بسم الله الرحمن الرحيم
Monday 16th September 2019 | 16 முஹர்ரம் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மனதுக்குள் தீண்டாமை..அச்சிடுகமின்-அஞ்சல்
23 பிப்ரவரி 2013 காலை 10:12

அன்பு சொந்தங்களுக்கு. நீண்ட இடைவெளிக்கு பின்பு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வு .இடைவிடா வேலை பளுவின் காரணமே இந்த இடைவெளி. எங்கள் வீட்டில் திருமண நிகழ்வு நடந்தது. ஒரே குதூகலம், சந்தோசம், பரபரப்பு, அனைத்து சொந்தங்களும் ஒன்று கூடும் நிகழ்வு அல்லவா..

ஒருபக்கம் சமையல் வேலைகலை கட்டிக்கொண்டு இருந்தது, மறுபக்கம் கிடாய்களை அறுத்து, துண்டு போட்டுக் கொண்டு இருந்தார்கள். சொந்தங்கள் அனைவர்களும் ஒருபக்கம் கதைத்துக் கொண்டு இருக்கவும்,

மற்ற பக்கம் சிறுவர்களின் விளையாட்டு கூச்சல். செம சந்தோசம். அந்த சமயம், அங்கு குப்பைகளை கூட்டிக் கொண்டு இருந்த இரு மாற்று மத சகோதரிகள் என்னிடம் வந்து," முதலாளி குடிக்க தண்ணீர் தாங்களேன் " என்று வினவ.. நான் வீட்டிற்குள் சென்று, அங்கு கழுவி அடுக்கி வைத்து இருந்த, விருந்துக்கு என்றே பரணில் இருந்து வெளியில் தலைகாட்டும், ஒன்னரை ஜான் அளவு உள்ள பிளாஸ்டிக் கிளாஸ் இரண்டில், குடி தண்ணீரை நிரப்பி அவர்களிடம் கொண்டு கொடுத்ததும்தான் தாமதம்...

wat

தாம்..தூம்..என்று சப்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். அனைவர்களின் முகமும் எங்களின் பக்கம் திரும்பியது. வேலை பார்த்துக்கொண்டு இருந்த அனைவர்களும் எங்கள் பக்கம் ஓடிவந்து விட்டார்கள்.

விஷயம் ஒன்றும் பெரியது இல்லை. நான் கொடுத்த தண்ணீர் கிளாஸ் தான் பிரச்சனை. அது பிளாஸ்டிக் கிளாசாம்.

அப்படி என்றால்..சுற்றுப்புற விழிப்புணர்வா..? ஊஹூம் .

தீண்டாமை விழிப்புணர்வாம்..! நான் பிளாஸ்டிக் கிளாசில் தண்ணீர் கொடுத்து அவர்களை அவமானப் படுத்திவிட்டேனாம்.

" எப்படி நீங்கள் பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் கொடுக்கலாம். நாங்கள் தீண்டத்தகாதவர்களா?

இன்னும் ஏன் எங்களை இப்படியே வைத்து இருக்கின்றீர்கள்? ஏன் இப்படி எங்களை தனிமைப் படுத்துகின்றீர்கள்?" என்று பிராக்டீஸ் பண்ணிக் கொடுத்த மாதிரி பொரிந்து விட்டார்கள்.

நானும்.. பலரும். .எவ்வளவு எடுத்து கூறியும், இஸ்லாத்தில் மட்டும் தான் தீண்டாமையே இல்லை, நாங்கள் அப்படி நடப்பவர்களா..? என்று விவரித்தும் அவர்கள் அடங்கவில்லை. பிளாஸ்டிக் டம்ளரை தொடவே இல்லை.

அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த மாற்று மத சகோதரர்கள் கூட அந்த இரு சகோதரிகளிடம் பல சமாதானங்களையும், சூழ்நிலைகளையும், இஸ்லாமியர்கள் அப்படி நடப்பவர்கள் அல்ல என்று எவ்வளவோ கூறியும் ஒரு பிரயோசனமும் இல்லை.

நான் மீண்டும் வீட்டிற்குள் சென்று பழைய சில்வர் டம்ளர் இரண்டில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் தான் அவர்களின்கோபம்.... இல்லை இல்லை ஆவேசம் தணிந்தது. மகிழ்ச்சியில், சில்வர் டம்ளரில் இருந்த தண்ணீரை குடித்தார்கள் .மீண்டும் கேட்டு குடித்தார்கள்.

அவர்களின் செயல் எனக்கு எந்த வருத்தத்தையும் கொடுக்கவில்லை.அவர்களின் விழிப்புணர்வு, துணிச்சல், தீண்டாமையை எதிர்க்கும் பண்பு ஆகியவை சந்தோசத்தை கொடுத்தது. அவர்களின் பேச்சு, உச்சரிக்கும் வார்த்தைகள் போன்றவை அவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு ட்ரைனிங் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. ஆனால் ஒரு சிறு வருத்தம், அவர்களின் விழிப்புணர்வை எங்கு பயன்படுத்தனும் என்பதை அறியாமல் இருக்கின்றார்களே என்பதுதான்.

சிறிது நேரத்தில் நிலைமை சரியாக ஆகிவிட்டன. அவரவர்கள் அவர்களின் கடமையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு அரைமணி நேரம் கழித்து, அனைவர்களுக்கும் ரோஸ்மில்க் குடிபானம் கொடுக்கச் சொன்னார்கள்.நான்சற்றுமுன்புசூடுபட்டதால், அங்கு குழுமி இருந்த அனைவர்களுக்கும், எங்களுக்கும் அந்தபிளாஸ்டிக் டம்ளரிலும், அந்த இரு சகோதரிகளுக்கு சில்வர் டம்ளரிலும் ரோஸ்மில்க் ஊற்றி பரிமாறினேன்.

எல்லோரும் கலர் கலாரான பிளாஸ்டிக் டம்ளரிலும், அந்த இருசகோதரிகள் மட்டும் பழைய சில்வர்டம்ளரில் தனிமைப்பட்டு ரோஸ்மில்க் குடித்துக்கொண்டு, இருந்ததைகண்டு எனக்கு மனதுகஷ்டப்பட்டது. அந்த இரு சகோதரிகள் இந்த சூழ்நிலையை கண்டு பார்வையை கீழே தாழ்த்தி, அவர்களுக்குள் பேசியது என்ன என்று காதில் விழவில்லை ஆனால் புரிய முடிந்தது.

இரு சகோதரர்கள் பேசிக்கொண்டது:-

- மச்சான்...அல்ஜாமிஉல் அஜ்ஹர் நிர்வாகம் அம்மா சப்போர்ட்டா...?- டேய்..என்னடா உளறுரே..! அம்மா சப்போர்ட்டும் இருக்காது ஐயாசப் போர்ட்டும் இருக்காது.

அரசியலுக்கு எல்லாம் அங்கு வேலை இல்லைடா... சரி. திடீர் என்று ஏன் இப்படி கேட்டாய்.?

- இல்லை..பள்ளிவாசலில் இருக்கும் அனைத்து கண்ணாடி கதவிலும் இரட்டை இலை பதித்து இருக்கின்றார்களே..!! அதான் சிறு சந்தேகம்.

(.எப்படி எல்லாம் யோசிக்கின்றாங்கப்பா... சகோதரர்களே.. இன்னும் பல வேலைகள் பாக்கி இருக்கின்றது, அதற்க்கு எப்படி உதவலாம் என்று யோசிங்கப்பா..) .

இன்ஷாஅல்லாஹ்... மீண்டும் சந்திக்கலாம்,

நமது கட்டுரையாளர்

சாளைS.I.ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com