بسم الله الرحمن الرحيم
Wednesday 20th June 2018 | 06 ஷவ்வால் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
உங்கள் பைக் அதிக மைலேஜ் தரனுமா?அச்சிடுகமின்-அஞ்சல்
11 ஏப்ரல் 2012 மாலை 09:13

உங்களின் மீது வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவட்டுமாக...

கடந்த வாரங்களில் கட்டுரைகள் சீரியஸ் ஆக இருந்ததால், ஒரு மாறுதலுக்காக இந்த கட்டுரை. எனக்கு நடந்த சம்பவம் மற்றும் அனுபவத்தின் தொகுப்பு. இந்த மைலேஜ் விசயம் பைக்குக்கு மட்டும் தான் பொருந்தும்.

முதலில் இந்த பதிவின் வாயிலாக சகோ.M.S.ஹபீப் முஹம்மது அவர்களுக்கு நன்றிகளை கூறிக்கொள்கிறேன். என்னுடைய ஸ்கூட்டர் பழுதான பின்பு, ஒவ்வொரு விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் முன்பு, புதிய பைக் ஒன்று வாங்கிவிடனும் என்று நினைக்கும் போது, சகோ. ஹபீப் தான், "காக்கா எதற்க்கு காசை வேஸ்ட் பண்ணுறீங்க, ஊரில் இருப்பது சில நாட்கள் தான், எதற்கு பைக், என்னுடைய பைக் சும்மாதான் இருக்குது, அதை உபயோகித்துக்கோங்கோ.." என்று பல வருடங்களாகவே கொடுத்து உதவுவான்... இதற்க்கு எல்லாம் நல்ல மனசு வேனுங்க...!!.

இந்த விடுமுறையில் அந்த வண்டி லிட்டருக்கு 20 கிலோ மீட்டருக்கு குறைவாகவே கொடுத்தது தான் ஒரு கடுமையான அதிர்ச்சி.

உடனே ஆஸ்தான வைத்தியரிடம் சென்று, குறைகளை கூறி, புல் சர்வீஸ் செய்து, ஆயில் மாற்றி, மீண்டும் செக் பண்ணினால் ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. 20 கிலோமீட்டருக்கு பதிலாக 21 தந்தது.

மீண்டும் வைத்தியரிடம் ஓடினேன்... அவரோ காக்கா இப்போ தானே சர்வீஸ் பண்ணியுள்ளோம், சில நாட்கள் ஓட்டுங்க. பார்ப்போம். என்றார்.

சில நாட்கள் ஓட்டியும் நிலைமை மாறவில்லை.. 18, 20, 23.. இப்படியே தான் கழிந்தது.

மீண்டும் மெக்கானிக் இடம் விஜயம்.. அவர் அனைத்தையும் டெஸ்ட் பண்ணிவிட்டு, "காக்கா கிளாச் வயரையும், ஸ்பீடா மீட்டர் வயரையும் மாற்றனும்" என்றார்.

மாத்தியாச்சு..

பின்பும், ரிசல்ட் அதே தான்.

மீண்டும் படையடுப்பு மெக்கானிக்கிடம்.

அவரோ, பெட்ரோல் போடும் இடத்தை மாத்துங்க. ஒரு வேலை அளவு குறைவாகவோ அல்லது கலப்படமோ இருந்தால், மைலேஜ் கிடைக்காது என்றார்.

நானோ, அதற்க்கு சான்சே இல்லை. நான் பெட்ரோல் போடுவது நம்ம 'வாவு பங்க்கில்' தான், வானலாவிய நம்பிக்கை இருக்கின்றது.

பெட்ரோல் போடும் போது கூட ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என்று தான் போடுவேன். அப்போ தான் மைலேஜ் கணக்கு சரியாக கணிக்கலாம் என்று. பங்க்கில் உள்ளவரோ "சார். ரவுண்டாக 75 ரூபாய், 100 ரூபாய் என்று போடுங்க, சில்லறை கொடுக்க கஷ்டமாக உள்ளது" என்பார். அவர் நம்மைப்பற்றி என்ன நினைத்தாரோ?

