بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வளமான வாழ்வும்.. பெட்ரோல் விலையும்...அச்சிடுகமின்-அஞ்சல்
17 மே 2011 மாலை 01:05

அஸ்ஸலாமு அலைக்கும்..

என்னங்க... நன்றாக இருக்கின்றீர்களா...

முதல் கொடுமை என்னவென்றால், மக்கள் பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்திற்கு செல்லாமல்,பல லட்சங்கள் செலவு செய்து பழையதை புதுப்பிகின்றார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. பலர் சொல்லுவது இது ஐயா கட்டியது என்று. எனக்கு தெரிந்த காரணம் புதிய தலைமை செயலகம் வட்ட வடிவில் உள்ளது. குபேர மூலை,அக்னி மூலை என்று வாஸ்து பார்க்க முடியாது அல்லவா..அதான்..

இன்னும் ஒரு சிறு வருத்தம் ஏழு ஆக இருந்த முஸ்லிம் MLA க்களின் எண்ணிக்கை ஆறாக பெருக்கு எடுத்து ஓடாமல், நம் தமிழக ஆறுகள் மாதிரி 6 இல் நின்று விட்டது.

என்னது வாஸ்து, ராசி எண் எல்லாம் நமக்கு தேவை இல்லாத விஷயம் என்று சொல்லுகிறீர்களா..அதுவும் சரி தான்.. ஓகே..நாம் நம் விசயத்திற்கு செல்லுவோம்.

பெட்ரோல் விலை 11 மாதங்களில் 7 1/2 முறை அதிகரித்து உள்ளது.( என்ன 7 1/2 என்கிறீர்களா,ஒருமுறை விலையை அதிகமாக அதிகரித்து, கொஞ்சம் குறைத்தார்களே - பல போராட்டதிற்குப் பின்). இன்னும் கூடுமாம். இதை கண்டிக்க ஆட்கள் கிடையாது. எல்ல கட்சிகளும் துண்டை காணோம், கட்சி கொடியை காணோம் என்று இருக்கிறார்கள். அப்படி கண்டித்தாலும் பிரயோசனம் உண்டா.. ஊஹூம்.. இரண்டு நாள் கத்துவார்கள், பின்பு...அம்புட்டுதான்...

இதனால் வண்டிகளின் விற்பனை குறைந்து உள்ளதா.. இல்லை.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அனைவர்களும் வண்டியை ஓரம் கட்டி விட்டார்களா... அதுவும் இல்லை..

நம் ஊரில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருத்து விட்டது... ஒவ்வொரு முடுக்கிலும் குறைந்தது இரண்டு, மூன்று பொறியாளர்கள் இருப்பதைப் போல, இரண்டு, மூன்று பைக் நிற்பதை காணலாம்..இருப்பதோ 4 அடி முடுக்கு, அதில் பைக்கை நிறுத்தி என்னைப்போல கொஞ்சம் குண்டானவர்கள் சென்றால் அவ்வளவு தான். சில நேரம் மாடுகள் பைக் உள்ள முடுக்கில் சென்று படும் அவஸ்தையை பார்க்கணுமே...

கடற்கரைக்கு சென்றால் வண்டிகளை ஓரமாக நிறுத்தாமல், நுழைவு வாசல் பகுதி முழுவதும் வண்டியை நிறுத்தி, உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தர்ணா நடக்கின்றது.தினமும் குறைந்தது மூன்று,நான்கு நபர்களின் சட்டை பைக்கின் கைப்பிடியில் மாட்டி, பட்டன் தெறித்து விழுவது வாடிக்கை தான்.

எங்கு செல்ல வேண்டும் என்றாலும் எடு பைக்கை. ஒரு ஐந்து நிமிட நடை தூரத்திற்கு கூட பைக் தான்..வண்டியை ஸ்டார்ட் பண்ணி செகண்ட் கீர் போட கால் வைப்பதற்க்குள் இடம் வந்து விடும்... உடல் உழைப்பு என்றாலே என்ன என்று தெரிவதில்லை...அதிகமானவர்களுக்கு உட்கார்ந்து வேலை பார்க்கும் சொகுசு வேலை தான்..(அல்ஹம்து லில்லாஹ்...).சிறு வயதிலே பல வியாதிகள். அதிலும் குறிப்பாக அதிக எடை போடுவதால் வரும் நோய்கள் தான் கூடுதல். நாம் சாப்பிடும் அளவிற்கு வேலை பார்த்து அதை எரித்து விடுகிறோமா என்றால்,கிடையாது. நடைப்பயிற்சி என்பது கிடையவே கிடையாது.

