بسم الله الرحمن الرحيم
Saturday 16th February 2019 | 10 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயலரே விழிமின்! எழுமின்!! (பாகம் -2)அச்சிடுகமின்-அஞ்சல்
22 பிப்ரவரி 2012 மாலை 05:24

பெண்களின் சமூக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு

நமதூரின் ஆண்களில் கனிசமானோர் பணி நிமித்தம் நம் குடும்பத்தினரை விட்டும் பிரிந்து வசித்து வருகிறோம். இந்நிலையில் நம் வீட்டோடு தவிர்க்க முடியாத தொடர்புடையவர்கள் என்று அறியப்படும் தபால்காரர்கள், காய்கறிவிற்பவர், டோர் டெலிவரி செய்யும் நபர்கள், பால் போடுபவர், பேப்பர் போடுபவர், மீன்சார மீட்டர் ரீடிங் பணியாளர், செல்போன் ரீசார்ஜ் பண்ணுபவர் என அந்நிய நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை நம் பெண்களுக்கு அளித்துள்ளோமா? சற்று சிந்திக்க வேண்டும்.

அவ்வளவு ஏன் அருகிலுள்ள ஊர்களுக்கு பேருந்தில் பயணம் செய்யும் போது கடைபிடித்து ஓழுகவேண்டிய பண்புகள், பாதுகாப்புகளாவது நம் பெண்களுக்குத் தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை. எங்கே, எப்போது, யாரிடம் எதை பேசவேண்டும், எதை பேசக் கூடாது என்ற அளவுகோள்களை எல்லாம் நம் பெண்கள் பொது இடங்களில் கடைபிடிப்பதாக தெரியவில்லை.

நமதூரின் பெண்கள் குறித்து பொத்தாம் பொதுவாக நாம் எழுதிவிட்டோம் என்று வருத்தப்படவேண்டாம். நமதூரின் அனைத்து பெண்களையும் இங்கு நாம் குறிப்பிடவில்லை. சில திறமையான சிந்தனைத்திறன் கொண்ட பெண்மணிகளும் நமதூரில் உண்டு என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் சதவிகிதத்தின் அடிப்படையில் நமதூரின் பெரும்பான்மையான பெண்கள் சமூக விழிப்புணர்வு இன்னும் பெறவில்லை என்று சொல்கிறோம்.

உதாரணமாக, ஒருவர் அரசு அதிகாரி போன்ற தோற்றத்தில் சில கோப்புகளோடு நம் வீட்டின் கதவை தட்டினால் அவர் யாரென்று அறிவதற்கு முன்னரே அவர் கேட்கும் அனைத்து தகவல்களையும் அளித்துவிடுகிற பரிதாப நிலையில் தான் இன்றும் நம் பெண்களில் பலர் உள்ளனர். தன் கணவருக்குத் தெரியாமல் தன் தங்க நகைகளை வங்கிகளில் வட்டிக்கு அடமானம் வைத்து அதை திருப்ப முடியாமல் அந்நகைகள் மூழ்கிபோன பரிதாபங்கள். பெற்றோருக்குத் தெரியாமல் காதல் கத்தரிக்காய் என்று அந்நிய ஆடவரிடம் கற்பிழந்து, இறுதியில் ஈமானைகூட இழந்து வீதிக்கு வந்த மங்கையர்கள். பெறுகிவிட்ட திடீர் தலாக்குகள் என பல நிகழ்வுகளையும் நாம் ஆதாரமாக இங்கு தரலாம் ஆக்கத்தின் நீளம் கருதி அவைகளை இங்கு தவிர்க்கிறோம்.

ஒரு வருடத்திற்கு நமதூரிலுள்ள அரசு பணியாளர்களின் ஊதியங்களையும், அரசுசார்ந்த திட்டங்களின் நிதிகளையும் கணக்கிட்டால் சில கோடிகளை தாண்டும். நம் நாட்டிலேயே வாய்ப்புகள் பல இருந்தும் குடும்பத்தை பிரிந்து பாலைவன சுடுமணலுக்குத்தான் செல்வோம் என்று நம்மில் பலர் தீர்மானித்துவிட்டதால் நமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் ஏராளம் தாராளம். எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை தானே.

சரி பெண்களுக்குதான் சமூக விழிப்புணர்வு இல்லை ஆண்கள் மட்டும் சமூக விழிப்புணர்வை பெற்று சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்களோ என்று நீங்கள் கேட்கலாம். நமதூரில் வசிப்பவர்களில் அதிகமானோர் பெண்களாகவும், ஆண்களுக்கு இத்தகைய விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் பெண்களைவிட அதிகம் இருப்பதையும் கவனத்தில் கொண்டே இங்கு பெண்களை முன்னிலை படுத்தியுள்ளோம். இருப்பினும் நம் குடும்பப் பெண்களின் விழிப்புணர்வு இல்லாமைக்கான காரணங்களில் சரிசமமான பங்கு அந்தந்த குடும்பங்களின் ஆண்களையும் சாரும் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