இப்படியே பல நாட்கள் ஓடி விட்டன. எனக்கோ மனசு ஆறவில்லை. நான் சர்.. புர்.. என்று வண்டி ஓட்டுபவன் இல்லை, ஹைவே-யில் கூட 50 ஐ தாண்ட மாட்டேன்.. கிளிட்சை பிடித்துக்கொண்டு ஓட்டுவது, பிரேக்கில் காலை பிரஸ் பண்ணிக்கொண்டு ஓட்டுவது எல்லாம் கிடையாது. வேறு யாரையும் வண்டியை தொடவும் அனுமதிக்க மாட்டேன். என் சொல்படி தான் வண்டி கேட்கனும்(வண்டி மட்டும் தான்) என்று நினைப்பேன். அதுவும் அமானத் வண்டி...கூடுதல் கவனம் கூட.

மீண்டும் வைத்தியரிடம் சென்று, பாய்..இதற்க்கு ஒரு முடிவு எடுங்க. கிக்கர் அடித்தாலும் சில சமயம் பாதியில் நின்று விடுகிறது. மைலேஜ் பிரச்சனையும் இருக்கின்றது, அகவே இன்ஜினை பிரித்து பார்த்து விடுங்க என்றதும்.

காக்கா.. இன்ஜினை பிரித்தால் குறைந்தது 3 ஆயிரம் செலவு ஆகும் .

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. வண்டி என் சொல்படி நடக்கனும்.

நான்கு நாட்கள் கழித்து, அனைத்து வேலைகளும் முடிந்து வண்டி ஓட்டிச் சென்றால் அருமையாகவும், ஸ்மூத் ஆகவும் இருந்தது. அப்பாடா.. விடிவு காலம் வந்து விட்டது என்று, மைலேஜ் செக் பண்ணினால்..ஊஹூம்.. மாறுதல் ஒன்றும் இல்லை.

அதிக பெட்ரோல் போட்டால் குறைந்த மைலேஜ், ஒரு லிட்டர் போட்டால் கொஞ்சம் அதிக மைலேஜ் கொடுக்குது. நம் மண்டையும் காய்ந்து விட்டது.

ஆக, வண்டியில் ஏதோ உற்பத்தி குறைபாடு. சோ, மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு, டைரக்ட் ஆக கம்பெனிக்கே சென்று விட்டேன்.

எங்களின் பழைய வண்டி, கம்பெனிக்கு சென்றதும் அனைவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஒரு வேலை நாங்கள் மறை கழன்ற ஆளாக இருக்கனும், இல்லை..அதிக காசை வைத்துக்கொண்டு என்ன பண்ணலாம் என்று யோசிக்கின்ற ஆளாக இருக்கலாம் என்று. (கம்பனி மெக்கானிக் ஒருவர் இறுதியில் நண்பனாக ஆனா பின்பு சொன்னார் – ஒரு டீயும், இரண்டு வடையும் செய்த உபயம்.. ).

சர்வீஸில் இருந்த நபரிடம் விபரம் சொன்னதும், அவர் "சார், இந்த வண்டிக்கு வாரண்டி முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதிக மைலேஜும் ஓடி விட்டது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறி விட்டார்.

எனக்கு வராத கோபம் அன்று வந்து விட்டது. உங்களுடைய இன்சார்ஜை கூப்பிடுங்கள், அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன் என்று ஒரு சவுண்ட் விடவும், சிறிது சமயத்தில் ஒரு அதிகாரி வந்தார்.

அவரிடமும் விபரங்கள் அனைத்தையும் கூறி, வண்டியை ரெடி பண்ணிக்குடுங்க என்றதும், இந்த வேதாளமும் அதே முருங்க மரத்தில் ஏறியது. வாரண்டி அது இது என்று.

