بسم الله الرحمن الرحيم
Wednesday 20th June 2018 | 06 ஷவ்வால் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தீர விசாரிப்பதே மெய்!அச்சிடுகமின்-அஞ்சல்
16 ஏப்ரல் 2012 மாலை 02:33

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று, எனக்கு சென்ற முறை ஊரில் நடந்த சம்பவம் எடுத்துக் காட்டியது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று படித்து உள்ளோம். என்னதான் படித்தாலும் அனுபவப்பாடம் முக்கியம் அல்லவா.!!

நண்பன் ஒருவன் திருசெந்தூரில் ஒரு பஸ் டிக்கெட் பதிவு செய்து வரச்சொன்னான். நானும் சென்று, டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, ஊருக்கு வந்து, அவன் தெருவில் சென்றுக்கொண்டு இருந்தேன், பைக்கில். அந்த சமயம் என் செல்போன் சிணுங்கியது. வண்டி ஒட்டிக்கொண்டு போனை எடுக்கக்கூடாது என்று, வண்டியை ஒரமாக நிறுத்தி, போனை எடுத்து யார் என்று பார்க்கவும், டமார் என்று சப்தம் வரவும், நான் நிலை தடுமாறி பைக்கில் இருந்து சரியவும் ஒன்றாக நடந்தது.

bike_fall

சுதாகரித்து பார்த்ததும், ஒரு நான்கு வயது சிறுவன் முடுக்கில் இருந்து அதி வேகமாக ஓடி வந்து, நின்றுக்கொண்டு இருந்த என் பைக்கின் பின் பகுதியில் முட்டி, நெற்றியில் கிழித்து, உருண்டு விழுந்த ஸ்பீடில் வண்டியின் கொதித்துக்கொண்டு இருந்த சைலன்சரில் கையை வைத்து, நடு ரோட்டில் உருண்டு விழுந்தான்.

இந்த காட்சியை பார்த்தால் 200 கிலோ மீட்டர் ஸ்பீடில் சென்ற கார், முன் டயர் வெடித்தால் எப்படி உருண்டு விழுமோ அப்படி விழுந்தான். தலையில் இரத்தம், இடது கை பொத்துப் போய், ரோட்டில் உருண்டு விழுந்ததால் முட்டுக்கை, முழங்கால் ஆகியவை இரத்தக்காயத்துடன் கூடிய சிராய்ப்பு.

அவன் ரோட்டில் விழவும், ரோட்டில் வந்துக்கொண்டு இருந்த ஆட்டோ நச்... என்று பிரேக் பிடித்து நின்றது. பின்னால் இன்னும் ஒரு ஆட்டோ அதிக ஸ்பீடில், முன்னாள் நிகழ்ந்துள்ள விபத்தை கவனிக்காமல், நின்று கொண்டு இருந்த ஆட்டோவை ஓவர் டேக் செய்ய, நான் சில நொடிகளில் இதை கனித்து, பாய்ந்து சென்று, ரோட்டில் கிடந்த சிறுவனை தூக்கி இழுக்கவும், என் கையை உரசிக்கொண்டு அந்த ஆட்டோ கடந்து, பிரேக் அடித்து நிற்கவும்.... அப்பப்பா... ஜஸ்ட் எஸ்கேப். சிறுவனின் தலை தப்பியது.

ஆட்டோக்காரர், " பார்த்தீங்களா காக்கா, இப்படி தான் முடுக்கில் இருந்து சர்.. சர்.. என்று ரோட்டில் பாய்ந்து விடுகிறார்கள்.. நாங்கள் லைட் ஆக தட்டிவிட்டால், எங்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறார்கள்" என்று கூறிவிட்டு சவாரியை தொடர்ந்து விட்டார்.

இந்த கூச்சல், ஆட்டோவின் கிரீச் பிரேக் சப்தம், அடிபட்ட பையனின் அழுகுரல் ஆகியவை கூட்டத்தை கூட்டிவிட்டது. பைக் ஒருபுறம் கிடக்க, என்னுடைய மொபைல் ஒருபுறம் கிடக்க, நானும் அந்த சிறுவனும் ரோட்டில் சிதறி கிடக்க, பார்ப்பவர்களுக்கு சந்தேகம் இல்லாமல் நான் தான் அந்த பையனை அடித்து போட்டது என்று கன்பார்ம் ஆக ஆக்கி விட்டது.

