بسم الله الرحمن الرحيم
Saturday 23rd February 2019 | 17 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
நில வணிகத்தை களங்கப்படுத்தும் கபளீகர முதலைகள்!அச்சிடுகமின்-அஞ்சல்
11 ஜூலை 2012 மாலை 03:44

இந்திய தேசம், இன்பத்தமிழ் மாநிலம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, தனி சார்பதிவு வட்டம், வடதென்பாக கிராமங்கள் உள்ளடங்கிய காயல்பட்டினம் என்னும் இத்தபசில் சொத்தின் எல்கையாவது :-

தங்கக் கடலாடிவரும் வங்கக்கடலுக்கு (மேற்கு), இரத்தினபுரி 1, சாகுபுரம் உயிர்க்கொல்லி தொழிற்சாலை 2, இவற்றிற்கும் (கிழக்கு), வீரபாண்டியன் பட்டணத்திற்கும் (வடக்கு), ஊரை அடித்து உலையில் போட்ட கதையாக சிங்கித்துறை, கொம்புத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள.

காயல்பட்டினத்தின் அசைக்கமுடியாத கையிறுப்பு பகுதிகளான கடையக்குடி கற்புடையார் வட்டம் பகுதிதொட்டு வடகோடியிலுள்ள புன்னக்காயல் பொழிமுகத்திற்கும் (தெற்கு), இதன் எல்கைக்கு உட்பட்ட சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்புளவு கொண்ட, வலிமார்களும் உலமாக்களும் வாழ்ந்து மறைந்த இப்புண்ணிய பூமியாம் காயல்பதி என்னும் காயல்பட்டினத்தின் பள்ளிவாயில்கள், மதரஸாக்கள், பள்ளி-கல்லூரிகள், கடை- காடு- கானி-நிலங்கள், வீடு வகையாறாக்கள் மற்றும் சிறுமக்கம், கொற்கைபட்டினம் போன்ற சிறப்பு அடைமொழிகள் உட்பட இவ்வூரின் தபசில் விபரம் சரி.

staticmap


 ஷை மாவட்டம், ஷை தாலுகா, ஷை ஊரின் காயல்நியூஸ் வாசக பெருமக்களே!

நமது காலஞ்சென்ற முப்பாட்டன்களின் முப்பாட்டனார்கள் பூர்வீக முறையில் நமக்கு விட்டு சென்று நாம் ஆண்டாடுகாலம் வாழ்ந்து அனுபவித்து வரும் மேற்கண்ட தபசில் சொத்தானது தனது பரந்து விரிந்த எல்கையையும், தனித்துவத்தையும் இழந்து வருகிதே என்ற கவலை உணர்வில் காயலரே விழிமின் எழுமின் என்ற இத்தொடர் கட்டுரையின் ஐந்தாம் பகுதி அமைகிறது.

மனைவிக்கு உணவு உடை உறைவிடம் வழங்குவது கனவனின் பொறுப்பு என்பது நம்மை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் கட்டளை. உலக அளவில் ரியல் எஸ்டேட் தொழில் மந்தமானலும் ஒருபெண் குமருக்கு ஒரு வீடு என்ற நமக்கு நாமே விதித்துக் கொண்ட சட்டத்தினால் நமதூரைப் பொறுத்த மட்டில் ரியல் எஸ்டேட் என்றும் ஏறுமுகம் தான்.

ஏறுமுகத்திற்கு மற்றொரு உண்மை முகமும் இருக்கிறது. அதாவது குடியிருக்க வீடில்லாமல் குடிசைபோட நிலம் தேடி அலையும் நமதூர் ஏழை எளிய அபலைகளுக்கு மத்தியில், நேரம் போகவில்லை என்பதற்காக கோடிகளை கொட்டி ஊரைச்சுற்றியுள்ள நிலத்தை முடக்கி ஏக்கர் கணக்கில் பதுக்கும் சீமான்களும், வளைத்து போடு பின்னர் விற்கலாம் என்ற பிஸினஸ் பாலிஸிக்கு வந்துவிட்ட நமதூர் ஜான்பவான்களும் நிச்சயமாக இவ்விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்த பரமரகசியம்.

இன்னும் இந்த ரியல் எஸ்டேட் என்ற நிலத்தரவு தொழிலை பொறுத்த வரையில் பொய் மற்றும் மோசடியான பேச்சுகள், அடுத்தவர்கள் வியாபாரத்தை கெடுத்து விடுவது, வேண்டுமென்றே ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவது, பிறர் சொத்தின் பத்திரத்தை நகலெடுத்து அதை சுற்றவிட்டு அவரை விற்க விடாமல் பண்ணுவது, மோசடி பட்டாவை காட்டி மோசடி கிரையம் செய்வது, பேரம்பேசும் சபையில் இருந்ததற்குக்கூட கமிஷன் கேட்பது போன்ற ஐந்தாம்தர அரசியல்கள் இத்தொழிலிலும் கொடிகட்டி பறந்தாலும் கவரிமான்களாக, உண்மையை மட்டும்பேசி, பகிர்ந்து உண்ணும் பலர் நம்மிடையே கனிசமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம் - அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத்து செய்யட்டும்.

தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 2011 ஜூலை மாதம் நில அபகரிப்பு சம்பந்தமான வழக்குகளுக்காக தனிப் பிரிவை துவங்கியதுதான் தாமதம், தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலஅபகரிப்பு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதே நாம் மேற்கூறிய ஐந்தாம்தர இழிசெயல்கள் இத்தொழிலில் மலிந்து கிடப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

page_copy_copy_copy

இதை மேலும் உண்மைப் படுத்தும் வகையில் கடந்த 17-05-2012 ஆம் தேதியன்று திருச்செந்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி புகார்களும் சிறந்த உதாரணமாகும். அன்று சுமார் 6 ஊர்களுக்கு பொதுவாக நடைபெற்ற ஜமாபந்தியில் நமதூரைத் தவிர்த்து மற்ற 5 ஊர்களிலிருந்து குறைதீர்க்க வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்னும் நிலையில், நமதூரிலிருந்து மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளிக்க குவிந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய ஜமாபந்தியின் போது எனது நிலத்தை இவர் அபகரித்து விட்டார், இவர் போலியாக பட்டா தயாரித்து அதன் மூலம் எனது சொத்திற்கு பத்திரம் போட்டுள்ளார், எங்களிடம் தாய்ப்பத்திரம் இருக்க தாசில்தாரிடம் பணம் கொடுத்து எனது மனைக்கு பட்டா பெற்றுள்ளார் என வகைவகையான புகார்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புகார்கள் பற்றி ஜமாபந்தி அலுவலர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்கும் போது பதட்டத்துடன் அசடுவழிந்த நிர்வாக அதிகாரிகளை என்ன செய்வது?

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியை தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய்விடுவான். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி), நூல் : புஹாரி 2454

சுதந்திரத்திற்கு முன்னர் நம் முன்னோர்களின் சொத்தாக இருந்தவைகளில் சில, வாரிசுகளின் கவனமின்மையின் காரணமாக தமிழக அரசு 1988, 89 களில் வழங்கிய நத்தப்பட்டாக்களில் அந்நிலங்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டு பின்னர் அந்த பட்டாவை பயன்படுத்தி நம்மவர்களின் நிலத்திற்கு சொந்தமும் கொண்டாடி அவைகளை விற்றும் தீர்த்துவிட்ட கொடுமைகளை எங்கே போய் சொல்வது?

மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிலர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி நமது அப்பன் பாட்டன்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆட்டையை போடுவது வாடிக்கையாகி விட்டது.

 அரசாங்க திட்டத்திற்காக பல லட்சங்கள் நம் சொந்த பணத்தை திரட்டி அதிலிருந்து நிலத்தை வாங்கி நன்கொடையாக அளிக்கும் பெருந்தன்மை கொண்ட நமதூருக்கா இந்த சோதனை? தம் சொந்த பணத்தில் தம் சொந்த நிலத்தில் நமதூர் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற பரந்த எண்ணத்தில் பள்ளிக்கூடங்கள் அமைத்தது, நமதூருக்கென்று தம் சொந்த செலவில் தார் சாலைகள் அமைத்தது, நகருக்கென்று தம் சொந்தப்பணத்தில் குடிநீர் ஏற்பாடு மற்றும் குடிநீர் தொட்டிகள் கட்டியது என்று இனம் மதம் பேதமின்றி நமதூருக்காக சேவை அடிப்படையில் வாரிவாரி வழங்கிய நம் அப்பன் பாட்டன்களின் வழிவந்த நம்மை இப்படி ஏமாற்றுகிறார்களே பாவிகள், இது அல்லாஹ்வுக்கே பொறுக்குமா?

யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தின் மேற்பகுதியிலிருந்து ஏழு பூமிகள் வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான். (நூல் முஸ்லிம் 3289) என்ற நபிகள் பெருமகனாரின் எச்சரிக்கை பிரகடனம் இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக தெரிகிறதோ என்னவோ?

1950களில் நமது அப்பன் பாட்டன்கள் நமதூரின் புறநகர் பகுதிகளில் அமைந்த பல உப்புப்பாத்திகளுக்கும் அதிபதிகளாக இருந்துள்ளனர். அவைகளுக்கு உரிமம் சகிதம் செலுத்தி அனுபவித்து வந்த நிலையில் அந்த உப்புபாத்திகள் உட்பட நமதூர் மக்களின் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்று ஊர் நத்தம் என்ற போர்வையில் உயிர்கொல்லி தொழிற்சாலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதை நம்மில் எத்தனை பேர்களுக்கு தெரியும்?