அப்படி என்றால் " விளம்பரத்தில் அவ்வளவு கிலோ மீட்டர் கிடைக்கும், இவ்வளவு கிலோ மீட்டர் கிடைக்கும் என்று போடு கின்றீர்கள். அப்படியே இந்த கிலோ மீட்டர் கணக்கு எல்லாம் வாரண்டி பீரியட் வரைக்கும் தான் கிடைக்கும் என்றும் போட வேண்டியது தானே, ஏன் இப்படி வாடிக்கையாளர்களை எமாற்றுகிறீர்கள், நான் கன்ஸ்யூமார் கோர்ட்க்கு செல்லுவேன்.." என்று பலமாக கத்தி தீர்த்து விட்டேன்.

உடனே அவர், சரி பண்ணி தருகிறோம். ஆனால் சார்ஜ் பண்ணுவோம்.

நான், இங்கு பாருங்க.. இதுவரை 5 ஆயிரத்துக்கு அதிகமாக செலவு செய்து விட்டேன். பிரட்சனை வண்டியில் தான் உள்ளது..தயாரிப்பு குறைபாடு தான்.. சரி பரவாயில்லை.. நான் இந்த இந்த பார்ட்ஸ் மாற்றியுள்ளேன், புதிய பார்ட்ஸ் போட்டால் பணம் தருகிறேன் என்று ஒத்துக்கொண்டு, வண்டியை உள்ளே கொண்டு போனார்கள்.

3 மணி நேரம் சென்று வண்டி திரும்பவும் வந்தது. பியூட்டி செண்டருக்கு சென்று வந்த மனைவியை பார்த்த மாதிரி இருந்தது. வண்டியில் ஒரு சில ப்ராப்ளம் இருந்ததாம்.. ஸ்பார்க் பிளக், டியூனிங்க் யூனிட், ஒரிஜினல் கேபிள், அது இது என்று மாற்றியுள்ளார்களாம். இனி வண்டி நல்ல மைலேஜ் கிடைக்கும் என்றார்கள்.

பி‌ல் எவ்வளவு என்றால், ஒன்றும் வேண்டாம், எல்லாம் ஃப்ரீ என்றார்கள். கூட வந்த நாம் மெக்கானிக்குக்கு தலை சுற்றி விட்டது.

காக்கா.. அதிசயமாக இருக்குது காக்கா. இவனுங்க வாரண்டி உள்ள வண்டியை கொண்டு வந்தாலே, எதாவது சொல்லி சொத்தையே புடுங்குவானுவோ. இன்று இப்படி ஃப்ரீ என்று சொல்லுவது தான் தலையை சுத்துகிறது..

சரி விடுங்க.. ஊருக்கு செல்லலாம்.. இப்போ மைலேஜ் செக் பண்ண முடியாது.. ரிசர்வ் வந்தவுடன் செக் பண்ணலாம் என்று வந்து விட்டோம்.

ஒரு வாரம் சென்று விட்டது. பின்பு வண்டி ரிசர்வ் வந்தவுடன், மைலேஜ் செக் பண்ணினால்...அதிசயமோ அதிசயம்.. அதே கண்டிஷன் தான். ஒரு பிரயோஜனமும் இல்லை. மேக்கப் போட்ட மனைவி அடுத்த நாள் குழித்து விட்டு வந்த மாதிரி, அதே நிலைமை தான்.

இதற்க்கு மேல் என்ன செய்வது. ஒரு லிட்டருக்கு 20 மைல் தான் தருகிறது என்றால், இந்த பைக்கை ஓட்டுவதற்க்கு பதிலாக ஒரு டிராக்டரை ஓட்டலாமே..!!. விடிவு காலம் கிடையாதா?

