بسم الله الرحمن الرحيم
Saturday 16th February 2019 | 10 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயலரே விழிமின்! எழுமின்!! (பாகம் -3)அச்சிடுகமின்-அஞ்சல்
26 பிப்ரவரி 2012 மாலை 11:17

நமதூரில் நிலவும் ஒற்றுமையின்மை - United we stand; divided we fall

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் - அல்குர்ஆன் (3:103)

காயலரே விழிமின் எழுமின் என்ற இத்தொடர்கட்டுரைகள் மூலம் நமதூர் மாணவர்கள் பயனுள்ள கல்வி பெறுதல், அரசு துறைசார்ந்த அலுவல்களில் அக்கரையின்மை, நமதூர் பெண்களின் சமூகவிழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களை நாம் முந்திய பதிவுகளில் கண்டோம். இவ்வாக்கத்தில் காயல்வாசிகளாகிய நம்மிடையே உண்மையான ஒற்றுமை உறவு பேணப்படுகிறதா என்பதையும் சற்று ஆய்வு செய்வோம். தலைப்பை பார்த்தவுடனேயே சிலருக்கு சந்தேகம் வரலாம், என்ன இது? நாம் சண்டை போட்டுக்கொண்டா வாழ்கிறோம் என்று, ஆக்கத்தை இறுதிவரை படியுங்களேன்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். அவ்வாறு கொண்டால் கோழைகளாகி விடுவீர்கள் உங்கள் பலம் குன்றிவிடும். துன்பங்களைச் சகித்துக் கொண்டு நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான் - அல்குர்ஆன் (8:46)

மேற்காணும் வசனம் வழியுறுத்துவது என்ன? நம்மில் உள்ள பல்வேறு கருத்துவேறுபாடுகளால் பலம் குன்றிய நிலையில் நாம் இருப்பதை உணர முடியவில்லையா? அல்லது நம்மிடையே கொள்கையால் பல பிரிவுகள் இருப்பதை மறுக்கத்தான் இயலுமா? என் கொள்கைதான் சரியானது, நாங்கள்தாம் கிரீன் சிக்னலில் சொர்க்கம் செல்வோம், இவன் அந்த கொள்கைக்காரன், இவர்களிடம் சம்பந்தம் எடுப்பதா? எங்கள் பள்ளியில் இவர்களெல்லாம் வந்து தொழக்கூடாது என்ற அறிவிப்புப் பலகைகள், மாற்று கொள்கையாளி ஸலாம் சொன்னால் அதற்குபதில் சொல்லாத முரட்டு கவுரவம் என்று மார்க்க ரீதியாக நம்மிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் நம்மிடையே கனன்று கொண்டிருப்பதை நம்மால் மறுக்க இயலுமா?

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்- அல்குர்ஆன் (30:32)

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்- அல்குர்ஆன் (6:159)

மேற்கண்ட திருக்குர்ஆன் போதனைகளை யார்தான் கண்டு கொள்கிறார்? சரி கொள்கை பிளவுகளை விடுங்கள், இன்று ஜமாஅத் ரீதியான மனமாச்சரியங்கள்கூட முளைக்கத் தோன்றிவிட்டதே. ஊரிலேயே எங்கள் ஜமாஅத் அல்லது எங்கள் பகுதிதான் சிறப்புக்குரிய தனித்துவம் வாய்ந்தது. இது எங்கள் ஜமாஅத் முடிவு, இவர் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்தவர், இவர்களெல்லாம் வந்தாவரத்தான்கள், இவர் குடும்பம் நல்ல குடும்பம், இவன் நல்ல குலத்து பையன் போன்ற அய்யாமுல் ஜாஹிலிய்யா கால அழைப்புகள் இன்றும் நம் காதில் விழத்தானே செய்கிறது. யார் நம்மைப்போன்று தொழுதும், நாம் நோக்கும் திசையை நோக்கியும், நாம் அறுத்த மாமிசத்தை புசிக்கவும் செய்கிறாரோ அவர் முஸ்லிம் (புகாரி) என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய பிரகடனத்தின் அழுத்தத்தை என்றாவது உணர்ந்திருக்கின்றோமா?

