بسم الله الرحمن الرحيم
Saturday 20th October 2018 | 09 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயலில் அதிகரித்து வரும் மணமுறிவுகள் (பாகம் - 4)அச்சிடுகமின்-அஞ்சல்
08 ஏப்ரல் 2012 மாலை 10:26

இந்த மனமுறிவுக்கு இன்னும் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பொருத்தம் இல்லாமல் ஜோடிகளை தெரிவு செய்வது, உடல் உறவில் தோல்வி அடைவது போன்றவைகளும் அடங்கும்..

திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று உடல் உறவு. இந்த உறவின் மூலம் சந்ததியர்களை பெருக்குவது தான் முதல் கடமை.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் 4:1 )

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்." (பைஹகி).

இந்த உடல் உறவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் நிம்மதி கண்டிப்பாக கிடைக்கும். இந்த உடலுறவில் தோல்வி, திருப்தி இல்லை என்றால் வாழ்வு பூராவும் நரகம் தான்.

கணவன் மனைவிக்குள் சச்சரவுகள், சண்டைகள் வந்துள்ளது என்றால், அதன் மூலக் காரணத்தை தேடினால் அது முடிவடைவது அந்த உடல் உறவில் உள்ள பிரசனையில் தான். ஒரு ஆண் இந்த விஷயத்தில் மனைவியை திருப்திபடுத்தி விட்டால், மற்ற பிரச்சனைகள் சண்டைகள் வந்தால் அது ஈசி ஆக சமாளிக்கப்பட்டு விடும்.

கள்ளக் காதல், படி தாண்டுதல், ஓடிப்போவது போன்ற கேடுகெட்ட, மார்க்கத்துக்கும், சமூகத்திற்க்கும் எதிரான செயலுக்கு மூலக்காரணம், இந்த உடல் பசி தான். காதலில் விழுந்த ஜோடிகளில் ஒரு சில சதவீதத்தை தவிர மற்ற அனைத்து காதலும் உடல் கவர்ச்சி, உடல் பசியை மையமாக கொண்டு தான் இருக்கின்றது.

இந்த அளவுகோல் தான் அதிகமான மணமுறிவுக்கும் காரணமாக உள்ளது. விவாகாரத்து ஜோடியை ஆராய்ந்தால் அதற்க்கு முதன்மையாக இருப்பது ஒன்று திருப்தி இல்லாமை அல்லது யாராவது ஒருவர் மற்றவர்களுக்கு துரோகம் செய்வது. மற்ற காரணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாக தான் இருக்கும்.

இதற்கு வழி தான் என்ன..?

ஒரே வழி வல்ல ரஹ்மானுக்கு பயந்து நடப்பது தான்.

''இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா)

ஆக விபச்சாரதில் இருந்து நம்மை தடுப்பது திருமணம் தான். இன்னும் ஒரு ஹதீஸில் ..

நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) கூறினார்கள்:

நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவா;: அப்துர் ரஹ்மான் இப்னு யªத்(ரஹ்) அறிவித்தார்

நூல்: புகாரி 5066.

திருமணம் ஆனவர்கள் கூட வழி தவறி நடக்கின்றார்களே.. அதற்க்கு தீர்வு என்ன ?

மறுமையில் நம்பிக்கை இல்லாமையும், இறைவனின் பயமும் இல்லாத ஆட்கள் தான் இதில் தவறி விழந்து விடுகிறார்கள்.

ஷைத்தான் இந்த உடல் அழகையும்,கவர்ச்சியையும் காட்டி, மிகவும் ஈசி ஆக மக்களை விபசாரத்தின் பக்கம் இழத்து விடுவான். மற்ற விசயங்களைக் காட்டிலும் இந்த விஷயத்தில் அவனுக்கு வேலை மிகவும் எளிதானது. உலகத்தையே இந்த கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்து இருக்கின்றானே.. இந்த கொடியவன்.

இதில் மாட்டிவிட்டால் வாழ்க்கையை நரமாக மாறி மணமுறிவில் தான் கொண்டு விடும்.

ஆக, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையில் விட்டுக்கொடுத்து வாழுங்க, ஒருவரை ஒருவர் நல்ல லவ் பண்ணுங்க, எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒன்றாக கூடி மணம்விட்டு பேசி, உங்களுக்குள்ளே நல்ல முடிவு எடுங்க. கண்டிப்பாக வல்ல அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.

"நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."

(அல்குர்ஆன் 30:21)

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...

எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே

அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..!

இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள்,

அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

இந்த கடைசி பாகத்தை பல பல பக்கங்களாக எழுதி, பலமுறை படித்து படித்து பார்த்து, பல பக்கங்களை அழித்தும், கிழித்தும், மனம் வெதும்பியும் எழுதியது.

சில மாதங்களாக நம் ஊரில் நடக்கும் அசிங்கங்கள், ஓடி போகுதல், கள்ளக் காதல் கன்றாவிகள், திருமண முறிவுகள், ஆண்கள் மொபைலில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த காலங்கள் மாறி, சிறு சிறு பெண் பிள்ளைகள் ஆண்களுக்கு கொடுக்கும் போன் தொல்லைகள், படிக்கும், வேலை பார்க்கும் இடத்தில் ஆண் நண்பர்களுடன் கொண்டுள்ள கூடா நட்பு என்று பல விசயங்களை எழுதி, இதை வலை தளத்தில் பதிவு செய்தால், நம்மை நாமே நோவினை செய்வது மாதிரியும், நம்மை நாமே அசிங்கப்படுத்துவதாகவும் இருக்குமே என்று தவிர்த்து விட்டேன்.

என்னதான் வாழ்வில் திருப்தி இல்லாமல் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் வல்ல ரஹ்மானுக்கு பயந்து, குடும்ப கவுரவம், தன் மற்றும் குழந்தைகள் வாழ்வு என்று நயமாக வாழ்ந்து வரும் தம்பதியருக்கு வல்ல அல்லாஹ் அவனுடைய அருளை பொழிவானாக. அவர்களுக்கு ரஹ்மத்தையும், பரக்கத்தையும் கொடுப்பானாக.

ஆக நாம் வாழ்வு நம் கையில் தான் இருக்கின்றது. அதை எப்படி வாழனும் என்ற கையேடு நம்மிடம் இருக்கின்றது. அது தான் அல்குர்ஆனும், ஹதீஸும். இந்த கேட்லாக்கை கவனமாக பின்பற்றி நடந்தால் இந்த உலகம் என்ன, மறு உலகமும் சுவர்க்கம் தான்.. இன்ஷா அல்லாஹ்.


மீண்டும் சந்திக்கலாம் அன்பு சொந்தங்களே...

சாளை S.I.ஜியாவுத்தீன்,

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com