بسم الله الرحمن الرحيم
Saturday 23rd February 2019 | 17 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயலரே விழிமின்! எழுமின்!! (பாகம் -1)அச்சிடுகமின்-அஞ்சல்
20 பிப்ரவரி 2012 மாலை 06:48

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. அல்-குர்ஆன் (13:11)

காயல்பட்டினம், நமதூரின் பெரை எத்தனைமுறை சொன்னாலும் ஒருவித உளப்பூரிப்பு நமக்குள் ஏற்படத்தான் செய்கிறது. காரணம் அத்தகைய நற்பெயரையும் புகழையும் நமதூருக்கென்றே இறைவன் தந்திருக்கின்றான் - அல்ஹம்துலில்லாஹ். நம் இந்தியத் திருநாட்டிலுள்ள முஸ்லிம் ஊர்களில் நமதூர் ஒரு முன்மாதிரிப் பட்டணம் என்றால் அது மிகையில்லை என்று சொல்லலாம். இருப்பினும் அத்தகைய நற்பேர்கள் நம் சந்ததிகளில் தொட்டு தொடர வேண்டுமெனில் நம்மிடையேயுள்ள பலஹீனங்கள் கலையப்பட்டு, நம்மை, நமதூரை ஆட்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகளோடு வருங்கால நம் தலைமுறைக்கு வழிகாட்டிச் செல்வது நம்மீது அவசிய கடமையாகும், நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனுமாகும்.

எனவே நமதூருக்கு இன்றைய அவசியத் தேவை ஒரு மாபெரும் எழுச்சி. அடபோங்கப்பா மறுமலர்ச்சி (Renaissance) புரட்சி (Revolution) என்று எத்தனையோ பேர்கள் பேசியும் எழுதியும் விட்டார்கள், இதில் நீங்கள் வேறு என்னத்த சொல்லப் போறீங்க என்று முகம் சுழித்துவிடாமல் ஆக்கத்தை இறுதிவரை பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களையும் தவறாது சொறியும் படைப்பாற்றல் கொண்ட இணைய வாசர்களை நமது காயல்நியூஸ் இணையதளத்திற்கு தந்தமைக்காக வல்ல அல்லாஹ்வை முதலில் புகழ்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் கணக்குகள் கேட்கப்படுவதற்கு முன்னர் நீங்களே உங்கள் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றுக்கு இணங்க "காயலரே விழிமின்! எழுமின்! " என்ற இவ்வாக்கம் நம்மை நாம் சுயபரிசோதனை செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதேயன்றி வேறில்லை. நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளும் எண்ணத்திலோ அல்லது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலோ எழுதப்பட்டது அல்ல என்பதை இங்கு மிக அழுத்தமாக பதிவு செய்கிறோம். இக்கட்டுரையின் மூலம் இணைய வாசகர்களாகிய உங்களின் மேலான கருத்துக்கள் பயனுள்ள பின்னூட்டங்களாக அமையட்டும். இங்கு ஆய்வு செய்யப்படும் விஷயங்களுக்குத் தீர்வுகளாக உங்கள் எண்ணங்கள் வெளிப்படட்டும் இன்ஷா அல்லாஹ் என்று கூறி தலைப்பிற்குள் நுழைவோம்.

காயலரின் கல்வி மற்றும் அரசுதுறைச் சார்ந்த விழிப்புணர்வு

நமது பிள்ளைகளின் ஒழுக்கம், கல்வித்தரம் மற்றும் மதிப்பெண்கள் போன்றவற்றில் அக்கரை காட்டுவதாக எண்ணிக்கொள்ளும் நம்மில் பலரிடம், அரசுதுறை சார்ந்த கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு சார்ந்த விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லை என்பது உண்மையிலும் உண்மை. ஆங்கலத்தில் ஒரு பழமொழி உண்டு Education is a progressive discovery of our own ignorance அதாவது நம் சொந்த அறியாமைபற்றிய ஒரு முற்போக்கான கண்டுபிடிப்பே கல்வி ஆகும். நாம் என்ன படிக்கிறோம், எதற்காக படிக்கிறோம் என்பதையே நாம் அறியாமல் இருந்தால் அந்த கல்வியை படித்து என்ன பயன்.

சொல்லப்போனால் நமதூர் மாணவர்களை தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் எந்திரங்களாக மாற்றியதில் வெற்றி கண்டிருக்கிறோம் - அவ்வளவுதான். இது சற்று தடித்த வார்த்தையாகத் தெரியலாம், இருப்பினும் நம் சமூக முன்னேற்றத்திக்கு அவசியமான கல்விகளுக்கு முக்கியத்துவம் தராமல் படிப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் துறைகளையே நமதூர் மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதும், அத்தகைய பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்களை பெருவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக போதிக்கப்பட்டு நம் மாணவர்கள் வார்த்தெடுக்கப்படுகின்றனர் என்பதையும் எவரும் மறுக்க இயலாது.