அஸ்ஸலாமு அலைக்கும் என்று புன்சிரிப்போடு ஸலாம் சொல்லிவிட்டு அந்த நபர் சற்று விலகியதும் அவரைப்பற்றி புறம்பேசும் நிலையில் நம்மில் பலர் இருப்பதை மறுக்க முடியுமா?. பொருளாதாரத்தில் சற்று குறைந்தவன் ஸலாம் சொல்லிவிட்டால், ஆகா இவன் எதற்கோ பீடிகை போடுகிறானோ? என்று சந்தேகிக்கும் மனநிலையில் நம்மவர்கள் இருக்கும் நிலையில் ஜமாஅத் பெருமை, குடும்பப்பெருமை, குலப்பெருமை, தெருப்பெருமைகள் எல்லாம் எங்கே வாழ்கிறது?

எதிலும் போட்டி பொறாமை, மனக்கசப்புகள், அடுத்தவரை பற்றி துருவித்துருவி ஆராய்தல், அடுத்தவரின் பொருளாதார ஏற்ற நிலையை பற்றி ஏங்குதல் என்று முன்மாதிரிப் பட்டினத்திற்கு சொந்தக்காரர்களே இருந்தால் நம்மிடையே ஒற்றுமை நிலைக்குமா? உதாரணமாக நமதூரில் ஒருவர் வீடுகட்டுகிறார் என்றால் அவர்வீட்டிற்கு வரும் செங்கற்கள், மணல் போன்றவற்றை அரசாங்கத்தின் அனுமதி பெற்று அவர் தெரு ஓரம் வைப்பதற்கு அவர் அண்டை வீட்டுக்காரர்களே தடையாக இருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயமில்லையா?. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் கடந்த 6 மாதங்களில் மட்டும் காவல்துறையினர் நமதூரிலிருந்து பெற்ற புகார்களின் எண்ணிக்கை நம்மை ஆச்சரியப்படுத்தும். எனது வீட்டிற்கு முன்னால் உங்கள் வீட்டு கட்டுமானப் பொருட்களை போடக்கூடாது என்று உப்புசப்பில்லாத விஷயத்திற்கே சண்டை போடும் குறுகிய மனம் படைத்தவர்களாக மாறிவிட்ட சமுதாயத்தில் அல்லாஹ் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்துவான் - சற்று சிந்தியுங்கள் மக்களே!.

நமதூரில் வீட்டுக்குவீடு முடுக்கு சண்டை, சகோதர சகோதரிகளுக்கிடையே பாகப்பிரிவினை பிணக்குள், குடும்பத்தில் ஏற்படும் சொத்துத் தகராறுகள், மாப்பிள்ளை பெண்பார்த்ததில் ஏற்பட்ட பிரச்சனைகள், திருமணம் முடிந்த கையோடு சம்மந்திகளிடையே நிலவும் சலசலப்புகள், பின்னர் தம்பதியினரிடையேகூட பிரிவுகள் என்று தொடர்கிறது சோகங்கள். பள்ளி - கல்லூரி - மத்ரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் ஒற்றுமையின்மை. சரி மாணவர்கள்தாம் ஏதோ சண்டையிடுகிறார்கள் என்றால் கற்பிக்கும் ஆசரியர்களுக்குள்ளும் உள்குத்துபோர்கள், பிரமுகர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களிடையே கூட ஈகோக்கள் என்று பிரச்சனைகளின் பட்டியல் முடிந்தபாடில்லை. ஓற்றுமையை நம் இஸ்லாமிய மார்க்கம் வழியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த சித்தாந்தமும் வழியுறுத்தவில்லை என்பதை அறிந்தும் நம்மிடையே பிரச்சனைகள் பிரிவுகள் பிளவுகள் என்று எங்கும் வியாபித்திருக்கின்றன. ஒற்றுமையைப் பற்றி ஒரு கவிஞர் இவ்வாறு சொன்னான்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு! உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல்  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் தாழ்வு!

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை! சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால் தாரணியில் அது புதுமை

நேசமும் அன்பும் நிலையாக வேண்டும் நேர்வழி வேண்டும் உறவில்! பேசிடும் அன்பு செயல் முறையானால் பேரின்பம் வேறெது உலகில்?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!