நமக்கு தெரிந்ததெல்லாம் நான் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று வாச்சவடால் பேசுவதும், சக சகோதரனிடம் குழாயடி சண்டை போடுவதும், சங்கங்களில் அமர்ந்து அரட்டை அடிப்பதும், வளைகுடா நாடுகளில் கூலி வேலை செய்து வாடி வதைப்படுவதும், மிஞ்சிப் போனால் கல்வியாபாரம் புரிவதும்தான். இவைகளைத் தாம் சாதனைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

மேற்கானும் குற்றச்செயல்களுக்கு அரசுதுறைசார்ந்த அலுவலகங்களிலோ, குற்றப்புலனாய்வு பிரிவுகளிலோ வழக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள நம்மில் யார்தான் முன்வருகிறார். அவ்வளவு ஏன்? நம்மை நாமே திருத்திக் கொள்வதற்காக நம்முடைய குறைகளை சுட்டிக்காட்டினால்கூட இதோ பாருங்கள் பெரிவர்களை திட்டுகிறார்கள் என்று விஷயத்தை திசை திருப்பும் பொற்காலத்தில் அல்லவா நாம் வாழ்ந்து வருகிறோம்.

நாம் விழிப்படைய வேண்டும் என்ற நன்நோக்கில் பதியப்படும் இக்கட்டுரையை படிக்கும் என் அருமையான மக்களே!

இன்னும் காலம் கடந்துவிட வில்லை. உங்கள் பூர்வீக சொத்துக்கள், நிலங்கள் போன்றவற்றை உங்கள் வருங்கால சந்ததிகளும் அனுபவிக்க வேண்டுமென்றால் அவற்றை இன்றே தூசிதட்டி உங்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யுங்கள்.

உங்கள் மூதாதையர்கள் மூலம் ஏக்கர் கணக்கில் உங்களுக்கு காலிநிலங்கள் இருந்தால் உங்கள் பெற்றோர்களுக்கும் நாளை மறுமையில் நன்மை கிடைக்கும் பொருட்டு அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை நாடி அதில் சில பகுதியை சதகத்துல் ஜாரியாவாகவும், ஏழைகளுக்கு குறைந்த விலையிலும் வழங்குங்கள்.

உங்கள் சொத்துக்களில் வில்லங்க விவகாரங்கள் இருப்பதாக தெரியவந்தால் நகராட்சி, கிராம நிர்வாக அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சார்பதிவு அலுவலகம் போன்ற அலுவலகங்களில் முறையிட்டு உங்கள் சொத்து சம்பந்தமாக எழுத்துப்பூர்வ ஆவணங்களை பெற்றுக் கொள்ளுங்கள். இதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தலாம்.

இன்னும் நேர்மையான வழக்கறிஞர் மூலம், மாவட்ட குற்றவியல் மன்றும் புலனாய்வுத்துறை, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்புச் சட்டம், முதலமைச்சர் தனிப் பிரிவு போன்றவற்றில் சம்பந்தப்பட்ட ஆக்கரமிப்பாளர்கள் மீது புகார் அளிப்பதற்கும், வழக்கு தொடர்வதற்கும் தயங்காதீர்கள்.

உங்கள் சொத்தை மீட்கும் வரை அபகரிக்க முயன்றவனிடம் எந்நிலையிலும் சமரசம் கொள்ளாதீர்கள். எத்தகைய மிரட்டல்களுக்கும் அடி பணியாதீர்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதி காட்டுங்கள்.

வேடந்தாங்கள் பறவையைபோல ஏதோ வருடத்திற்கு ஒருமாதம் என்று ஊர்வரும் நம்மவர்கள் தங்கள் மனைவி மக்களோடு சந்தோஷமாய் இருப்பதை விட்டுவிட்டு நமக்கு ஏன் இந்த வீண்வம்பு என்று தொன்றுதொட்டு ஒதுங்கிக்கொள்வதால் ஏற்பட்டவைகளே மேற்கண்ட விளைவுகள் – இவற்றை யாரும் மறுக்க இயலுமா?.

இந்நிலை இனியும் தொடர்ந்தால் பரந்து விரிந்த காயல்பட்டினத்தின் எல்கையையும், தனித்துவத்துவத்தையும் நாம் முற்றிலுமாக இழக்க நேரிடும், அதைவிட்டும் அல்லாஹ் நம்மை பாது காப்பானாக.

மேலும், மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (திருக்குர்ஆன் 3:104)

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

ஆக்கம் : நமது கட்டுரையாளர்,

அபூ ரைஹான்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com