாம் சிரமங்களை எளிதாக்கி அவற்றைத் தாண்ட வேண்டும். கிறிஸ்தவம் பரப்பப்படவே வந்துள்ளது என் நமது இறைவனான மஸீஹ் வாக்களித்துள்ளார். கிழக்கிலும், மேற்கிலும் காணப்படும் மோசமான நிலைமைகள் முஹம்மதிற்கு உதவியுள்ளன. தற்சமயம் அந்த நிலைமை மாறியுள்ளது. அவர்களை பிடித்த இஸ்லாம் எனும் தொல்லையும் தொலைந்தே விட்டது. நிலைமைகள் இன்று முற்றிலும் மாறியிருப்பதை நாம் மகிழ்வுடன் காண்கிறோம்.

மற்ற கிறிஸ்தவ அரசுகளும் நமது திருச்சபையும் செய்த பாரிய முயற்சி, சிரமங்களின் விளைவாக முஸ்லிம்கள் தற்சமயம் வீழ்ச்சி முகத்தில் உள்ளனர். மாறாக, கிறிஸ்தவர்களோ ஏறுமுகத்தில் உள்ளனர். பல நூற்றாண்டுகளாக நாம் தொலைத்திருந்த இடங்களை மீட்கும் நேரமிது.

இஸ்லாத்தை கருவறுக்கும் அந்த ஆசிர்வதிக்கப்பட்ட பணியின் முன்னோடி என்ற பெருமை வலிமை வாய்ந்த பிரித்தானிய சாம்ராஜ்யத்தையே சாரும்.

முஸ்லிம்களை சிதறடிப்பதற்குத் தேவையான தகவல்களை சேகரிக்கும் ஒற்றனாக என்னை எகிப்து, இராக், ஹிஜாஸ், இஸ்தான்புல் போன்ற பகுதிகளுக்கு ஹிஜ்ரி 1122 (1710 கி.பி) ஆண்டு சுதந்திர நாடுகளின் திருச்சபைக்கான அமைச்சர் அனுப்பினார்.

அதே காலகட்டத்தில் அதே நோக்கத்திற்காக தைரியமும், லாவகமும் வாய்ந்த ஒன்பது பேரை திருச்சபை நியமித்தது. எங்களுக்கு தேவையான பணம், தகவல்கள், வரைபடத்துடன் ராஜதந்திரிகள், அறிஞர்கள், கோத்திர தலைவர்களின் பெயர்களடங்கிய பட்டியலையும் தந்தனர்.

இதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். எங்களது செயலாளரிடம் நான் விடை பெற்றுச் செல்லும் போது அவர் கூறினார். 'நமது நாட்டின் எதிர்காலம் உங்களது வெற்றியைப் பொறுத்து தான் அமையும். எனவே நீங்கள் உங்களது அதி கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்'.

இஸ்லாமிய கிலாஃபத்தின் நடுவண் நிலையமான இஸ்தான்புல்லுக்கு நான் கடல் பயணத்தை துவங்கினேன். எனது அடிப்படைக் கடமைகளுக்கு அப்பால், அங்குள்ள முஸ்லிம்களின் தாய் மொழியான துருக்கியை நான் நன்கு கற்ற வேண்டியிருந்தது.

ஏற்கெனவே லண்டனில் குர்ஆனிய மொழியான அரபி, ஈரானியர்களின் மொழியான பார்ஸி, துருக்கி ஆகியவற்றை பெருமளவு கற்றிருந்தேன். எனினும் ஒரு மொழியை கற்பது என்பது வேறு அம்மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் பேசுவது போல் பேசுவதென்பது வேறு. முந்தியதற்கு சில வருடங்களே பிடிக்கும். ஆனால் பிந்தியதற்கோ மிக நீண்ட காலம் ஆகும். மக்கள் என்னை ஐயப்படாமலிருக்க நான் துருக்கி மொழியை அதன் அனைத்து நுணுக்கங்களோடும் கற்க வேண்டியிருந்தது.

இன்ஷா அல்லாஹ் வளரும்...

ஆக்கம் : எஸ்.எம்.ஏ.  முஹம்மத் பஷீர் ஆரிஃப்.

செல்பேசி +91 99628 41761            

மின்னஞ்சல்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com