நாம் ஒன்றுபட்டே வாழவேண்டும் என்பதை வழியுறுத்தி எமது ஆரம்ப பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பயிற்றுவித்த சிறுகதை எம் நினைவிற்கு வருகிறது. அதாவது, ஒரு காட்டுப்பகுதியில் புறாக்கள் கூட்டம் கூட்டமாக வசித்தனவாம். வெள்ளை, நீலம் மற்றும் கருமை என பல வண்ணப் புறாக்களைக் கொண்ட அப்புறாக்கூட்டம் ஒன்றாக இறைதேடி வயல்வெளிப் பக்கம் செல்வது வழக்கம். அவற்றை பல நாட்கள் கண்ணுற்ற ஒரு வேடன், ஒருநாள் புறாக்களுக்குத் தேவையான தீனிகளுடன் வலையை விரித்திருந்தான். வழக்கம்போல் அன்றையதினம் அப்புறாக்கூட்டம் இறைதேட வயல்வெளிக்கு வரவே, தங்களுக்குத் தேவையான உணவுகள் குவிந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து மொத்தமாக வந்திறங்கின – ஆபத்தை உணராமல். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிய வேடனோ புறக்கூட்டத்தை நோக்கி கற்களை வீசி எறிய, சில புறாக்கள் பறக்க முயற்சிக்க, வேடன் விரித்த வலையில் அனைத்து புறாக்களும் சிக்கிக்கொண்டன.

அந்த இக்கட்டான சூழலில் புறாக்கள் அனைத்தும் கலந்தாலோசித்து ஒரு முடிவிற்கு வந்தன. அதாவது வேடன் நம்மை நெருங்குவதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் இறக்கைகளை அடித்து ஒன்றாக பறக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒருவேளை நம் கால்களில் பிண்ணியிருக்கும் வலையோடு நாம் உயிர்பிழைத்துச் செல்லலாம். நமது காட்டுப்பகுதியை அடைந்ததும் நண்பர்களின் துணையுடன் வலையை பிய்த்தெடுக்கலாம் என்பதே அந்த யோசனை.

திட்டமிட்டபடி அனைத்து புறாக்களும் ஒற்றுமையாக பறப்பதை கண்ட வேடன் செய்வதறியாது வியந்தான். பிறகு ஐயோ எனக்கு புறாக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, புதிதாக நான் வாங்கிய வலையும் அல்லவா பறிபோகிறது என்று கூக்குரலிட்டான். அப்புறாக்கூட்டம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சற்று உயரே பறந்து கொண்டிருக்கையில். நடந்தது அந்த விபரீதம்.

ஒற்றுமையாக பறந்துகொண்டிருந்த புறாக்களில் முன்னனி வகித்த நீலநிறப் புறாக்களுக்கு கர்வம் ஏற்பட்டதாம். அப்புறாக்கள் மற்ற புறாக்களை நோக்கி நாங்கள்தாம் பலசாலிகள், நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இன்று உயிர்பிழைத்திருக்க முடியாது என்றதாம். இதை செவியுற்ற கருமைநிற புறாக்கள் அப்படியென்றால் நாங்களும்தாம் உங்களோடு வலையை இழுத்துக்கொண்டு பறந்து வருகிறோம், உங்களுக்கு நாங்கள் சலைத்தவர்களா என்று கூற. புறாக்களுக்குள் கருத்தவேறுபாடுகள் ஏற்பட்டு நான் பறக்கமாட்டேன், உனக்கு சக்தியிருந்தால் வலையை இழுத்துக்கொண்டு நீ பறந்துபார் என்று சண்டையிட, சண்டையில் குறியாக இருந்த புறாக்கள் எதிரே வளர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரக்கிழையை கவனிக்காது அதில் வலையோடு மாட்டிக்கொண்டன.

புறாக்கள் வலையோடு மரத்தில் மாட்டிக்கொண்ட காட்சியை பார்த்த வேடனோ, ஆகா இன்று நமக்கு அதிஷ்டம் நம் பக்கம் என்ற சந்தோஷத்தில் அனைத்து புறாக்களையும் வாரி அள்ளி கூண்டில் அடைத்தானாம். இச்சிறுகதைக்கு சுய விளக்கம் தேவையில்லை என்றாலும் United we stand; divided we fall என்ற பழமொழி நம் நினைவிற்கு வருகிறதல்லவா.

ஆக காயல்மாநகர கணமணிகளே! சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் நம்மிடையே பிணக்குகள், கோபாதாபங்கள், சண்டை சச்சரவுகள் இனியும் தேவைதானா என்பதை மறுபரிசிலனை செய்யுங்கள். வேண்டாம் நம்மிடம் வேற்றுமை – அதை விட்டொழிப்போம். வாருங்கள் ஒன்றுபடுவோம்! அனைத்து மட்டத்திலும் ஒற்றுபட்ட ஒரு முன்மாதிரி காயல்பதியை சமைத்துக் காட்டுவோம்!!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

ஆக்கம் : நமது கட்டுரையாளர்

அபூ ரைஹான்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com