வண்டியை ஓட்டி திருப்தி இல்லை.ஒரே வெறுப்பு.. ஏன் இப்படி, எதானால் இப்படி, காரணம் தெரியாமல் ஒரே வெறுமையாக இருந்தது. எங்கு சென்றாலும் இதே நினைப்பு. இப்படியே சில நாட்கள் உருண்டு விட்டன..

ஒரு நாள் மதியம் வீட்டில் பேசிக் கொண்டு இருக்கும் போது, காஸ் லீக் ஆனா வாசனை. உடனே சிலிண்ட்டர், அடுப்பு, ட்யூப் அனைத்தும் செக் பண்ணியும் வாசனையை கண்டு பிடிக்க முடியவில்லை.

மனைவி கூட, இது மாதிரி காஸ் அடிக்கடி லீக் ஆகுது. புது ட்யூப், மண்டை கூட மாத்தி விட்டேன். ஆனால் காஸ் வாடை மட்டும் அடிக்கடி வருகிறது. அடுத்த முறை வரும் போது புதிய காஸ் அடுப்பு கொண்டு வாங்கோ..! (இருப்பதே புதியது தான், 2 வயது கூட ஆகவில்லை)

அந்த நேரம் மச்சினன் வந்து, மச்சான்.. வெளியில் கொஞ்சம் எட்டிப் பாருங்க.

ஜன்னலை திறந்து வெளியில் பார்த்தால்....

இரண்டு பசங்க ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டலில், முக்கால் முழத்துக்கு பெட்ரோலை, பைக்கில் இருந்து நிரப்பிக் கொண்டு இருந்தார்கள்...BP உச்சதுக்கு ஏறி விட்டது. கதவை திறந்து அவர்களை பிடிக்க முயலவும், அவர்கள் ஓடவும், நானும் தொடர்ந்து விரட்டி ஓடவும்.....

கடைசியில்... எங்கு பிடிக்க .. சிட்டாக பறந்து விட்டானுவோ.. என்னா ஓட்டம் ஒடுறாணுவோ..!!

அப்பாடா...நிம்மதி. இப்படி பெட்ரோல் திருடியதை ஒரு பொருட்டாக என் மனது நினைக்கவில்லை... இத்தனை நாட்களாக மனதில் குடைந்து கொண்டு இருந்த, விடை தெரியாமல் இருந்த இந்த மைலேஜ் பிரச்சனைக்கு பதில் கிடைத்து விட்டது என்று பூரிப்பு.

அன்று தான் எனக்கு மூன்று விஷயங்கள் புரிந்தன. இரண்டுக்கு விடை கிடைத்தது.

ஒன்று – மைலேஜ் ஏன் கிடைக்க வில்லை..? வண்டியை இந்த நிகழ்வுக்கு பின்பு சிரமம் பார்க்காமல் வீட்டின் உள்ளே நிறுத்த ஆரம்பித்ததும், 50 கிலோ மீட்டர், 53 கிலோமீட்டர் கொடுக்க ஆரம்பித்து விட்டது.

இரண்டு – அந்த பசங்களை விரட்டி ஓடும் போது என்னால் ஸ்பீட் ஆக ஓட முடியவில்லை. ஒரு காலத்தில் எவ்வளவு ஸ்பீட் ஆக ஓடினோம்... ஆனால் இன்றோ...முடியல.. காரணம் ஓவர் வெயிட்.. 100 கிலோ.. ஒரு முடிவுக்கு வந்து 4 மாதத்தில், 10 கிலோ எடையை குறைத்து விட்டேன்.

மூன்று – வயது அதிகம் ஆகிறது என்று அந்த ஓட்டத்தில் உணரமுடிந்தது.. இதற்கு விடிவு.. விடை நம்ம கையிலா இருக்குது..

ஆக, பைக் அதிக மைலேஜ் தரணும் என்றால் என்ன செய்யனும்..??

மீண்டும் சந்திக்கலாம்..

அன்புடன்,

சாளை S.I. ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com