بسم الله الرحمن الرحيم
Thursday 19th April 2018 | 03 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயலில் அதிகரித்து வரும் மணமுறிவுகள்! (பாகம் - 3)அச்சிடுகமின்-அஞ்சல்
14 மார்ச் 2012 காலை 09:48

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அன்பு சொந்தங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சென்ற கட்டுரைகளை கண்டு பல சகோதரர்கள், என்ன ஆண்கள் மட்டும் தான் விவாகரத்துக்கு காரணமா?, ஆண்கள் மட்டும் தான் கொடுமை படுத்துகிறார்களா? என்று வினவி இருந்தார்கள். இதற்காக தான் சென்ற கட்டுரையில் பெண்களின் கொடுமையை தொட்டு விட்டு, தொடரலாம் என்று முடித்துள்ளேன்.

ஆண்களின் கொடுமைகள் ஒரு சில வகை என்றால், பெண்களின் கொடுமைகள் பல வகைகள் உண்டு. நிம்மதியாக இருக்கும் ஆண்களின் சதவீதத்தை விட, நிம்மதி இல்லாமல் இருக்கும் ஆண்களே அதிகம்.

441864-Royalty-Free-RF-Clip-Art-Illustration-Of-A-Cartoon-Mad-Wife-Glaring-At-Her-Late-Husband

ஒவ்வொரு நிகழ்வையும் விவரித்தால் கடைசியில் மனவேதனையும், அசிங்கமுமே மிஞ்சும். அதற்க்கு வலைதளமும் சரி அல்ல, நாகரிகம் கருதி பதிய விரும்பவில்லை.

இங்கு என் நண்பர் ஒருவர் உள்ளார் (நம் ஊர் அல்ல), பன்னாட்டு கம்பனியில் பெரிய பொறுப்பில், ஐந்து இலக்க வேலை ஆட்களை கைக்குள் வைத்து நடத்தி வருகிறார். அவர் பெயரே "லயன் கிங்". இவர் எப்போது விடுமுறையில் ஊர் செல்லுகிறாரோ, அன்று தான் அனைவர்களுக்கும் விடுமுறை மாதிரி. அவ்வளவு டெரர் மற்றும் நல்லவரும் கூட.

ஒருமுறை கதைத்துக்கொண்டு இருக்கும் போது வரதட்சனை விவாகரத்து, மறுமனம் பற்றி பேச்சு வந்த போது, நான் அவரிடம் நீங்க இன்னும் ஒரு திருமணம் முடிக்கலாமே என்றதும், அவரும் நன்றாக பண்ணலாம், நல்ல பெண் இருந்தால் உங்கள் ஊரில் பாருங்க என்று சொன்னார், சென்றார்.

அன்று இரவு தொலைபேசியில் 6 மிஸ்டு கால் இருந்தது ( இஷா தொழுகும் போது சைலன்ட் மோடில் போட்டதை மறந்ததால்), அனைத்தும் அவரிடம் இருந்து வந்தது, மீண்டும் தொடர்பு கொண்டதும், பதட்டத்துடன் " பாய், காலையில் நான் சொன்னது ஒரு தமாசுக்கு தான், நீங்க சீரியசாக பெண் பார்த்து விடாதீர்கள்" என்று கூறி விட்டு, தினமும் என்னை சந்தித்து " பாய், நாம் பேசியதை என் வீட்டுக்காரியிடம் சொல்லிவிடாதீர்கள்" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார். எனக்கோ, அவரின் மனைவியோ, அவர்களின் தொலைபேசி எண்ணோ தெரியாது, தெரிந்தாலும் நாம் மற்ற பெண்களிடம் பேசுவோமா.. இந்த விபரம் கூட இல்லாமல் ஒரு பெரிய அதிகாரி இப்படி நடந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.

பின்பு, அவரிடம் விபரமாக சொல்லி, புரிய வைத்து, அவரிடம் நிலைமையை கேட்டால்..... இப்படியும் பெண்கள் இருப்பார்களா! இவ்வளவு கொடுமைகள் குழந்தைக்கும், கணவனுக்கும் செய்ய முடியுமா என்ற ஆச்சரியம் தான் மிஞ்சியது. (இதே மாதிரி ஒரு பெண்மணியும் எங்கள் பகுதியில் ஒருவர் உள்ளார், வெளியில் தெரியாமல் எத்தனையோ).அவர் விவரிக்கும் போது கைகள் நடுங்கி, ஒரு சமயம் விம்மி அழுதும் விட்டார். எவ்வளவு பெரிய ஆள், இப்படி விம்முகிறாரே என்று என்னால் சுயநினைவுக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தன.

சில நாட்களுக்கு முன்பு, நம் ஊர் சகோதரர், அவரின் மச்சினனுக்கு ஒரு வேலை விசயமாக வந்தார். நானும் ஒரு நண்பனின் நிறுவனத்தில் ஏற்பாடு செய்து, அவர்கள் சில விவரங்களை கேட்டார்கள் (இது இது எல்லாம் தெரியுமா என்ற விபரம்). என் கூட இருந்த நம்ம ஆளிடம், உங்க மச்சினனுக்கு இந்த சமாச்சாரம் எல்லாம் தெரியுமா என்று கேளுங்க, அவனுடைய CV இல் அந்த விவரங்கள் இல்லையே என்றதும்.