மார்க்க ரீதியான விழிப்புணர்வு

இதுபோன்று நமதூரின் தற்போதைய வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் மத்தியில் மார்க்க ரீதியான விழிப்புணர்வையும் சிறிது ஆராய்வோம். கவ்சல்யா சுப்ரஜா ராமபூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே, உத்திஷ்ட நரசன்டுலா கர்தவ்யம் தைவம் அஹ்னிகம் - இது வேறு ஒன்றமில்லை. பஜ்ரு வேளையில் சுபுஹூ தொழுகைக்காக நாம் எழும் நேரத்தில் நமதூர் புறநகர் கோயில்களில் சப்தமாக ஒலிக்கும் சுப்ரபாதம்தான் இது. கட்டிட கூலிதொழில் செய்தும், வயலில் நாற்று நட்டியும் தம் குடும்பத்தை காப்பாற்றும் மாற்றுமத சகோதரிகள் மார்கழி மாதம் பணிப்பொழிவையும் பொருட்படுத்தாது அதிகாலையில் தங்கள் குலக்கோயில்களில் குடும்பத்தோடு சென்று வழிபாடு செலுத்துவதை பார்க்கலாம். அதேபோன்று நமதூர் சிங்கித்துறைபகுதி உட்பட நமதூரை சுற்றி வசிக்கும் கிருஸ்தவ நண்பர்களையும் அவர்கள் தங்கள் மதத்தில் காட்டும் பக்தியையும்  நாம் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் நமதூர் மக்களின் நிலை என்ன? வருடத்தின் ரமழான் மாதம் மட்டும்தான் நம் அனைவருக்கும் பயபக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. இது உண்மையா இல்லையா?

மஃரிபு தொழுகைக்காக பள்ளிவாயிலுக்கு வரும் கூட்டத்தை சுபுஹூ தொழுக்கைக்கு காணமுடிவதில்லையே ஏன்? சுபுஹூ தொழுகைக்காக தன் கணவனை எழுப்பிவிடும் மனைவிமார்கள் நமதூரில் எத்தனை? தொழுகை கடமையான நிலையில் சுபுஹூ தொழாமல் உறங்கிக்கொண்டிருக்கும் தம் பிள்ளைகளை பள்ளிவாயிலுக்குச் செல்ல பணிக்கும் தாய்மார்கள் எத்தனைபேர்?. இருப்பினும் நம் குழந்ததைகளுக்கோ Early to bed and early to rise, makes a man healthy, wealthy and wise என்ற பாடலை மட்டும் மறக்காமல் சொல்லிக் கொடுப்போம்.

இது ஒரு புறமிருக்க அதிகாலை தேநீருக்கான பாலை முற்கூட்டியே சேமிக்க வழியிருந்தும், பலவீடுகளுக்கு அதிகாலை 5 மணிக்கு முன்னரே பால் வந்து சேரும் நிலையிலும் பஜ்ரு தொழுகையை முடித்த கையோடு பெரும்பாலான ஆண்கள் தேநீருக்காக டீக்கடைகளை நோக்கி விரைவதின் இரகசியம் என்ன? வீட்டில் நம் பெண்கள் அவ்வளவு பிஸியா? அல்லது கனமான மூட்டைகளை தூக்கியும், வயல்களில் தினம் நாற்றுநட்டி களைபறித்து உழைப்பதினால் ஏற்பட்ட களைப்பில் தினம் உறங்குகிறோமா? – சற்று சிந்தியுங்கள் மக்களே!.

சிறு மக்கமாம் காயல்பட்டினத்தின் ஐந்து வேளை தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழும் தொழுகையாளிகளின் சதவிகிதத்தை கண்கூடாக பார்த்துவிட்டு மிக வருத்தத்தோடு இவைகளை எழுதுகிறோம். அட போங்கங்க, மற்ற தொழுகையின் லட்சனமே இங்கு கிழியுது, இதுல நீங்கள் சுபுஹூ ஜமாஅத்தை சொல்றீங்கலாக்கும் என்ற நிலையில்தாம் நம்மில் பெரும்பான்மையினர் இருந்தால், கடமையான தொழுகை விஷயத்திலேயே நாம் கோட்டைவிட்டால், நம் சமூகத்திற்கு விழிப்புணர்வும், அல்லாஹ்வின் பாதுகாப்பும் எப்படி கிடைக்கும்?

மற்ற முஸ்லிம் நகரங்களை ஒப்பிடுகையில் நமதூரில் மார்க்க விழிப்புணர்வும் தொழுகையாளிகளும் அதிகம்தான் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை. அதே வேளையில் நமதூர் பெண்களிடம் ஒரு மாற்றுமத பிரச்சாரகர் இஸ்லாத்தை பற்றி விவாதித்தால் அதற்கு அழகிய முறையில் விளக்கம் அளிக்கும் அளவிற்கு நம் குடும்பத்தினரை பயிற்றுவைத்திருக்கிறோமா? இத்தகைய விழிப்புணர்வு நம்மிடையே ஏற்பட்டுள்ளதா? என்ற ரீதியில் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனவே நமதூர் பெண்களின் சமூக விழிப்புணர்வும் மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவை முழுமை பெறாமலேயே இருக்கின்றது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.....


ஆக்கம்: நமது கட்டுரையாளர்,

அபூ ரைஹான்


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com