பலரும் பலவிதமாக கத்த ஆரம்பித்து விட்டார்கள். நான் கூறுவது எதுவும் யாருடைய காதில் விழவோ, பொருட்படுத்தவோ இல்லை.

- மவன், பைக்லே அடி பட்டுட்டானாம்..

- பைக்காரன் ஒரு பையனை அடிச்சுப் போட்டுட்டானாம்..

- இப்படி தான் கண்ணு மண்ணு தெரியாம பைக்கை ஒட்டுரானுவோ.

- என்னமோ பிளைட் ஓட்டுற மாதிரி தான் ஒட்டுரானுவோ.

- ரோட்டை வேறு பளபளப்பாக போட்டு விடுவதால், கூடக் கொஞ்சம் ஸ்பீட் ஆக போரானுவோ.

- முக்குக்கு முக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டாலும், பேய் மாதிரி தான் பைக் ஒட்டுரானுவோ.

இப்படியே அவன்.. இவன்.. முசீபத்து பிடித்தவனுவோ.. என்று சகட்டு மேனிக்கு வசவுகள்.

சற்று ஆறுதல் என்னன்னா, இப்படி கத்தினவர்கள் என்னைப் பார்த்ததும் (வெள்ளையும் சொல்லையுமாக, கனத்த உருவத்துடன், பணக்கார வீட்டு ஆள் தோரணையில் இருந்ததால்), வாப்பா பார்த்து வண்டியை ஓட்ட மாட்டியா, இப்படியா ஒரு பிள்ளையை அடித்து போடுவாய், என்று சற்று சுருதியை குறைத்து தான்.

- இன்னும் ஒரு பெரியவர் " வாப்பா. நீ யார் வீட்டு பையம்மா, எந்த தெருவுமா, வாப்பா யாரு, கம்மா யாரு" என்று முன்கர் நகீர் அளவுக்கு கேள்விகளை அடுக்கினார்.

- எல்லாப் பகுதியிலும் ஒன்னு, இரண்டு வெட்டி ஆபிசர்கள் இருப்பார்களே, இந்த தெருவில் இருந்த 3 வெட்டி ஆபிசர்களும் ஆஜர். ( எப்படி தான் செய்தி போகுதோ!! ) இவர்களின் அலப்பறை தான் கொஞ்சம் ஓவர். ஒரு ஆபிசர் கீழே கிடந்த என் மொபைலை ஆட்டையை போட்டார்.. மற்றவர் பைக்கில் இருந்த பெட்ரோல் கவருக்குள் கையை விட்டு துலாவி ஒரு ஆராய்ச்சி செய்து முடித்து விட்டார்..(ஒன்னும் கிடைக்கவில்லை). . தேவை இல்லாத பேச்சுக்கள். லைசென்ஸ் உண்டா, அது உண்டா, இது உண்டா..!! அப்பப்பா.

- ஒருத்தரும் அந்த பையனை தூக்கவோ, மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ, அழுதுக்கொண்டு இருக்கும் சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கவோ முயலவில்லை.

- நான் என்னுடைய கைக்குட்டையை அவன் நெற்றியில் ஒத்திக்கொண்டு, மடியில் கிடத்தி வைத்து இருந்தேன்.

• நாம் என்ன சொன்னாலும் எடுபடாது, என்ன நடக்கின்றது என்று கவனிப்போம், வெட்டி ஆபிஸ்ர்களின் அலப்பறை எது வரை செல்லுகிறது என்று பார்க்கலாம்..

** அந்த நேரம் அந்த அடிபட்ட பையனின் குடும்பம் ஓடி வந்தது. அவனின் மாமாவா அல்லது சாச்சப்பாவா தெரியவில்லை... உடனே என்னிடம் எகிற ஆரம்பித்து விட்டார், அடிக்காத குறைதான் (காரணம் என்னுடய தோற்றம்). பூண.. மானா எல்லாம் வந்து விட்டது.. அவரும் அந்த பையனுக்கு உதவ முயலவில்லை.