சாப்பாட்டிலும் கண்ட்ரோலா..ஊஹூம்..இல்லை. அருமை நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தப்படி அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், மீதம் காலியாக இருக்கணும். எத்தனை நபர்கள் பின்பற்றுகிறோம். சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொது இன்னும் கொஞ்சம் சோறு போடலாமே என்று மனது சொல்லுமே, அதை கட்டுப்படுத்தினாலே போதும். இன்னும் சிம்பிள் ஆக சொல்லுவதாக இருந்தால், விருந்துகளில் போடு சோறு போடுவதை நிறுத்தினாலே நல்லது-விருந்து வைப்பவர்கள் அல்ல, சாப்பிடுபவர்கள்.

(முன்பு எல்லாம் ஒரு சகனுக்கு மூன்று பெரியவர்கள் இருப்பார்கள், பின்பு இரண்டு பெருசு,ஒரு சிறுவன், அதன் பின்பு இரண்டு பெரியவர்கள் இருந்தார்கள், அதுவும் மாறி ஒரு பெரியவர்,ஒரு சிறியவர் என்று வந்து, பல சமயங்களில் இரண்டு சிறுவர்களே ஒரு சகனில் இருந்து சாப்பிட்டு, போடு சோறும் போட்டு புல் கட்டு தான்.. மாஷாஹ் அல்லாஹ்.. ஒருவேளை மூன்று தலைகள் இருந்து விட்டால் அவ்வளவுதான்,சிட்டிக்கறி, சிட்டிக்கறி என்று தொனதொனத்து வாங்கிய பின்புதான் நிம்மதி.).

ஆதலால், அரை வயிறு சாப்பிடுங்க, நல்ல்ல்ல நல்ல தண்ணீர் குடிங்க, நன்றாக நடங்க, வண்டிகளுக்கு முடிந்தவரை குட்பை சொல்லுங்க, கூடுமானவரை பள்ளிவாசலுக்கு நடந்தே தொழப்போங்க. உடலுக்கும் நல்லது, உங்களின் குட்புக்கில் நன்மைகளின் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் அல்லவா...

ஒருமுறை மதீனாவில் இருக்கும் போது , முஹம்மது நபி(ஸல்) அவர்கள், யார் ஒருவர் சுபுஹு தொழுகையும், இஷா தொழுகையும் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் முனாபிகுகள்(நயவஞ்சகர்கள்) என்றார்கள்.

இதை அறிந்த பனி-சலாமா கூட்டதார்கள், அவர்கள் தங்கி இருந்த இடம் பள்ளிவாசலுக்கு வெகு தொலைவில் இருப்பதால், அந்த இடத்தை காலி செய்து விட்டு பள்ளிவாசலுக்கு அருகில் வந்து விட்டார்கள்.

தற்செயலாக அந்த இடத்திற்கு சென்ற நபி(ஸல்) அவர்கள், இங்கு இருந்த பனி-சலாமா கூட்டதார்கள் எங்கே? என்று வினவியதும், விபரம் சொல்லப்பட்டது.

உடனே நபி(ஸல்) அவர்கள் அது தவறு, அவர்கள் அனைவர்களையும் இங்கேயே மீண்டும் தங்கச்சொல்லுங்கள், இங்கு இருந்து தொழுகைக்கு நடந்தே வரட்டும். அவர்களின் ஒவ்வொரு கால் எட்டுக்கும் நன்மை பதியப்படுகிறது, என்றார்கள். (நூல்: புகாரி) .

ஆமாங்க.. இந்த அட்வைஸ் எல்லாம் யாருக்கு என்கிறீர்களா? முதலில் எனக்குதான்...

வளமான வாழ்வுடன் அடுத்த வாரம் நெட்டில் சந்திப்போமா...இன்ஷாஹ் அல்லாஹ்..

அன்புடன்,

சாளை S.I.ஜியாவுதீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com