உதாரணமாக எனது மகனை மருத்துவராக, அல்லது பொறியியளராக ஆக்குவதற்காக இத்தனை வருடங்கள் இவ்வளவு பணத்தை நான் முதலீடு (Investment) செய்துள்ளேன், அவன் மூலம்தான் இனி நான் போட்ட காசை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுபவர்கள் நம்மிடையே இருப்பதை யாரும் மறுக்க இயலுமா? படிக்கும் போதே பணம் மட்டும் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் வளரும் மாணவர்களால் எத்தகைய சமுதாய சீர்திருத்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அரசு துறைசார்ந்த படிப்புகள் IAS, IPS வருடாவருடம் வழக்கம்போல் நம்மாணவர்களுக்கு எட்டாகனியாகத்தான் இருக்கின்றது. நமதூரைச் சார்ந்த வழக்குரைஞர்கள் எத்தனை பேர் என்பதை வரல்விட்டு எண்ணிவிடலாம். காவல் துறையில் காயலரின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து பூஜ்யம் என்ற நிலைதான். தாசில்தார், வட்டவழங்கல் அலுவல்கள், VO, RI போன்ற பணிகளுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவ்வாறு அனைத்து அரசு துறைசார்ந்த கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒரு விழிப்புணர்வு இல்லாமலேயே நாம் இருக்கிறோம். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெனில் நம் சொந்த விஷயயத்திற்காகவோ அல்லது பொதுநல சேவைகளுக்கோ அரசுத் துறைகளை அணுகி தீர்வுகாண்பதற்கு பிறரை சார்ந்து நிற்கும் நிலையில்தான் நாம் இன்றும் இருக்கிறோம்.

இதை வெளிப்படையாக நாம் சொன்னால், அடபோங்கப்பா ஆரம்பிச்சிட்டீங்களா! அரசு நமக்கென்று தனி இடஒதுக்கீடு தந்தால் இப்பணிகளுக்கு நம்மாணவர்கள் தானாகவே செல்ல மாட்டார்களா என்று சப்பைக்கட்டியும் அரசுவேலைகளில் லஞ்சம் வாங்கவேண்டிவரும் எனவேதான் அரசுபணிகளில் நம்மவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று கூறி வசதியாக வாயை அடைத்துவிடுவர். நாட்டில் லஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லையா? இடஒதுக்கீடு பெறாத பிற சமுதாயத்தைச் சார்ந்த எத்தனையோபேர் அரசுவேலைகளில் பணி செய்யவில்லையா என்ற சிந்தனைகள்கூட நம்மவர்களுக்கு வருவதில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம், மகன் 10 வகுப்பு படிக்கும்போதே ஒரு பாஸ்போர்ட் எடுப்பதும், நமதூரில் எல்லோரும் இன்ஜினியர் கோர்ஸ் எடுத்து படிக்கின்றனர் எனவே நம் பிள்ளையும் இன்ஜினியராக்கவேண்டும் என்று படிக்க வைப்பதும், பிறகு ஓரிரு ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு அவனை அனுப்பிவைத்துவிட்டு கல்யாண மாப்பிள்ளையாக ஊர்வர வைப்பது என்று இந்த அனிச்சை செயல்கள் இன்னும் தொடரத்தான் செய்கிறது.

அரசுதுறை பணிகளை விடுங்கள், நமதூரில் கடந்த 10 வருடங்களாக ஏற்பட்டுள்ள கல்வி புரட்சியால் அரசு பொதுத்தேர்வில் 1200 க்கு 1100 க்குமேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை யாராவது அறிய முற்பட்டதுண்டா? புரியும்படி வெளிப்படையாக சொல்வதென்றால் வருடா வருடம் நமதூரைச் சார்ந்த மாணவர்கள் எத்தனைபேர் மருத்துவர்களாக வெளியேறுகின்றனர்? அதில் ஊரில் தங்கி நமதூர் மக்களுக்காக சேவை செய்பவர்கள் எத்தனை பேர்? இதையாவது நாம் சிந்தித்ததுண்டா?. நமதூரில் ஒரு அவசரத் தேவைக்கு நமதூரைச்சார்ந்த மருத்துவர் கிடைக்காத பட்சத்தில் நமதூருக்கு சேவை புரிதல் என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டும்தான் தேன்சொட்ட இனிக்கிறது, செயல்பாட்டில் இல்லை என்பதுதானே உண்மை. நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் மலையேறி நாடு எனக்கு என்ன செய்ததது என்ற தலைகீழ் நிலையை இன்று பார்க்கிறோம். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் திருக்குறள் நம் சிந்தனைக்கு வருகிறது.

ஆக பயனுள்ள கல்வி பெறுதல், அரசு துறைசார்ந்த அலுவல்களில் அக்கரை கொள்ளுதல், நமதூர் கல்விமான்கள் ஆற்ற வேண்டிய சேவைகள் என்று கல்விசார்ந்த விஷயங்களில் நாம் பின்தங்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், காயல்பட்டினம் என்று நமதூரின் பெரைச் சொன்னாலே இனி உளப்பூரிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் நமக்கு வரத்தான் செய்கிறது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம்: நமது கட்டுரையாளர்,

அபூ ரைஹான்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com