** ஒரு பெண்மணி மட்டும் சுவர் ஓரத்தில் இருந்த ஒட்டறையை (சிலந்தி கூட்டை) வழிச்சு எடுத்துக்கொண்டு அவன் நெற்றியில் வைக்க வந்தார்கள், இரதம் நிற்குமாம்.!! நான் கையை தட்டி விட்டேன். என்ன அறிவியலோ.

ஆக, இந்த நிகழ்வில் கண்ணால் காண்பது என்ன? காதால் கேட்பது என்ன? அந்த நேரம் தான், இரண்டு அதிசயங்கள் நடந்தன.

** ஒன்று, அந்த பையனை முடுக்கிலிருந்து விரட்டிக்கொண்டு வந்த மற்ற சிறுவன் உடைய விஜயம்.

** இரண்டு, இந்த சம்பவத்தை லைவ் ஆக பார்த்த பின்னால் வந்த ஆட்டோ டிரைவர், சவாரியை விட்டுவிட்டு அங்கு விஜயம்.

இந்த ஆட்டோ டிரைவர், அங்கு நடக்கும் நிகழ்வுகளையும், பேச்சுக்களையும் பார்த்து டென்ஷன் ஆகி,

" என்னங்க.. ஓரமாக நின்றுக்கொண்டு இருந்த பைக்கில், ஓடி வந்து முட்டி மோதியது உங்க பையன், காக்கா மட்டும் உங்கள் பையனை தூக்காவிட்டால், பின்னால் வந்த ஆட்டோ அடித்து போட்டு, இந்த நேரம் எல்லாப் பள்ளிவாசலிலும் மைக்கில் அனௌன்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பார்கள்".

என்று விடு.. விடு.. என்று பாட்டு விட்டு விட்டு, என்னையும், அந்த பையனையும், பைக்கையும் தூக்கி விட்டார்...(இது வரை ஒரு பயலும் டச் பண்ணவில்லையே எங்களை..அவன் குடும்பத்தாரும் கூட..)

bike-fall-down

_ துரத்தி வந்த பயலும் அப்போது தான் வாயை திறந்தான், ஆமாம்..-----------தான் ஓடி வந்து பைக்கில் மோதி, இவங்களை கீழே விழ வைத்தான்..

பின்பு.. ஆட்டோவில் பையனை அழைத்து சென்றார்கள். வண்டிக்கு ஒரு காயம் இல்லை, எனக்கு முழங்காலில் சிறிய இரத்தக்கசிவு, பையனுக்கும் நெற்றியில் சிறிய கீறல் தான், இரத்தக்கசிவு கொஞ்சம் அதிகம், கை பொத்து, சிராய்ப்புகள் சில.

அப்புறம் என்ன.. வண்டியை எடுத்து ஸ்டாண்ட் போட்டு, ஒரு வெட்டி ஆபிசரின் பாக்கட்டுக்குள் கையை விட்டு என்னுடைய மொபைலை பிடுங்கி எடுத்து, வண்டியை ஸ்டார் பண்ணினால், அந்த மூன்று வெட்டி ஆபீசர்களும் அருகில் வந்து,

"காக்கா.. பையன் அடிபட்டு இருக்கின்றான்ல.. எதாவது மருத்துவ செலவுக்கு கொடுத்துவிட்டு போகலாம்ல..." என்றது சூப்பர் தமாசு.. மெட்ராஸ் லெவலுக்கு இருக்கின்றார்களே..!! என்று நினைத்து, பைக்கை எடுத்துக்கொண்டு சென்று, சைடு மிரரில் அந்த மூன்று வெட்டி ஆபிசர்களை பார்க்கும் போது, "வடை போச்சே.. " என்று கவலையுடன் கூடி பேசுவதை என்னால் உணர முடிந்தது.

இன்ஷா அல்லாஹ்.. மீண்டும் சந்திக்கலாம்.

அன்புடன்,

சாளை S.I.ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com