மச்சினன் போன் எண் இல்லை, என் மனைவி கிட்ட தான் கேட்கனும் என்றார்.

சரி, போன் போட்டு விசாரியுங்க என்றால், போன் போட தயங்குகிறார்.

- ஊரில் மணி 10.30 இருக்குமா என்றார்.

- அதுக்கு என்னங்க.. காலை பத்து அரை மணிக்குமா முழிக்காமல் இருப்பார்கள்.

- இல்லை காக்கா, "மருதாணி" பார்த்துக்கொண்டு இருப்பா, போன் போட்டால் டென்ஷன் ஆகிவிடுவாள் என்றார்.

- ஒருவேலை கரெண்ட் கட் ஆகி இருக்கும். ஃபோன் போடுங்க..

- சா..சா.. கரண்ட் இல்லை என்றால், டென்ஷன் இன்னும் அதிகமாக இருக்கும்... அனைத்து டென்ஷன்களும் என் தலையில் இறங்கி விடும்..

- அடக்கொடுமையே, சரி எப்போ தான் விபரம் தருவீங்க, ஆள் எடுப்பவர் கொச்சியில் இருக்கிறார், இன்றே முடித்தால் தான் நல்லது.

- இல்லே..லே.. 2 மணிக்கு மேல் "அத்திப்பூக்கள்" முடிந்த பின்னாடி தான்..

- அதுக்குள் இங்கு அத்திப்பூ பூத்து விடும், மனைவின் தம்பிக்கு தானே, சும்மா பயப்படாமல் போன் போடுங்க என்றதும், அவர் மிஸ்டுகால் கொடுக்கும் அழகை பார்க்கனுமே, அங்கு ரிங் அடித்தா, இல்லையா என்றே தெரியாத அளவு, பயத்துடன், கை நடுக்கத்துடன், வெளறிய முகத்துடன் போன் அடிக்கின்றார். அவரின் கதையை கேட்டால் அவரும் நிம்மதியை தொலைத்து பலவருடங்களாக ஆகிறதாம்.

* கணவனை மதிக்காத பெண்கள்

* கணவனின் கோபத்தை குழந்தைகளிடம் காட்டி, அடித்து உதைத்து சூடு வைக்கும் பெண்கள்

* கணவன்,மனைவியிடம் நீ அங்கு செல்லக் கூடாது, மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதது என்று கண்டித்த பின்பும், அங்கு சென்று, மொபைலில் படம் பிடித்து, கணவனுக்கு அனுப்பும் பெண்கள்.

* பல வருடங்கள் குழந்தை இல்லையே என்று கவலைப்படும் சமயம், அவளின் கைப்பையில் கருத்தடை மாத்திரைகளை கண்ட கணவனின் மனநிலை, விசாரித்தால் "இவரின் குழந்தையை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை" என்று சொல்லும் பெண்மணி.

* அந்நிய ஆண்களுடன் வெளியில் செல்லும் பெண்கள்.

* தனிமையில் பிற ஆண்களுடன் இருக்கும் பெண்கள்.

* கணவன் அனுமதிக்காத/விரும்பாத ஆண்களை வீட்டில் அனுமதிக்கும் பெண்கள்

* படி தாண்டி....................கற்பை ....... பெண்கள்.

இவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருக்கின்றார்களே..

.காரணம் வல்ல இறைவன் கூறியதையும், ரசூல் (ஸல்) அவர்கள் வழிகாட்டியதையும் புறக்கணித்ததாலே தான் இந்த மனநிம்மதி இல்லாத, தோல்வி அடைந்த, வல்ல ரஹ்மானுக்கு கோபம் உண்டாக்குகின்ற வாழ்க்கை.

அப்படின்ன விவாகரத்து அதிகம் இல்லாமல் என்ன செய்யும்?

சில சகோதரர்கள், என்ன இந்த விவாகரத்து தான் அனைத்து சமுதாயத்திலும் சகஜம் தானே.. இதை பெரிது படுத்தி கட்டுரை அவசியமா என்றும் வினாவுகிறார்கள். மற்ற சமுதாயதிற்க்கும் நமக்கும் வித்தியாசம் இல்லையா? இந்த வாழ்க்கை மட்டும் தானா? மறுமை இல்லயா?

"நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்"

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1079

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள்.

நூல்: புஹாரி, 3006 . Volume :3 Book :56

"உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 1083

இந்த மனமுறிவுக்கு இன்னும் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பொருத்தம் இல்லாமல் ஜோடிகளை தெரிவு செய்வது, உடல் உறவில் தோல்வி அடைவது போன்றவைகளும் அடங்கும்...

(இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடரலாம் ).

அன்புடன்,

சாளை S..I. ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com